ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும்
--------------------
வேலைக்கு சேர்க்கும் முன் சாதியைக் கேட்பார் ஈ.வே.ரா?
”1949-இல் அண்ணா ஆலோசனையின் பேரில் விடுதலையில் சேர மீரான்சாகிப் தெருவில் இருந்த விடுதலை அலுவலகத்தில் பெரியாரைச் சந்தித்தேன்.
அவர் கேட்ட முதல் கேள்வியே,
”நீ என்ன சாதி...?” என்று கேட்டார்.
( 'அண்ணாவின் வார்த்தை ஜாலம்'
-ஜே வி கண்ணன்
த சன்டே இந்தியன் 21.09.2010 )
--------------------
பட்டியல் சாதி மக்களையும் எதிரிகளாக எண்ணினார் ஈ.வே.ரா
"1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்
ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன"
_ ஈ.வே.ரா (தமது 85 வது பிறந்தநாள் விழா மலரில்)
இங்கே 'நம்மில்' 'நமக்கு' என்பது பிராமணல்லாத (ஆதிக்க) சாதிகள், 'கீழ்த்தர மக்கள்' என்பது பட்டியல் சாதிகள்.
-----------------
தனது இனமான தெலுங்கு நாயக்கர் சாதிக்கென வெளிப்படையாக குரல்கொடுத்துள்ளார் ஈ.வே.ரா
"ஜனத்தொகையும், பிரபலமும், செல்வாக்கும், அரசியலில் ஞானமும் ஊக்கமும் உடையவர்கள் ஆந்திர நாயக்கமார்கள்"
"கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள்"
" நாயக்கர்மார்கள் தலைஎழுத்து இவ்வளவுதானா என்று கேட்கின்றோம்.
அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம்.
தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா?"
_ ஈ.வே.ரா (குடியரசு 15.11.1936)
------------
புலையர் பெண்கள் ரவிக்கை போடுவதை தாங்கமுடியாத ஈ.வே.ரா
"புலைச்சியெல்லாம் ஐம்பர் போட ஆரம்பிச்சிட்டா அதனாலேதான் துணிவிலை உயர்ந்துவிட்டது"
_ ஈ.வே.ரா 1962 ஜனவரியில் மேடைப்பேச்சு
(இது 1962 முரசொலி பொங்கல் மலரில் கோட்டோவியமாக அதாவது கார்ட்டூனாக வந்தது)
----------------
தனது சாதித்திமிரால் பறையரை மிக மோசமாக வெறுத்தார் ஈ.வே.ரா
"பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சிட்டானுக அதனாலதான் வேலை இல்லா திண்டாட்டம்"
_ ஈ.வே.ரா 1962 சனவரி மேடைப்பேச்சு
(மேலது சான்று)
”தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?
பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால்,
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது"
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி)
------------------------
ஈ.வே.ரா தீண்டாமைக்கு எதிராக போராடியதில்லை
"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது."
_ ஈ.வே.ரா (குடியரசு 16.6.1926.)
இதில் 'எங்கள்' என்பது பிராமணரல்லா ஆதிக்க சாதிகள்
'உங்கள்' என்பது தீண்டாமைக்கு ஆளாவோர்
-----------------------
ஆதி திராவிடர் அதாவது தமிழக பட்டியல் சாதியாருக்காக அவர் போராடியதில்லை
"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும்,
'ஆதி திராவிடரல்லாத மக்களில்' 'பார்ப்பனரல்லாத எல்லோருடைய' நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"
(குடியரசு 11.10.1931)
-------------------
வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ரா பங்கு கடுகளவு
ஈழவர், புலையர் இணைந்து டி.கே.மாதவன் தலைமையில் கேரளாவில் வைக்கம் கோயிலில் நுழைவதற்கான தடையைநீக்க முன்னெடுத்த போராட்டம் 30.03.1924 அன்று ஆரம்பித்தது.
17.11.1925 வரை ஒன்றரை ஆண்டு நடந்த வைக்கம் போராட்டத்தில்,
நடுவில் மூன்றுமாதம் கூட முழுமையாகக் கலந்துகொள்ளாத ஈ.வே ராவை 'வைக்கம் வீரர்' என்பது வேடிக்கையானது.
1925 ஏப்ரல்14 அன்று வைக்கம் சென்ற ஈ.வே.ரா இரண்டு வாரங்கள் அங்கே மேடையில் பேசினார்.
ஏப்ரல் 28ஆம் தேதி பேசிய பேச்சுக்காக ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
ஒருமாதம் கழித்து விடுதலையாகி மறுநாள் ஜூன் 28ம் தேதியிலிருந்து மீண்டும் பத்து நாட்கள் பேசினார்.
கைதாகும் சூழ்நிலை வந்ததும் ஜூலை 5ல் வைக்கம் போராட்டக்களத்தை விட்டு காலி செய்தார்.
ஆயினும் இந்த வழக்கில், அவர் ஜூலை 28 கைது செய்யப்பட்டு, பின் செப்டம்பர்1ல் விடுதலை ஆனார்.
அதன்பிறகும் ஒரு ஆண்டு நடந்த அந்த போராட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.
ஆக ஈ.வே.ரா வின் பங்கு வைக்கம் போராட்டத்தில்,
24 நாட்கள் பிரச்சாரமும்
இருமாத சிறையும் மட்டுமே.
(1927 வரை அவர் தன்னை 'ராமசாமி நாயக்கர்' என்றுதான் கூறிக்கொள்வார்)
-----------
கீழ்வெண்மணி படுகொலையாளிக்கு ஆதரவாக இருந்தார் ஈ.வே.ரா
கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் அப்பகுதி பள்ளர், பறையர் மீது ஆதிக்கம் செலுத்திவந்தார்.
அதை அம்மக்கள் எதிர்த்ததன் விளைவாக பண்ணையாரின் அடியாட்கள் 44 பேரை (பெரும்பாலும் பள்ளர்) எரித்துக்கொன்றனர்.
கீழ்வெண்மணி படுகொலை ஒரு சாதியப் படுகொலை ஆகும்.
கம்யூனிஸ்ட் கட்சி கூலி உயர்வு கேட்க தூண்டியதால் படுகொலை நடந்ததாக கூலித்தொழிலாளருக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது பழியைப் போட்டார் ஈ.வே.ரா.
"நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.
அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்"
_ஈ.வே.ரா (28.12.1968 அறிக்கை)
எந்த இடத்திலும் தன் இனமான தெலுங்கு வந்தேறி கோபால கிருஷ்ண நாயுடுவைக் குறிப்பிடவோ கண்டித்ததோ கிடையாது.
---------------------
இடவொதுக்கீடு ஈ.வே.ரா வின் கொள்கை கிடையாது.
இடவொதுக்கீடு சாதிவாரியாக வாய்ப்பு வழங்குவது.
ஈ.வே.ரா முதலிலிருந்தே போராடியது 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' அதாவது பிராமணர் ஒரு வகுப்பு பிராமணரல்லாதார் ஒரு வகுப்பு.
பிராமணர் 3% ஆக எல்லாவற்றிலும் 3% வாய்ப்புதான் வழங்கப்படவேண்டும்.
இதை இடவொதுக்கீட்டுடன் குழப்பி ஏதோ இடவொதுக்கீடே ஈ.வே.ரா போராடியதால் கிடைத்ததாகக் கூறுகின்றனர்.
இடவொதுக்கீடு அம்பேத்கர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்து அதன் பலனாக 1943லேயே மக்களுக்குப் பெற்றுத்தந்துவிட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களது வேலைக்காக படிப்புக்காக எந்த போராட்டமும் செய்யாத ஈ.வே.ரா.
"குழாய் தனித் தனியாக போட்டுவிட்டீர்கள் தொட்டியில் தண்ணீரே இல்லையே" என்று நக்கல் செய்த ஈ.வே.ரா.
1950ல் பிராமணர்கள் வழக்கு தொடுத்து சாதிவாரி இட ஒதுக்கீடு நீக்கம் செய்யப்பட்டபோது தெருவுக்கு வந்து போராடினார்.
அதாவது பிராமண வெறுப்பினால்.
ஈ.வே.ரா 'வகுப்புரிமை நாள்' என்றுதான் அறிவித்து போராடினார்.
பலரும் போராடினர்.
அவர் செய்த ஒரே ஒரு போராட்டத்தால் இடவொதுக்கீடு கிடைக்கவில்லை என்பது உறுதி.
------------
பலரும் ஈ.வே.ரா சாதி ஒழிப்பு போராளி என்று கூறுகிறார்கள்.
உண்மையில் அவர் பார்ப்பனரை கீழே இறக்கி ஆதிக்க சாதிகள் (அதிலும் வந்தேறிகள்) முதலிடம் பெற போராடிய சாதிவெறியரே ஆவார்.
அவர் எதிர்த்தது பார்ப்பனரையே பிராமணரை இல்லை.
“உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.
மறந்தும் உங்கள் வாயில் பிராமணன் என்று வரக் கூடாது.
பார்ப்பான் என்று கூறுங்கள்.
கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது.
கண்ணீர்த் துளிகள் (தி.மு.க.) பிராமணன் என்பதைத் தவிர வேறு வார்த்தையை உபயோகிக்க மாட்டார்கள்”
(விடுதலை 30.06.1957)
பார்ப்பனர் என்பார் தமிழ் பேசும் பூசாரகர் சாதியார் ஆவர்.
ஆக அவரது ஒட்டுமொத்த போராட்டமும் தமிழர்களை எதிர்த்தே அமைந்திருந்தது.
No comments:
Post a Comment