காமராசர் தமிழருக்கான தலைவர் கிடையாது
தமிழ்நாடு பெயர்மாற்றம் கோரி உண்ணாநோன்பிருந்த சங்கரலிங்கனாரை மதிக்காமல் அணு அணுவாகச் சாகவிட்டது. (அவரும் ஒரு நாடார்).
இடுக்கி கன்னியாகுமரி திருவனந்தபுரம் தமிழகத்துடன் சேர போராடியபோது ஆதரிக்காதது மட்டுமன்றி கடுமையாக எதிர்த்தது. (போராடியோர் நேசமணி தலைமையிலான நாடார் மக்கள்).
மலையகத் தமிழரை திருப்பியனுப்ப கொட்டல்வாலா நேருவுடன் ஒப்பந்தம் போட்டபோது சும்மாயிருந்தது.
இந்தி எதிர்ப்பில் வாய்மூடி கண்மூடி சிலையாக இருந்தது.
இது எல்லாமே வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் கிடைத்த பிறகான காலக்கடத்து நிகழ்வுகள்.
அதனால்தான் தமிழ் மக்கள் (அதிலும் நாடார் பெரும்பான்மை தொகுதியில்) அவரைத் தோற்கடித்தனர்.
பிறகு எந்த நேசமணியை தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கமாட்டேன் என்று சொன்னாரோ (கன்னியாகுமரியை மீட்டபிறகு) அதே நேசமணி காலில் விழுந்து நாகர்கோவிலில் நின்று வென்றார்.
கச்சத்தீவை இந்திராகாந்தி தாரைவார்த்தபோது காமராசர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அது நடந்திருக்காது.
ஆனால் மௌனமாக இருந்தார்.
பரிசாக பாரத ரத்னா கிடைத்தது.
பணத்திற்காக எதையும் செய்யும் கூட்டம் உள்ளது.
காமராசர் புகழுக்காக எதையும் கூட்டத்தவர்.
அதாவது அன்றைய அப்துல் கலாம்.
தாய்க்கு கூட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை.
அவர் அணை கட்டினார் பள்ளி கட்டினார் என்று அள்ளிவிடவேண்டாம்.
அவர் பீகார் முதல்வராக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்.
இங்கே கேள்வி அவர் தமிழர்களுக்கான தலைவரா என்பதுதான்.
நேரு குடும்பத்திற்கும் மத்திய அரசிற்கும் அவர் முடிந்த அளவு உடந்தையாக இருந்தார்.
பின்னே! ஒரு மாநில முதல்வரை இங்கிலாந்து மகாராணி சமமாக உட்காரவைத்து சாப்பிட்டதும்
அமெரிக்க அதிபர் சந்திக்க வந்ததும்
ரஷ்யக்காரன் கூப்பிட்டு விருந்து வைத்ததும் சும்மா நடந்திருக்குமா?
No comments:
Post a Comment