Monday 24 April 2017

ஆணிவேர் - அறிஞர் குணா பார்ப்பனர் மற்றும் பறையர் பற்றி

பார்ப்பனர் மற்றும் அவர்களது பிரிவுகள் பற்றி அலசுகிறது இந்த கட்டுரை

நன்றி: அறிஞர். பெங்களூர் குணா (குணசீலன் சாமுவேல்)
Gunaseelan Samuel

6 comments:

  1. தமிழ்நாட்டில் மிகவும் பழைய காலத்தில் இருந்த பிராமணர்கள் தங்களை வெவ்வேறு பெயர்களில் அழைத்துக் கொண்டனர்.சோழிய பிராமணர்கள்,திருச்சுதந்திரர்கள்(முக்காணி;திருச்செந்தூர் பூசாரிகள்),காணியாளர்கள், தில்லை தீட்சிதர்கள் போன்றோர்.தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவன்,முருகன்,பிள்ளையார்,துர்க்கை கோயில்களில் பூசாரிகளாக இருபக்கும் தமிழ்ப் பார்ப்பனர்கள் சிவாச்சாரியார்கள்(குருக்கள்;ஆதிசைவர்கள்).இவர்கள் பார்ப்பனர்களாக்கப்பட்ட தமிழர்களாம்.இவர்கள் வேதங்களை முழுவதுமாகக் கற்பதில்லை.28 சைவ ஆகமங்களும், உப ஆகமங்களும் தான் இவர்களுக்குப் பிரமாணங்கள்.சோழிய பிராமணர்கள் முதலியோர் வேதம் கற்பவர்கள்.களப்பிரர் ஆட்சிக் காலத்திக்குப் பிறகு வேத நெறிக்கும், சைவத்துக்கும் மறுமலர்ச்சியூட்ட சோழர்கள் நருமதை ஆற்றங்கரையிலிருக்கும் கார்வான்(காயாவரோஹன்)இலிருந்து பிராமணர்களை அழைத்து வந்து தமிழகத்தில் குடியேற்றினர். அவர்களை 'வடமர்'கள் என்றழைத்தனர். இன்றும் வடம பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நருமதை ஆற்றைப் போற்றுகின்றனர். பல்லவ(தொண்டை) நாட்டில் குடியேறியவர்கள் வட தேச வடமர் எனவும், சோழநாட்டில் குடியேறியவர்கள் சோழ தேச வடமர் எனவும் அழைக்கப் பட்டனர்.நானும் ஒரு வடதேச வடமனே. தமிழ்நாட்டிற்கு விநாயகர் வழிபாடு இவர்கள் காலத்தில் வந்திருக்கலாம். நாகப்பட்டினத்தில் காயாரோகணேசுவரர் கோயில் உள்ளது.இது திருநாகைக் காரோணம் என்று அழைக்கப்படுகிறது.கும்பகோணத்திலும் குடந்தைக் காரோணம் எனும் கோயில் இருந்திருக்கிறது.காஞ்சிபுரத்தில் கச்சிக் காரோணம் எனும் சிவன் கோயில் உள்ளது.ஆனால் இது தேவாரத்தில் குறறிப்பிடப்பட வில்லை.சோழிய பிராமணர்கள் முன்குடுமி(பூர்வசிகை) மற்றம் உச்சிக்குடுமியர்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் பக்கவாட்டுக் குடுமியர்கள்.பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் வடக்கிலிருந்து வந்த பிராமணர்கள் பிரகசரணம்(பிருஹத்சரணம்),வாத்திமர்(மத்தியமர்),கேசியர் ஆகியோர்.பிற்காலச் சோழர்கள் காலத்தில் குடியேற்றப்பட்டவர்கள் அஷ்ட சஹஸ்ரம் எனப்படுவோர்.பிரதமசாகி என்று ஒரு பிரிவினர் உள்ளனர்.இவர்கள் சுக்கில யசுர் வேதிகள். வடமரில் வைணவத்தைத் தழுவியர்களே வடகலை ஐயங்கார் பிராமணர்களாயிருக்கலாம். தென்கலை ஐயங்கார் பிராமணர்களில் சோழிய பிராமணர்கள் மட்டும் பிற தென்கலை பிராமணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் இருக்கின்றனர். வைணவத்தை ஏற்றுக்கொண்ட பிரகசரணம்,வாத்திமர்,அட்ட சகச்சுரம்(எண்ணாயிரம்) முதலியோரின் கலவையே சோழிய பிராமணரல்லாத தென்கலை ஐயங்கார் பிராமணர்கள். பிராமணரல்லாத சில தமிழர்களும் தென்கலை ஐயங்கார் பிராமணர்களாக்கப்பட்டார்கள் என்பர். பட்டாச்சாரியார்கள் எனப்படுவோர் இப்படிப் பட்டவர்களாக இருக்கலாம். வடமர்கள்,பிரகசரணம்,வாத்திமர்,அஷ்டசஹஸ்ரம்,கேசியர்,பிரதமசாகி,வடகலை,தென்கலையில் முக்கால் வாசியினர் பின்குடுமி(அபரசிகை)யினர்.இவர்கள் அனைவரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்தான்.சங்க காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனர்கள் முன்குடுமி மற்றும் உச்சிக் குடுமி பிராமணர்களாக இருக்கலாம்.மாணிக்க வாசகர் ஒரு முன் குடுமி பிராமணரே.திருஞானசம்பந்தர் ஒரு சோழிய பிராமணராக இருந்திருக்கலாம். சாணக்கியர் ஒரு சோழிய பிராமணர் என்று அப்பிரிவினரிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.பெரியாழ்வார்,மதுரகவியாழ்வார்,தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஆகிய மூவரும் முன்குடுமி பிராமணர்களாக இருக்கலாம். இராமானுசர் ஒரு (வட தேச) வடமர் என்று கருதப்படுகிறார். சுவாமி தேசிகரரும் வடகலையினரின் தலைவராதலால் வடமராக இருக்கலாம்.முத்துச் சுவாமி தீட்சிதர் ஒரு சோழ தேச வடமர்.தமிழ் ஐயர்கள் ஆதிசங்கரரின் அத்துவைதக் கொள்கையை ஏற்றவர்கள். தமிழ் ஐயங்கார்கள் இராமானுசரின் விசிட்டாத்துவைதக் கொள்கையை ஏற்றவர்கள். தமிழ்சநாட்டிற்கு விசயநகர ஆட்சியில் வந்த கன்னட பிராமணர்களும், நாயக்கர் ஆட்சியில் வந்த தெலுங்கு பிராமணர்களும் இன்னும் முறையே கன்னடத்தையும், தெலுங்கையும் தம் தாய்மொழியாகப் பேசுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற பிராமணர்கள் 'த்ராவிடலு' என்று அழைக்கப்படுகின்றனர். ஆராமா திராவிடலு,தும்மகுண்ட்டா(Tummagunta) திராவிடலு, புதூரு திராவிடலு முதலியவர்களாவர். புதூரு திராவிடலு மட்டும் இன்றும் தெலுங்கு கலந்த தமிழைத் தாய்மொழியாகப் பேசுகிறார்களாம். புதூரு திராவிடலு தங்களை பிரகசரணம் பிரிவினராகவும், தும்மகுண்டா திராவிடலு தங்களை வடமர் பிரிவினராகவும் கருதுகின்றனர்.வடமர்,பிரகசரணம்,அட்ட சகச்சுரம்,வாத்திமர் முதலிய பின்குடுமி தமிழ் பிராமணர்கள் சென்ற நூற்றாண்டு வரை தங்களுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்ள வில்லை. கடந்த 40 ஆண்டுகளாக எல்லாமே மாறிவிட்டது.

    ReplyDelete
  2. வடகலை ஐயங்கார்களில் தாத்தாச்சாரிகள் என்று ஒரு பிரிவு உண்டு.அவர்கள் தாத்தாச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்வார்கள். சோம யாகம் செய்யத் தெரிந்தவர்கள் சோமயாஜி என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார்கள். ஸ்ரௌத சூத்திரங்களைக் கற்றவர்கள் ஸ்ரௌதிகள் என்ற பட்டத்தைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.சில பிராமணர்கள் பாகவதர் என்ற பட்டத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.செம்பை வைத்தியநாத பாகவதர் ஒரு சோழிய பிராமணராம். உ.வே.சா. அஷ்ட சஹஸ்ரம் பிரிவைச் சேர்ந்தவராம்.கணித மேதை இராமானுஜன் ஒரு தென்கலை ஐயங்கார்.

    ReplyDelete
  3. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் மலையாள பிராமணர்களான நம்பூதிரிகள் தான் பூசாரிகள். தமிழ்நாட்டில் நிறைய வைணவக்கோயில்களில் தெலுங்கு,கன்னட பிராமணர்கள் பூசாரிகளாக இருக்கின்றனர். வைணவக் கன்னட பிராமணர்கள் மத்துவாச்சாரியாரின் துவைதக் கொள்கையை ஏற்றவர்கள். வைணவத் தெலுங்கு பிராமணர்களும் இராமானுசரின் விசிட்டாத்துவைதக் கொள்கையை ஏற்றவர்கள். தஞ்சாவூரில் மராத்தியராட்சி ஏற்பட்ட போது மராத்தியர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்களில் மராத்திய பிராமணர்கள் தஞ்சாவூர் மராத்திய பிராமணர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் இன்றும் மராத்தியைத்தான் தாய்மொழியாகப் பேசுகின்றனர். வைணவரல்லாத தமிழ், தெலுங்கு, கன்னட பிராமணர்கள் ஸ்மார்த்தர்கள் எனப்படுகின்றனர்.

    ReplyDelete
  4. கன்னட பிராமணர்களின் பிரிவுகள்(vide Castes and Tribes Of Southern India Vol.-1)
    ஸ்மார்த்தர்

    1)அறுவத்துவொக்கலு,2)படகநாடு,3)ஹொசல்நாடு,4)ஹொய்சநிகே(அ)வைஷணிகே,5)கம்மெ,6)சீர்நாடு,7)மாரக.

    மாத்வர்(துவைதிகள்)
    1)அருவேல,2)அறுவத்துவொக்கலு,3)படகநாடு,4)பெண்ணாத்தூரார்,5)பிரதமசாகி,6) ஹைதராபாதி.

    வைணவர்(விசிஷ்டாத்வைதிகள்)
    ஹெப்பார் மற்றும் மாண்டியம் ஐயங்கார்.

    தெலுங்கு பிராமணர்கள்

    வைதீகி
    1)முரிகிநாடு,2)தெலகன்யம்,3)வேல்நாடு,3)கசல்நாடு,4)கர்ணகம்மலு,5)வேகிநாடு,6)கோணேசிமே,7)ஆராத்ய,8)பிரதமசாகி.

    நியோகி
    1)ஆருவேல,2)நந்தவரிகுலு,3)கம்மலு,4)பெசலவயலு,5)பிராங்கநாடு

    தம்பல(Tambala;குருக்கள் போன்றவர்கள்)

    திராவிட(வைதீகி) பிராமணர்கள்

    1)ஆராம திராவிடலு,2)தும்மகுண்டா(Tummagunta) திராவிடலு,3)பேரூரு திராவிடலு,4)திவிலி திராவிடலு,5) ரியாலி திராவிடலு,6)சுத்த திராவிடலு.

    பெங்களூரில் காணப்படுகின்ற சங்கேதி பிராமணர்கள் கன்னடம் கலந்த தமிழ் பேசுகிறார்களாம்.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி
    தேடுக: பிராமணர் பார்ப்பனர் வேறுபாடு வேட்டொலி

    ReplyDelete
  6. தேடுக: பார்ப்பனீயம் பிராமணீயம் வேறுபாடு வேட்டொலி
    தேடுக: பார்ப்பனர் தமிழரே பதிவுகளின் தொகுப்பு வேட்டொலி

    ReplyDelete