Friday 28 April 2017

முத்துவடுகநாதர் வரலாறு கூறும் பாடம் என்ன?

முத்துவடுகநாதர் வரலாறு கூறும் பாடம் என்ன?

ஆங்கிலேயர் தமிழகத்தில் கால்பதித்துவிட்டிருந்தனர்.
அவர்களுக்கு இடம் கொடுத்தது துருக்கிய-ஈரானிய கலப்பு இனமான முகலாயர்களும் அவர்களுக்கு கீழிருந்த ஆற்காடு நவாபுகளும்.

மதுரை வரை அவர்கள் கைக்குப் போய்விட்டது.

1752ல் மதுரை மன்னர் விஜயகுமார நாயக்கர் (தெலுங்கர்) மீது கேப்டன் கோப் (ஆங்கிலேயர்) போர் தொடுத்து மதுரையை  கைப்பற்றினார்.

இதை அறிந்த முத்துவடுகநாதர் (தமிழர்) தனது படையுடன் சென்று கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றினார்.

நியாயப்படி மதுரையை மீண்டும் விசயகுமார நாயக்கரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பினார்.

ஆனால் அதன்பிறகு நடந்தது என்ன?

முத்துவடுகநாதர் காளையர் கோவிலுக்கு சென்ற நேரம்,
அவரது தளபதி ஒருவனை கைக்குள் போட்டுக்கொண்டு முத்துவடுகநாதரின் பாளையமான இராமநாதபுரம் பாளையத்தின் மீது போர்தொடுத்துக் கைப்பற்றினர் ஆங்கிலேயர்.

இப்போது அந்த நன்றிகெட்ட தெலுங்கு மன்னன் முத்துவடுகநாதருக்கு உதவ வரவில்லை.

தமிழர்களான மறவர்கள்தான் உதவிக்கு வந்தனர்.
மறவர்களின் படைகளுடன் வந்த முத்துவடுகநாதர் மீண்டும் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தனது ஆட்சியை மீட்டார்.

பிறகு ஆங்கிலேயர் இனி இராமநாதபுரம் மீது போர்தொடுக்கமாட்டோம் என்று சமாதான ஒப்பந்தம் போட்டனர்.

முத்து வடுகநாதர் அதை நம்பி பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் (போரில் வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த) காளையார் கோவில் போயிருந்த நேரம் ஆங்கிலேயருடன் கூட்டு அமைத்திருந்த ஆற்காடு நவாப் (துருக்கிய- ஈரானிய கலப்பு இனத்தவர்) அனுப்பிய படை கோயிலை திடீரென்று சூழ்ந்து அவரைக் கொன்றனர்.

அதேநேரத்தில் ஆங்கிலேயர் இராமநாதபரத்தில் ஆங்கிலப்படை நுழைந்து அப்பாளையத்தைக் கைப்பற்றியது.

இதிலிருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கிறது?

1 comment:

  1. தமிழரான யூசுஃப் கானும்(மருத நாயகம்) ஆற்காடு நவாபுக்கு உதவியாக இருந்தார். தனது கடைசி காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் பின் அவர்களால் கொல்லப்பட்டார். ஆற்காடு நவாபுகள் ஆங்கிலேயருக்கு நண்பர்களாகவே இருந்தார்கள்.

    ReplyDelete