Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Monday, 12 May 2025

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
26.04.2017

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இது மாசித் திருவிழா.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.
அதுவும் மதுரையில் அல்ல தேனூர் அருகே.

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Monday, 26 November 2018

1988 மதுரையில் தலைவர் பிறந்தநாள்

1988 மதுரையில் தலைவர் பிறந்தநாள்

ஏதோ 1988 இல் தலைவருக்கு பிறந்த நாள் மதுரையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை பெரிதாகப் பேசுகிறார்கள்.

பிரபாகரன் பிரபலமானதே 1983 இல் தான்.

ஆனால் 1980 இலேயே மதுரை தனி தமிழீழ நாடு அமைய ஆதரவு தெரிவித்துவிட்டது.

search in google "1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு வேட்டொலி"

Wednesday, 21 June 2017

மீனாட்சியம்மன் கோவில் ஆலயநுழைவு அரிய புகைப்படம்

வைத்தியநாதையர் அவர்கள், கக்கன் அவர்களுடன் மீனாட்சியம்மன் கோவிலில் 1939 ஆம் ஆண்டு ஆலயநுழைவு நடத்தியபோது எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருப்பவர்
பெருந்தமிழர் முத்துராமலிகத் தேவர் அவர்கள்தானா?

நான் ஏற்கனவே போட்ட 'ஐயர் செய்த ஆலயநுழைவு' பதிவில் தேவனார் அப்போது சிறையில் இருந்ததாகவும் ஆதரவாக துண்டு சீட்டு மட்டுமே விநியோகித்ததாகவும் போட்டிருந்தேன்.

அறிந்தவர்கள் கூறவும்.

Friday, 28 April 2017

முத்துவடுகநாதர் வரலாறு கூறும் பாடம் என்ன?

முத்துவடுகநாதர் வரலாறு கூறும் பாடம் என்ன?

ஆங்கிலேயர் தமிழகத்தில் கால்பதித்துவிட்டிருந்தனர்.
அவர்களுக்கு இடம் கொடுத்தது துருக்கிய-ஈரானிய கலப்பு இனமான முகலாயர்களும் அவர்களுக்கு கீழிருந்த ஆற்காடு நவாபுகளும்.

மதுரை வரை அவர்கள் கைக்குப் போய்விட்டது.

1752ல் மதுரை மன்னர் விஜயகுமார நாயக்கர் (தெலுங்கர்) மீது கேப்டன் கோப் (ஆங்கிலேயர்) போர் தொடுத்து மதுரையை  கைப்பற்றினார்.

இதை அறிந்த முத்துவடுகநாதர் (தமிழர்) தனது படையுடன் சென்று கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றினார்.

நியாயப்படி மதுரையை மீண்டும் விசயகுமார நாயக்கரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பினார்.

ஆனால் அதன்பிறகு நடந்தது என்ன?

முத்துவடுகநாதர் காளையர் கோவிலுக்கு சென்ற நேரம்,
அவரது தளபதி ஒருவனை கைக்குள் போட்டுக்கொண்டு முத்துவடுகநாதரின் பாளையமான இராமநாதபுரம் பாளையத்தின் மீது போர்தொடுத்துக் கைப்பற்றினர் ஆங்கிலேயர்.

இப்போது அந்த நன்றிகெட்ட தெலுங்கு மன்னன் முத்துவடுகநாதருக்கு உதவ வரவில்லை.

தமிழர்களான மறவர்கள்தான் உதவிக்கு வந்தனர்.
மறவர்களின் படைகளுடன் வந்த முத்துவடுகநாதர் மீண்டும் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தனது ஆட்சியை மீட்டார்.

பிறகு ஆங்கிலேயர் இனி இராமநாதபுரம் மீது போர்தொடுக்கமாட்டோம் என்று சமாதான ஒப்பந்தம் போட்டனர்.

முத்து வடுகநாதர் அதை நம்பி பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் (போரில் வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த) காளையார் கோவில் போயிருந்த நேரம் ஆங்கிலேயருடன் கூட்டு அமைத்திருந்த ஆற்காடு நவாப் (துருக்கிய- ஈரானிய கலப்பு இனத்தவர்) அனுப்பிய படை கோயிலை திடீரென்று சூழ்ந்து அவரைக் கொன்றனர்.

அதேநேரத்தில் ஆங்கிலேயர் இராமநாதபரத்தில் ஆங்கிலப்படை நுழைந்து அப்பாளையத்தைக் கைப்பற்றியது.

இதிலிருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கிறது?

Wednesday, 26 April 2017

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Thursday, 24 November 2016

மதிமாறியவனுக்கு கரிநாய் பாணி பதில்

மதிமாறியவனுக்கு கரிநாய் பாணி பதில்

"அம்மையார் சட்டமன்றத்தில் ஒரு வாக்கியத்தை தவறாகக் கூறிவிட்டதாகக் கூறுகிறார்.

அதெப்படி முழு வாக்கியமும் தவறி வரும்?

வாக்கியத்தில் ஒரு எழுத்தோ உச்சரிப்போ பிறழ்ந்து வரலாம்.

கோவலனை பாண்டிய மன்னன் 'கொண்டு வருக' என்பதற்குப் பதில் 'கொன்று வருக' என்று கூறியது போல"

- கருணாநிதி ஜெயலலிதாவுக்கு அளித்த பதில்

Monday, 22 August 2016

முதல் ஈழ ஆதரவுப் பேரணி

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாக நடந்த முதல் பேரணி

அன்றைய பார்வர்டு ப்ளாக் மாநிலத்தலைவர் திரு.ஆண்டித்தேவர், 1983ல் மதுரையில் நடத்திய தீவெட்டி ஊர்வலம்தானாமே!