Showing posts with label ராஜராஜ சோழன். Show all posts
Showing posts with label ராஜராஜ சோழன். Show all posts

Tuesday, 24 July 2018

இராசராச சோழன் சிலை போலி

இராசராச சோழன் சிலை போலி


 ஆம்.

இராசராசன் சிலை தமிழகம் மீண்டது எனும் செய்தி தரும் சிறு மகிழ்ச்சியாவது என் இனத்திற்குக் கிடைக்கட்டுமே என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.


 ஆனால், நம் அறிவு எங்கே செல்கிறது?!


 அனைவரும் ஜோசியத்தில் இறங்கிவிட்டோம்.


 சோழன் வந்துவிட்டான்.

காவிரி வத்துவிட்டது.

2000 ஆண்டுகள் முன் கரிகாலன்.

1000 ஆண்டுகள் முன் ராசராசன்.

 இப்போது சோழன் மறுபடி வருவான் என்றெல்லாம் ஆருடம் நீள்கிறது.


 நாம் பழமை பேசிக் கெட்ட இனம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உண்மையை இப்போது போட்டுடைக்கிறேன்.


 ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரியகோவிலின் ஶ்ரீகார்யமாக 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவர் இருந்தார்.


 இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கு 74 செ.மீ [2.43 அடி] உயரத்திலும்

 மற்றும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கு 53 செ.மீ. [1.74 அடி] உயரத்திலும் செப்புச் சிலைகளை செய்துள்ளார்.


 ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.


 ஆனால், இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமோ மாறுபடுகிறது. 


 ராசராசனின் சிலையினுடைய உயரமோ 1 செ.மீ குறைகிறது.

 உலகமாதேவி சிலை உயரமோ 2 செ.மீ வரை குறைகிறது அத்துடன் வணங்கிய நிலையிலும் இல்லை.


 சிலைகள் மட்டுமின்றி ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்துள்ளார் ஶ்ரீகார்யம்.


 இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. 


 தற்போது மீட்கப்பட்ட சிலை ராசராசன் சிலை என்பதற்கு நாகசாமியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டுவோர்,

 ஏற்கனவே குஜராத் சென்ற தமிழகத்தின் குழு அப்போதைய முதலமைச்சர் மோடியிடம் கேட்டு சிலையைப் பெறும் கடைசி நேரத்தில் அக்குழுவில் ஒருவராக இருந்த நாகசாமி உயரத்தை அளந்து பார்த்துவிட்டு இந்த சிலை இல்லை என பல்டி அடித்தார் என்பதை மறக்கவேண்டாம்.

 

(தகவல்களுக்கு நன்றி: சிலை சிலையாம் காரணமாம் - 22 

- தி ஹிந்து 05.08.2016)


 நாம் பழமையில் மூழ்கி இன்றைய இழிநிலையை மறக்கமுயல்கிறோம்.

 

 நாம் பழைய வரலாற்றில் பெரிய சாதனைகள் செய்தோம்தான்.

 ஆனால் நாம் மட்டுமே பெரிய பிடுங்கி இல்லை.


 பாரோ மன்னர்கள் கட்டிய பிரமீடு முன்பு இராசராசன் கட்டிய பெரியகோவில் ஒன்றுமேயில்லை.


 சைருஸ் எழுப்பிய பாரசீகப் பேரரசுக்கு முன் சோழப் பேரரசு ஒன்றுமேயில்லை.


 நம்மை காக்க சோழனும் வரப்போவதில்லை எவனும் வரப்போவதில்லை.


வரலாறு அறிக!

அத்துடன் நடைமுறையும் உணர்க!

தமிழ் இனமாக எழுக!

Wednesday, 26 April 2017

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Tuesday, 11 April 2017

குருதியில் நனைந்த குமரி -17

குருதியில் நனைந்த குமரி -17
---------------------------------------------
நாள்: 28.08.1954
நேரம்: நண்பகல்
இடம்: தேரூர்

காங்கிரஸ் குழு நேரில் பார்வையிட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு பலரும் வலியுறுத்தியபடி வரலாற்று தகவல்களைக் கேட்டறிய நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் தேரூருக்குச் சென்றனர்.

அங்கே தமிழ்க்கவிஞர் மற்றும் ஆராய்ச்சியாளரான கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர்.

வாசலில் அவரது வளர்ப்புப்பிள்ளையும் மருமகனுமான சிவதாணுப்பிள்ளை நின்றிருந்தார்.
காங்கிரஸ் குழுவினர் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். 

78 வயதான கவிமணியார் அப்போது மரணப்படுக்கையில் இருந்தார்.

"மாமா தற்போது பேசும் நிலையில் இல்லை.
இந்த இறுக்கமான சூழலில் மாமாவுக்கு தேவையான மருந்துகளும் உணவும் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எழுப்புகிறேன், கண்விழிக்கிறாரா பார்க்கலாம்"

அனைவரும் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.

"மாமா! மாமா! உங்களைப்பார்க்க தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வந்திருக்கிறார்கள்."

கவிமணி கண்விழித்தார்.

"யார்?! தமிழ்நாட்டிலிருந்தா?!
என்றால் குமரிநாடு இன்னமும் தமிழ்நாட்டுடன் இணையவில்லையா?"

கரையாளர் "அதற்காகத்தான் ஐயா வந்திருக்கிறோம்.
கவலை வேண்டாம்.
காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் உதவி தேவை.
உங்களுக்குத் தெரிந்த சரித்திர தகவல்களைக் கூறுங்கள்"

கவிமணி "இங்கே சரித்திரம் என்றாலே அது நமது சரித்திரம்தானே ஐயா,
இந்த நாடு முழுவதுமே தமிழருக்குச் சொந்தம்.
மூழ்கிய குமரிநாடு முதல் இமயமலை வரை நமது மண்.
இந்த திருவிதாங்கூர் உட்பட மலையாள நாடு முழுவதுமே சேரநாடு.
சேரர் தமிழர்தான்.
மூவேந்தரில் ஒரு வேந்தன் அழிந்து போனானே?!
திருவிதாங்கூர் என்ற பெயர் அதங்கோடு என்ற தமிழ்ப்பெயர்தான்.
அதங்கோடு, திருவதங்கோடு ஆகி திருவிதாங்கூர் ஆகிவிட்டது.
தமிழ்ச்சங்கத்துக்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசான் பிறந்த இடமிது.
போனது போகட்டும் இன்று தமிழ்பேசும் பகுதியையாவது ஒன்றிணைத்து தமிழ்ராஜ்ஜியம் அமையுங்கள்."

கரையாளர் "ஐயா, சேரநாடு மலையாள நாடாக ஆனது எப்படி?"

கவிமணி "நில அமைப்பு முதல் காரணம்.
இன்றைய தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.
இங்கே பேசப்படும் தமிழ் சிறிது வேறுமாதிரியாக ஆனது.
அதுவே மலைகளை ஆளும் மலையாளத் தமிழ்.
ஆனாலும் மலைகளுக்கு நடுவே இரு நாட்டையும் இணைக்கும் வழிகள் உள்ளன.
தெற்கே ஆரல்வாய் மொழி கணவாய்,
அதற்கு கொஞ்சம் வடக்கே சிறிய கணவாயான செங்கோட்டை கணவாய்,
வடக்கே பெரியதாக பாலக்காடு கணவாய்.
இன்று இந்த கணவாய்களுக்கு அருகே இருக்கும் நாங்கள்தான் தமிழ்த் தொடர்புடன் இருக்கிறோம்.
தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம் பீருமேடு தொழிலாளர்கள் 100 ஆண்டுகள் முன்பு வந்தவர்கள்.
அவர்களும் தமிழ் அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் மலையாளிகள் ஆகிவிட்டனர்.

இரண்டாவது காரணம் நம்பூதிரிகள்.
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாது.
அவர்கள் கடல் வழி வந்ததாகவும் கங்கைக் கரையிலிருந்து வந்ததாகவும் கூறுவர்.
இவர்கள் வேதங்களை வைதீக முறையில் செய்யும் புதியதொரு இந்துமதப் பிரிவைக் கொண்டுவந்தனர்.
யாகம் வளர்ப்பது, சோதிடம் பார்ப்பது, தீட்டுக்கழிப்பது, செய்வினை வைப்பது, என மூடநம்பிக்கையை வளர்த்து ஏதோ தங்களிடம் அதிசய சக்தி இருப்பதாக மக்களை நம்பவைத்தனர்.
நாளடைவில் செல்வாக்கு அதிகரித்தது.
அவர்கள் மணிப்பளவம் அல்லது மணிப்பிரவாகம் என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.
அதாவது 'தாயை வணங்கி' என்பதை 'மாதாவை நமஸ்கரித்து' என்று 'சமஸ்கிருதத்தைத் தமிழ்நடையில் எழுதும்' ஒரு செயற்கையான மொழியை உருவாக்கினர்.
  மன்னர்களையும் பூசை செய்துதரவாதகச் சொல்லி அவர்களுடன் நெருக்கமாகி மணிபிரவாகத்தை ஆட்சிமொழி ஆக்கினர்.
மன்னனுக்கு அடுத்த நிலையில் இடம்பிடித்தனர்.
மன்னர்கள் மூலம் உழைக்கும் சாதியினரை கீழ்சாதியாகவும் தீண்டத்தகாதோராகவும் ஆக்கினர்.
மன்னனின் படைத்தளபதிகளாக இருந்த தமிழரல்லாத வடுக வம்சாவழிகளான நாயர் வீட்டுப் பெண்களை தனக்கு உரிய பொருள் என்று கட்டுப்பாடு விதித்து அவர்களுடன் கலந்து கலந்து அவர்களைக் கலப்பினம் ஆக்கிவிட்டனர்.
இப்படியாக மேல்தட்டு வர்க்கம் மணிப்பிரவாக மயமானது.
நாளடைவில் அது நடுத்தட்டுக்கும் பரவியது.
ஆனால் அடித்தட்டில் இருந்த தமிழர்களுடன் இனக்கலப்பு நடக்கவில்லை.
மொழி மட்டும் கலந்தது
மணிப்பிரவாகமும் மலையாளத் தமிழும் கலந்து இன்றைய மலையாள மொழி உருவானது.
பழைய தமிழ் வட்டெழுத்துக்களை நகலெடுத்து தனியான புதிய எழுத்துமுறையை நம்பூதிரிகள் உருவாக்கினர்.
தமிழ் வார்த்தையின் கொச்சையான உச்சரிப்பையே மலையாள வார்த்தை என சேர்த்துக்கொண்டனர்.
அதாவது ஆமை என்பதை ஆம என்று உச்சரிப்போம் இதை மலையாளத்தில் ஆம என்ற வார்த்தையாக ஆக்கிக்கொண்டனர்.
இன்றும் இது பாதி தமிழ்.
தமிழர்களுக்கு மலையாளமும் மலையாளிகளுக்குத் தமிழும் அப்படியே புரியும்.
ஐக்கிய கேரளம் அமைந்ததும் முதல் வேலையாக மலையாளத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை நீக்கி அதற்கு இணையான சமஸ்கிருத சொற்களை புகுத்தி புதிய பாடத்திட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்"

கரையாளர் "என்றால் பிராமணரெல்லாம் சுத்த மலையாளிகளா?"

கவிமணி " இல்லை.
சோழர் காலத்தில் இங்கே வந்த தமிழ்நாட்டு பிராமணரான தமிழ் ஐயர்கள் இன்றும் தமிழையே பேசுகிறார்கள்.
தமிழராகவே இருக்கிறார்கள்.
தமிழ் ஐயர்கள் பாலக்காடு, கொடுங்காளூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அக்ரகாரம் அமைத்து வாழ்கிறார்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு வைத்துள்ளனர்.
இவர்கள் நம்பூதிரிகளைப் போல தாந்திரீக முறையை பின்பற்றாமல் தமிழ் ஆகம முறையைப் பின்பற்றுகிறார்கள்.
கோவில்களும் தனித்தனிதான்.
பிராமணர்கள் செய்துவரும் கொடுமைகளில் இவர்களுக்கு 1% கூட பங்கு கிடையாது.
மன்னர்களின் திவான்களாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டோர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனர்கள்.
அந்த வகையில் அரசுக்கு உடந்தையாக இருந்ததாகக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் வேளாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் எனலாம்.

தமிழ் ஐயர்களை இன்றும் தமிழர்களாகவே மலையாளிகள் பார்க்கிறார்கள்.
தமிழ்ப்பட்டர் என்றே அழைக்கிறார்கள்.
தமிழையர்கள் அமைத்துள்ள 'சமூகங்கள்' அவ்வப்பகுதி தமிழர்களை ஒன்றிணைத்து ஆகம அடிப்படையில் கோவில் ஒன்று கட்டி அந்தப் பகுதி நிலங்களை ஒன்றாக்கி கோயில் மூலம் நிர்வகிக்கும் குத்தகை உரிமையை வைத்துள்ளன.
மலையாளிகள் தனக்கான அரசு அமைந்ததும் முதலில் அதில்தான் கைவைப்பார்கள்.
தமிழையர்கள் கையில் இருக்கும் நிலம் பறிபோனால் தமிழர்கள் ஒருங்கிணைப்பும் பொருளாதாரமும் பறிபோகும்"

கரையாளர் "என்றால் நிலத்தின் விளைச்சலை சுரண்டும் நம்பூதிரிகளுக்கும் ஐயர்களுக்கும் என்ன வேறுபாடு?"

கவிமணி " நம்பூதிரிகளைப் போல நிலத்தில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் முறை கிடையாது இது.
குத்தகை உரிமை மட்டும்தான்.
இது நமது மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திய முறை ஆகும்.
ஆரம்ப காலத்தில் நம்பூதிரிகள் இங்கே வந்து சிறிது வலுப்பெற்றதும் சேர மன்னர் ஆதரவுடன் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சாலை எனுமிடத்தில் ஒரு கல்விக்கூடம் கட்டி அதில் தமிழ்ப்பாணர்களை அழைத்து வந்து போர்ப்பயிற்சி சொல்லிக்கொடுத்தனர்.
சேரர்களுக்கு உதவிப்படையாக இருக்கும் என்று மன்னனிடம் கூறினாலும் உண்மையில் சேரர்களை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கத்தான் அந்தப்படை.
ஆனால் அதற்குள் ராசராசன் சேரநாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்தும், விழிஞ்சம் துறைமுகம் வழியே கப்பல்களை உள்ளே நுழைத்தும் இருமுனைத் தாக்குதல் நடந்தது.
வென்றதும் காந்தளூர் சாலையை இடித்து தரைமட்டமாக்கி அது இருந்த அடையாளமே இல்லாமல் செய்துவிட்டான்.
போர்ப்பயிற்சி பெற்ற மாணவர்களை தனது படையில் சேர்த்துக்கொண்டான்.
நம்பூதிரிகள் கொண்டுவந்த தாந்திரீக முறையை ஒழித்து மீண்டும் ஆகம முறையை நடைமுறைப்படுத்தினான்.
தனது கல்வெட்டுகளில் 'காந்தளூர்சாலை கலமறுத்தருளி' என்றே அவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.
இது பற்றி நான் 32 ஆண்டுகள் முன்பே ஆராய்ந்து எழுதியுள்ளேன்."

கரையாளர் "பிராமணரில் தமிழர் உள்ளது போல தாழ்த்தப்பட்டோரிலும் மலையாளிகள் உண்டா?"

கவிமணி "இல்லை. ஆனால் ஈழவர், புலையர், தீயர் என தாழ்த்தப்பட்டோர் இந்த உண்மையை மறந்துவிட்டனர், தங்களை மலையாளிகளாகவே கருதுகின்றனர்.
இன்று மலையாளிகளில் மூன்று பெரும்பான்மைக் குழுக்கள் சிரியன் கிறித்தவர், நாயர்.
அவர்களுக்குள் எத்தனையோ பிரச்சனை இருக்கும் ஆனால் தமிழருக்கு எதிராக ஒன்றாகிவிடுவார்கள்.
உடனே நம்பூதிரியிடம் போய் ஆலோசனை கேட்டு அதுபடி நடப்பார்கள்"

கரையாளர் "உயர்சாதியானரில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் சிலர் மலையாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்"

கவிமணி "சிலர் இருக்கிறார்கள்.
பூணூல் போட்ட நாடார்களும் கூட அந்த வகையில் உண்டு.
நான் வெள்ளாளன்தான்.
குமரி மீட்புக்காக முதலில் விடுதலை அமைப்பு நிறுவிய அப்பாவுப்பிள்ளை வேளாளர்தான்.
நேசமணியின் கட்சியை நிறுவிய பி.எஸ்.மணி வெள்ளாளர்தான்.
இவ்வளவு ஏன்?!
நாஞ்சில் நாட்டுக்காக சேரநாடும் பாண்டியநாடும் மோதிக்கொள்ளும் என்று முன்பே கணித்து அதை மனோன்மணீயம் என்ற காவியமாகத் தீட்டிய சுந்தரம்பிள்ளை வெள்ளாளர்தான்.
அவர் கண்டெடுத்த கல்வெட்டு இன்றும் ஒரு முக்கிய சான்று.
அதுவே பாண்டிய நாட்டின் பகுதியான நாஞ்சில்நாட்டின் மீது சேரநாடு படையெடுத்தபோது காத்துநின்று வீரமரணம் அடைந்த வீரனின் கதையைக் கூறுகிறது.
அதாவது மலையாளிகள் சேரர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் நாஞ்சில் நாடு அவர்களுக்குச் சொந்தமில்லை என்பதை அவர் ஆணித்தரமாகக் கூறிச்சென்றுள்ளார்.
இது போல தொடக்ககால திருவனந்தபுரம் அரசர்கள் பாண்டிய வம்சமான வேணாட்டு அரசர்கள் என்பதையும் அவர்கள் காலத்தையும் சான்றுடன் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் மன்னருக்கு நெருக்கமானவர்.
நானும் அவரைப்போல திருவனந்தபுரத்தில் ஆசிரியராக இருந்தவன்தான்.
அவரைப்பற்றி ஆய்வும் செய்துள்ளேன்"

கரையாளர் " என்றால் திருவனந்தபுரம் வரைதான் மலையாளநாடு என்றால் இப்போது திருவனந்தபுரத்தில் தமிழர்கள் எத்தனை சதவீதம்"

கவிமணி " திருவனந்தபுரம் நகரில் 70% வரை இன்று தமிழர்கள்.
மலையாளிகள் தொடர்ந்து அந்நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியேறி வருகின்றனர்.
அந்நகரின் உணவுப் பொருட்கள் வணிகம் வேளாளர்கள் கையிலும்
மளிகை மற்றும் துறைமுகப் பொருட்கள் வணிகம் நாடார்கள் கையிலும் உள்ளது.
திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகள் கடைவீதிகள் என எல்லாமே தமிழர்கையில்தான் உள்ளது.
அந்நகர் மலையாளிகள் கைக்குப் போனாலும் முழுதும் மலையாள மயமாக குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.

செங்கோட்டையிலிருத்து கடலுக்கு நேராக ஒரு கோடு கிழித்து அதற்கு தெற்கே உள்ளதை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்.
அதற்கு மூழ்கிய குமரிக்கண்டம் நினைவாக பெயர்வைக்கவேண்டும்.
நமது குமரிநாடு மூழ்கிவிட்டது.
அதன் எஞ்சிய அடையாளம் cape comarin என்று ஆங்கிலேயர் அழைக்கும் குமரி முனையும் அங்கே இருக்கும் குமரியம்மன் கோவிலும்தான்"

கரையாளர் "இங்கே நம்பூதிரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மார்பை மூடமுடியாத அளவுக்கு சாதிக்கொடுமை நடந்ததாக அறிகிறோம்.
அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?"

கவிமணி "நம்பூதிரி சொன்னால் தமிழன் மானங்கெட்டுப்போய் அப்படியே செய்வானா?
இன்றும் பழங்குடிகளிடம் மாரை மூடும் வழக்கம் கிடையாது.
தமிழர்களிடமும் மார்பை மூடும் வழக்கம் முன்பு கிடையாது.
இதை கோவில் சிலைகளில் நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பழக்கம் இங்கே மற்ற பகுதிகளை விட அதிககாலம் தொடர்ந்தது.
அதைத்தான் நம்பூதிரி சட்டமாக்கினான்"

கரையாளர் "தங்களது பிரச்சனைகள் தமிழகத்துடன் இணைந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?"

கவிமணி "கட்டாயம் சரியாகிவிடும்.
நாங்கள் தாய்நிலத்துடன் இணைவது எங்களின் பிரச்சனைகளால் அல்ல.
தமிழ்ப் பற்றினால்தான்.
இந்த பற்றுக்கு மதிப்பிருந்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும்"

கரையாளர் "சரி ஐயா, நேருவிடம் இது பற்றி எடுத்துச்சொல்கிறேன்"

கவிமணி "காந்தி இருந்த வரை நேரு மருமகள் போல இருந்தார்.
இப்போது பதவிக்கு வந்தவுடன் மாமியார் போல நடந்துகொள்கிறார்.
அவர் தயவை எதிர்பார்க்காமல் தமிழர்கள் போராடவேண்டும்.
தெலுங்கர்களை இந்த விசயத்தில் நாம் பின்பற்றவேண்டும்.
தென்குமரியும் வடவேங்கடமும் போய்விட்டாலும்
குறைந்தபட்சம் குமரி முனையிலிருந்து வேங்கடமலையான திருப்பதி வரையாவது நம் நாடு ஒரு சிற்றரசாகவேணும் இந்தியாவில் இருக்கவேண்டும்.
நான் உயிருடன் இருக்கப்போகும் காலம் குறைவு.
என் காலத்தில் இது நடக்கவேண்டும்.
என் கடைசி ஆசை இது"
என்று கூறிவிட்டு கண்ணை மூடினார் கவிமணி.
மூடிய கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

திடீரென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்.
"தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்மிட்டு போற்றுகின்றேன் மன்னுபுகழ்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நாடு ஒத்து உலகில்
சந்தமும் வாழ வரம் தா"
பாடி முடித்ததும் அப்படியே அயர்ந்துவிட்டார்.
---------------------
தொடரும்

Saturday, 25 July 2015

ஒரு பறைத்தமிழன் விடாமல்

ஒரு பறைத்தமிழன் விடாமல் பறைசாற்றுங்கள்

*************************
*************************
பார்ப்பாரும் பறையரும் ஒருகுலத்தவரே.

வருங்காலத்தைப் பார்த்துக் கூறுபவர்,
தூதுசெல்வோர்,
பூசைமுடிந்ததும் பொருட்களைப் பெறுவோர் பார்ப்பனர் ஆவர்.

சோழர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய சதுர்வேதி மங்கலங்களில் சாகுபடி செய்யும் உரிமையும் அப்பார்ப்பனருக்கு இல்லை.

பூசை உரிமைகள்  பார்ப்பனர் எனும் சாதிக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டவில்லை.
முறையறிந்த /
திறனுடைய எவரும் பூசை செய்யலாம்,
இவ்வுரிமை ஏலமும் விடப்பட்டுள்ளது.

பார்ப்பனருக்கான சிறப்புச் சலுகைகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.

சேர்ந்து வாழும்பகுதி 'சேரி' எனப்பட்டது.
கிரேக்கர் பகுதி ‘யவனச் சேரி’ எனப்பட்டது.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும்
ஊரில், பார்ப்பனரும், பாணரும் இருந்தனர்.
ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் பார்ப்பனச் சேரி ஆகும்.
தேவாரம் பாடும் தமிழ்மரபினர் பிடாரர் எனப்பட்டனர்.
பவன'பிடாரர்' தஞ்சை பெரியகோயிலின் தலைமைக்குரு.
பார்ப்பனர்கள் இவருக்கு கீழ்.

பறையர், என்போர் தமிழரின் அறிவு மரபினர்.
பள்ளர்
என்போர், தமிழரின் வேளாண் மரபினர்.
இராஜராஜன் தன்னாட்டுப் பார்ப்பனர்களைக் கொன்றான் என்கிறது சாளுக்கியக் கல்வெட்டு.

பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர்,
பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த
பிரிவினரே.

காஞ்சி சங்கராச்சாரி கருவறைக்குள் நுழையக்கூட  அனுமதி கிடையாது.

1335ல் மதுரை முகமதிய ஆட்சியை எதிர்த்து தென்னிந்தியாவில் இருந்த பிராமண ஆதரவாளர் இணைந்து அமைத்த அரசே விஜயநகரப்பேரரசு.

அதன் ’நாயக்கர்களில்’ கணிசமானோர் தமிழரல்லாத பார்ப்பனர்.

கிருஷ்ண தேவராயர் தன்மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பிராமண அமைச்சரைக் கொல்லவில்லை.

’திராவிடர் என்போர் தென்னாட்டுப் பார்ப்பனரே’.
  ராசராசனின் தமக்கையார் ஒரு தேவரடியார் என்றால் (நாயக்கர்களின்)தேவதாசி போன்ற இழிவானவர் அல்ல என்பது புரியும்.

அந்தணர் என்பார் பிராமணர் அல்லர்.
பிராமண ஆதிக்கம்சாதி ஏற்றத்தாழ்வு நாயக்கராட்சியில் திணிக்கப்பட்டது.

மேலும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்.
அதிர்ச்சியான தகவல்கள்.
ம.செந்தமிழனின் 'திராவிட அவதூறும் தமிழர் மரபும்'

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5875&Itemid=139

பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11707&Itemid=139

Thursday, 9 October 2014

சோழப் பேரரசு

சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கலாம்.
இராசேந்திர சோழனுக்குப் பிறகு முதலில் இலங்கை, பிறகு இந்தோனேசியா, பிறகு மலேசியாவின் வடக்குப் பகுதியும் பர்மாவும், அதன் பிறகு வடயிந்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் என சோழர்கள் கையை விட்டுப் போய்விட்டன;
சோழ அரசு தஞ்சாவூரை மட்டும் கொண்டதாக சுருங்கி பிறகு மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றது.

Thursday, 10 July 2014

ஒரு பறைத்தமிழன் விடாமல்


ஒரு பறைத்தமிழன் விடாமல் பறைசாற்றுங்கள்
*************************
*************************
பார்ப்பாரும் பறையரும் ஒருகுலத்தவரே.
வருங்காலத்தைப் பார்த்துக் கூறுபவர், தூதுசெல்வோர்,பூசைமுடிந்ததும் பொருட்களைப் பெறுவோர் பார்ப்பனர் ஆவர்; சோழர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய சதுர்வேதி மங்கலங்களில் சாகுபடி செய்யும் உரிமையும் அவர்களுக்கு இல்லை; பூசை உரிமைகள் பார்ப்பனர் எனும் சாதிக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டவில்லை; முறையறிந்த /
திறனுடைய எவரும் பூசை செய்யலாம், இவ்வுரிமை ஏலமும் விடப்பட்டுள்ளது; பார்ப்பனருக்கான சிறப்புச் சலுகைகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை; சேர்ந்து வாழும்பகுதி 'சேரி' எனப்பட்டது; கிரேக்கர் பகுதி ‘யவனச் சேரி’ எனப்பட்டது; சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும்
ஊரில், பார்ப்பனரும், பாணரும் இருந்தனர்; ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் பார்ப்பனச் சேரி ஆகும்; தேவாரம் பாடும் தமிழ்மரபினர் பிடாரர் எனப்பட்டனர்; பவன'பிடாரர்' பெரியகோயிலின் தலைமைக்குரு; பார்ப்பனர்கள் இவருக்கு கீழ்; பறையர், என்போர் தமிழரின் அறிவு மரபினர். பள்ளர்
என்போர், தமிழரின் வேளாண் மரபினர்; இராஜராஜன் தன்னாட்டுப் பார்ப்பனர்களைக் கொன்றான் என்கிறது சாளுக்கியக் கல்வெட்டு; பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர்,
பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த
பிரிவினரே; காஞ்சி சங்கராச்சாரி கருவறைக்குள் நுழையக்கூட
அவருக்கு அனுமதி கிடையாது; 1335ல் மதுரை முகமதிய ஆட்சியை எதிர்த்து தென்னிந்தியாவில் இருந்த பிராமண ஆதரவாளர் இணைந்து அமைத்த அரசே விஜயநகரப்பேரரசு; அதன் ’நாயக்கர்களில்’ கணிசமானோர் பார்ப்பனர்; கிருஷ்ண தேவராயர் தன்மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பார்ப்பன அமைச்சரைக் கொல்லவில்லை; ’திராவிடர் என்போர் தென்னாட்டுப் பார்ப்பனரே’; ராசராசனின் தமக்கையார் ஒரு தேவரடியார் என்றால் (நாயக்கர்களின்)தேவதாசி போன்ற இழிவானவர் அல்ல என்பது புரியும்; அந்தணர் என்பார் பிராமணர் அல்லர்; பிராமண ஆதிக்கம்சாதி ஏற்றத்தாழ்வு நாயக்கராட்சியில் திணிக்கப்பட்டது;
அடுக்கடுக்கான ஆதாரங்கள்;
அதிர்ச்சியான தகவல்கள்;
ம.செந்தமிழனின் 'திராவிட அவதூறும் தமிழர் மரபும்'
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5875&Itemid=139
பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11707&Itemid=139


https://www.facebook.com/photo.php?fbid=403824759721183&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739