Showing posts with label திருமேனி. Show all posts
Showing posts with label திருமேனி. Show all posts

Tuesday, 24 July 2018

இராசராச சோழன் சிலை போலி

இராசராச சோழன் சிலை போலி


 ஆம்.

இராசராசன் சிலை தமிழகம் மீண்டது எனும் செய்தி தரும் சிறு மகிழ்ச்சியாவது என் இனத்திற்குக் கிடைக்கட்டுமே என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.


 ஆனால், நம் அறிவு எங்கே செல்கிறது?!


 அனைவரும் ஜோசியத்தில் இறங்கிவிட்டோம்.


 சோழன் வந்துவிட்டான்.

காவிரி வத்துவிட்டது.

2000 ஆண்டுகள் முன் கரிகாலன்.

1000 ஆண்டுகள் முன் ராசராசன்.

 இப்போது சோழன் மறுபடி வருவான் என்றெல்லாம் ஆருடம் நீள்கிறது.


 நாம் பழமை பேசிக் கெட்ட இனம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உண்மையை இப்போது போட்டுடைக்கிறேன்.


 ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரியகோவிலின் ஶ்ரீகார்யமாக 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவர் இருந்தார்.


 இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கு 74 செ.மீ [2.43 அடி] உயரத்திலும்

 மற்றும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கு 53 செ.மீ. [1.74 அடி] உயரத்திலும் செப்புச் சிலைகளை செய்துள்ளார்.


 ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.


 ஆனால், இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமோ மாறுபடுகிறது. 


 ராசராசனின் சிலையினுடைய உயரமோ 1 செ.மீ குறைகிறது.

 உலகமாதேவி சிலை உயரமோ 2 செ.மீ வரை குறைகிறது அத்துடன் வணங்கிய நிலையிலும் இல்லை.


 சிலைகள் மட்டுமின்றி ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்துள்ளார் ஶ்ரீகார்யம்.


 இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. 


 தற்போது மீட்கப்பட்ட சிலை ராசராசன் சிலை என்பதற்கு நாகசாமியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டுவோர்,

 ஏற்கனவே குஜராத் சென்ற தமிழகத்தின் குழு அப்போதைய முதலமைச்சர் மோடியிடம் கேட்டு சிலையைப் பெறும் கடைசி நேரத்தில் அக்குழுவில் ஒருவராக இருந்த நாகசாமி உயரத்தை அளந்து பார்த்துவிட்டு இந்த சிலை இல்லை என பல்டி அடித்தார் என்பதை மறக்கவேண்டாம்.

 

(தகவல்களுக்கு நன்றி: சிலை சிலையாம் காரணமாம் - 22 

- தி ஹிந்து 05.08.2016)


 நாம் பழமையில் மூழ்கி இன்றைய இழிநிலையை மறக்கமுயல்கிறோம்.

 

 நாம் பழைய வரலாற்றில் பெரிய சாதனைகள் செய்தோம்தான்.

 ஆனால் நாம் மட்டுமே பெரிய பிடுங்கி இல்லை.


 பாரோ மன்னர்கள் கட்டிய பிரமீடு முன்பு இராசராசன் கட்டிய பெரியகோவில் ஒன்றுமேயில்லை.


 சைருஸ் எழுப்பிய பாரசீகப் பேரரசுக்கு முன் சோழப் பேரரசு ஒன்றுமேயில்லை.


 நம்மை காக்க சோழனும் வரப்போவதில்லை எவனும் வரப்போவதில்லை.


வரலாறு அறிக!

அத்துடன் நடைமுறையும் உணர்க!

தமிழ் இனமாக எழுக!

Sunday, 16 April 2017

அதிகாரிச்சி

அதிகாரிச்சி
:=:=:=:=:=:=:=:

"பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை"
_ஈ.வே.ரா பக்தர்

"அப்டியாப்பா?
அதிகாரிச்சி அப்டினா என்னு தெரியுமா?

1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள்தான் அதிகாரிச்சி.

அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து  கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.

உங்கள்  பெண்ணுரிமை கருத்துகளான
கர்ப்பப்பை நீக்குதல்,
ஆண் போல முடிவெட்டுதல்,
ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல் போன்றவற்றை
வேறு எங்காவது போய் பரப்பவும்."

படம்: ராஜராஜசோழன் மற்றும் ஒலோகமாதேவி
(அகமதாபாத் அருங்காட்சியகம்)