அதிகாரிச்சி
:=:=:=:=:=:=:=:
"பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை"
_ஈ.வே.ரா பக்தர்
"அப்டியாப்பா?
அதிகாரிச்சி அப்டினா என்னு தெரியுமா?
1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள்தான் அதிகாரிச்சி.
அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.
இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.
உங்கள் பெண்ணுரிமை கருத்துகளான
கர்ப்பப்பை நீக்குதல்,
ஆண் போல முடிவெட்டுதல்,
ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல் போன்றவற்றை
வேறு எங்காவது போய் பரப்பவும்."
படம்: ராஜராஜசோழன் மற்றும் ஒலோகமாதேவி
(அகமதாபாத் அருங்காட்சியகம்)
Sunday, 16 April 2017
அதிகாரிச்சி
Tuesday, 25 October 2016
தேவரடியாரும் தேவதாசிகளும்!
தேவரடியாரும் தேவதாசிகளும்!
-சில கல்வெட்டுச் சான்றுகள்
ம.செந்தமிழன்
இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.
இன்றைக்குத் தமிழகத்தில் வாழும் சாதி வழிப்பட்ட ஆந்திர, கன்னட மூதாதையர்களின் குலத்தவரைக் குறிக்கவில்லை. அவர்களை ‘திராவிடர்’ என அழைப்பது தவறானதும், வரலாற்று நோக்கம் அற்றதும் என்பது என் கருத்து.
தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர் என வகைப்பிரிப்பது தவறு.
எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல!
தேவரடியாரும் தேவதாசிகளும்
தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.
இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.
’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.
சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.
தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.
தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.
குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.
’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334)
பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.
’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’
(கர். கல் VAK 105)
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19)
இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.
இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.
தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;
’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22)
அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.
பெண்களின் நிலை:
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)
மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?
இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?
லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.
’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.
கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.
விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.
கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்.
Thursday, 24 September 2015
பெங்களூரில் சோழர் கோவில்கள்
பெங்களூரில் சோழர் கோவில்கள்
வெங்கலூர் (பெங்களூர்) மற்றும் அதைச் சுற்றிலும் சோழர் கட்டிய கோவில்கள் பல உள்ளன.
பழைய பெயர்கள் மறைந்துவிட்டன.
தற்போதைய பெயரையே தருகிறேன்.
எட்கர் தர்ஸ்டன் எழுதிய 'castes and tribes of india' volume-5' ல்
கி.பி ஒன்றிலிருந்து 1024ல் சோழர்கள் பெங்களூரைக் கைப்பற்றும் வரையான காலத்தில் பெங்களூரை ஆண்ட மன்னர்கள் பற்றி கூறியுள்ளார்.
'கொங்குதேச ராஜாக்கள்' (Kongu chronicle) இதற்கான குறிப்புகளை வழங்கியுள்ளது.
பெங்களூரில் மரதஹல்லி (marathahalli)ல் உள்ள சோமேஸ்வர ஆலயத்தில் 1304ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது.
இதில் இப்பகுதியின் பழைய பெயர் நெற்குந்தி (nerkundi)என்று குறிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பெங்களூரின் அகரா (agara) பகுதியில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான மற்றொரு சோமேஸ்வரசுவாமி கோயிலும் சோழர்கள் கட்டியதே.
பெங்களூரின் வசந்தபுரத்தில் 'வசந்த வல்லபரயர்' ஆலயமும் சோழர்காலத்தில் கட்டப்பட்டதே.
பெங்களூரின் நாகரத்பேட் (nagarathpet)ல் உள்ள 800ஆண்டுகள் பழமையான காளிகாம்பாள்- காமதேஸ்வரர் கோயிலும் சோழர் காலத்தைச் சேர்ந்தது.
பெங்களூர் புறநகரில் உள்ள ஹொஸ்கோட் (hoskote) தாலுகாவில் கோண்ட்ரஹல்லி (kondrahalli)ல் உள்ள தர்மேஸ்வரர் ஆலயம் 1065ல் சோழர்களால் கட்டப்பட்டது.
பெங்களூரில் அனேகல் (anekal) தாலுகாவில் ஹுஸ்கூர் (huskur)ல் மதுரம்மன் ஆலயம் உள்ளது.
இதுவும் 11ம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய கோவில் ஆகும்.
பெங்களூர் அருகே ஹெப்பல் (hebbal) எனுமிடத்தில் உள்ள ஆனந்தகிரி குன்றுகளில் உள்ள 'ஆனந்த லிங்கேஸ்வரர்' கோவில் சோழர்கள் கட்டடக்கலையில் அமைந்துள்ளது.
கட்டியது யாரென்று ஆராயப்படவேண்டும்.
இதேபோல பெங்களூர் நகருக்குள் மற்றொரு மதிவாலா சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இதையும் சோழர்களே கட்டியுள்ளனர்.
இதில் 1247 மற்றும் 1365ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
பெங்களூரின் காங்கேரி (kangeri)ல் ஈஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது.
இதுவும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
இது போக முக்கியமானவை,
1)பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்
இக்கோவில் பெங்களூரில் பேகூர்(Begur, Bangalore) என்ற இடத்தில் உள்ளது.
இவ்வூரின் பழைய பெயர் வெப்பூர் ஆகும்.
தமிழ் கல்வெட்டுகள் கொண்டது.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
நாகேஸ்வரர் கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஐந்து லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழேஸ்வரர் என்று பெயர்பெற்றுள்ளது.
2) சொக்கப்பெருமாள் ஆலயம்
பெங்களூரில் உள்ள தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது.
10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
இதன் பழைய பெயர் தொம்பலூர் அல்லது தேசிமாணிக்கப் பட்டணம் ஆகும்.
பெங்களூரை இலைப்பக்கநாடு என்றும்
தென்கன்னடப் பகுதியை தடிகைப்பாடி என்றும் இக்கோவில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.
1258ஐச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆலால நம்பியார் என்பவர் பூசாரியான 'மணலி திரிபுரந்த ஆசாரியார்' என்பவருக்கு வழிபாட்டுக்கென வழங்கிய கொடையைக் கூறுகிறது.
1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் அழகியர் என்பவர் கதவுகள் அளித்தது பற்றியும்
மற்றொன்று இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம் பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது.
(சான்று: epigraphica carnatica vol 9, insc of banglore, no 10&13 )
3) போகநாதீஸ்வரர் ஆலயம்
நந்திமலை அடிவாரத்தில் சிக்கபல்லப்பூர் (chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தில் உள்ளது.
தமிழ் கல்வெட்டுகள் கோவில் சுவரில் காணப்படுகின்றன.
4) சோமேஸ்வரர் ஆலயம்
பெங்களூரில் உல்சூர் அல்லது ஹலசூரு என்ற இடத்தில் உள்ளது.
63நாயன்மார்களின் (தமிழர்கள்) சிலைகளும் உள்ளன.
5)கோலாரம்மன் ஆலயம்
கோலார் (kolar) நகரத்தில் அமைந்துள்ளது.
இதைக் கட்டியது ராஜேந்திர சோழன் ஆவான்.
முழுக்க முழுக்க தமிழ் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன.
(epigrapha carnatica vol 10 insc of kolar taluk)
6)முக்தி நாதேஸ்வரர் ஆலயம்
நீலமங்கல தாலுகாவில் பின்னமங்கலா (binnamangala) என்ற என்ற இடத்தில் உள்ளது.
குலோத்துங்க சோழன் காலத்தில் 1110ல் கட்டப்பட்டுள்ளது.
உடையான் ராஜராஜ குலோத்துங்கன் (எ) குலோத்துங்க சோழன் அதிமூர்க்க செங்கிராயன் எனும் பெயருடைய இப்பகுதியின் நிர்வாக அதிகாரியும் மன்னனும் ஆகிய சோழமன்னன்
விக்கிரம மண்டலத்தில் உள்ள குக்கனூர் நாட்டின் விண்ணமங்கலம் ஊரின் சுற்றியுள்ள நிலங்களை முத்தீஸ்வர உடைய மகாதேவருக்கு (இக்கோயில் கடவுள்) தேவதானமாக அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
(epigrapha carnatica vol 9 insc of nelamangala taluk, no:3)
7)சித்தேஸ்வரம் ஆலயம்
சோழதேவனஹல்லி (soladevanahalli) எனும் இடத்தில் உள்ள முத்தரையஸ்வாமி கோவில் என்ற கோவில் உள்ளது.
ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.
8)பிடாரி சாமுண்டேஸ்வரி ஆலயம்
இந்த கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை.
நீலமங்கலா அருகே மைலானஹல்லி (mailanahalli) என்ற ஊரின் நுழைவாயிலில் இரண்டாம் அடுக்கில் தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது.
ராஜராஜசோழன் காலத்தையதான அதில் அப்பகுதி குக்கனூர்நாடு என்றறியப்பட்டதாகவும் அது விக்கிரமசோழ மண்டலத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் அறியக்கிடைக்கிறது.
மேலும், நீலமங்கலா தாலுகாவில்
அ) மாதிகேரே (madikere)ல் உள்ள மாதேஸ்வரர் ஆலயம்,
ஆ)ஐங்கந்தபுரம் (ayinkandapura)ல் உள்ள கோபாலகிருஷ்ண ஆலயம்,
இ)சோலதேவன ஹல்லி தர்மேஸ்வர ஆலயம்,
ஈ) ஹெக்குண்டா (heggunda)ல் உள்ள மல்லிகார்ஜுன ஆலயம்,
தேவனஹல்லி தாலுகாவில் உள்ள
அ) கங்கவாரா ஔடப்பன்ஹல்லி (gangavara chowdappanhalli)ல் சோமேஸ்வரர் ஆலயம்
ஹொஸ்கோட் தாலுகாவில் உள்ள
அ)கடுகோடி (kadugodi) காசி விஸ்வேஸ்வரர் ஆலயம்
சன்னபட்டண தாலுகாவில் உள்ள
அ)மல்லூர் பட்டண (malurpatana)ல் நாராயணஸ்வாமி ஆலயம் மற்றும்
அரக்கேஸ்வரர் ஆலயம்
ஆ)குட்லூர் (kudlur)ல் ராமதேவ ஆலயம் மற்றும் மங்கலேஸ்வரர் ஆலயம்
இ)சிக்கமலூர் (chikkamalur)ல் அரக்கேஸ்வரர் ஆலயம், கோபாலஸ்வாமி ஆலயம், மற்றும் காளீஸ்வரர் ஆலயம்
ஈ)தொட்டமலூர் (doddamalur)ல் அப்ரனேயஸ்வாமி ஆலயம்
போன்றவையும் சோழர்காலத்தவையே
ஆராய்ந்தால் நிறைய சான்றுகள் கிடைக்கும்.
நன்றி: www.mayyam.com/talk/showthread.php?10458-A-brief-study-on-Chola-built-temples-in-Karnataka
https://en.m.wikipedia.org/wiki/List_of_Chola_temples_in_Bangalore