Showing posts with label சிலை. Show all posts
Showing posts with label சிலை. Show all posts

Wednesday, 24 July 2019

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

பாண்டிய மன்னன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் என்பவன் திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன சைவ குரவரின் பேச்சைக் கேட்டு எண்ணாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படுவது உண்மையா???

இல்லை!

சமணர் கழுவேற்றம் என்பது உண்மையில் நடந்த சம்பவமல்ல.

அது ஒரு கற்பனையான பழைய நம்பிக்கை மட்டுமே!
அதை தொன்மம் என்று கூறமுடியுமே தவிர வரலாறு என்று ஒத்துக்கொள்ள ஆதாரங்கள் வேண்டும்.
 
சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு ஆதாரமாக திராவிட தத்துவவாதிகள் காட்டுவது கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமய பக்தி இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் உள்ள கற்பனைகளைத் தான்.

ஆனால் சமணரை வாதத்தில் வென்ற  (கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய பாடல்களில் கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
அவர்கள் சமணர்களை வாதத்தில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டுமே செய்துள்ளனர் என அறியமுடிகிறது.

250 ஆண்டுகள் கழித்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் நாயன்மார்களின் இலக்கியங்களை சேகரித்து தொகுத்து அதற்கு அவர் உரை எழுதுகிறார்.
அதுவே பெரிய புராணம் ஆகும்.

அதில்தான் நாயன்மார்களுக்கு ஆன்மீக சக்தி இருப்பதாகக் காட்ட பல புனைவுக் கதைகள் செருகப்பட்டன.
  சுண்ணாம்புக் காளவாசலுக்குள் இருந்து உயிருடன் வந்தது,
வெள்ளெலும்பை ஒரு பெண்ணாக மாற்றியது,
கோயில்க் கதவுகளைத் திறக்கவும் மூடவும் பாடியது,
சமணர் கழுவேற்றம் போன்ற பல கற்பனைக் கதைகள் பின்னிட்டு சேர்க்கப்பட்டன.
இவற்றை ஆதாரங்களாக எந்த வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கமாட்டார்கள் (திராவிட தத்துவவாதிகளைத் தவிர!).

கழுவேற்றம் நடந்தது குறித்த கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ எதுவுமே இல்லை.
சமணர்களின் நூல்களில் கூட கழுவேற்றம் நடந்தது குறித்த சான்றுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.

கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் சமண மடாலயங்களும், சமணக் கோயில்களும் கி.பி. 10ம் நூற்றாண்டு முதல் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் செழிப்புடன் இருந்துள்ளன என்பதை கோ.செங்குட்டுவன் எழுதிய "சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்" எனும் நூல் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கூட ஒரு சமணன் தான்.

எண்ணாயிரம் என்பது வணிகர் குலப்பெயர்.
அக்காலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் (எ-டு: கோவலன்).
வணிகர்கள் எண்ணாயிரத்தவர் கூட்டம் நாலாயிரத்தவர் கூட்டம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
கொள்ளையர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய வணிகர்கள் பத்தாயிரம் நபர்கள் முதல் நானூறு நபர்கள் வரையுள்ள குழுக்களாகத் தான் இருப்பார்கள்.
ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய போர்ப்படையாகவே அவர்கள் இருப்பார்கள்.
(கோவலனுடைய இது போன்ற வணிகப் படையே மதுரையை எரித்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு)
அது போன்ற ஒரு எண்ணாயிரத்தவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகன் (எண்ணாயிரம் சமணன்) செய்த ஏதோவொரு குற்றத்திற்காக அவன் கழுவேற்றப்பட்டிருக்கலாம்.

அதை வைத்துக் கொண்டு எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற திரைக்கதை உருவாக்கப்பட்டு பரப்புரை நடபெறுவதாகவே ஊகிக்க முடிகிறது.

இந்த கட்டுக்கதையை தமிழ்ச் சமூகம் எந்தவித ஆய்வுமின்றி ஏற்றது தான் திராவிடத்தின் திட்டமிட்ட சதி.

  தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு
மண்டபச் சுவரிலும்,
புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலிலும்,
திருச்செந்தூர் கோயிலிலும்,
வைகுந்த பெருமாள் கோவிலும்
காஞ்சி கோவிலிலும் (இதன் தலை சிதைக்கப்படுள்ளது) கழுவேற்ற சிலைகள் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் கழுவேற்றும் ஓவியங்கள் உள்ளன.
 
மேற்கண்ட அனைத்திலுமே கழுவேற்றப்பட்ட மனிதனின் சிலை நீளக்குடுமி,மீசை தாடியுடன் காணப்படுகிறது.

சமண முனிவர்கள் மீசை மழித்து மொட்டையடித்து இருப்பவர்கள்.
ஆகவே இதை எப்படி ஆதாரமாகச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை.

எந்த மூல ஆதாரங்களையும் காட்டாமல் இப்படியான பிற்கால பின்னொட்டு சான்றுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டே போவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்?!

உண்மையில் சமணர் மொட்டைத் தலையுன் இருந்தனரா?!

இதற்கு ஒரு சான்றினைப் பார்ப்போம்.
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி.
(சமணர் அதிகம் வாழ்ந்த ஊர்.
இங்கே இருக்கும் சமண கோவில் இன்றும் இயங்கிவருகிறது.
செயங்கொண்டார் சமணரா என்பது தெரியவில்லை)

இவர் பாடிய கலிங்கத்துப் பரணி சமணரின் தோற்றம் பற்றி கூறுகிறது.
அதாவது முதலாம் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்கத்து படைவீரர்கள் தலையை மழித்துக்கொண்டு தாங்கள் சமணர் என்று பொய்கூறி தப்பிக்கப் பார்த்ததாக கூறியுள்ளார்.

சரி! இந்த சமணர் கழுவேற்றத் திரைக்கதையை திராவிட தத்துவவாதிகள் இன்றும் ஓட்டி வரக் காரணம் என்ன??

தமிழ் வளர்த்த சைவ சமயத்தை பார்ப்பன மயமானது என்றும் பார்ப்பனர்கள் மற்றும் பாண்டியர்கள் இனப்படுகொலை செய்யுமளவு கொடூரமானவர்கள் என்றும் நம்பவைப்பதற்காக மட்டுமே இந்தச் “சமணர் கழுவேற்றம்” என்ற பொய்யை திராவிட தத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

சமணர் கழுவேற்றம் எனும் கட்டுக்கதை உருவானதும் பரவியதும் எப்படி?!

இக்கதையை முதன்முதலாக உருவாக்கிய நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள்.
இதனாலேயே இவர்களது நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.

  நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு கற்பனையைப் பதிவு செய்கிறார்.

சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடச் செய்கிறார்.

பிற்பாடு அருணகிரிநாதர் கூட இந்த கழுவேற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கழுவேற்றம் எனும் சடங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் நடத்தபடும் திருவிழா நாடகங்களில் இடம்பெற்று வந்தது.

பெரியபுராணம் 1860 களில் அச்சில் வெளிவந்த பிறகு மீண்டும் இந்த கட்டுக்கதை மக்களிடையே பிரபலமாகிறது.

வள்ளலார் இது பற்றி மனம் பதறி சிவனிடம் முறையிடுவது போல எழுதியுள்ளார்.

அதன்பிறகு தமிழறிஞர்களுக்கு இடையே நடந்த விவாதங்களில்
அ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர், மயிலை. சீனி.வெங்கடசாமி போன்றோர் சமண கழுவேற்றம் உண்மை என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா.ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய பெரும்பாலோர் சமணர் கழுவேற்றம் நடந்திருப்பதாக கூறுவதை மறுத்திருக்கின்றனர்.
இதையெல்லாம் விட தமிழ்ச் சமண அறிஞரான டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களும் நன்கு ஆராய்ந்து "இது வரலாற்றுச் சம்பவம் அல்ல" என்று முடிவாகக் கூறியுள்ளார்.

ஆக,

சம்பந்தர் , அப்பர் தேவாரங்களில் வாதத்தில் தோற்ற சமணர் தண்டிக்கப்பட்டதற்கான அகச்சான்றுகள் இல்லை.

பல்லவ , பாண்டிய, சோழர்கள் வெட்டிய அனைத்து கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.

சமணர்களை கழுவிலேற்றிக் கொன்றதாக பாண்டியர்கள் மீது வீண்பழி போடப்படுகிறது.
  ஆனால் உண்மையில் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகும் சமணர்க்கு குகைகளும் கற்படுக்கைகளும் பாண்டியர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அவை வருமாறு,

மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை
( சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்டது)
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
(யானைமலை நரசிங்கர் குடைவரை
பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது)
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை.

இத்தனை குழப்பத்திற்கும் காரணம் யார்?!

12 ஆம் நூற்றாண்டில் சோழர்களுடன் திருமண உறவின் மூலம் கலந்த சாளுக்கியர் அநாபய சாளுக்கியன் காலத்தில் சோழ அரசைக் கைப்பற்றி சோழர் என்ற பெயரிலேயே ஆட்சி செய்கிறார்கள்.
இவர்கள் சைவ  மதவெறியர்கள்.
பாண்டியநாடு வரை இவர்கள் ஆட்சியே என்பதால் பாண்டியர் மீது களங்கம் கற்பிக்கும் இந்த கழுவேற்ற கட்டுக்கதை இவர்கள் தூண்டுதலால் உருவாக்கப்படுகிறது.

மற்றபடி சமணரே கூட இப்படி ஒரு பழியை பாண்டியர் மீது போடவில்லை.
சமண மதம் சார்ந்த புராணங்களிலேயோ நூல்களிலோ  கல்வெட்டுகளிலேயோ கூட கழுவேற்ற சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.

கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்படும் 7 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணர்கள் தமிழில் எழுதிய நூல்கள் வருமாறு,
1. சிந்தாமணி
2. வளையாபதி
3. நீலகேசி
4. யசோதர காவியம்
5. உதயணகுமார காவியம்
6. சூளாமணி
7. பெருங்கதை
8. நன்னூல்
9. சூடாமணி நிகண்டு
10. யாப்பெருங்கலக் காரிகை
11. யாப்பெருங்கலம்
12. அமுதசாகரம்
13. அருங்கலச் செப்பு
14. அறநெறி சாரம்
15. திருநூற்றந்தாதி
16. திருப்புகழ்ப் புராணம்
17. மேருமந்தர புராணம்
18. திருக் கலம்பகம்
19. தீபக்குடி பத்து
20. ஸ்ரீ புராணம்

சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன.

சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?

கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

இவர்களுள் ரொமிலா தாபரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும் அடங்குவர்.

இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுக்கப்படவில்லை.
சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று தீக்கதிரில் கட்டுரை எழுதிய (தெலுங்கரான) கம்யூனிஸ்டு
அருணன் கூட சரியான முறையில் இதுவரை இதை மறுக்கவில்லை.

முடிவாக,
கன்னட சாளுக்கியரால் உருவாக்கப்பெற்று
மதுரை தெலுங்கு நாயக்கர்களால் பரப்பப்பட்டு
வந்தேறி திராவிடவாதிகளால் மெருகேற்றப்பட்டு
தமிழர் மீது போடப்படும் வீண்பழியே "சமணர் கழுவேற்றம்" எனும் கட்டுக்கதை!

Friday, 15 February 2019

பெருமாள் சிலையா? இல்லை கன்னடர் திமிரா?

தமிழக மலையைப் பெயர்த்து
சாலை வளையங்களை தகர்த்து நீக்கி
வீடுகளை இடித்து சேதப்படுத்தி
போக்குவரத்தின் கழுத்தை நெறித்து
புதிய பாலமெல்லாம் கட்டிக்கொண்டு
சுங்கச்சாவடி இடையூறு இல்லாமல்
தமிழக காவல்துறை பாதுகாப்புடன்
தடையின்றி கர்நாடகம் நோக்கி
ஊர்ந்து செல்லும் இது

பெருமாள் சிலையா?
இல்லை கன்னடர் திமிரா?

Tuesday, 24 July 2018

இராசராச சோழன் சிலை போலி

இராசராச சோழன் சிலை போலி


 ஆம்.

இராசராசன் சிலை தமிழகம் மீண்டது எனும் செய்தி தரும் சிறு மகிழ்ச்சியாவது என் இனத்திற்குக் கிடைக்கட்டுமே என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.


 ஆனால், நம் அறிவு எங்கே செல்கிறது?!


 அனைவரும் ஜோசியத்தில் இறங்கிவிட்டோம்.


 சோழன் வந்துவிட்டான்.

காவிரி வத்துவிட்டது.

2000 ஆண்டுகள் முன் கரிகாலன்.

1000 ஆண்டுகள் முன் ராசராசன்.

 இப்போது சோழன் மறுபடி வருவான் என்றெல்லாம் ஆருடம் நீள்கிறது.


 நாம் பழமை பேசிக் கெட்ட இனம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உண்மையை இப்போது போட்டுடைக்கிறேன்.


 ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரியகோவிலின் ஶ்ரீகார்யமாக 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவர் இருந்தார்.


 இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கு 74 செ.மீ [2.43 அடி] உயரத்திலும்

 மற்றும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கு 53 செ.மீ. [1.74 அடி] உயரத்திலும் செப்புச் சிலைகளை செய்துள்ளார்.


 ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.


 ஆனால், இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமோ மாறுபடுகிறது. 


 ராசராசனின் சிலையினுடைய உயரமோ 1 செ.மீ குறைகிறது.

 உலகமாதேவி சிலை உயரமோ 2 செ.மீ வரை குறைகிறது அத்துடன் வணங்கிய நிலையிலும் இல்லை.


 சிலைகள் மட்டுமின்றி ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்துள்ளார் ஶ்ரீகார்யம்.


 இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. 


 தற்போது மீட்கப்பட்ட சிலை ராசராசன் சிலை என்பதற்கு நாகசாமியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டுவோர்,

 ஏற்கனவே குஜராத் சென்ற தமிழகத்தின் குழு அப்போதைய முதலமைச்சர் மோடியிடம் கேட்டு சிலையைப் பெறும் கடைசி நேரத்தில் அக்குழுவில் ஒருவராக இருந்த நாகசாமி உயரத்தை அளந்து பார்த்துவிட்டு இந்த சிலை இல்லை என பல்டி அடித்தார் என்பதை மறக்கவேண்டாம்.

 

(தகவல்களுக்கு நன்றி: சிலை சிலையாம் காரணமாம் - 22 

- தி ஹிந்து 05.08.2016)


 நாம் பழமையில் மூழ்கி இன்றைய இழிநிலையை மறக்கமுயல்கிறோம்.

 

 நாம் பழைய வரலாற்றில் பெரிய சாதனைகள் செய்தோம்தான்.

 ஆனால் நாம் மட்டுமே பெரிய பிடுங்கி இல்லை.


 பாரோ மன்னர்கள் கட்டிய பிரமீடு முன்பு இராசராசன் கட்டிய பெரியகோவில் ஒன்றுமேயில்லை.


 சைருஸ் எழுப்பிய பாரசீகப் பேரரசுக்கு முன் சோழப் பேரரசு ஒன்றுமேயில்லை.


 நம்மை காக்க சோழனும் வரப்போவதில்லை எவனும் வரப்போவதில்லை.


வரலாறு அறிக!

அத்துடன் நடைமுறையும் உணர்க!

தமிழ் இனமாக எழுக!

Wednesday, 7 March 2018

தமிழர்நாட்டில் சிலைகள்

தமிழர்நாட்டில் சிலைகள்

தமிழர் தாய்நிலம் தமிழர்களின் ராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் தேவையற்ற சிலைகள் அகற்றப்படும்.

அதிலும் ஈ.வே.ரா உட்பட திராவிடத் தலைவர்களின் சிலைகள்
காந்தி உட்பட ஹிந்திய தலைவர்களின் சிலைகள் அனைத்தும் ஒரு இடம் விடாமல் அத்தனையும் அகற்றப்படும்.

தமிழராக பிறந்த தலைவர் அல்லது தமிழருக்காகவே உழைத்த வேற்றினத் தலைவர் தவிர பிறருக்கு சிலை கிடையாது.

மெரீனா கடற்கரையில் உள்ள சமாதிகள் அனைத்தும் அகற்றப்படும்.

பள்ளி பாடப் புத்தகங்களில் தலைவர்கள் பற்றி தனிப்பட்ட வரலாறு எதுவும் இருக்காது.

தற்போதுள்ள பிரம்மாண்ட மணிமண்டபங்கள் அனைத்தும் இடிக்கப்படும்.
  நினைவிடங்கள் காலி செய்யப்படும்.

ஈழத்தை ஆக்கிரமித்து சிங்களவர் நிறுவியுள்ள புத்த சிலைகள் போல பிற இனத்தவர் ஆதிக்க நோக்கில் நிறுவியுள்ள சிலைகள் அனைத்தும் அகற்றப்படும்.

முக்கியமான பொருட்கள் இருந்தால் அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

பொது இடங்களுக்கு தனிநபர் பெயர் இருந்தால் அவை மாற்றப்பட்டு இயல்பான பெயர்கள் வைக்கப்படும்.

இறந்த பிறகும் இந்த மண்ணில் ஆறடியை ஆக்கிரமித்தபடி யாரும் இருக்ககூடாது.

விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரருக்கு நடுகல் வைக்கப்படும்.

எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும் எந்த மதத்தவராக இருந்தாலும் இறந்த பிறகு உடல் எரியூட்டப்படும்.

அந்த நீறு(அஸ்தி) அவர் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேல் நின்றநிலையில் ஒரே ஒரு சிலை  நிறுவிக்கொள்ளலாம்.
இந்த சிலை அவரது உடலமைப்பு அளவே பெரியதாக இருக்கவேண்டும்.
5 அடி உயர மேடையில் வைத்துகொள்ளலாம்.
அதில் உள்ள கல்வெட்டில் தலைவரது பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி மற்றும்  திறந்தவர் பெயர், திறந்த தேதி தவிர வேறு எதுவும் இருக்ககூடாது.

  சிலை பொதுவழியில் இடைஞ்சலாக இருக்ககூடாது.

கல்லில்தான் சிலை வைக்கவேண்டும்.
வண்ணமடித்தல் கூடாது.

தனியார் வளாகத்தில் வைக்கப்படும் சிலைகள் வெளியே இருந்து பார்ப்போருக்கு தெரியாமல் வைக்கப்படவேண்டும்.

வழிபாட்டு தலங்களுடைய கோபுரங்களில் சிலை இருக்கலாம்.
அது தனிநபர் சிலையாக இருக்ககூடாது.

சிலை அமைப்பது மிகச் சிறந்த தலைவர்களுக்கு மட்டுமே!

ஒரு தலைவருக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் சிலை இருக்கும்.

சிலை பராமரிப்பும் அத்தலைவர் பிறந்தநாள் விழா நடத்துவதையும் அரசே ஆடம்பரம் இல்லாமல் செய்யும்.

நமது கலை மற்றும் ஆற்றலை உலகிற்கு காட்ட பெரிய கட்டுமானங்கள் செய்வது அவசியம்.

ஆனால் அது தனிநபர் அடையாளமாக இருக்ககூடாது.

தமிழர்களே!

நடுத்தெருவில் கூண்டுக்குள் வெயிலில் புழுதியில் பறவைகள் எச்சமிட சிலை நிறுவி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் மாலைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வது செய்நன்றி ஆகாது.

தனிநபர் முக்கியத்துவம் தமிழர்நாட்டில் இருக்காது.

(படம்: அலெக்சாண்டரின் சிலை)

Wednesday, 7 February 2018

தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக பேசிய டி.கே.ரங்கராஜன்

புதுதில்லி;
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று டி.கே. ரங்கராஜன் பேசியதாவது:
நம் குடியரசுத்தலைவர் உரையானது, இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து, ஏராளமான புள்ளி விவரங்களை உள்ளடக்கி இருக்கிறது. தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு, தன்னுடைய தலையங்கத்தின் தலைப்பில், “குடியரசுத் தலைவர் கோவிந்த் அல்லது எகனாமிக் சர்வே” என்று குறிப்பிட்டிருக்கிறது. “இந்த அரசாங்கம், புள்ளி விவரங்களைத் தயாரிப்பதற்கு ஆணை பிறப்பித்திருக்கிறது,” என்று முன்னாள் பாஜக நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா இதுகுறித்துக் குறிப்பிட்டிருக்கிறார். இது எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. இவ்வாறு நான் கூறவில்லை என யஷ்வந்த் சின்கா கூறுகிறார்.
நீட் தேர்வு விலக்கு
என்னுடைய நண்பர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், “நீட்” தேர்வு குறித்துக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிவைத்த தீர்மானம் எப்படிக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று விளக்கினார். அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஒருவர் சென்னை வந்திருந்தபோது, “நீட்” தேர்விற்கு ஓராண்டு காலத்திற்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம் என்று உறுதியளித்தார்.
அதன்பின்னர்தான் அந்தச் சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட பின் அது குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிடும் என்று நாங்கள் நினைத்தோம். பின்னர் நான் ஒரு கடிதம் குடியரசுத் தலைவருக்கு எழுதினேன். குடியரசுத் தலைவர் அதற்கு எனக்குப் பதிலளித்திருக்கிறார். “உள்துறை அமைச்சகம் அந்தச் சட்டமுன்வடிவை எனக்கு அனுப்பவில்லை,” என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும் கிராமப்புற மாணவர்கள் “நீட்” தேர்வை எழுத முடியாது.
அவர்கள் வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, குஜராத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி அல்லது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. இம்மாநிலங்களில் வாழும் கிராமப்புற மாணவர்களால் இந்தத் தேர்வினை எழுத முடியாது.
எனினும் இதற்கு எதிராக தமிழ்நாடு தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இதேபோன்றுதான் ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் வெளிப்படுத்தியது. நீங்கள் தமிழ்நாட்டை எப்போதுமே வித்தியாசமாகத்தான் கருதுகிறீர்கள். மீண்டும் ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சனையானது. ஓர் அமைச்சர் மதுரை வந்திருந்தபோது, ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் “உங்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம்,” என்று கூறினார்கள்.
பாஜகவுடன் நாங்கள் என்றில்லை, உங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளே மகிழ்ச்சியற்று இருக்கின்றன. சிவ சேனை, தெலுங்கு தேசம் தங்கள் மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்தி இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் தன் உரையில் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்துப் பேசியிருக்கிறார். அமித்ஷா கூட இங்கே உரையாற்றும்போது, விவசாயிகள் பற்றிக் கவலைப்பட்டார். இவ்வாறு விவசாயிகள் குறித்து இந்த அரசாங்கம் மட்டுமா கவலைப்பட்டது? இல்லை. இதற்கு முன்பு, லால் பகதூர் சாஸ்திரியும் கவலைப்பட்டார். “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்று கோஷத்தைக் கூட அவர் உருவாக்கி இருந்தார். அவருக்குப்பின் வந்த அரசாங்கங்கள் அனைத்துமே விவசாயிகள் பற்றி கவலைகளைத் தெரிவித்திருக்கின்றன.
ஆனால் எதுவுமே அமல்படுத்தப்பட்டதில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஒவ்வோராண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது குடியரசுத் தலைவர் அவர்கள், மேலும் நான்கு ஆண்டுகளுக்குக் காத்துக் கொண்டிருங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்குள் விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வது பலமடங்கு அதிகரித்திருக்கும். எப்படி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப் போகிறோம்?
காவிரிப் பிரச்சனை
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் பாசனம் தொடர்பான பிரச்சனைகளை பலமுறை இந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு, காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் தேவை. தொடர்ந்து இருந்து வரும் அரசாங்கங்கள் காவிரி ஆற்று நீரில் சட்டப்பூர்வமாக அளிக்க வேண்டிய உரிய பங்கைத் தமிழ்நாட்டிற்கு அளிப்பதற்கு இன்றுவரை தவறிவிட்டன. மத்திய அரசாங்கம், காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரையிலும் அமைத்திடவில்லை.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடுக என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள போதிலும்கூட, அதை செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று ஒரு மத்திய அமைச்சரே, (ஆனந்த்குமார்) பேசுகிறார். அவர் ஒன்றும் கர்நாடக மாநிலக் குடிமகன் அல்ல. அவர் ஓர் மத்திய அமைச்சர். தமிழ்நாட்டில் பத்து லட்சம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் தேவை. இவ்வாறு பத்து லட்சம் ஏக்கரில் பாசனம் செய்வதற்குத் 15 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். கர்நாடகா ஏற்கனவே 80 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதார அவசியத்தைப் பரிசீலிப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் நிர்ப்பந்தங்களை பரிசீலிக்கின்றனர். இந்த அரசியல் நிர்ப்பந்தங்கள் காவேரிப் பிரச்சனையின் தலைவிதியைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.
ஞாயிற்றுக் கிழமையன்று பிரதமர் மோடி கர்நாடகாவில் ஒரு பேரணிப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் நம் சகோதரர்கள்தான், அவர்களுக்கு தண்ணீர் அளித்திடுங்கள் என்று அறிவுரை கூறியிருக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடக மக்களுக்கு அவர் அறிவுரை கூறியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவர் செய்திடவில்லை. இவ்வாறு அரசியல் நிர்ப்பந்தங்கள் அவர்களை ஆட்டிப்படைக்கின்றன. விரைவில் அங்கே தேர்தல் வர இருக்கிறது. எனவே மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் “தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் இல்லை” என்று கூறுகின்றன.
மத்தியஅரசு, தமிழ்நாட்டை, இந்தியாவின் ஓர் அங்கம் என்று கருதுகிறதா, இல்லையா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது, தமிழ்நாட்டில் உள்ள காவேரிப் பாசனப் பகுதி விவசாயிகளாவர். தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற அனைத்துப் பொருள்களுமே நம் நாட்டிற்காகத்தான். ஆனால் அவர்களுக்கு உரிய பங்கை அளித்திட நீங்கள் மறுக்கிறீர்கள். வேளாண் உற்பத்தித்திறன் மீது பருவநிலைசெலுத்திடும் தாக்கம் குறித்து பொருளாதார ஆய்வறிக்கை அதிகமாகவே கூறியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் 2022இல் இரட்டிப்பாகும்? நிச்சயமாக இது ஒரு மடத்தனமான கூற்றாகும். மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு சொல்லப்படுகிறதே தவிர, வேறல்ல.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு குறித்தும் ஏராளமாகக் கூறியிருக்கிறீர்கள். 2015-16 வேலையின்மை ஆய்வறிக்கையின்படி, நாட்டில் உள்ள தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரிபாதிப்பேர் – அதாவது 46.6 சதவீதத்தினர் – சுய வேலை பார்ப்பவர்கள். சுய வேலைபார்ப்பது என்பது மோசமான ஒன்று என்று நான் பார்க்கவில்லை. ஆனால் அவர்களை “பக்கோடா விற்பவர்கள்” என்று சொல்ல மாட்டேன். சுய வேலை பார்ப்பவர்களின் வருமானம் மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய். ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவு.
அவர்களால் உயிர்பிழைத்திட முடியுமா? ஒரு கணவன், ஒரு மனைவி, இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ள குடும்பம் எப்படி பிழைக்க முடியும்.
முறையான வேலைவாய்ப்பு கிடைக்காததால் மக்கள் சுய வேலை செய்பவர்களாக மாறுகிறார்கள். இன்றைய தினம், ஆட்டோரிக்சா ஓட்டுநர்களில் பி.ஏ., எம்.ஏ., படித்தவர்கள் பலரை நீங்கள் பார்க்க முடியும். நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவால் வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குறைந்த ஊதியத்திலான முறைசாரா தொழிலாளர்களையும், முறைசார்ந்த தொழில்களில் ஒப்பந்த ஊழியர்களையும் தான் இதுஉருவாக்கி இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட இப்போது ஒப்பந்த அடிப்படையில்தான். பொருளாதார மந்தமும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் வேலை வாய்ப்புகளையே அழித்து ஒழித்துவிட்டது. கிராமப்புற வேலைவாய்ப்புகள் சுருங்கி இருப்பதும் நிலைமையை மோசமாக்கி இருக்கின்றன. இத்தகு பின்னணியில், வேலைவாய்ப்பு தொடர்பாக அரசு அளித்துள்ள விவரங்களுக்கும் உண்மை நிலைக்கும் வெகுதூரமாகும்.
இந்தியா தலையிட மறுப்பது ஏன்?
குடியரசுத் தலைவர், தன்னுடைய உரையைத்தொடங்கும்போது, “வாசுதைவ குடும்பகம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது வேறொன்றுமில்லை. நாம் கூறும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதுதான். ஆனால் பர்மாவிலிருந்து அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை திருப்பித் துரத்தி அனுப்புகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும், நாம் ரோஹிங்யா பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒருபங்களிப்பினைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்பிரச்சனையில் மவுனம் சாதிக்கிறது. பிரச்சனையை எதிர்கொள்ள மறுத்து, திரும்பிக்கொள்கிறது. ஏன்? போப், தாக்காவிற்குப் போகிறார்.
அமெரிக்கா தன் அமைச்சர் ஒருவரை அனுப்பி வைக்கிறது. கிரேட் பிரிட்டன், கனடா அமைச்சர்களும்கூட அங்கே போகிறார்கள். ஆசிய நாடுகள் போகின்றன. ஆனால் இந்தியா போக மறுக்கிறது. இந்தியா தலையிட மறுக்கிறது. ஏன்? இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு சீனா முயற்சிக்கிறது. அவர்கள் சமாதானக்காவலர்களாக வெளிப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு எதிர்மறையாக இருக்கிறது. ஏன் அவ்வாறு இருக்கிறது? அவர்கள் பின்பற்றுகிற வகுப்புவாத சித்தாந்தத்தின் நிர்ப்பந்தம்தான் இவ்வாறு அவர்களை ஆட்டுவிக்கிறது. ரோஹிங்யாக்கள் அனைவரும் முஸ்லீம்கள். அதுதான் காரணம்
சீனா ஒரு மத்தியஸ்தர் பங்களிப்பினை மிகச்சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது. சீன அயல்துறை அமைச்சர் அங்கே சென்று அனைத்துக் கட்சிகளுடனும் பேசியிருக்கிறார்.
ஏழ்மை நிலை
குடியரசுத்தலைவர் உரையில் ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்களின் வளர்ச்சிகுறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 2017இல் இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருப்பவர்கள் 73 சதவீத செல்வத்தையும், 99 சதவீதமாக இருப்பவர்கள் மீதம் உள்ள 47 சதவீதத்தைப்பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கிறார்கள். உலகில் பட்டினி கிடப்போர் அட்டவணையில் இந்தியா மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. ஆனால் இது குறித்து குடியரசுத்தலைவர் உரை மவுனம் சாதிக்கிறது. அதேபோன்று ஊட்டச்சத்துக் குறைவும் மிக மோசமான அளவில்இருக்கிறது. நாட்டில் 14.6 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாக நோய்க்கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
கீழடி அகழாய்வு
நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதால் தமிழ்நாடு தொடர்பாக ஒருசிலவற்றைக் குறிப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறேன். மதுரை அருகே கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தொடர்ந்து ஒரு சதவீத வேலைகூட செய்யப்படவில்லை. அங்கே தொடர்ந்து 2018இல் அகழ்வாராய்ச்சிப்பணியைத் தொடர மத்திய அரசால் அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு அனுமதியை அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதனை நான் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும்நேரத்தில் இந்த அவையில் எழுப்பியபோது துணைத்தலைவர் உட்பட அனைத்துக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் என்னுடன் இணைந்துகொண்டார்கள். மாநில அரசாங்கம், அந்த இடத்தில் கீழடியில் அகழ்வாராய்ச்சியின்போது எடுக்கப்பட்ட 5000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை, கைத்திறன் பொருட்களை அருங்காட்சியகம் ஒன்றை நிறுவி அதில் வைப்பதற்காக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுநாள்வரை அந்த இடத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆரம்பவேலைகளைக்கூட மத்திய அரசு இன்னமும் துவங்கவில்லை. கீழடியில் கண்டுள்ள விவரங்கள் மனிதகுல நாகரிக வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும். எனவே, இந்த அரசாங்கம் மதிப்பிடற்கரிய அகழ்வாராய்ச்சிப்பணிகளைத் தொடர இதுதொடர்பாக உரிய ஆணைகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பட்டாசுத் தொழிலாளர்கள்
பட்டாசுத் தயாரிப்புக்குத் தடை விதிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தமிழ்நாட்டில் சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எட்டு லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. அங்கே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியஅதே சமயத்தில் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. பண்டிகைக் காலங்களில், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்திட முன்வர வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் சிலை
நிறைவாக ஆனால் மிக முக்கியமான ஒன்று. நாம் நம் நாட்டில் தேசியப் பறவை, தேசிய மலர் என்று அறிவித்திருப்பதுபோல மதிப்பு மிக்க கருத்துக் கருவூலங்களையும் மனிதகுல முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் முறையிலும் அமைந்துள்ள தமிழர்களின் புனித நூலான திருக்குறளை, தேசியப் நூலாக அறிவிக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருவள்ளுவரின் சிலையை நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நிறுவிடவும் இந்த அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழில்: ச.வீரமணி
நன்றி: தீக்கதிர் (07.02.2018)

Sunday, 8 October 2017

எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்!

சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.
அதைத் திறந்துவைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்துகொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறிவிடுகிறார்.
உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.
இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.
தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.
ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.
கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.
(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).
அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.
அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே!
அன்று கருணாநிதி குற்றம்சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர்நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி
அதன்பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு
அதன்பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்துகொண்டேதான் இருக்கிறது.