எம்.ஜி.ஆர் ஆட்சி
கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆட்சி.
(படம்: 1982 எல்லை மாற்றம் தொடர்பான இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு
நன்றி: விகடன்)
எம்.ஜி.ஆர் ஆட்சி
கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆட்சி.
(படம்: 1982 எல்லை மாற்றம் தொடர்பான இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு
நன்றி: விகடன்)
தெலுங்கு கங்கை அல்லது தெலுங்கு அல்வா
சென்னை தமிழக மக்கட்தொகையில் 10% வாழும் மாவட்டம் ஆகும்.
இதன் குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக இன்றுவரை உள்ளது.
அண்டை மாவட்டக்களில் அடாவடியாக உறிஞ்சி அனுப்பி ஓரளவு சமாளித்தாலும் நிரந்தரத் தீர்வு எட்டப்படாமலே உள்ளது.
இதில் ஆந்திரா எப்படி லாபம் பார்க்கிறது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு 1970களில் உச்சத்தை அடைந்தது.
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1983-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பொதுப் பணித்துறை பொறியாளர்களிடம் புதிய திட்டம் ஒன்றைத் தருமாறு கோரினார்.
இதையடுத்து அப்போது தலைமைப் பொறியாளராக இருந்த சி.ஏ.சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர் குழு 'சென்னைக் கால்வாய் திட்டம்' எனும் திட்டத்தை உருவாக்கி அரசிடம் கொடுத்தது.
மிகக்குறைந்த செலவில் அதாவது அன்றைய நிலையில் ரூ. 210 கோடி நிதியில் இத்திட்டம் நிறைவேற்றும் வகையில் இருந்தது.
சென்னையைப் பொருத்தவரை பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழாவரம் ஆகிய 4 ஏரிகளிலிருந்துதான் குடிநீர் எடுக்கப்படுகிறது.
சென்னைக் கால்வாய் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் என்ற இடத்திலிருந்து காவிரியில் நீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து கால்வாய் மூலம் (வினாடிக்கு 1000 கன அடி) முதலில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படும்.
இந்தத் தண்ணீர் தானாகவே இழுவிசை காரணமாக வரும், எந்தவிதமான பம்பிங் தேவையும் கிடையாது என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சம்.
பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையின் இடது கரையில் கால்வாயின் தலைப் பகுதி அமையும்.
ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக இவை அமைக்கப்பட்ட 4 சிறு மதகுகள் உள்ளன.
மேலும் 3 மதகுகள் (பவானி 1, 2, 3) ஆகியவை கட்டப்பட இருந்தன.
இந்த மதகுகளில் ஒன்றை பயன்படுத்தியே காவிரியிலிருந்து ஆண்டுதோறும் 15 டி.எம்.சி. நீரை எடுத்து சென்னைக் கால்வாய் திட்டத்திற்குத் திருப்பி விட முடியும். புதிதாக எந்தவிதமான மதகுகளும் கட்டத் தேவையில்லை.
ஒரே ஒரு முதன்மை மதகுமட்டுமே கட்டப்பட வேண்டும்.
சிமெண்ட் கரைகளால் ஏறத்தாழ 400 கி.மீ நீளமுள்ள கால்வாய் கட்டப்பட வேண்டும்.
ஆனால், எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்.
அரசியல் காரணங்களுக்காக இந்திரா காந்தியின் அழுத்தத்தின் காரணமாக தெலுங்கு கங்கை திட்டத்திற்கு சம்மதித்தார்.
அதன் அரசியல் பின்னணியை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
1975-ல் அவசர நிலைப் பிரகடனப்படுத்தி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை டிஸ்மிஸ் (31-1-1976) செய்தார் இந்திரா காந்தி.
அதன்பிறகு, சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி அப்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ஆந்திரம் (சென்னாரெட்டி), கர்நாடகம் (தேவராஜ் அர்ஸ்), மகாராஷ்டிரம் (வசந்த்தாதா பட்டீல்) ஆகிய மாநிலங்களின் முதல்வர்களோடு பேசி,
கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு சம்மதம் பெற்றிருப்பதாக அறிவித்தார்.
பின்னர், 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யில் 14 இடங்களை காங்கிரஸ் பெற்றது.
1977 ஜூனில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு நாடுமுழுவதும் இருந்த பலத்த எதிர்ப்பால் அதனுடனான கூட்டணியை எம்ஜிஆர் தொடரவில்லை.
இது, இந்திராவுக்கு ஆத்திரமூட்டியது.
அதிமுக வென்று எம்ஜிஆர் முதல் முறையாக முதல்வரானார்.
அப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவை இடைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றது முறைகேடானது என அறிவித்து அவரிடம் இருந்த பதவியையும் பறித்தார்.
அப்போது தஞ்சாவூரில் இடைத்தேர்தல் வந்தது.
இந்திரா காந்தி தஞ்சாவூரில் நிற்க விரும்பினார்.
இதையறிந்த மொரார்ஜி தேசாய் எம்.ஜி.ஆரை டெல்லிக்கு அழைந்து இந்திராவிற்கு ஆதரவளிக்கக்கூடாது என்று மிரட்டினார்.
எம்ஜிஆரும் பயந்து இந்திராவை ஆதரிக்கவில்லை.
இதனால் மேலும் ஆத்திரமடைந்தார் இந்திரா.
1980ல் கருணாநிதி எந்த இந்திரா அவரது ஆட்சியைக் கலைத்து திமுகவை இல்லாத கொடுமையெல்லாம் படுத்தினாரோ அதே இந்திராவுடன் வெட்கமில்லாமல் கூட்டணி அமைத்து அதிமுகவை விட அதிக இடங்களில் வென்றார்.
மத்தியில் இந்திரா ஆட்சியைப் பிடித்ததும் எம்ஜிஆர் அரசை (17.02.1980) கலைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்.
ஆனால் 1980 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணியைத் தோற்கடித்து அதிரடிராக எம்ஜிஆர் மீண்டும் முதல்வரானார் .
ஆனாலும் இந்திராவின் மீதான பயம் போகவில்லை.
எனவே தென்னகத்தில் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக இந்திரா காந்தி வகுத்த திட்டத்தை நிறைவேற்றி அவரிடம் நல்லபெயர் வாங்க திட்டமிட்டார் எம்ஜிஆர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தனது நண்பரும் அப்போதைய ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரிடம் ஆதரவு கேட்டார்.
என்.டி.ஆர் ஒத்துக்கொண்டார் ஆனால் அவர் போட்ட ஒரே நிபந்தனை திட்டத்திற்கு 'தெலுங்கு கங்கை' என்று பெயர்வைக்கவேண்டும் என்பது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நான்கு தென் மாநில முதல்வர்களின் முன்னிலையில், தமிழகமும் ஆந்திரமும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
திட்டத்தைத் தொடங்க எம்ஜிஆர் கருணாநிநி போலவே வெட்கமேயில்லாமல் தன் ஆட்சியைக் கலைத்த இந்திராவையே கூட்டிவந்து அடிக்கல் நாட்டினார்.
சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர்கள் இதைத் தடுக்க முயன்றனர்.
அப்போதைய தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் மற்றும் நிதித்துறைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோருடன் சென்று முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எவ்வளவோ எடுத்துக்கூறினர். ஆனால் பலனில்லை.
210 கோடியில் உள்மாநிலத்திலேயே முடிந்திருக்கவேண்டிய பிரச்சனை
எம்ஜிஆரின் கோழைத்தனத்தாலும் சுயநலத்தாலும் ஆந்திராவுக்கு பலனாக முடிந்தது.
இந்த திட்டம் தொடங்கிய 1983 முதல்) இதுவரை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இது வரை ரூ.700 கோடி வரை கொடுத்துள்ளது.
(1983-ல் இருந்து 1996 வரை ரூ.512 கோடி கொடுத்துள்ளோம்.
நாம் இதுவரை கொடுத்ததில் குறைந்தபட்சமாக 1985, 1995-ல் தலா ரூ.5 கோடியும், அதிகபட்சமாக 2013ல் ரூ.100 கோடியும் தமிழகம் கொடுத்துள்ளது)
2017 ஜனவரி 12 அன்று அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் (வரலாற்றில் இல்லாத செயல்பாடாக) நேரில் பொய் சந்திரபாபு நாயுடுவிடம் 12 டி.எம்.சி இல்லாவிட்டாலும் 4 டிஎம்சியாவது திறந்துவிடக் கெஞ்சினார்.
அவரோ 400 கோடி தந்நால் 2.5 டி.எம்.சி தண்ணீர் தருவதாகக் கூறினார்.
ஓ.பி.எஸ்ஸும் சரி என்றார்.
அதன்பிறகு நடந்த ஆட்சிக்குழப்பங்களால் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது.
சென்னையில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதால்,தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு செயலாளருக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது.
இதற்கு ஆந்திர அரசு பதில் கடிதத்தில் (13.07.2017),
"கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறந்து விட முடியாது.
மேலும், பராமரிப்பு கட்டணமாக தாங்கள் தர வேண்டிய ரூ.600 கோடி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும்"
என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கண்டது ஆந்திராவுக்கு கொடுத்தது மட்டுமே
இதுபோக தமிழக அரசு செய்த செலவுகள் தனி.
1983-1996 காலக்கட்டத்தில் ரூ.75 கோடி செலவில் புழல் ஏரியில் 675 மில்லியன் கனஅடி,
செம்பரம்பாக்கம் ஏரியில் 525 மில்லியன் கனஅடி,
பூண்டி ஏரியில் 450 மில்லியன் கனஅடி என கொள்ளளவுகள் அதிகரிக்கப்பட்டன.
(2002 ஆம் ஆண்டு தமிழகம் நிதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஆன்மீகத் தலைவரான சத்ய சாய் பாபா , கண்டலேறு முதல் பூண்டி வரையிலான கால்வாயின் கரைகளை பலப்படுத்தி மறுசீரமைக்கும் தனியார் பங்களிப்புக்கானத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அவரால் 200 கோடி செலவளிக்கப்பட்டு கால்வாயும், பல நீர்த்தேக்கங்களும் மறுகட்டமைக்கப்பட்டு, அத்திட்டம் 2004 அம் ஆண்டு நிறைவு பெற்றது)
2012-14 ஆம் ஆண்டுகளில் சோழவரம் ஏரியில் ரூ. 50 லட்சம் செலவில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடி செலவில் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
0.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், ஆண்டுக்கு 1 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீரைத் தேக்கிவைப்பார்களாம்.
இதுபோக 2007ல் வெளிநாட்டு உதவியுடன் ரூ. 256 கோடி செலவில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
(திறன்= நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு)
இதையெல்லாம் செய்து போதுமான அளவு தண்ணீர் பெற்றோமா என்றால் இல்லை.
திட்டம் நடைமுறைக்கு வந்த 1996முதல் இதுவரை ஒருமுறைகூட ஆந்திரா ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரைத் தந்ததில்லை.
சராசரி பார்த்தால் தமிழகத்திற்கு தரவேண்டியதில் பாதிகூட தந்ததில்லை.
2012-13 ல் 4.7 டிஎம்சி
2013-14 ல் 5.7 டிஎம்சி
2014-15 ல் 5.6 டிஎம்சி
2015-16 ல் 0 டிஎம்சி
2016 முதல் இதுவரை 2.27 டிஎம்சி
என குறைவான தண்ணீரே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
அதாவது 1996 முதல் 2016 வரை ஆந்திரா 5 டிஎம்சி தண்ணீர் சராசரியாகத் தந்ததாகவே வைத்துக்கொண்டாலும் இதுவரை 100 டிஎம்சி தந்ததாக ஆகும்.
அதற்கு அவர்கள் கேட்கும் தொகை (600 கோடி கடனுடன் சேர்த்து) 1300 கோடி ஆகும்.
இது ஒரு லிட்டருக்கு தோராயமாக ரூ.220 ஆகும்.
(இது குறைந்தபட்ச கணக்குதான்)
கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடக்கின்றன.
இதுபோக தமிழகத்திற்கு வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் வழியிலேயே கால்வாயில் இருந்து மோட்டார் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றனர்.
இது போதாது என்று இந்தாண்டு கிருஷ்ணா நதியை கோதாவரியுடன் இணைத்து சந்திரபாபு நாயுடு மேலும் மூன்று மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்கிறார்.
இதற்கு தமிழகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை.
கோடிகோடியாகக் கொட்டியழுதும் நமக்கான பங்கோ ஆறு மீதான உரிமைக்கான மரியாதையோ கிடைக்கவில்லை
பாலாறு நீர் கனவானது போல விரைவில் தெலுங்கு கங்கையும் காணாமல் போகும்.
சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.
அதைத் திறந்துவைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்துகொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறிவிடுகிறார்.
உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.
இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்.
ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.
தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.
ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.
கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.
(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).
அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.
அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே!
அன்று கருணாநிதி குற்றம்சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர்நண்பர்கள்.
தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி
அதன்பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு
அதன்பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்
ராஜீவ் காந்தி கட்டளையிட்டார்.
எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.
அடையாறில் புலமைப்பித்தன் வீட்டில் பிரபாகரனார் துளி நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு
மேற்கொண்டார்.
கொதித்தெழுந்த தமிழகம் ஒரே நாளில் ஹிந்தியாவை பணியவைத்தது.
தமிழகத் தமிழருக்கு ஈழப் போராளிகள் மீது இருக்கும் பேரன்பை நன்றாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் புலிகளுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதன் மூலம் அரசியல் முதலீடு செய்தார்.
(அதே நேரத்தில் தனித்தமிழ்நாடு போராளிகளை அதன் தலைவர் தமிழரசனை சத்தமில்லாமல் ஒழித்தார்)
தொண்டனைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தலைவரல்ல பிரபாகரன்.
உலகிலேயே முதன்முதலாக நீர் அருந்தாமல் உண்ணாநோன்பு போராட்டம் நடத்திய போராளி.
1986 ல் தமிழக மக்கள் தமது இனப்பற்றைக் காட்டாதிருந்தால்...?
விளைவுகளை நீங்களே ஊகியுங்கள்.
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்
ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?
ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்!
தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது (???!!!!)
ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.
ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.
தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலைசெய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.
தமிழரசன் வந்தார், கொள்ளையடித்துவிட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.
உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.
ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன்தான்
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.
அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து,
கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலைசெய்யப்பட்டார்.
மேலும் அறிய,
காண்க காணொளி :-
தமிழரசன் வங்கி கொள்ளை பற்றி பழனிபாபா (vaettoli.wordpress)
search இனம்னா என்ன? வேட்டொலி
search வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி வேட்டொலி
பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?
பதிவர்: Kathir Nilavan
நாள்: 03.10.2014
தமிழ் எழுத்துகள் திடீரென உருக்கொண்டவையல்ல.
சமூக வளர்ச்சிப் போக்கில் இவ்வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன.
கற்பாறையிலும், அதன்பிறகு பனை ஓலையிலும் எழுதப்பட்ட எழுத்துகள் அதனதன் தேவைக்கேற்பவும், விரைவாக எழுதுவதற்கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதொரு எழுத்துக்குமிடையே ஒன்று போல கருதும் எழுத்து மயக்கம் ஏற்பட்டு விடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன.
இன்றைக்கு நம் பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் காலவளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களாகும்.
19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகையாலும், இன்ன பிற காரணங்களாலும் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
1915ஆம் ஆண்டில் பாரதியாருக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாகும்.
அதே ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞான பாநு' ஏட்டில்,
'தமிழ் எழுத்துகள்' என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரை ஒன்றில், இக்காலத்திலே (ஓணான் சுருட்டிய வால் போன்று உள்ள எழுத்துகள்) எழுதப்படும் எழுத்துகளுக்கு மாற்றாக றா, றோ, னா, னோ, என்று எழுத வேண்டும் என்று சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
1930இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'குமரன்' இதழில் அதன் ஆசிரியர் திரு.முருகப்பா என்பவர் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களை பயன்படுத்தி கட்டுரையொன்றை எழுதி வாசகர்களின் கருத்தை கேட்டுள்ளார்.
1931இல் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்பவரும் தன்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக்கால கட்டத்தில் தான் குத்தூசி குருசாமி அவர்கள் முன்மொழிந்திட பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியதோடு, தனது ஏடுகளில் தமிழில் உள்ள சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார்.
பெரியார் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் எழுத்து சீர்திருத்த சிந்தனை பிறந்தது என்று கூறுவது தவறானதாகும்.
பெரியார் தனது குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுதி வந்தவை எழுத்து குறைப்பே அன்றி எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல.
இதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
கவிமணி தேசிக விநாயகர் நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகளை இதற்கு சான்றாக கூறியிருப்பதாக தனித்தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார்.
அது வருமாறு:
" க், ங், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற், எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை, என்றாயின.
ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி அமைக்கப்பட்டு வந்தன.
அப்படியே ண. ல. ள. ன, என்னும் நான்கு எழுத்துகளும் ணை, லை, ளை, னை என்று இரட்டைச்சுழி துணை எழுத்தோடு எழுதப்பட்டன.
இந்த நான்கு எழுத்துகளும் மற்றைய எழுத்துகளில் வேறுபட்டவை.
சுழிகளால் அமைந்தவை. 'ண' மூன்று சுழி.
'ல' ஒரு சுழி.
'ள' ஒரு சுழி.
'ன' இரண்டு சுழி.
இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும் போது,
(ணை) மூன்று சுழி ஐந்து சுழியாகவும்,
ஒரு சுழி (லை) மூன்று சுழியாகவும்,
ஒரு சுழி (ளை) மூன்று சுழியாகவும்,
இரண்டு சுழி (னை) மூன்று சுழியாகவும் மாறி விடும் அல்லவா?
இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர்.
'வ' என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும், அதற்கு துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர்....
'கா' முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன, என்பவற்றில் சுழியாக இருந்தன.
அவற்றை மற்ற எழுத்துகளின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்றவில்லை.
பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின."
பெரியார் மேற்கண்ட பழைய வரி வடிவ எழுத்துகளோடு நில்லாது ஐ, ஒள, விலும் மாற்றம் செய்திட்டார்.
அவற்றை அய், அவ், என்றே எழுதினார்.
உயிர் எழுத்தை நீக்கி விட்டு உயிர்மெய்யை வைத்துக் கொள்வது குழப்பத்தையே தரும்.
அதாவது 'ஐ' என்ற உயிர் இல்லாமல் தலை, மலை, மனை முதலிய உயிர்மெய்கள் எவ்வாறு வரும்?
மேலும் கய், தய்யல், பிழய், மழய், என்று எழுதியதோடு,
வந்தான்= வன்தான்,
மாங்காய்= மான்காய்,
பஞ்சம்= பன்சம்
என்றெல்லாம் பெரியார் எழுதத் தொடங்கினார்.
அதுமட்டுமின்றி, நண்பரை Fரண்ட்ஸ் என்றும், வரிக்குதிரை என்பதை Zப்பிரா என்றும் ஆங்கில எழுத்துகளை தமிழோடு கலந்து துணிந்து எழுதிட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்துகளை அறவே அகற்றிவிட்டு முழுவதும் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.
1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சினங்கொண்டு
"தமிழ்மொழியைப் பற்றி கவலைப்படாத நிலையில் தமிழ் எழுத்தைப்பற்றி மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்"
என்று கேள்வி எழுப்பினார்.
பாவாணரும் கூட 1937இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப்பழகியும், அவர் 'விடுதலை' எழுத்தை மேற்கொள்ளும்படி சொல்லவோ, எழுதவோ இல்லை என்கிறார்.
தமிழ் ஆட்சிமொழியாகவும், கல்லூரிகளில் பயிற்றுமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுவதாக சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவார்.
பெரியார் வழியில் வீரமணி, வ.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் பேசிக்கொண்டே ஆங்கிலமொழிக்கு பல்லக்கு தூக்கி வருவது கண்கூடான உண்மையாகும்.
தமிழின் தாழ்வுற்ற நிலை போக்காது எழுத்துச்சீர்திருத்தம் எவர் பேசினாலும் அவர் தமிழுக்கு எதிரி என்பதை இனியாவது தமிழர்கள் உணர வேண்டும்.
(நன்றி: முதன்மொழி ஏப்.சூன் 2010,
நுமான் எழுதிய
மொழியும், இலக்கியமும்:
பெரியாரின் சிந்தனைகள்.
தென்மொழி- மே 1986)