எம்.ஜி.ஆர் ஆட்சி
கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆட்சி.
(படம்: 1982 எல்லை மாற்றம் தொடர்பான இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு
நன்றி: விகடன்)
எம்.ஜி.ஆர் ஆட்சி
கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆட்சி.
(படம்: 1982 எல்லை மாற்றம் தொடர்பான இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு
நன்றி: விகடன்)
தெலுங்கு கங்கை அல்லது தெலுங்கு அல்வா
சென்னை தமிழக மக்கட்தொகையில் 10% வாழும் மாவட்டம் ஆகும்.
இதன் குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக இன்றுவரை உள்ளது.
அண்டை மாவட்டக்களில் அடாவடியாக உறிஞ்சி அனுப்பி ஓரளவு சமாளித்தாலும் நிரந்தரத் தீர்வு எட்டப்படாமலே உள்ளது.
இதில் ஆந்திரா எப்படி லாபம் பார்க்கிறது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு 1970களில் உச்சத்தை அடைந்தது.
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1983-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பொதுப் பணித்துறை பொறியாளர்களிடம் புதிய திட்டம் ஒன்றைத் தருமாறு கோரினார்.
இதையடுத்து அப்போது தலைமைப் பொறியாளராக இருந்த சி.ஏ.சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர் குழு 'சென்னைக் கால்வாய் திட்டம்' எனும் திட்டத்தை உருவாக்கி அரசிடம் கொடுத்தது.
மிகக்குறைந்த செலவில் அதாவது அன்றைய நிலையில் ரூ. 210 கோடி நிதியில் இத்திட்டம் நிறைவேற்றும் வகையில் இருந்தது.
சென்னையைப் பொருத்தவரை பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழாவரம் ஆகிய 4 ஏரிகளிலிருந்துதான் குடிநீர் எடுக்கப்படுகிறது.
சென்னைக் கால்வாய் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் என்ற இடத்திலிருந்து காவிரியில் நீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து கால்வாய் மூலம் (வினாடிக்கு 1000 கன அடி) முதலில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படும்.
இந்தத் தண்ணீர் தானாகவே இழுவிசை காரணமாக வரும், எந்தவிதமான பம்பிங் தேவையும் கிடையாது என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சம்.
பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையின் இடது கரையில் கால்வாயின் தலைப் பகுதி அமையும்.
ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக இவை அமைக்கப்பட்ட 4 சிறு மதகுகள் உள்ளன.
மேலும் 3 மதகுகள் (பவானி 1, 2, 3) ஆகியவை கட்டப்பட இருந்தன.
இந்த மதகுகளில் ஒன்றை பயன்படுத்தியே காவிரியிலிருந்து ஆண்டுதோறும் 15 டி.எம்.சி. நீரை எடுத்து சென்னைக் கால்வாய் திட்டத்திற்குத் திருப்பி விட முடியும். புதிதாக எந்தவிதமான மதகுகளும் கட்டத் தேவையில்லை.
ஒரே ஒரு முதன்மை மதகுமட்டுமே கட்டப்பட வேண்டும்.
சிமெண்ட் கரைகளால் ஏறத்தாழ 400 கி.மீ நீளமுள்ள கால்வாய் கட்டப்பட வேண்டும்.
ஆனால், எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்.
அரசியல் காரணங்களுக்காக இந்திரா காந்தியின் அழுத்தத்தின் காரணமாக தெலுங்கு கங்கை திட்டத்திற்கு சம்மதித்தார்.
அதன் அரசியல் பின்னணியை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
1975-ல் அவசர நிலைப் பிரகடனப்படுத்தி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை டிஸ்மிஸ் (31-1-1976) செய்தார் இந்திரா காந்தி.
அதன்பிறகு, சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி அப்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ஆந்திரம் (சென்னாரெட்டி), கர்நாடகம் (தேவராஜ் அர்ஸ்), மகாராஷ்டிரம் (வசந்த்தாதா பட்டீல்) ஆகிய மாநிலங்களின் முதல்வர்களோடு பேசி,
கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு சம்மதம் பெற்றிருப்பதாக அறிவித்தார்.
பின்னர், 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யில் 14 இடங்களை காங்கிரஸ் பெற்றது.
1977 ஜூனில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு நாடுமுழுவதும் இருந்த பலத்த எதிர்ப்பால் அதனுடனான கூட்டணியை எம்ஜிஆர் தொடரவில்லை.
இது, இந்திராவுக்கு ஆத்திரமூட்டியது.
அதிமுக வென்று எம்ஜிஆர் முதல் முறையாக முதல்வரானார்.
அப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவை இடைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றது முறைகேடானது என அறிவித்து அவரிடம் இருந்த பதவியையும் பறித்தார்.
அப்போது தஞ்சாவூரில் இடைத்தேர்தல் வந்தது.
இந்திரா காந்தி தஞ்சாவூரில் நிற்க விரும்பினார்.
இதையறிந்த மொரார்ஜி தேசாய் எம்.ஜி.ஆரை டெல்லிக்கு அழைந்து இந்திராவிற்கு ஆதரவளிக்கக்கூடாது என்று மிரட்டினார்.
எம்ஜிஆரும் பயந்து இந்திராவை ஆதரிக்கவில்லை.
இதனால் மேலும் ஆத்திரமடைந்தார் இந்திரா.
1980ல் கருணாநிதி எந்த இந்திரா அவரது ஆட்சியைக் கலைத்து திமுகவை இல்லாத கொடுமையெல்லாம் படுத்தினாரோ அதே இந்திராவுடன் வெட்கமில்லாமல் கூட்டணி அமைத்து அதிமுகவை விட அதிக இடங்களில் வென்றார்.
மத்தியில் இந்திரா ஆட்சியைப் பிடித்ததும் எம்ஜிஆர் அரசை (17.02.1980) கலைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்.
ஆனால் 1980 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணியைத் தோற்கடித்து அதிரடிராக எம்ஜிஆர் மீண்டும் முதல்வரானார் .
ஆனாலும் இந்திராவின் மீதான பயம் போகவில்லை.
எனவே தென்னகத்தில் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக இந்திரா காந்தி வகுத்த திட்டத்தை நிறைவேற்றி அவரிடம் நல்லபெயர் வாங்க திட்டமிட்டார் எம்ஜிஆர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தனது நண்பரும் அப்போதைய ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரிடம் ஆதரவு கேட்டார்.
என்.டி.ஆர் ஒத்துக்கொண்டார் ஆனால் அவர் போட்ட ஒரே நிபந்தனை திட்டத்திற்கு 'தெலுங்கு கங்கை' என்று பெயர்வைக்கவேண்டும் என்பது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நான்கு தென் மாநில முதல்வர்களின் முன்னிலையில், தமிழகமும் ஆந்திரமும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
திட்டத்தைத் தொடங்க எம்ஜிஆர் கருணாநிநி போலவே வெட்கமேயில்லாமல் தன் ஆட்சியைக் கலைத்த இந்திராவையே கூட்டிவந்து அடிக்கல் நாட்டினார்.
சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர்கள் இதைத் தடுக்க முயன்றனர்.
அப்போதைய தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் மற்றும் நிதித்துறைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோருடன் சென்று முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எவ்வளவோ எடுத்துக்கூறினர். ஆனால் பலனில்லை.
210 கோடியில் உள்மாநிலத்திலேயே முடிந்திருக்கவேண்டிய பிரச்சனை
எம்ஜிஆரின் கோழைத்தனத்தாலும் சுயநலத்தாலும் ஆந்திராவுக்கு பலனாக முடிந்தது.
இந்த திட்டம் தொடங்கிய 1983 முதல்) இதுவரை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இது வரை ரூ.700 கோடி வரை கொடுத்துள்ளது.
(1983-ல் இருந்து 1996 வரை ரூ.512 கோடி கொடுத்துள்ளோம்.
நாம் இதுவரை கொடுத்ததில் குறைந்தபட்சமாக 1985, 1995-ல் தலா ரூ.5 கோடியும், அதிகபட்சமாக 2013ல் ரூ.100 கோடியும் தமிழகம் கொடுத்துள்ளது)
2017 ஜனவரி 12 அன்று அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் (வரலாற்றில் இல்லாத செயல்பாடாக) நேரில் பொய் சந்திரபாபு நாயுடுவிடம் 12 டி.எம்.சி இல்லாவிட்டாலும் 4 டிஎம்சியாவது திறந்துவிடக் கெஞ்சினார்.
அவரோ 400 கோடி தந்நால் 2.5 டி.எம்.சி தண்ணீர் தருவதாகக் கூறினார்.
ஓ.பி.எஸ்ஸும் சரி என்றார்.
அதன்பிறகு நடந்த ஆட்சிக்குழப்பங்களால் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது.
சென்னையில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதால்,தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு செயலாளருக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது.
இதற்கு ஆந்திர அரசு பதில் கடிதத்தில் (13.07.2017),
"கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறந்து விட முடியாது.
மேலும், பராமரிப்பு கட்டணமாக தாங்கள் தர வேண்டிய ரூ.600 கோடி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும்"
என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கண்டது ஆந்திராவுக்கு கொடுத்தது மட்டுமே
இதுபோக தமிழக அரசு செய்த செலவுகள் தனி.
1983-1996 காலக்கட்டத்தில் ரூ.75 கோடி செலவில் புழல் ஏரியில் 675 மில்லியன் கனஅடி,
செம்பரம்பாக்கம் ஏரியில் 525 மில்லியன் கனஅடி,
பூண்டி ஏரியில் 450 மில்லியன் கனஅடி என கொள்ளளவுகள் அதிகரிக்கப்பட்டன.
(2002 ஆம் ஆண்டு தமிழகம் நிதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஆன்மீகத் தலைவரான சத்ய சாய் பாபா , கண்டலேறு முதல் பூண்டி வரையிலான கால்வாயின் கரைகளை பலப்படுத்தி மறுசீரமைக்கும் தனியார் பங்களிப்புக்கானத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அவரால் 200 கோடி செலவளிக்கப்பட்டு கால்வாயும், பல நீர்த்தேக்கங்களும் மறுகட்டமைக்கப்பட்டு, அத்திட்டம் 2004 அம் ஆண்டு நிறைவு பெற்றது)
2012-14 ஆம் ஆண்டுகளில் சோழவரம் ஏரியில் ரூ. 50 லட்சம் செலவில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடி செலவில் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
0.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், ஆண்டுக்கு 1 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீரைத் தேக்கிவைப்பார்களாம்.
இதுபோக 2007ல் வெளிநாட்டு உதவியுடன் ரூ. 256 கோடி செலவில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
(திறன்= நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு)
இதையெல்லாம் செய்து போதுமான அளவு தண்ணீர் பெற்றோமா என்றால் இல்லை.
திட்டம் நடைமுறைக்கு வந்த 1996முதல் இதுவரை ஒருமுறைகூட ஆந்திரா ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரைத் தந்ததில்லை.
சராசரி பார்த்தால் தமிழகத்திற்கு தரவேண்டியதில் பாதிகூட தந்ததில்லை.
2012-13 ல் 4.7 டிஎம்சி
2013-14 ல் 5.7 டிஎம்சி
2014-15 ல் 5.6 டிஎம்சி
2015-16 ல் 0 டிஎம்சி
2016 முதல் இதுவரை 2.27 டிஎம்சி
என குறைவான தண்ணீரே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
அதாவது 1996 முதல் 2016 வரை ஆந்திரா 5 டிஎம்சி தண்ணீர் சராசரியாகத் தந்ததாகவே வைத்துக்கொண்டாலும் இதுவரை 100 டிஎம்சி தந்ததாக ஆகும்.
அதற்கு அவர்கள் கேட்கும் தொகை (600 கோடி கடனுடன் சேர்த்து) 1300 கோடி ஆகும்.
இது ஒரு லிட்டருக்கு தோராயமாக ரூ.220 ஆகும்.
(இது குறைந்தபட்ச கணக்குதான்)
கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடக்கின்றன.
இதுபோக தமிழகத்திற்கு வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் வழியிலேயே கால்வாயில் இருந்து மோட்டார் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றனர்.
இது போதாது என்று இந்தாண்டு கிருஷ்ணா நதியை கோதாவரியுடன் இணைத்து சந்திரபாபு நாயுடு மேலும் மூன்று மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்கிறார்.
இதற்கு தமிழகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை.
கோடிகோடியாகக் கொட்டியழுதும் நமக்கான பங்கோ ஆறு மீதான உரிமைக்கான மரியாதையோ கிடைக்கவில்லை
பாலாறு நீர் கனவானது போல விரைவில் தெலுங்கு கங்கையும் காணாமல் போகும்.
பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்
ராஜீவ் காந்தி கட்டளையிட்டார்.
எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.
அடையாறில் புலமைப்பித்தன் வீட்டில் பிரபாகரனார் துளி நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு
மேற்கொண்டார்.
கொதித்தெழுந்த தமிழகம் ஒரே நாளில் ஹிந்தியாவை பணியவைத்தது.
தமிழகத் தமிழருக்கு ஈழப் போராளிகள் மீது இருக்கும் பேரன்பை நன்றாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் புலிகளுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதன் மூலம் அரசியல் முதலீடு செய்தார்.
(அதே நேரத்தில் தனித்தமிழ்நாடு போராளிகளை அதன் தலைவர் தமிழரசனை சத்தமில்லாமல் ஒழித்தார்)
தொண்டனைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தலைவரல்ல பிரபாகரன்.
உலகிலேயே முதன்முதலாக நீர் அருந்தாமல் உண்ணாநோன்பு போராட்டம் நடத்திய போராளி.
1986 ல் தமிழக மக்கள் தமது இனப்பற்றைக் காட்டாதிருந்தால்...?
விளைவுகளை நீங்களே ஊகியுங்கள்.
"தாய்க்கு பின் தாரம்"னு ஒரு படம்,
1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது,
சாண்டோ
சின்னப்பா தேவர் தயாரித்தது,
படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி
வரும்,
அந்த சல்லிக்கட்டு காட்சியில் எம்.ஜி.ஆர்-க்கு டூப் போட்டவர் பெயர் சாமியாடி குடும்பர்,
அந்த காலத்துல பிரபலமான மாடுபிடி வீரர்.
தகவலுக்கு நன்றி: Anbe Selva
தலித்தியவாதிகள் கூறுவது போல ஆதிக்கசாதி விளையாட்டு என்றால் ஒரு பள்ளர் எப்படி பிரபலமான மாடுபிடி வீரராக இருந்திருக்க முடியும்?
மறவர் பள்ளர் சமூகங்களும் கூட ஒற்றுமையாகவே இருந்துள்ளனரே?
தலித்தியத்தின் பொய்ப் பிரச்சாரத்தை இனியும் நம்பலாமா?!
எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்
அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைக் கொன்றார்
நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி 14 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்
தர்மபுரி, ஆற்காடு பகுதிகளில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 21 இளைஞர்கள் தேவாரம் தலைமையிலான காவல்படை சுட்டுக் கொலை செய்தது.
வேப்பந்தட்டையில் பஸ் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைக் கொன்றார்
சென்னை வியாசர்பாடியில் விசாரணை என்ற பேரில் ஒரு அப்பாவி இளைஞனைத் துன்புறுத்திக்கொன்றது போலீஸ்.
அதைக் கண்டித்துத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றது.
நடு இரவில் சென்னை கடற்கரையில் மீனவர் குடியிருப்பை அடித்து நொறுக்கிய போலீஸ் பலரை சுட்டுக் கொன்றது.
விழுப்புரம் நகரில் பட்டியல் சாதியினர் 12 பேர் அ.தி.மு.க வினரால் வெட்டிக்கொலை
ஒரு பட்டியல்சாதி பெண்ணை மதுராந்தகம் அ.தி.மு.க அலுவலகத்திற்கே தூக்கிவந்து கற்பழித்து கொன்று போட்டனர்
நாகப்பட்டணம் எம்.பி யையே அ.தி.மு.க கொலை செய்தது.
திருச்செந்தூர் நகைக் கொள்ளை, அதை சரி பார்க்க வந்த அரசு அதிகாரி கொலை.
இன்னும் வெளிவராத அ.தி.மு.க குண்டர்கள் செய்த கொலைகள் பல உண்டு
நன்றி: வினவு தளத்தின்
"எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !"
கட்டுரை
------------------------
இது போக தனித்தமிழ்நாடு போராளி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் இந்திய உளவுத்துறை கொலை செய்தது இவர் ஆட்சியில்தான்
இடவொதுக்கீடு போராட்டத்தின் துணை ராணுவம் வந்து 21 பேரைக் கொன்றதும் இவர் காலத்தில்தான்
M.G.R ஒரு மலையாளியே
vaettoli.blogspot.in/2016/01/mgr.html?m=1
மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?
vaettoli.blogspot.in/2016/01/blog-post_12.html?m=1
தென்னிந்திய நடிகர் சங்கம்
என பெயர்சூட்டியது யார்?
1959ல் 'தமிழ் நடிகர் சங்கம்'
தொடங்கவிருந்த இயக்குனர் கே.சுப்ரமணியத்தை சந்தித்து அதை
'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர்மாற்றச் செய்தவர்
மலையாளி ம.கோ.இரா (எம்.ஜி.ஆர்)
மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?
அவர் உதவியிராவிட்டால் தமிழக மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பர்.
2009ல் உதவாத கருணாநிதியைத் தூக்கியெறிந்தது போல.
ராசீவின் உத்தரவுப் படி எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.
உடனே சென்னையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழகமே கிளர்ந்தெழுந்தது.
வெறும் 24 மணிநேரத்தில் மத்திய அரசு பணிந்தது.
இதுவே திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்திய அமைதிப்படை விடயத்தில் பணியவில்லை என்பதை நினைவில் கொள்க.
ஜெயலலிதா ஈழ தீர்மானம் போட்டதும்,
கருணாநிதி காயம்பட்ட ஈழப்போராளிகளை சிறிலங்கா அனுப்ப எம்.ஜி.ஆர் முடிவுசெய்தபோது
சென்னை மெரினாவில் பத்துமணிநேரத்தில் பத்தாயிரம் தொண்டர்களைத் திரட்டிப் போராடித் தடுத்ததும்,
ம.கோ.இரா ஈழத்திற்கு வெளிப்படையாக அறிவித்து பணம் கொடுத்ததும் அரசியல் ஆதாயத்திற்குதான்.
இந்திய ராணுவம் திரும்பி வரும்போது வரவேற்கப் போகமாட்டேன் என்றார் கருணாநிதி.
அந்த அளவு ஈழ ஆதரவு உச்சத்தில் இருந்த நேரம் அது.
M.G.R ஒரு மலையாளியே
தான் ஒரு மன்றாடியார் என்று ம.கோ.இரா கூறியது பொய்.
அவரது தந்தை ஒரு மலையாள மேனன்.
ஆனால் தாய் மலையாளம் பேசும் தமிழ் இனமான ஈழவர்.
அவர் ஈழத்திற்கு உதவியதை பெரிதாகக் கூறுகிறார்கள்.
அன்று அவர் ஈழத்திற்கு உதவாவிட்டால் 2009ல் உதவாததற்காக கருணாநிதியைத் தூக்கிவீசியது போல
தமிழக மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள்.
அவரது உண்மை முகம் முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தெரிகிறது.
25.11.1979ல் முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேச தமிழகத்திலிருந்து 47 பேரும்
கேரளாவிலிருந்து 47 பேரும்
சென்றனர்.
இதில் தமிழகக் குழுவில் 46 மலையாளிகளும் 1 தமிழரும் இடம்பெற்றிருந்தனர்.
அந்த தமிழர் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது.
அவர் அணை மட்டத்தைக் குறைப்பதை கடுமையாக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
94ல் 93பேர் ஆதரவுடன் அணையின் மட்டம் குறைக்கப்பட்டது.
அது இன்றுவரை உயர்த்தப்படவில்லை.
1981ல் கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டு போனது.
எம்.ஜி.ஆர் அதைத் தட்டிக்கேட்கவில்லை.
என்ன செய்யமுடியும் என்கிறீர்களா?
மலையாளிகளின் உணவுத்தேவை 90% தமிழகத்தை நம்பி உள்ளது.
முல்லைப்பெரியாறு நீர்தான் தமிழகத்தில் உணவாக விளைந்து மீண்டும் கேரளா செல்கிறது.
ஒரு வாரம் உணவு செல்வதைத் தடுத்தால் கேரளா பணிந்துவிடும்.
1987வரை எம்.ஜி.ஆர் எதுவும் செய்யவில்லை.
அதன்பிறகு கருணாநிதி 1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைந்த அணையையாவது கட்டித்தாருங்கள் என்று.
அதன்பிறகு ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.
பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாளிகள்.
அந்தமானின் வந்தேறிகள்
அந்தமான்-நிகோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,
வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%
1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்; அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்;
ஆனால் அப்படி நடக்கவில்லை;
1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான்-நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது;
அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது;
ஐந்தாண்டுத் திட்டம்போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன;
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210, உணவுக்கு ரூ70, வீடுகட்ட ரூ800, மாடு வாங்க ரூ700, பண்டங்கள் வாங்க ரூ180, விதைகள் வாங்க ரூ100 என வாரிவழங்கியது ஹிந்திய அரசு. (அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்றுவரை தரப்படவில்லை);
1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது;
இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்;
ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்; அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்;
இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது; அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது;
பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன;
வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது;
தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்;
வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக, சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும் இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்;
தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன;
1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்தபோது அப்போது பெரும்பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை;
1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா(எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர்,தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது;
உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்;
அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்;
தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன;
இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது;
இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
அந்தமான்-நிகோபரில் தமிழர்:
'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்;
சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்தபோது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது;
நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது;
கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்;
முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக்கொண்டுவந்த உண்மை, அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனில் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன;
தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன;
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான்-நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்;
பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன;
1895ல் ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்;
ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்; அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது (திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல);
1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்;
இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.
(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)
தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:
அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது; தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை;
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்; பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்)
அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்; தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை; பிழைத்துதான் வருகின்றனர்; அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன; இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து வருவதெல்லாம் அழிவைத்தான்;
வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்;
ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன; ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்; வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக்கொண்டுள்ளது; ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல; சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்;
தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை;
தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு;
அதை நாம் அந்தமான்-நிகோபர் தீவுகளில் இருந்து தொடங்கலாம்.
மேலும் அறிய,
தமிழன் இழந்த மண் (மின்னூல்)
http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7594%3A2012-08-22-14-31-42&catid=508%3A2012-07-29-15-40-17&Itemid=1
அந்தமான் பழங்குடிகள்:
http://www.thinakaran.lk/2013/09/18/?fn=f1309182
அந்தமான் தமிழர்:
http://www.tamilkalanjiyam.com/tamil_world/countries/anthaman.html
----
https://m.facebook.com/photo.php?fbid=483394018430923&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739