Showing posts with label நீலகிரி. Show all posts
Showing posts with label நீலகிரி. Show all posts

Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Thursday, 4 October 2018

கன்னடர் கேட்ட கர்நாடகா

கன்னடர் கேட்ட கர்நாடகா

1928 இல் கன்னடர் ஒன்றுகூடி ஒரு குழுவை நியமித்தனர்.

அக்குழு கன்னடர் வாழும் பகுதிகளை கணக்கில் கொண்டு வரைபடம் ஒன்றைத் தயாரித்தனர்.

இந்தியாவை விட்டு வெள்ளையர் சென்றபிறகு தமக்கென மொழிவாரி மாநிலம் கேட்டுப் பெற இந்த முன்னெடுப்பைச் செய்தனர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி, கொள்ளேகால், ஓசூர் ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன.
இதில் கொள்ளேகாலம் அவர்களிடம் போய்விட்டது.

Friday, 14 September 2018

நீலகிரி மலையில் படுகர் குடியேற்றம்

நீலகிரி மலையில் படுகர் குடியேற்றம்

கன்னட இனத்தவரான படுகர் நீலகிரியில் குடியேறி ஆக்கிரமித்தது போக தம்மை பழங்குடி என்று அறிவிக்குமாறும் தொடர்ந்து கோரிவருகின்றனர்.

பழங்குடி என்பதற்கான எந்த அம்சமும் இல்லாத இவர்கள் முதலில் திரிந்த கன்னடம் பேசி வந்தனர். தற்போது தனிமொழி பேசுகின்றனர்.
முதலில் கன்னடத்தில் எழுதிவந்த இவர்கள் இப்போது தமிழில் எழுதத் தொடங்கிவிட்டனர்.

இவர்களைச் சுட்டிக்காட்டி நீலகிரி எங்களுக்குச் சொந்தம் என சில கன்னடவர் கூறிவருகின்றனர்.

ஆனால் படகா அல்லது படுகா என்றழைக்கப்படும் படுகர் விஜயநகர ஆட்சி வீழ்ந்த பிறகு 1565 வாக்கில் தெற்கே பரவிய மொகலாய ஆட்சிக்கு பயந்து நீலகிரிக்கு ஓடிவந்த வந்தேறிகள் ஆவர்.

குடியேறி குடியேறி நீலகிரியில் ஒரு பகுதியை தமது வசமாக்கிக் கொண்டனர்.

1812 இல் வெறும் 22,000 பேராக இருந்த படுகர் மக்கட்தொகை 1981 இல் ஒன்றரை லட்சமாகப் பெருகிவிட்டது.

அதாவது 1871இல் 28 படுகருக்கு ஒரு தொதவர் (தமிழ்ப் பழங்குடி) என்ற நிலை இருந்தது.
129 படுகருக்கு ஒரு தொதவர் எனும் அளவுக்கு இவர்கள் மள மளவெனப் பெருகியுள்ளனர்.

பழங்குடிகள் போல தொழிலோ வாழ்வியலோ கிடையாது.
பாதிக்கும் மேலானோர் கிறித்தவ மதத்தைத் தழுவி நகர்ப்புற நாகரீகத்துடனே வாழ்கின்றனர்.

நீலகிரி எனும் நீலமலை தமிழர்களுடன் தொடர்புடைய பழங்குடி மக்களின் பூர்வீக மலை ஆகும்.

சான்று: தமிழகப் பழங்குடிகள் (நூல்)
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி

Saturday, 15 October 2016

கேரள அரசு தமிழக எல்லையை ஆக்கிரமிக்கிறது!

கேரள அரசு தமிழக எல்லையை ஆக்கிரமித்தது

பறிபோகின்றது தமிழக எல்லை!

தாளூர் ஆக்கிரமித்து தமிழக எல்லையில் எல்லை மைல் கல் ஜேசிபி கொண்டு உடைப்பு!

அத்துமீறி அடுக்குமாடி கட்டடங்களை கட்டி கேரளாவில் இருந்து மின் இணைப்பு பெற்று கேரளாவுக்கு இணைக்க பூர்வாங்க வேலைகள் ஆரம்பம்!

எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக எல்லைப்பகுதிகளை விட்டுக்கொடுக்கும் தமிழக அதிகாரிகளின் அலட்சியம்!

நீலகிரியில் தமிழக எல்லைக்குள் தாளூர் பகுதியில் மலையாளிகள் பலர் வீடுகள் கட்டியிருந்தனர்.

இவர்கள் கேரள அரசுக்கு தகவல் கொடுத்து மின் இணைப்பு கோரியிருந்தனர்.
இதன்விளைவாக நேற்று உடைப்பு இயந்திரம் கொண்டுவந்த கேரள அதிகாரிகள் எல்லைக்கல்லை உடைத்துவிட்டு அப்பகுதி கேரளாவுக்கு சொந்தம் என்று கூறிவிட்டு சென்றனர்.

மலையாளிகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தை கேரள பதிவுத்துறை மூலம் பதிவு செய்து கேரள வீட்டுவசதி துறை அப்பகுதியில் பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

  ஏற்கனவே மலையாள இனவெறிக்கு ஆளாகிவரும் அப்பகுதி தமிழர்கள் தற்போது பீதியில் உள்ளனர்.

ஆந்திரா தமிழக எல்லையில் இருந்த கோவிலை காவல்துறையை அனுப்பி ஆந்திர அரசு கைப்பற்றி ஆந்திரபிரதேச அறநிலையத்துறையில் சேர்த்தது.
அந்த செய்தியை ஒன்றிரண்டு நாளிதழ்கள் வெளியிட்டன.

இந்த செய்தியை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.

Wednesday, 27 August 2014

அந்தமானின் வந்தேறிகள்

அந்தமானின் வந்தேறிகள்

அந்தமான்-நிகோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,
வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%

1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்; அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்;
ஆனால் அப்படி நடக்கவில்லை;
1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான்-நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது;
அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது;
ஐந்தாண்டுத் திட்டம்போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன;
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210, உணவுக்கு ரூ70, வீடுகட்ட ரூ800, மாடு வாங்க ரூ700, பண்டங்கள் வாங்க ரூ180, விதைகள் வாங்க ரூ100 என வாரிவழங்கியது ஹிந்திய அரசு. (அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்றுவரை தரப்படவில்லை);
1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது;
இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்;
ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்; அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்;
இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது; அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது;
பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன;
வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது;
தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்;
வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக, சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும்  இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்;
தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன;
1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்தபோது அப்போது பெரும்பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை;
1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா(எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர்,தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது;
உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்;
அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்;
தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன;
இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது;
இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்தமான்-நிகோபரில் தமிழர்:

'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்;
சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்தபோது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது;
நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது;
கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்;
முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக்கொண்டுவந்த உண்மை, அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனில் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன;
தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன;
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான்-நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்;
பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன;
1895ல்  ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்;
ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்; அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது (திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல);
1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்;
இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.

(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)

தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:

அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது; தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை;
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்; பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்)
அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்; தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை; பிழைத்துதான் வருகின்றனர்; அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன; இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து  வருவதெல்லாம் அழிவைத்தான்;
வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்;
ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன; ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்; வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக்கொண்டுள்ளது; ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல; சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்;
தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை;
தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு;
அதை நாம் அந்தமான்-நிகோபர் தீவுகளில் இருந்து தொடங்கலாம்.

மேலும் அறிய,

தமிழன் இழந்த மண் (மின்னூல்)
http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7594%3A2012-08-22-14-31-42&catid=508%3A2012-07-29-15-40-17&Itemid=1
அந்தமான் பழங்குடிகள்:
http://www.thinakaran.lk/2013/09/18/?fn=f1309182
அந்தமான் தமிழர்:
http://www.tamilkalanjiyam.com/tamil_world/countries/anthaman.html
----
https://m.facebook.com/photo.php?fbid=483394018430923&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739