Thursday, 18 January 2024
திமுகவும் ஜல்லிக்கட்டும்
Saturday, 18 January 2020
சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்
சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்
பேட்டியாளர்: உங்கள் வெற்றிக்கு யார் காரணம்
ரஞ்சித்: இதோ என் நண்பன் தான்.
இவன் தந்த ஊக்கம்தான் காரணம்
பேட்டியாளர்: பெயரென்ன?
ரஞ்சித்: முகமது பாய்
(காணொளி க்கு நன்றி News7)
https://m.facebook.com/story.php?story_fbid=2118869388216703&id=100002809860739
Monday, 19 February 2018
அலகுமலையா? அலங்காநல்லூரா?
அலகுமலையா? அலங்காநல்லூரா?
580 காளைகள்
505 மாடுபிடிவீரர்கள்
லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
என திருப்பூர் அலகுமலையில் நேற்று (18.02.2018) பிரம்மாண்டமான சல்லிக்கட்டு திருவிழா நடத்திக்காட்டினர் கொங்கு மண்டலத் தமிழர்கள்.
(மிகவும் பிரபலமான அலங்காநல்லூரில் இந்த ஆண்டு 520 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது)
அலகுமலை ஏறுதழுவுதல் முதல் பரிசு விக்னேஷ் என்பவர் தட்டிச்சென்றார்.
மொத்தம் 10 காளைகளைப் பிடித்த இவர், 7 காளைகளை பிடித்தநிலையில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து 3 காளைகளைப் பிடித்தது இங்கே குறிப்பிட்டத் தகுந்தது.
இவர் ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி.
நாட்டு மாடு வகைகள் அழியாமல் இருக்க ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று இவர் பரிசு வாங்கும்போது பேசினார்.
அலகுமலை - இனி இன்னொரு அலங்காநல்லூர் !
Tuesday, 9 January 2018
சல்லிக்கட்டு நினைவுகள் (தொகுப்பு)
சல்லிக்கட்டு நினைவுகள் (தொகுப்பு)
புகைப்படங்களாக நிகழ்வுகள்
https://m.facebook.com/aathi1947/albums/1125717077531944/
Tuesday, 11 July 2017
உயிரைக் கேட்டாலும் தருவான்
இனத்திற்கு ஒன்றென்றால்
இறங்கி நிற்கும் முதலாள்
.
.
உறவுமுறை சொல்லி அழைப்பான்
உணவு சமைத்து அளிப்பான்
உயிரைக் கேட்டாலும் கொடுப்பான்
.
.
சக தமிழன் எவனுக்கும்
சளைக்காத மனமிருக்கும்
.
இவனிருக்க கவலை ஏது?
இது என்னினம் பெற்ற பேறு!
.
.
வருக கதிராமங்கலம்!
எழுக தமிழ்மா நிலம்!
Monday, 10 July 2017
எது உன் நாடு?
எது உன் நாடு?
பா.த.சரவணன் இட்ட 1000 பகிர்வுகள் கண்ட பதிவு
சல்லிக்கட்டு போராட்டத்தில் இரண்டு இளைஞர்கள்
'எந்த நாட்டில் உன் ஒவ்வொரு உரிமைக்கும் போராடுகிறாயோ அந்த நாட்டில் நீ அடிமையாக இருக்கின்றாய் என்றே அர்த்தம்
தனித்தமிழ்நாடே ஒரே தீர்வு'
என்ற பதாகையை பிடித்திருக்கும் படம்.
ராஜா முகமது இட்ட படம்
போராட்ட பந்தலில் அமர்ந்தபடி 'எங்கள் நாடு எங்கள் மாடு ஏறு தழுவ தடைபோட இந்திய அரசே நீ யாரு?'
என்ற பதாகை பிடித்த இளைஞர்.
Saturday, 8 July 2017
தமிழ்நாடு தனிநாடு பதாகைகள்
இந்த பொண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தமிழ் இளைஞர்களிடம் இல்லாமலா இருக்கும்?
இனி தமிழ்தேசியத்தின் காலம்...
(கைக்குழந்தையுடன் ஜனவரி 26 தமிழ்நாடு தனிநாடு எனும் பதாகை பிடித்திருக்கும் பெண் மற்றும்
தமிழ்நாடு இனி தனிநாடு என்ற மேல்சட்டையை கையில் பிடித்திருக்கும் பெண்குழந்தை படங்கள்
ஏறுதழுவுதல் போராட்டத்தின் போது எடுப்பட்டவை)
Thursday, 26 January 2017
சல்லிக்கட்டு நடக்க உயிர்விடும் சென்னை மீனவர்
நமக்காக வந்தா இதெல்லாம் நடக்கும்னு தெரியும்,
இருந்தும் வந்தாங்கடா மீனவமக்கள்!
பாருடா, ஒருத்தன போட்டு எத்தன பேரு வெறித்தனமா அடிக்கிறானுகன்னு!
ஐயையோ செத்துட்டான் போல்ருக்கே
மாட்ட காப்பாத்த நம்ம குப்பத்து அண்ணன் உசிரவிடுறான் பாருடா
எதாவது பண்ணுங்கடா!
ஒரு அடையாளப் போராட்டமாவது நடத்துங்கடா!
சென்னை இளைஞர்களே!
https://m.facebook.com/story.php?story_fbid=853663581403963&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.853663581403963%3Atl_objid.853663581403963%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1485935999%3A-8529771930740093111
Tuesday, 24 January 2017
இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?
இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?
ஆண்போலீஸ் பெண்போலீஸ் வேடிக்கை பார்க்க ஒரு பெண்போலீசே மாணவியின் உடைகளைக் கிழிக்கிறாள்.
ஜார்ஜ்தான் மலையாளி!
உங்களில் ஒரு தமிழன் கூடவா இல்லை?
ஒருத்தன் கூடவா அக்காதங்கச்சியோட பொறக்கல?
ஆட்டோவுக்கு தீவைக்கறதும்
குடிசைக்கு தீவைக்கிறதும்
வயித்துல மிதிச்சு கருவ சிதைக்கிறதும் னு
எளிய மக்கள்ட வீரத்த காட்டுனீங்க
இப்ப மானத்துலயும் கைவச்சிட்டீங்களேடா?
நாயிங்களா
தெரிஞ்சு போச்சுடா
எவ்வளவுதான் நேர்மையா போராடுனாலும் கடைசில ஈவிரக்கமில்லாத பதிலடியும்
கெட்டபேரும்தான் கெடைக்கும்னு
அடுத்த போராட்டம் அமைதிப் போராட்டமா இருக்காது.
மொதல்ல போலீஸ்காரன பொளந்திட்டு காக்கிச்சட்டைல ரத்தம் பாத்த பிறகுதான் போராட்டமே ஆரம்பிக்கும்.
Sunday, 22 January 2017
சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்
சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்
அலங்காநல்லூர் மக்கள் முதல்வரை உள்ளே விடவில்லை.
சாலைகள் அனைத்தையும் தடை ஏற்படுத்தி அடைத்துவிட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவானவர் இருசக்கர வாகனத்தில் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.
காவல் அதிகாரிகள், அரசு அழைத்து வந்த மாடுபிடிவீரர்கள் மாடுகள் என யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை.
முதல்வர் அறிவித்தபடி அவரால் வாடிவாசலில் சல்லிக்கட்டு நடத்த விடவில்லை.
நிரந்தர தீர்வுடன் வந்தால் மட்டுமே உள்ளே விடுவோம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இதையே சென்னையில் இருப்போர் செய்யலாம்.
சென்னையை சுற்றி பத்து சாலைகளை அடைக்கவேண்டும்.
இப்போதிருக்கும் கூட்டத்தை விட குறைவான கூட்டமே போதும்.
ஒரு சாலைக்கு 10,000 முதல் 20,000 பேர் வரை போதும்.
வாகனங்களை குறுக்காக நிறுத்தி தரையில் அமர்ந்துகொள்ளுங்கள்.
விமான நிலையத்தையும் சுற்றி முற்றுகை போட்டுவிட்டால் சென்னை முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
அதன்பிறகு மோடி வந்து காத்துகிடக்கவேண்டிய சூழல் உருவாகும்.
வெற்றிக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம்.
ஜனவரி 26 க்குள் ஹிந்தியா நமக்கு பணிந்துதான் ஆகவேண்டும்.
இல்லையென்றால் குடியரசு தினம் நடக்காதுபோய் அவமானப்படவேண்டி இருக்கும்.
ஆக மூன்றே நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடியுங்கள்.
இதோ வரைபடம்
19 ஜனவரி, 11:23 மணிக்கு ஏற்கனவே போட்ட அதே வரைபடம்தான்.
அதில் விமான நிலையத்தையும் குறித்துள்ளேன்.
இன்னும் எத்தனைநாள் போராடவேண்டும்?!
இன்னும் எத்தனைநாள் போராடவேண்டும்?!
நான்கு நாட்கள்.
எளிமையாகக் கூறுகிறேன்
ஒரு பிரச்சனை நடக்கிறது.
அதற்கு காரணம் ஒரு சட்டம்.
மக்கள் அந்த சட்டத்தை திருத்த போராட்டம் நடத்துகிறார்கள்.
அந்த போராட்டத்திற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன.
இரண்டுமே கிட்டத்தட்ட ஒரேமாதிரி தான்.
ஒரு தீர்வின் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
இன்னொரு தீர்வினை மக்கள் நம்புகிறார்கள்.
என்றால் ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்யவேண்டும்?
மக்களுக்கு எந்த தீர்வு சரியெனப்படுகிறதோ அதைத்தானே வழங்கவேண்டும்?!
ஆனால் அரசோ இரண்டும் ஒன்றுதான் சந்தேகம் படாதீர்கள் என்று பிடிக்காத தீர்வையே திணிக்கிறது.
அவசர சட்டத்தை தமிழக அரசு நினைத்தால் நிரந்தரச் சட்டம் ஆக்கலாம்.
அல்லது முறையாக நாடாளுமன்றத்தைக் கூட்டி சட்டதிருத்தத்தைக் கொண்டுவரலாம்.
இரண்டில் எதுவுமே நிரந்தரத் தீர்வு இல்லை.
ஏனென்றால் சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன.
ஒரு நல்ல அரசு,
மக்கள் எந்த தீர்வை கேட்கிறார்களோ அதைச் செய்துவிட்டு
பிறகு அதை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால் திறமையாக வாதாட தயாராக இருக்கவேண்டும்.
இங்கே பிரச்சனை சிங்கம், புலி ஆகியவற்றை வைத்து பொது இடங்களில் காட்சி நடத்தக்கூடாது என்ற சட்டம்.
இதனால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு.
அசம்பாவிதம் நடந்தால் மனிதருக்கும் பாதிப்பு.
இதில் வீட்டுவிலங்கான காளையை சேர்த்து திருத்தம் செய்தனர்.
இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க ஒரு அமைப்பு வழக்கு தொடுக்கிறது.
மக்கள் கேட்பது இந்த திருத்தத்தை மறுதிருத்தம் செய்வதுதான்.
ஆனால் அரசோ அவசர காலத்தில் எடுக்கவேண்டிய தற்காலிக நடவடிக்கையை எடுக்கிறது.
பிறகு இந்த தற்காலிக நடவடிக்கையை சட்டமாக்கிக் கொள்ளலாம் என்கின்றது.
மக்கள் கேட்பது நியாயமான ஒரு விடயம்.
காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவது.
தேவையில்லாமல் இந்த வழக்கினை போட்ட அமைப்புகளை தடை செய்தல் (இதை மக்கள் தீவிரமாக கேட்கவில்லை)
இதை தமிழக அரசு நிறைவேற்றினால் தமிழகத்தில் மட்டும் அது செல்லும்.
மத்தியில் நிறைவேற்றினால் அனைத்து மாநிலங்களிலும் செல்லும்.
ஆனால் இதைச் செய்யாமல் சுற்றிவளைக்கின்றனர்.
ஆகவே இளைஞர்களே!
ஹிப்ஹாப் ஆதி, பாலாஜி, லாரன்ஸ், சிவசேனாபதி, பி.ராஜசேகரன், ஊடகங்கள் என எவர் பேச்சையும் கேட்கவேண்டாம்.
தொடர்ந்து போராடுங்கள்.
வெற்றிக்கு மிக அருகாமையில் வந்துவிட்டோம்.
நமக்கு தேவை சட்ட திருத்தம்.
காளைகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கும் வரை போராடவேண்டும்.
இல்லையென்றால் குடியரசு தினத்தை நடக்கவிடாமல் தடுத்து பிறகு முடித்துக்கொள்வோம்.
அப்போதுதான் நமது போராட்டம் வரலாற்றில் பதிவாகும்.
Friday, 20 January 2017
சென்னை நகரம் முற்றுகை
ஹிந்தியாவின் கொழுப்பை அடக்கி காலில் விழவைக்க நினைத்தீர்களானால்
அதற்கு சென்னையை முழுக்க தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசியமிருக்குமானால்
மறிக்கவேண்டிய அல்லது துண்டிக்கவேண்டிய 9 முக்கிய சாலைகள்
மற்றும் ஒரு ரயில்பாதை
இதைச் செய்தால் 5 நாட்களில் மோடி வந்து காலில் விழுவது உறுதி
19 ஜனவரி, 11:23 AM ·
வேற்றுகிரகத்தில் ஹிந்தியா
வேற்றுகிரகத்தில் ஹிந்தியா
ஹிந்தியாவில் வசிக்கும் நான் சொல்கிறேன்.
*இங்கே நாய் கூட நம்மை மதிக்கவில்லை*
நமது இத்தனை பெரிய போராட்டம் இங்கே யாருக்கும் தெரியவில்லை.
(ஆனால் உலகத் தமிழர்கள், சர்வதேச ஊடகங்கள் என பலருக்கும் தெரிந்துள்ளது)
இன்று காலை உடன் வேலை செய்யும் ஒரே ஒருவர்தான் இதுபற்றி கேட்டார்.
(அதுவும் ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றவாறு)
எப்படி தெரியும்? என்று கேட்டேன்.
அவர் மகன் சென்னையில் படிக்கிறானாம்.
ஆக வடயிந்திய ஊடகங்களோ போராளிகளோ நமது மாபெரும் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை.
தமிழக மக்கள் என்னவென்றால் 'இந்தியாவில் தமிழ்நாடு இருக்கவேண்டுமா?' என்று இப்போதுதான் சிந்திக்கவே தொடங்கியுள்ளனர்.
(ஆங்காங்கே ஒன்றிரண்டு செய்திகள் வந்தன,
அதுவும் முடிந்த அளவு நமக்கு எதிரான கருத்துகளையே வைத்தன)
இதேபோலத்தான் பச்சிளம் பாலச்சந்திரன் மார்பில் பெரிய பெரிய ஓட்டைகளுடன் இறந்து கிடந்த புகைப்படம் வெளிவந்தபோது ஒரு கோடி அளவில் திரண்ட மாணவர் போராட்டம் நடந்தபோதும் ஹிந்தியன் எவனும் மதிக்கவில்லை.
ஆக வடயிந்தியன் தும்மினாலும் நமக்கு அதிர்கிறது.
ஆனால் நாம் உயிரைவிட்டாலும் வடயிந்தியனுக்கு அது பற்றிய சிறு சலனமும் இல்லை.
ஜல்லிக்கட்டு பற்றி முறையான விழிப்புணர்வு ஏற்பட மூல காரணம் கார்த்திகேய சிவசேனாதிபதி ஐயா.
அவர் கென்யாவில் நடந்த சர்வதேச கூட்டத்திற்கு சென்றபோது அங்கே நாட்டுப்புற கால்நடை வளர்ப்பை நவீனப்படுத்த வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தபோது
ஆப்பிரிக்க பழங்குடி பிரதிநிதிகளும்
ஒரு ஜெர்மானியரும்
ஒரு குறும்பர் பிரதிநிதியும் மட்டுமே கூட்டு சேர்ந்து எதிர்த்ததாகவும்
வடயிந்திய பிரதிநிதிகள் பேசாமல் இருந்ததையும் கூறியுள்ளார்.
ஆக உலகின் எந்த ஒரு மூலையையும் விட ஹிந்தியாவே நமக்கு அதிக தொலைவில் இருக்கிறது.
*தெளிவாகக் கூறினால் தமிழனைப் பொறுத்தவரை ஹிந்தியா
வேற்றுகிரகத்தில் இருக்கிறது*
ஹிந்தியா என்று நான் இங்கே கூறுவது தமிழ்நாடு தவிர்த்த அனைத்து மாநிலங்களையும் சேர்த்துதான்.
சல்லிக்கட்டு - தீர்வும் நிரந்தரத் தீர்வும்
நிரந்தரத் தீர்வு
●/
/▌
/ \
உண்மையான இலக்கு வாடிவாசலைத் திறப்பது இல்லை.
காளையை (காட்சிப்படுத்தக்கூடாத) வனவிலங்கு பட்டியலில் முட்டாள்த்தனமாக சேர்த்துள்ளனர்.
அதில் இருந்து காளையை நீக்கும் சட்ட திருத்தமே.
இதுபோன்ற நமது எல்லா பிரச்சனைக்கும் நிரத்தர தீர்வு தனிநாடு.
ஹிந்தியாவிடமிருந்து தமிழர்நாடு பிரிந்து விடுதலை அடைவது.
எங்கள் நாடு!
தமிழர்நாடு!
நேற்று, 07:16 AM ·