Monday, 7 August 2023
சாத்தானின் ஆசான்
Tuesday, 16 May 2023
தமிழ்த் தனியுலகு வேண்டும்!
Monday, 20 February 2023
விடுதலையன்றோ அறம்
Friday, 11 November 2022
ஏழு பெற்றோரை ஈன்ற மகளே செங்கொடி
Friday, 22 September 2017
இப்படி ஒரு அசிங்கம்....
இப்படி ஒரு அசிங்கம்....
இளமையில் ஆடிய ஆட்டம்!
முதுமையில் ஆட்டிப்படைக்கும்!
தாலி கட்டாமல் பெற்ற மகள் அவிழ்த்துப்போட்டு ஆட
வேலி கட்டிவைத்த வைப்பாட்டி கவிழ்த்துவிட்டு ஓட
தள்ளாத வயதில்,
தன் காணசகியா முகத்தில்,
தரித்துக்கொண்டான் அரிதாரம்!
தாங்கமுடியா பரிதாபம்!
வாழ்வாங்கு வாழ்ந்த சூழலில் நின்று,
'வாங்கலியோ புடவை தள்ளுபடியில்' என்று,
கூவி விற்கும் அவலம்!
கூனி நிற்கும் துயரம்!
அரைவேக்காடுகளை அள்ளிவந்து,
அறைகளுக்குள்ளே அடைத்துவைத்து,
நூறுநாட்கள் மேய்க்கிறான்!
ஊரை இவன் ஏய்க்கிறான்!
வாளாவிருப்போர் சந்தை அதிலே,
வாய்ச்சொல்வீரர் சண்டை நடுவே,
பட்டிமன்றமும் நடத்துவான்!
பரபரப்பும் கிளப்புவான்!
பணம் தந்தால் போதும்
பிணங்கூடத் தின்பான்!
கூப்பாடும் போடுவான்!
கூட்டியும் கொடுப்பான்!
கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடி மரபினன்!
எவ்வளவோ அறிவு!
எத்தனையோ திறமைகள்!
பிறப்பு, உருவம், சுற்றம்
சிறப்பாய் அமைந்தன எல்லாம்!
ஆயினும் பயனில்லை!
ஆணவம் விடவில்லை!
விரலை மட்டும் ஆட்டியே
வழுக்கை ஒருவன் முந்திவிட்டான்!!
விறைப்பே குறியான இவனோ
ஒழுக்கம் இன்றி பிந்திவிட்டான்!!
கதறவிட்ட எதிரி கட்டையில் போகும்வரை காத்திருந்து,
கவட்டுக்குள் ஒளிந்திருந்த தலை மெல்ல நேரே நிமிர்ந்து,
நாட்டைவிட்டு ஓட இருந்தவன்,
கோட்டையை பிடிப்பேன் என்கிறான்.
கடுகளவு வந்தது துணிச்சல்!
கவிபாடி வரவைக்கிறான் எரிச்சல்!
கிறுக்கல்களில் பம்மி வெளியிட்டான் வந்த அரசியல் ஆசையை!
கிறுக்குப்பயல் கூட நம்பி வரமாட்டான் இந்த முற்றல் ஆண்வேசியை!
தன் துறையில் தனக்கென தனியிடம் இருந்தபோதும்,
தக்க நேரத்தில் ஓய்வுபெற்று தன்மானத்தை காக்காமல்,
உலகமே உமிழும் வடுகர்க்கு கைகூப்பி,
இந்தியமே தமிழும் திராவிடமும் எனக் குழப்பி,
மிச்சமுள்ள புகழையும் பணையம் வைத்து,
எச்சில் எலும்பேனும் கிடைக்குமா என்று அலைகிறான்!
ஊர்பார்க்க உதடுகளை ஏறி மேய்ந்த நாயொன்று,
ஊளையிட்டதே மேடையேறி தலைவன் நானென்று!
முடிவெடுத்தானாம்!
முதல்வராவானாம்!
செருப்பால் அடிபடுவான்! சின்னபின்னமாவான்!
ஏற்கனவே அப்படித்தான் என்றாலும்,
மேற்கொண்டும் படுவான் இனிமேலும்!
செத்தவனுக்கேது நெருப்பைக் கண்டு அச்சம்?!
மானம் கெட்டவனுக்கேது இழிவைக் கண்டு கூச்சம்?!
வீதியில் திரிய வேண்டாமென்றால்
வீட்டில் கிடடா வந்தேறி முண்டமே!
Tuesday, 11 July 2017
உயிரைக் கேட்டாலும் தருவான்
இனத்திற்கு ஒன்றென்றால்
இறங்கி நிற்கும் முதலாள்
.
.
உறவுமுறை சொல்லி அழைப்பான்
உணவு சமைத்து அளிப்பான்
உயிரைக் கேட்டாலும் கொடுப்பான்
.
.
சக தமிழன் எவனுக்கும்
சளைக்காத மனமிருக்கும்
.
இவனிருக்க கவலை ஏது?
இது என்னினம் பெற்ற பேறு!
.
.
வருக கதிராமங்கலம்!
எழுக தமிழ்மா நிலம்!
Tuesday, 10 May 2016
சாகட்டும் சேலை கட்டும் தமிழக மீனவன
சாகட்டும் சேலை கட்டும் தமிழக மீனவன்....
இடிந்தகரையில் எழுச்சியுற்ற உம் வீரம்
இடிந்து விழுந்ததோ சிங்களவன் முன்
முடிந்த அளவு ஆயுதம் பதுக்கி
மடிந்து போகவும் ஆயத்தமாகி
சிலநூறு உயிர் காவு கொடுத்து
சிங்களவன் பிணமொன்று கரைகொண்டு வந்திருந்தால்....
இலங்கை சீறியிருக்கும்
இந்தியா நம்மீது பாய்ந்திருக்கும்
மீனவர் எழுச்சி மூண்டிருக்கும்
ஈனவர் துப்பாக்கி முழங்கியிருக்கும்
மக்கள் புரட்சி வெடித்திருக்கும்
மேகமெனப் போர் சூழ்ந்திருக்கும்
மறத்தமிழ்க் கூட்டம் திரண்டிருக்கும்
மழைபோல் குண்டுகள் பொழிந்திருக்கும்
தரணிவியக்கும் தமிழர்வீரம்
தக்கப் பதிலடி கொடுத்திருக்கும்
விடியலாய் எம் தமிழர் நாட்டு
விடுதலை பிறந்திருக்கும்
வாயால் கூடக் கண்டனம் தெரிவிக்காத இந்தியா
வயிற்றிலடிக்கும் வந்தேறிகள் ஆட்சி
வக்கில்லை போராட உமக்கு
வழியும் இல்லை செத்தொழிய
அடிமைபோலக் காலில் விழுகிறீர்
அம்மணமாக்கி கடல்நடுவே வன்கொடுமை நேர்ந்தபின்னும்
உயிரிற் சிறந்ததது மானம்
உமக்கென்னய்யா தயக்கம் அது கப்பலேறிப் போனபின்பும்
???????
(படம்: பாலா)
Thursday, 10 March 2016
எஞ்சுவதில்லை எவரும் எதிர்நின்றே
கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை, எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!
-பாவலேறு பெருஞ்சித்திரனார்
Friday, 27 November 2015
யானைகள் பிளிறன
யானைகள் பிளிறன..
காட்டில் கிடைத்த சிறுவன்
மாந்தரை விட யானைகளே பழக்கம்
அரசன் விருப்பத்துக்கு இணங்க
கரிய பெரிய தோழர்களோடு புறப்பட்டான்
கொள்ளையர் சூழ்ந்த
காவிரிப்பூம்பட்டினக்
கடல்பரப்பை மீட்க
நீரில் நீந்தமால் மிதந்து துதிக்கையை வெளிநீட்டி
நீர்மூழ்கிக் கப்பல்களாகி
கடம்பக் கொள்ளையர்
கப்பலை முறியடித்து...
யானைகள் பிளிறின..
எம்மன்னனுக்காக போர்புரிந்தானோ அவனையே நோக்கி
எதிர்திசையில் திரும்பின களிறுகள்
கரிகாலன் யானைகளா?!
கேள்விப்பட்டதுமே
ஓடிப்போனான்
உறையூர் மன்னன்
பணியாத படைகளை
புழுதித் தரையில் அடித்துவிட்டு
கொள்ளை மீட்டுத் தெருவில்
கொட்டிக்கிடந்த பொற்குவியலை
காலால் மிதித்தபடி பலநூறு யானைகளுடன்
உறையூரில் நுழைந்தவனாம் உரிமையோடு எடுத்து
தன்கையால் மகுடத்தை
தனக்கே சூடிக்கொண்டவனாம்
தம் தலைவன் கரிகாலனை வாழ்த்தி……
யானைகள் பிளிறின..
கூட்டணி அமைத்த பனிரென்டு மன்னர்கள்
கூடிநின்ற வெண்ணியில் நடந்தது உலகப்போர் கரியயானைகள் செங்குருதியில்
குளியல்போட்டு நிறம் மாறின
கேடடைந்து தோற்றனர் எதிரிகள்
கரிகாலன் பெயர்கேட்ட நாடுகள்
காலடியில் சரணடைந்தன
பனிமலையாம் இமயம் வரை சென்றான்
பணிந்த நாடுகள் அவந்தி வச்சிரம் மகதம் எனப் பற்பல
வெண்பனியிமயம் குறுக்கிட்டதோ
வெகுண்டு பார்த்த…
யானைகள் பிளிறின..
இவளை மட்டும் அடக்காமல் விடுவேனா
இமைகொட்டாமல் காவிரியைப் பார்த்து
நாடியை வருடினான் கரிகாலன்
நானிலம் போற்றும் கல்லணை நிலைநிறுத்தி
தங்கமண்ணெல்லாம் பொன்விளைய
தமிழகம் ஆனதே வல்லரசாக
காவிரிப்பூம்பட்டினத்தின்
காவல்கப்பல்களே பத்தாயிரமாம்
துதிக்கையால் எண்ணிப்பார்த்த...
யானைகள் பிளிறின..
ஏ மரணமே! கணக்கின்றி
உயிர்குடித்தானே
உன் தொழிலை தான்செய்தானே
இவனைக் கொண்டுசென்றாயே
இனி உன்வேலை அதிகமானதே
கவிபாடினான் வஞ்சப்புகழ்ச்சிக்
கருஞ்குழல் ஆதன்
கரிகாலன் மரணத்தை
தலைவன்தானே மறைந்தான்
தரணியில் அவன்பெயர் என்றும் மறையாதே
கரிகாலன் கதைசொல்லும் பக்கங்கள்
குருதியள்ளித் தெளிக்கும் படிப்பவன் முகத்தில்
அதற்கு வகைசெய்த
அடங்காக் கரிகாலனின்
அழகுப் புலிக்கொடி தாங்கிய...
யா...னைகள் பிளிறின.
Wednesday, 26 November 2014
பிரபாகரன் வருகைப் பத்து
***பிரபாகரன் வருகைப் பத்து***
________________________________________________
வானோங்கு தமிழினம்
வளர்ந்தோங்கச் செய்தவனே
தேனோங்கு செந்தமிழால்
தினமுன்னைப் பாடுகிறோம்
மானோங்கு தமிழர்க்கு
மருள்நீக்கும் மன்னவனே
வானோங்கு செங்கதிரே
வருவாய் இதுசமயம். .
கையில் தமிழேந்திக்
கருத்தில் உனையேந்தி
மெய்யாக வழிநடப்போம்
மேலான எம்தலைவா
பொய்யான கதைகளும்
புனையான வார்த்தைகளும்
நைந்ததென நீஎழுந்து
வருவாய் இதுசமயம். .
வஞ்சகத்தின் வலையதனில்
வகையாக மானானோம்
குஞ்சரி மணவாளா
குணமுள்ள மாதவனே
வஞ்சகத்தின் தளையறுத்து
வண்டமிழர் குலம்காக்க
வஞ்சலென வந்திடுவாய்
ஆறுதலைத் தந்திடுவாய். .
அஞ்சித்தலை குனிந்தும் அடிமைபோல் வாய்புதைந்தும்
அஞ்சலென வந்தவர்க்கு
ஆதரவு சொல்லிடவே
நெஞ்சம்
நிறைந்திருக்கும்
நீதிமனுச் சோழனே
கொஞ்சம் விரைந்திங்கே
வருவாய் இதுசமயம். .
மெய்யிருக்கும் இவ்வுயிரும்
ஏங்குதய்யா உனைக்காண
பொய்யிருக்கும் இவ்வுலகம்
பேசுதய்யா புனைக்கதைகள்
ஐயா பிள்ளைவேலு
பெற்றெடுத்த ரத்தினமே
செய்யதமிழ்க் கொண்டுவாரும்
பொய்யதனைப் பொடியாக்க. .
கூறாமற் குறைதீர்க்கும்
குறிப்பறிந்த மன்னவனே
தேறாத கவிஎனினும்
திருமுன்பு சாற்றுகிறேன்
மாறாத துயரகல
மாயவனே நீ வருவாய்
ஆறாத வடுமாற
ஆயனென நீவருவாய். .
பண்ணாறும் செந்தமிழால்
பரணியது பாடிடவே
வண்ணக் கரும்பட்டை
வாகையணி துப்பாக்கி
வன்புலிச் சின்னம்
வரைந்திட்ட தொப்பியுடன்
கண்மை நிறமீசை
கணம்பொருந்த வாருமையா. .
எண்டிசை நடுங்கவே
இன்றிங்கு வாருமே
தெண்டிரைச் சூழ்உலகில்
தென்னிலங்கைத் தேறவே
கண்ணெடுத்துப் பாருமே
கயவர்கள் சோரவே
பண்பாடி அழைக்கிறோம்
பாயஇது நல்லசமயம். .
யாரென்ன சொன்னாலும்
யான்உன்னை ஒருநாளும் ஐயுற்ற தில்லையப்பா
கார்த்திகைத் திங்களில்
கவியெடுத்துப் பாடுவேன் வல்லவன் நின்புகழை
காலெடுத்து வாருமே
கவலைகள் நிலம்புதைய. .
வாழ்க தண்டமிழர்
மீள்க தமிழர்நிலம்
ஆழ்க துயரெல்லாம்
சூழ்க நலமெல்லாம்
வாழ்க தமிழ்ப்பாவை
வெல்க தமிழ்ப்படை
வளர்க ஒற்றுமை
வருக எம்தலைவர்.
எழுதியவர்: சபரி நாதன்
#பிரபாகரன்60
https://m.facebook.com/photo.php?fbid=516968465073478&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739