Friday 20 January 2017

வேற்றுகிரகத்தில் ஹிந்தியா

வேற்றுகிரகத்தில் ஹிந்தியா

ஹிந்தியாவில் வசிக்கும் நான் சொல்கிறேன்.

*இங்கே நாய் கூட நம்மை மதிக்கவில்லை*

நமது இத்தனை பெரிய போராட்டம் இங்கே யாருக்கும் தெரியவில்லை.

(ஆனால் உலகத் தமிழர்கள், சர்வதேச ஊடகங்கள் என பலருக்கும் தெரிந்துள்ளது)

இன்று காலை உடன் வேலை செய்யும் ஒரே ஒருவர்தான் இதுபற்றி கேட்டார்.
(அதுவும் ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றவாறு)

எப்படி தெரியும்? என்று கேட்டேன்.

அவர் மகன் சென்னையில் படிக்கிறானாம்.

ஆக வடயிந்திய ஊடகங்களோ போராளிகளோ நமது மாபெரும் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை.

தமிழக மக்கள் என்னவென்றால் 'இந்தியாவில் தமிழ்நாடு இருக்கவேண்டுமா?' என்று இப்போதுதான் சிந்திக்கவே தொடங்கியுள்ளனர்.

(ஆங்காங்கே ஒன்றிரண்டு செய்திகள் வந்தன,
அதுவும் முடிந்த அளவு நமக்கு எதிரான கருத்துகளையே வைத்தன)

இதேபோலத்தான் பச்சிளம் பாலச்சந்திரன் மார்பில் பெரிய பெரிய ஓட்டைகளுடன் இறந்து கிடந்த புகைப்படம் வெளிவந்தபோது ஒரு கோடி அளவில் திரண்ட மாணவர் போராட்டம் நடந்தபோதும் ஹிந்தியன் எவனும் மதிக்கவில்லை.

ஆக வடயிந்தியன் தும்மினாலும் நமக்கு அதிர்கிறது.

ஆனால் நாம் உயிரைவிட்டாலும் வடயிந்தியனுக்கு அது பற்றிய சிறு சலனமும் இல்லை.

ஜல்லிக்கட்டு பற்றி முறையான விழிப்புணர்வு ஏற்பட மூல காரணம் கார்த்திகேய சிவசேனாதிபதி ஐயா.

அவர் கென்யாவில் நடந்த சர்வதேச கூட்டத்திற்கு சென்றபோது அங்கே நாட்டுப்புற கால்நடை வளர்ப்பை நவீனப்படுத்த வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தபோது
ஆப்பிரிக்க பழங்குடி பிரதிநிதிகளும்
ஒரு ஜெர்மானியரும்
ஒரு குறும்பர் பிரதிநிதியும் மட்டுமே கூட்டு சேர்ந்து எதிர்த்ததாகவும்
வடயிந்திய பிரதிநிதிகள் பேசாமல் இருந்ததையும் கூறியுள்ளார்.

ஆக உலகின் எந்த ஒரு மூலையையும் விட ஹிந்தியாவே நமக்கு அதிக தொலைவில் இருக்கிறது.

*தெளிவாகக் கூறினால் தமிழனைப் பொறுத்தவரை ஹிந்தியா
வேற்றுகிரகத்தில் இருக்கிறது*

ஹிந்தியா என்று நான் இங்கே கூறுவது தமிழ்நாடு தவிர்த்த அனைத்து மாநிலங்களையும் சேர்த்துதான்.

No comments:

Post a Comment