Thursday 26 January 2017

வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்

வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்
=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=

ஹிந்தி மொழிக்குடும்பம் ஒரே நாடாக இருக்கவேண்டும் என்கிறீர்கள்,
அப்படியானால் தமிழ்வழி வந்த தென்னிந்தியாவும் ஒரே நாடாகத்தானே இருக்கவேண்டும்?!

இல்லை நண்பனே!

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்க.

குசராத்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளி என அனைத்தும் இந்தியுடன் மிக மிக நெருக்கனமானவை.
சொல்லப்போனால் அவை இந்தியின் வெவ்வேறு வடிவங்கள் என்றே கருதப்படுகின்றன.
எழுத்துமுறையும் கிட்டத்தட்ட ஒன்றே.

எனவே அவர்கள் எந்த இடைஞ்சலும் இன்றி இந்தியை ஏற்றுக்கொண்டவர்கள்.
இவர்கள் இந்தி சினிமாவை பார்ப்பதில் இருந்தே இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட வடயிந்திய இனங்கள் வரலாற்றில் தொடர்ந்து ஒரே ஆட்சியில் இருந்து வந்துள்ளனர்.
நில அமைப்பு அப்படி அமைந்துள்ளது.
மேற்கண்ட எந்த இனத்திற்கும் தனிப்பட்ட நில அமைப்பு கிடையாது.

அதனால் கலாச்சாரம் ஒத்துப்போகிறது.
திருமண சடங்குகள் அப்படியே ஒத்துபோகும்.

முக அமைப்பும் உடலமைப்பும் ஒத்துப்போகும்.

வடயிந்திய இனங்களுக்குள் இருக்கும் நெருக்கமான ஒற்றுமையானது,
தென்னிந்திய இனங்களுக்குள் கிடையாது.

அதாவது ஒரு குசராத்திக்கும் வங்காளிக்கும் உள்ள வேற்றுமையை விட

ஒரு மலையாளிக்கும் தெலுங்கனுக்கும் உள்ள வேற்றுமை பல மடங்கு அதிகம்.

தென்னிந்திய நிலப்பரப்பு வடயிந்தியாவைப் போல சீரானது கிடையாது.
தமிழருக்கும் மலையாளிக்கும் தனி நில அமைப்பு உள்ளது.

தெலுங்கு-கன்னடவருக்கு கூட்டாக தனிநிலம் உள்ளது.

தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சியில் இருந்ததாக வரலாறு இல்லை.

தென்னிந்திய இனங்கள் தனித்தனி எழுத்துரு,
தனித்தனி ஆட்சி,
தனித்தனி கலாச்சாரம்,
தனித்தனி சினிமா,
என தனித் தனி சிறப்புகளைக் கொண்டவர்கள்.


முக அமைப்பு மட்டும் கொஞ்சம் ஒத்துப்போகும்.

(ஆனால் வடயிந்தியருக்கும் தமிழருக்கும் ராக்கெட் விட்டால் கூட எட்டாது)

(தமிழர்களின் நாகரீக-மொழியியல் எச்சங்கள் மட்டுமே வடக்கே எஞ்சியுள்ளன)
தமிழருக்கும் மற்ற அனைத்து மாநில இந்தியருக்கும் தற்போது இருக்கும் ஒரே இணைப்பு இந்து மதம் மட்டுமே.
(காஷ்மீருக்கு அந்த இணைப்பு கூட கிடையாது)

அதுவும் கூட கிறித்துவ இசுலாமிய மதங்கள் போல முறைப்படுத்தப்பட்ட மதம் இல்லை.

தமிழரின் வாழ்வியல் நெறிகளும் முன்னோர்களுமே வடக்கே இந்து மதமாக இந்து கடவுளராகப் பரவி உள்ளது.

மொத்த இந்தியாவிலும் தமிழர்கள் தனிச்சிறப்பு பெற்றவர்கள்.
அவர்கள் காஷ்மீர் போல ஆங்கிலேயர் காலம் வரை இந்தியாவுடன் இருந்ததில்ல அவர்கள் கா

No comments:

Post a Comment