இன்னும் எத்தனைநாள் போராடவேண்டும்?!
நான்கு நாட்கள்.
எளிமையாகக் கூறுகிறேன்
ஒரு பிரச்சனை நடக்கிறது.
அதற்கு காரணம் ஒரு சட்டம்.
மக்கள் அந்த சட்டத்தை திருத்த போராட்டம் நடத்துகிறார்கள்.
அந்த போராட்டத்திற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன.
இரண்டுமே கிட்டத்தட்ட ஒரேமாதிரி தான்.
ஒரு தீர்வின் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
இன்னொரு தீர்வினை மக்கள் நம்புகிறார்கள்.
என்றால் ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்யவேண்டும்?
மக்களுக்கு எந்த தீர்வு சரியெனப்படுகிறதோ அதைத்தானே வழங்கவேண்டும்?!
ஆனால் அரசோ இரண்டும் ஒன்றுதான் சந்தேகம் படாதீர்கள் என்று பிடிக்காத தீர்வையே திணிக்கிறது.
அவசர சட்டத்தை தமிழக அரசு நினைத்தால் நிரந்தரச் சட்டம் ஆக்கலாம்.
அல்லது முறையாக நாடாளுமன்றத்தைக் கூட்டி சட்டதிருத்தத்தைக் கொண்டுவரலாம்.
இரண்டில் எதுவுமே நிரந்தரத் தீர்வு இல்லை.
ஏனென்றால் சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன.
ஒரு நல்ல அரசு,
மக்கள் எந்த தீர்வை கேட்கிறார்களோ அதைச் செய்துவிட்டு
பிறகு அதை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால் திறமையாக வாதாட தயாராக இருக்கவேண்டும்.
இங்கே பிரச்சனை சிங்கம், புலி ஆகியவற்றை வைத்து பொது இடங்களில் காட்சி நடத்தக்கூடாது என்ற சட்டம்.
இதனால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு.
அசம்பாவிதம் நடந்தால் மனிதருக்கும் பாதிப்பு.
இதில் வீட்டுவிலங்கான காளையை சேர்த்து திருத்தம் செய்தனர்.
இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க ஒரு அமைப்பு வழக்கு தொடுக்கிறது.
மக்கள் கேட்பது இந்த திருத்தத்தை மறுதிருத்தம் செய்வதுதான்.
ஆனால் அரசோ அவசர காலத்தில் எடுக்கவேண்டிய தற்காலிக நடவடிக்கையை எடுக்கிறது.
பிறகு இந்த தற்காலிக நடவடிக்கையை சட்டமாக்கிக் கொள்ளலாம் என்கின்றது.
மக்கள் கேட்பது நியாயமான ஒரு விடயம்.
காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவது.
தேவையில்லாமல் இந்த வழக்கினை போட்ட அமைப்புகளை தடை செய்தல் (இதை மக்கள் தீவிரமாக கேட்கவில்லை)
இதை தமிழக அரசு நிறைவேற்றினால் தமிழகத்தில் மட்டும் அது செல்லும்.
மத்தியில் நிறைவேற்றினால் அனைத்து மாநிலங்களிலும் செல்லும்.
ஆனால் இதைச் செய்யாமல் சுற்றிவளைக்கின்றனர்.
ஆகவே இளைஞர்களே!
ஹிப்ஹாப் ஆதி, பாலாஜி, லாரன்ஸ், சிவசேனாபதி, பி.ராஜசேகரன், ஊடகங்கள் என எவர் பேச்சையும் கேட்கவேண்டாம்.
தொடர்ந்து போராடுங்கள்.
வெற்றிக்கு மிக அருகாமையில் வந்துவிட்டோம்.
நமக்கு தேவை சட்ட திருத்தம்.
காளைகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கும் வரை போராடவேண்டும்.
இல்லையென்றால் குடியரசு தினத்தை நடக்கவிடாமல் தடுத்து பிறகு முடித்துக்கொள்வோம்.
அப்போதுதான் நமது போராட்டம் வரலாற்றில் பதிவாகும்.
No comments:
Post a Comment