"நானூறு ஆண்டுகால வரலாறு கொண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு சாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஊக்குவித்து வருகிறது"
1909 ல் வெளிவந்த நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
எட்கர் தர்ஸ்டன் (Edger Thurston) எனும் ஆங்கில கலெக்டர் தென்னிந்திய சாதிகளை விரிவாக ஆராய்ந்து எழுதிய Castes and Tribes of Southern India புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
சல்லிக்கட்டு 400 ஆண்டுகள் இல்லை அதைவிட பலநூறாண்டுகள் பழமையான இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளது என அந்த ஆங்கிலேயருக்குத் தெரியவெல்லை.
ஆனால் சாதிகளை ஆராய்ந்த ஆங்கிலேயரே சல்லிக்கட்டில் சாதியம் இல்லை என்று கூறிவிட்டார்.
சிலர் தலித்தியவாதிகள் கூறுகிறார்கள் தலித்துகளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்காததால் அவர்களே தனியாக தமக்குள் சல்லிக்கட்டு 20 ஆண்டுகளுக்கு முன்புதான் நடத்த ஆரம்பித்தார்களாம்.
தமிழ்மண்ணில் தலித் என்று யாரும் கிடையாது.
தலித்தியம் இங்கே தேவையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாகக் கூறுகிறேன்.
No comments:
Post a Comment