சீமான் வெளியே போகவேண்டுமா?
இன்று இருக்கும் விழிப்புணர்வு ஒரே நாளில் வந்ததல்ல.
ஜல்லிக்கட்டு பற்றி இன்று தெளிவாகப் பேசுகிற எவரையும் விட
ஒன்றரை ஆண்டு முன்பே மிகத் தெளிவாக எளிமையாக சீமான் பேசியுள்ளார்.
கட்சி சார்பற்ற போராட்ட களத்திலிருந்து சீமான் அண்ணனை வெளியே போகச்சொல்கிற சிலர்
அவர் 17-07-2014 அன்று ஜல்லிக்கட்டு போராட்ட அமைப்புகள் கூட்டிய கூட்டத்தில் காரைக்குடியில் பேசிய பேச்சினை (தமிழன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது)
ஒருமுறை கேளுங்கள்.
மாட்டுக்காக மகனையே கொன்ற மனுநீதிச்சோழனில் பேச்சைத் தொடங்குகிறார்.
கலாச்சார ஒழிப்பு
விவசாய ஒழிப்பு
தற்காப்பு கலைகள் ஒழிப்பு
இவற்றின் மூலம்
இன அழிப்பு என மிக அழகாக தமிழினத்தின் அத்தனை பிரச்சனைகளையும் விளக்குகிறார்.
(யூட்யூபில் இருந்தது ஆனால் தற்போது காணவில்லை.
ஆனால் dailymotion ல் உள்ளது.)
Seeman 20140717 Speech at karaikudi என்று தேடுங்கள்.
அதன்பிறகு ஒவ்வொரு மேடையிலும் சீமான் அண்ணன் சல்லிக்கட்டு பற்றி பேசாமல் இருந்ததில்லை என்றே சொல்லலாம்.
சல்லிகட்டுக்காக குரல்கொடுத்துவரும் ஒரே கட்சி நாம்தமிழர் என்பதை இங்கே கூறித்தான் ஆகவேண்டும்.
18 ஜனவரி, 08:08 AM ·
No comments:
Post a Comment