Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Tuesday, 21 January 2020

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.

இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .

இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .

இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.

இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.

இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .

சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .

[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]

பதிவர்: Annamalai Sugumaran

Friday, 6 July 2018

சிவனுக்கு தமிழ் தெரியுமா?

சிவனுக்கு தமிழ் தெரியுமா?

ஒண்ணுமில்ல.
நீங்க என்ன பண்றீங்க...

1000 வருசத்துக்கும் மேல பழமையான சிவன் கோவில்கள ஒரு வரைபடத்துல குறிங்க.
அதுல அதிகமான கோவில்கள் எங்கே இருக்குனு பாருங்க.
அங்க என்ன மொழி பேசப்படுது/பேசப்பட்டது னு பாருங்க!
அந்த ஆளு என்ன மொழி பேசினாருனு தெரிஞ்சிடும்.

வரைபடம்: பாடல்பெற்ற 276 சைவ  திருத்தலங்கள்

Friday, 1 September 2017

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்!

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது (???!!!!)

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலைசெய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார், கொள்ளையடித்துவிட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன்தான்
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து,
கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலைசெய்யப்பட்டார்.

மேலும் அறிய,

காண்க காணொளி :-
தமிழரசன் வங்கி கொள்ளை பற்றி பழனிபாபா (vaettoli.wordpress)

search இனம்னா என்ன? வேட்டொலி

search வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி வேட்டொலி

Saturday, 15 April 2017

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற சைவப் பார்ப்பனர் இன்றும் இருக்கிறார்கள்.

தமிழை மறந்துவிட்டாலும் இன்று வரை அவர்கள் மார்கழி மாதத்தில் திருவெம்பாவையை ஓதி வருகின்றனர்.
(1952ல் தமிழகத்திலிருந்து குழு சென்று மந்திரங்களை மீண்டும் கற்பித்துவிட்டு வந்தனர்)

தலைநகரான பேங்காக் நகரில் சைவ மதத்தவர் (மற்றும் இந்துக்கள்) கூடி திருவெம்பாவை ஓதி ஊஞ்சலாட்டு விழா நடத்துகிறார்கள்.
(தமிழகத்தில் கோவிலில் சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் சடங்கு உள்ளதே அதே போன்று)
நகரின் மத்தியில் பெரிய ஊஞ்சலும்  உள்ளது.

சோழர்காலம் வரை பார்ப்பானர் தமிழில்தான் ஓதி பூசை செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறதா?

தாய்லாந்து மன்னர் நடராஜர் சிலைக்கு முன்பாக யாகம் வளர்த்து அரண்மணைப் பெட்டகத்தில் பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தேவாரம், திருவாசகம், திருப்பாவை என தமிழ் மந்திரங்களை ஓதி பார்ப்பனர்கள் முடிசூட்டிவிடுவர்.

இது தமிழ் மன்னர்கள் முடிசூட்டிக்கொண்ட முறை ஆகும்.
குறிப்பாக
"தோடுடைய செவியன்" என்று தொடங்கும் சம்பந்தர் பாடலும்
"பித்தா பிறை சூடி" என்று தொடங்கும் சுந்தரர் பாடலும் மனப்பாடமாக ஓதுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை வளர்த்ததும் திணித்ததும் வடுகரே!

  தமிழகத்தில் பூசை முறைகளில் சமஸ்கிருதத்தைப் புகுத்தி தமிழ்ப் பார்ப்பனர்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது 500 ஆண்டுகள் முன்பு தெலுங்கர் ஆட்சியில்தான் நடந்தது.

ஆனாலும் பார்ப்பனர்கள் தமிழை விட்டுக்கொடுக்கவில்லை.
இன்றுவரை தமிழை அழியாமல் தாங்கும் சமூகம் பார்ப்பனர் சமூகம்.

பார்ப்பனர் வேறு
பிராமணர் வேறு

பார்ப்பனர் தமிழரே!

படம்: 1925ல் மன்னர் நடராசர் சிலை முன் முடிசூடலுக்காக அமர்ந்திருக்கும் காட்சி

நன்றி: தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! _indosri

Friday, 17 June 2016

வீரப்பன் - மக்களைக்காத்த மகாநாயகன்

வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா....

மக்களைக்காத்த மகாநாயகன்.

1993ம் ஆண்டு மே மாதம்.

வீரப்பனாரை ஒழித்துக் கட்டியே தீருவது என்ற முடிவுடன் தமிழக- கன்னட கூட்டு அதிரடிப்படை வீரப்பனார் கட்டுப்பாட்டுப்பகுதியை ஒட்டிய தமிழ்ச் சிற்றூர்களில் கொலைவெறித் தாண்டவம் ஆடினர்.

வீரப்பனும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.

அவர்களும் வீரப்பனாருடனான மோதலில் ஒரு படைஉறுப்பினர் இறத்தால் பதிலுக்குப் பத்துத் தமிழரைக் கொண்டுபோய் சுட்டுக் கொன்றனர்.

வீரப்பனாரின் படையில் எத்தனைபேரைப் பிடித்தாலும் மக்களை என்னதான் கொடுமைப்படுத்தி தகவல்களை சேகரித்தாலும் வீரப்பனாரை நெருங்கக்கூட முடியவில்லை.

வீரப்பனார் தமது மக்கள் படும் துன்பத்திற்கு தானும் ஒரு காரணம் என்று மிகவும் வேதனையடைந்தார்.

தனது ஆட்களை அனுப்பி அதிரடிப் படையினரால் வாழ்விழந்த மக்கள் யார்யாரென்று விசாரித்து அவர்களை தம்மிடம் அழைத்துவரும்படியும் தாமே அவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும் கூறி அனுப்பினார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூரே வீரப்பனாரின் வனக்கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டது.

கத்தரி மலை அடிவாரத்தில் ஐந்து கிணறுகள் தோண்டப்பட்டன.

இருநூறு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பில் உணவு, உடை, என அனைத்தும் குறைவின்றி வழங்கப்பட்டது.

ஒரு மாதம் இவ்வாறு கழிந்தது.
ஒருநாள் அதிரடிப்படையினர் தேவாரம் என்பவர் உத்தரவுப்படி கத்தரி மலையடிவாரத்தில் தேடுதல்வேட்டை நடத்தியபோது வீரப்பனார் பாசறைப் பார்த்துவிட்டார்கள்.
ஒரு ஊரே அங்கு இருந்தது.

இருந்தாலும், அவர்கள் தாக்குதல் நடத்த வீரப்பனார் பக்கத்திலிருந்து எதிர்தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்களை ஒருநொடி எண்ணிப்பார்த்த வீரப்பனார் சரவெடியைக் கொழுத்திப் போடச் சொல்லி அந்த இரைச்சலும் துப்பாக்கி வேட்டுச் சத்தமும் எதிர்நிற்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி அந்த நேரத்தில் மக்களை மலைக்குகைகளுக்குள் பத்திரமாக கொண்டுசென்றார்.

இதன்பிறகு சில நாட்கள் கழித்து கன்னட-தமிழக அதிரடிப்படையினர் கர்நாடக டி.ஜி.பி பர்மன் மற்றும் தமிழக எஸ்.பி சஞ்சய் அரோரா தலைமையில் வீரப்பனார் பாசறையை மோப்பம் பிடித்து நாலாப்புறமும் சுற்றிவளைத்துத் தாக்கினர்.

அப்போது அங்கே ஒரு நிறைமாத சூலிக்கு பிள்ளைப்பேறு நடக்கவிருந்த நேரம்.

இந்த தாக்குதலை எதிர்பார்த்திராத வீரப்பன்படை எதிர்த்தாக்குதல் நடத்தினாலும், அவ்வளவு மக்களை வைத்துக்கொண்டு அவர்களால் முழுமையாக எதிர்த்தாக்குதல் நடத்தமுடியவில்லை.

நிலைமை மோசமானதும் மக்கள் மீது குண்டுகள் பாயவே அவர்கள் சிதறி ஓடினர்.

வீரப்பனார் தளபதிகள் ஏழுபேர் பிடிபட்டனர்.
ஆனால், வீரப்பனார் அப்போதும் சிக்கவில்லை.
முப்பதுபேருக்கு மேல் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வீரப்பனாரின் மனைவி, அன்று பிள்ளயீன்று மோதலில் அப்பிஞ்சை பறிகொடுத்த தாய் என சில பெண்கள் பிடிக்கப்பட்டு பன்னாரி எனும் இடத்திலுள்ள முகாமில் அடைத்துவைக்கப்பட்டனர்.

வீரப்பனாரின் பெண் தளபதி மேரி என்பவரும் உயிரிழந்தார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூருக்கே சோறு போட்டுக் காப்பாற்றும் அளவுக்கு பணபலமும் ஆள்பலமும் வைத்திருந்தவர் வீரப்பன்.

கடத்தல்காரனாக இருந்தபோதும் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் மக்களைப் பற்றி சிந்தித்தவர்தான் வீரப்பன்.

வீரப்பனார் தமிழ்ப்போராளியாக மாறியது 1997க்குப் பிறகுதான்.
ஆனால், அதற்கு முன்பே, அவர் தம் இனத்தின் மீது வைத்திருந்த பற்றும் இனத்திற்காகச் செய்த செயல்களும் பெரும்பாலும் மறைக்கப்பட்டுள்ளன.

படம்: வீரப்பனாரைக் கொல்ல அலைந்த அதிரடிப்படை (special task force) செய்த கொடுமைகள்,

*சட்டவிரோதமாக பிடித்துவைக்கப்பட்டு ஊனமாகவும் பைத்தியமாகவும் ஆனவர்கள் 270பேர்,
*அதிரடிப் படை சித்தரவதை செய்தும் சுட்டும் கொன்றது 89 பேரை,
*பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோர் 57 பேர்,
*தடா சட்டத்தில் அடைக்கப்பட்டோர் 123 பேர்,
*உடைமைகளை இழந்து ஊரை விட்டு ஓடியவர்கள் 200பேர்,
(தகவல்: பீப்பிள்ஸ் வாட்ச், மதுரை)