Monday, 12 May 2025
செந்தூர் என்பதே sindoor
Tuesday, 21 January 2020
வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்
வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்
தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.
இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .
இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .
இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.
இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.
இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .
சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .
[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]
பதிவர்: Annamalai Sugumaran
Wednesday, 15 November 2017
ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)
ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)
திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்
தமிழன்: நடத்தி...
'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!
"தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.
இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.
எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்"
அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.
கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!
உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?
Sunday, 22 October 2017
மலபார் என்பது தமிழே
மலபார் என்பது தமிழே
கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.
கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவதற்கு பெரும்முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.
ஆசிய மொழிகளிலேயே தமிழ்மொழியில்தான் முதல்முதலாக பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச்சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.
தமிழ்மொழியை ”மலபார்மொழி” என்றழைத்தனர்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழியில் முதன்முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.
குறிப்பு மேல்நாட்டினர்தான் தமிழ்மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர்.
அவ்வாறு முதல்முதலாக உருவாகிகொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன.
அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில்தான் இந்தநூல் அச்சிடப்பட்டுள்ளது.
பதிவர்: Vel Samy
---------------
மேலும் சில விபரங்கள்,
1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).
1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும்,
தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.
ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
படம்: தமிழும் இங்கலேசுமாயிருக்கற அகராதி
A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779
printed vapery
Monday, 16 October 2017
இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6
இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183
குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11
கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------
மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1
மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம் பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------
இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3
மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.
(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492
மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------
மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,
வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469
பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840
கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43
போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289
கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287
அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------
வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261
வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12
மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------
பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217
பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------
மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.
பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20
மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------
மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,
பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173
எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7
தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6
மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25
செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------
பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.
மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.
வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.
Wednesday, 27 September 2017
வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை! இந்தி அரசின் அடுத்த ஆப்பு!
வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை
இந்தி அரசின் அடுத்த ஆப்பு
தமிழ் கட்டாயமாக இருந்த தேர்வுகளிலேகூட தமிழே தெரியாத ஹிந்தி மாணவருக்கு தமிழில் நல்ல மதிப்பெண் வழங்கி வேலையில் அமர்த்திக்கொள்ளும் மத்திர அரசின் இந்தி இனவெறி அம்பலமானதால் தற்போது இந்த அதிரடி முடிவு!
பொதுத்துறை வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7883 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 1277 காலியாக உள்ளன.
தமிழகத்தில் பத்து லட்சம் பேர் இதற்கான தயாரிப்பில் உள்ளனர்.
தற்போது தமிழக பொதுத்துறை தமிழ்மொழி கட்டாயம் என்ற விதியை தளர்த்தியுள்ளது.
News18 செய்தி
https://m.facebook.com/story.php?story_fbid=1046364758800510&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.1046364758800510%3Atl_objid.1046364758800510%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1506841199%3A-37368577874997661&__tn__=%2AW-R&_rdr
மேலும் அறிய,
search மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள் வேட்டொலி
search தமிழே தெரியாமல் தமிழில் 24/25, அரசு வேலையைத் தட்டிப்பறித்த ஹிந்தியர் வேட்டொலி
Tuesday, 18 July 2017
தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்..!
தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்..!
.
.
படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி..
.
Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit
representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)
.
பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை -
வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய்
(எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண்
கயிறு என்று சொல்லுவதை நினைவில்
கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல்
(திருமணத்திற்கு பெற்றோர்
சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்
.
இதை விட பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தின் 60%சொற்களின் மூலம் நம் தமிழ்மொழியே..!
பிரமிப்பு ஏற்பட்டால் உங்கள் நட்பு வட்டத்திற்கும் அனுப்புங்கள்...
(நன்றி: Whatsapp)
Wednesday, 3 May 2017
கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்
கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்
மறைக்கப்பட்ட தமிழினக் கொலைகளில் ஒன்று
1982 சூலை மாதம் கர்நாடகாவில் உள்ள தமிழர் தாய்நிலமான கோலாரில் தமிழ்மொழிக் கல்விக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழர், காணாமல் அடிக்கப்பட்ட 15 தமிழர்.
அறிக்கை: கர்நாடகத்தில் மொழிக் கொள்கை,
கன்னடர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில்
முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக்
குழுவின்
பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்த
மறைந்த குண்டுராவ் தலைமையிலான
காங்கிரஸ் கட்சி அரசு 1982-ம்
ஆண்டு அமல்படுத்தியது.
இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது.
இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்க
உரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத்
தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழர்கள்
அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில்
இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக
நடந்தது.
அறவழியில் நடந்த இந்தப்
போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்க
முயன்றது.
போராட்டம் நடத்திய தமிழர்கள்
ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.
காவல்
துறையின் இந்த அட்டூழியத்தைப்
பொறுத்துக்கொண்டு உரிமைக்காக தமிழர்கள்
தொடர்ந்து போராடினர்.
இதனால் குண்டுராவ்
அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச்
சூடு நடத்தி போராட்டத்தை அடக்க
உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து
தங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள்
மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில்
பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன்
ஆகியோர் குண்டுபாய்ந்து இறந்தனர்.
பலர்
காயம் அடைந்தனர்.
போலீஸாரால் அழைத்துச்
செல்லப்பட்ட பலர்
இன்று வரை வீடு திரும்பவில்லை.
அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15
பேர்.
நன்றி:-
http://kgftamils-mani.blogspot.in/2008/10/blog-post_9351.html?m=1
http://naamtamilar.org/கட்சி-செய்திகள்/பெரும்-எழுட்சியுடன்-நடை%E0%AE-3
(2 பிப்ரவரி 2014 அன்று முகநூல் பதிவாக இட்டது.)
Saturday, 29 April 2017
வீரமாமுனிவர் - எழுத்து சீர்திருத்த முன்னோடி
எழுத்து சீர்திருத்த முன்னோடி வீரமாமுனிவர் அவர்கள்தான்.
எ என்பதின் மேலே புள்ளிவைத்து ஏ என்பது எழுதப்பட்டு வந்தது.
அதைத் திருத்தி எ என்பதின் கீழே சரிவான கோடு சேர்த்து ஏ என்ற வடிவத்தை உருவாக்கினார்.
அதே போல கரடி என்பது காடி என்பதுபோல எழுதப்பட்டுவந்தது.
அதிலும் சிறிய சாய்வான கீழ்க்கோடு சேர்த்து துணையெழுத்திலிருந்து ர என்ற எழுத்தையும் உருவாக்கினஅதிலும் சிறிய சாய்வான கீழ்க்கோடு சேர்த்து துணையெழுத்திலிருந்து ர என்ற எழுத்தையும் உருவாக்கினார்.
மேலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.
நன்றி: Logan K Nathan
ஈ.வே.ரா செய்த சீர்திருத்தம்(?) என்ன தெரியுமா?
ஔவைப்பாட்டி என்பதை அவ்வைப்பாட்டி அதாவது அவ்+வைப்பாட்டி என்றாக்கியது.
தற்போது நாம் எழுதும் முறை (லை, னா போன்றவை) பழமையான முறையே.
இம்முறை நாஞ்சில் கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டது.
ஈ.வே.ரா செய்த எழுத்து சீர்கேடு
பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?
பதிவர்: Kathir Nilavan
நாள்: 03.10.2014
தமிழ் எழுத்துகள் திடீரென உருக்கொண்டவையல்ல.
சமூக வளர்ச்சிப் போக்கில் இவ்வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன.
கற்பாறையிலும், அதன்பிறகு பனை ஓலையிலும் எழுதப்பட்ட எழுத்துகள் அதனதன் தேவைக்கேற்பவும், விரைவாக எழுதுவதற்கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதொரு எழுத்துக்குமிடையே ஒன்று போல கருதும் எழுத்து மயக்கம் ஏற்பட்டு விடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன.
இன்றைக்கு நம் பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் காலவளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களாகும்.
19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகையாலும், இன்ன பிற காரணங்களாலும் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
1915ஆம் ஆண்டில் பாரதியாருக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாகும்.
அதே ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞான பாநு' ஏட்டில்,
'தமிழ் எழுத்துகள்' என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரை ஒன்றில், இக்காலத்திலே (ஓணான் சுருட்டிய வால் போன்று உள்ள எழுத்துகள்) எழுதப்படும் எழுத்துகளுக்கு மாற்றாக றா, றோ, னா, னோ, என்று எழுத வேண்டும் என்று சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
1930இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'குமரன்' இதழில் அதன் ஆசிரியர் திரு.முருகப்பா என்பவர் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களை பயன்படுத்தி கட்டுரையொன்றை எழுதி வாசகர்களின் கருத்தை கேட்டுள்ளார்.
1931இல் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்பவரும் தன்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக்கால கட்டத்தில் தான் குத்தூசி குருசாமி அவர்கள் முன்மொழிந்திட பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியதோடு, தனது ஏடுகளில் தமிழில் உள்ள சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார்.
பெரியார் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் எழுத்து சீர்திருத்த சிந்தனை பிறந்தது என்று கூறுவது தவறானதாகும்.
பெரியார் தனது குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுதி வந்தவை எழுத்து குறைப்பே அன்றி எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல.
இதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
கவிமணி தேசிக விநாயகர் நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகளை இதற்கு சான்றாக கூறியிருப்பதாக தனித்தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார்.
அது வருமாறு:
" க், ங், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற், எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை, என்றாயின.
ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி அமைக்கப்பட்டு வந்தன.
அப்படியே ண. ல. ள. ன, என்னும் நான்கு எழுத்துகளும் ணை, லை, ளை, னை என்று இரட்டைச்சுழி துணை எழுத்தோடு எழுதப்பட்டன.
இந்த நான்கு எழுத்துகளும் மற்றைய எழுத்துகளில் வேறுபட்டவை.
சுழிகளால் அமைந்தவை. 'ண' மூன்று சுழி.
'ல' ஒரு சுழி.
'ள' ஒரு சுழி.
'ன' இரண்டு சுழி.
இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும் போது,
(ணை) மூன்று சுழி ஐந்து சுழியாகவும்,
ஒரு சுழி (லை) மூன்று சுழியாகவும்,
ஒரு சுழி (ளை) மூன்று சுழியாகவும்,
இரண்டு சுழி (னை) மூன்று சுழியாகவும் மாறி விடும் அல்லவா?
இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர்.
'வ' என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும், அதற்கு துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர்....
'கா' முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன, என்பவற்றில் சுழியாக இருந்தன.
அவற்றை மற்ற எழுத்துகளின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்றவில்லை.
பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின."
பெரியார் மேற்கண்ட பழைய வரி வடிவ எழுத்துகளோடு நில்லாது ஐ, ஒள, விலும் மாற்றம் செய்திட்டார்.
அவற்றை அய், அவ், என்றே எழுதினார்.
உயிர் எழுத்தை நீக்கி விட்டு உயிர்மெய்யை வைத்துக் கொள்வது குழப்பத்தையே தரும்.
அதாவது 'ஐ' என்ற உயிர் இல்லாமல் தலை, மலை, மனை முதலிய உயிர்மெய்கள் எவ்வாறு வரும்?
மேலும் கய், தய்யல், பிழய், மழய், என்று எழுதியதோடு,
வந்தான்= வன்தான்,
மாங்காய்= மான்காய்,
பஞ்சம்= பன்சம்
என்றெல்லாம் பெரியார் எழுதத் தொடங்கினார்.
அதுமட்டுமின்றி, நண்பரை Fரண்ட்ஸ் என்றும், வரிக்குதிரை என்பதை Zப்பிரா என்றும் ஆங்கில எழுத்துகளை தமிழோடு கலந்து துணிந்து எழுதிட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்துகளை அறவே அகற்றிவிட்டு முழுவதும் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.
1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சினங்கொண்டு
"தமிழ்மொழியைப் பற்றி கவலைப்படாத நிலையில் தமிழ் எழுத்தைப்பற்றி மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்"
என்று கேள்வி எழுப்பினார்.
பாவாணரும் கூட 1937இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப்பழகியும், அவர் 'விடுதலை' எழுத்தை மேற்கொள்ளும்படி சொல்லவோ, எழுதவோ இல்லை என்கிறார்.
தமிழ் ஆட்சிமொழியாகவும், கல்லூரிகளில் பயிற்றுமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுவதாக சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவார்.
பெரியார் வழியில் வீரமணி, வ.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் பேசிக்கொண்டே ஆங்கிலமொழிக்கு பல்லக்கு தூக்கி வருவது கண்கூடான உண்மையாகும்.
தமிழின் தாழ்வுற்ற நிலை போக்காது எழுத்துச்சீர்திருத்தம் எவர் பேசினாலும் அவர் தமிழுக்கு எதிரி என்பதை இனியாவது தமிழர்கள் உணர வேண்டும்.
(நன்றி: முதன்மொழி ஏப்.சூன் 2010,
நுமான் எழுதிய
மொழியும், இலக்கியமும்:
பெரியாரின் சிந்தனைகள்.
தென்மொழி- மே 1986)