Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Tuesday, 18 July 2017

தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்..!

தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்..!
.
.
படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி..
.
Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit
representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)
.
பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை -
வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய்
(எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண்
கயிறு என்று சொல்லுவதை நினைவில்
கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல்
(திருமணத்திற்கு பெற்றோர்
சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்
.
இதை விட பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தின் 60%சொற்களின் மூலம் நம் தமிழ்மொழியே..!
பிரமிப்பு ஏற்பட்டால் உங்கள் நட்பு வட்டத்திற்கும் அனுப்புங்கள்...

(நன்றி: Whatsapp)

Wednesday, 13 July 2016

வாட்சப்-இலும் தமிழ்

வாட்சப்-இலும் தமிழ்

வாட்சப் (Whatsapp)
புதுப்பித்த(update) பிறகு
அமைப்புகளில் (settings) போய்
அரட்டைகள் (chats) ல் சென்று
பயன்பாட்டு மொழி (language usage) ல்
தமிழைத் தேர்ந்தெடுக்கவும்.

நன்றி.

Tuesday, 10 May 2016

திராவிடலு பகுதி-2

திராவிடலு
பகுதி-2
************

தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறிவிடுகிறன்.

இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னனியில் உள்ள திராவிடக்கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்கவேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்.
இப்போது விடயத்திற்கு வருவோம்.

அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆனால் மாநில மொழிகளில் எதைவேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.

இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.

ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளிமாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.

ஆம், வெளிமாநிலத்தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக்கற்கலாயினர்.

அத்தோடு தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் அண்டைமாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழிசெய்திருந்தனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக்கற்கலாயினர்.

இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப்பெயரையும் மாற்றி தெலுங்கரின் நாய்க்கர்,ஸெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.
தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.

ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் வந்தேறுகுடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.

மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.

இன்று ஈழப்பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.

தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.

தமிழரின் தனித்தன்மை(?)  என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும்.

அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.

அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதேநிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப்பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?

இதற்குக் காரணம் யார்?

இதில் திராவிடத்தின் பங்கு என்ன?
தொடரும். . . .

Saturday, 25 July 2015

தமிழருக்கு "எமனான" தமிழ்

தமிழருக்கு "எமனான" தமிழ்:
************************

என்ன தலைப்பு அதிர்ச்சியாக இருக்கிறதா?
ஆனால், இதுதான் கசப்பான உண்மை; தமிழருக்கு எதிராகத் தமிழை எப்படி பயன்படுத்துவது என்பதை நம் இன எதிரிகளும் துரோகிகளும் நன்றாகவே அறிந்துள்ளனர்;

தொல்காப்பியத்துக்கு உரை எழுதி, இராவண காவியம் தடையை நீக்கி, கண்ணகிக்கு சிலை வைத்து, தமிழுக்கு செம்மொழிப் பட்டம் வாங்கிக் கொடுத்து, திருவள்ளுவருக்கு சிலை எடுத்து தமிழ்பற்றாளனாகக் காட்டிக்கொண்டே தமிழர் தாலியை அறுத்த கொலைஞன்தான் இந்த உத்தியை அறிமுகப்படுத்தியது; இது ராசபக்ச போர்முடிந்த மறுநாள் தமிழில் உரையாற்றியது போன்றது;

2009ல் பல இலக்கம் தமிழர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடைசிக்கட்டத்தில் நின்றிருந்த நேரம் ஒரு தமிழன்  ஆசுக்கார் வாங்கச் செல்கிறான், அவன் அன்று அந்த விருதைத் தூக்கி தரையிலடித்துவிட்டு 'என் மக்கள் கொல்லப்படும் இந்நேரத்தில் எனக்கு இது தேவையில்லை' என்று மட்டும் கூறியிருந்தால் உலகமே அதிர்ந்திருக்கும் பல இலக்கம் உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்;ஏன் இதற்கு முன் நடிகர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மக்களுக்காகக் குரல் எழுப்பியதே இல்லையா;
சார்லி சாப்ளின்,மார்ல் பிராண்டோ, அருந்ததி ராய் போன்றவர்கள் குரல் எழுப்புவதில்லையா;
அவனோ நிலைமையை எவ்வளவு தந்திரமாகச் சமாளித்தான்; ஆசுக்கார் மேடையில் தமிழில் பேசினான்;

அவன் பேசியது இந்திய ஊடகங்களில் வரவும் இல்லை; இன்று இணையத்தில் தேடினால் கிடைக்கவும் செய்யாது; நாமும் அவன் அன்று காற்றில் கரைத்த வார்த்தைகளை எண்ணி மெய்சிலிர்க்கிறோம்;

நான்கூடத் தமிழ் பற்றிக் கவலைப்பட யாருமில்லை என்றுதான் நினைத்தேன்; உண்மையில் தமிழ்மேல் பைத்தியம் பிடித்த ஒரு கூட்டமே இருக்கிறது; தமிழர் வரலாற்றைக் காக்க, தமிழ் இலக்கியத்தைக் காக்க, தமிழின் புகழை உலகெல்லாம் பறைசாற்ற, எழுத்துலகில் தமிழை முன்னேற்ற, இணையத்தில் தமிழை பயன்படுத்த என்று முழுமூச்சாக செயல்படும் ஆயிரக்கணக்காணோர் உள்ளனர்;

ஆனால், கேவலம் தமிழனைக் காப்பாற்ற, இனவிடுதலைக்காகப் போராட ஒருவர்கூட இல்லை என் சொந்தங்களே ஒரு தனிமனிதர் கூட இல்லை;

எம் தேசியத் தலைவர் தமிழில் புலமை பெற்று தமிழனுக்காகப் போராடவில்லை; தமிழரசனாரோ,வீரப்பனாரோ இன்னும் பல விடுதலை வீரர்களோ தமிழ்ப்பற்றின் காரணமாகப் போராடவில்லை; அவர்களிடம் இருந்தது இனப்பற்று மட்டும்தான்;

சுற்றி பாருங்கள் தமிழர்களே; கண்களைத் திறந்து பாருங்கள்; நம்மிலிருந்து வந்தவர்கள், நம்மிடம் பாடம் கற்றவர்கள், நம்மால் ஆளப்பட்டவர்கள், நம்மால் நேர்மையாக நடத்தப்பட்டவர்கள் இன்று நம்மையே அடக்கியாளும் வல்லமை பெற்றிருக்கும் காரணம் என்ன?

அவர்கள் மொழிப்பற்றா இல்லைவேயில்லை இனப்பற்று; சக இனத்தை அழித்தேனும் தன்னினமும் சந்ததிகளும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்கிற வெறி;

தமிழைத் தேசியமொழியாக்க வக்கில்லையென்றதும் காகத்தை தேசியப்பறவையாக அறிவியுங்கள் என்றாராம் அண்ணா, அப்போதுதானே அதையே சொல்லி ஏமாற்றமுடியும்;

2,30,130 சகீமி பரப்புள்ளது தமிழர் தாய்நிலம்; இதில் கேவலம் 1,30,058 (56%) மட்டும் பிச்சை போடுவதுபோல போட்டுவிட்டு அதற்கு 'தமிழ்நாடு' என்று தமிழ்ப்பற்றோடு  பெயர் வைத்து ஏமாற்றிவிட்டனர்; (அதையும் 1920லிருந்து வந்தேறிகளே ஆண்டுவருகினறனர்;
தலைநகருக்கு சென்னப்ப நாயக்கன் என்ற ஆங்கிலேயருக்கு முதலில் நிலம்விற்ற தெலுங்கனின் பெயரைவைத்து சரிகட்டியாயிற்று);

நம்மை 800வருடமாகக் கண்டவனும் ஆள்கிறான்;
70,000சகீமி(30%) மூன்று மாநிலங்கின் ஆக்கிரமிப்பில்,
21,952சகீமி(9.5%) சிங்களவர் கையில்,
8,073சகீமி (3.5%) அந்தமான்-நிகோபர் தீவுகள் வங்காளியர் ஆதிக்கத்தில்,
இவை அனைத்து இந்தியா என்ற வல்லாதிக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்;

இதை நினைத்து கவலைப்பட ஒருவர் கிடையாது; இனியும் எத்தனை நாட்கள்தான் முன்தோன்றிய முன்தோன்றிய என்று பழமையையே பேசிக்கொண்டிருப்பீர்கள்;

மொழிப்பற்றை விடுங்கள்; அதிகாரம் இல்லாமல் என்னதான் நீங்கள் கரடியாய்க் கத்தினாலும் கூட்டமாகக் கூச்சல் போட்டாலும் தமிழை அழிப்பவர்கள் ஓயமாட்டார்கள், தமிழ் மொழியின் அழிவு சிறிது தள்ளிப்போடப்படும் அவ்வளவுதான்;  மொழிப்பற்று இனத்தைக் காக்க உதவி செய்யுமேயன்றி விடுதலையைப் பெற்றுத் தராது; இனியும் குருடர்களாக இருக்காதீர்கள்; தமிழ்பேசும் அனைவரும் தமிழர் கிடையாது அதை உணருங்கள்; 'என்னையும் தமிழனாக ஏற்றுக்கொள் இல்லையென்றால் துரோகம் செய்வேன்' என்று சொல்லும் வந்தேறிகளை அறவே ஒதுக்குங்கள்; மொழி என்பது இனத்தின் ஒரு கூறு மட்டுமே; எவன் பிறப்பால் தமிழனோ, எவன் இனத்தால் தமிழனோ, எவன் தமிழ்மக்கள் மீது அக்கறை கொண்டவனோ அவனை மட்டுமே நம்புங்கள்; நமது பிரச்சனைகளை தமிழரிடம் மட்டுமே சொல்லுங்கள்;
மற்ற எவரிடமும் மூச்சுவிடாதீர்கள்;

என்று நாம் வல்லரசாகிறோமோ அப்போது மற்றவர்கள் நம் வரலாற்றைத் தேடித் தேடி படிப்பார்கள்; நம் மொழியை விழுந்து விழுந்து கற்பார்கள்; நமக்கு ஒரு நாடு வேண்டும்;

நமது வீரவரலாற்றை எண்ணிப்பாருங்கள்;
ஆனால்,அத்தகைய வரலாறு இல்லாத இனமாக இருந்தாலும் நாம் போராடித்தான் ஆகவேண்டும்;

தெளிவான வரலாறுகூட இல்லாத நாடோடி இனமெல்லாம் தம் சின்னஞ்சிறு தாய்நிலத்தை காக்க இனப்பற்றோடு போராடுகிறார்களே,அவர்களைப் பார்க்கும்போது உங்களுக்குக் கூசவில்லையா?

*தமிழன் என்ற பெருமைகொள்ள இன்று நம்மிடம் எதுவும் இல்லை*

ஆகவே, மற்றவர்கள் மதிக்கும் நிலையில் இல்லாவிட்டாலும் ஏறி மிதிக்கும் நிலையிலிருந்து வெளியேற முயலுங்கள்;

இனப்பற்று மட்டுமே என்றோ மாந்தநேயம் செத்துப்போன இவ்வுலகில் நம்மை வாழவைக்கும்; இனியும் பார்ப்போர் முகம் சுளிக்கும் ஈனப்பிறவிகளாக இருக்காதீர்கள்..

Sunday, 7 December 2014

ஹிந்தியும் ஆங்கிலமும்

இந்தி படிக்க
பொன்.ராதாக்ருஷ்ணன் வலியுறுத்தல்.

நேரே யூட்யூப் செல்லுங்கள்.
தற்போதைய ஹிந்திபடம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததாக ஒன்றை தரவிறக்கிப் பாருங்கள்.

உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமென்றால் படம் அப்படியே புரியும்.

நமக்கு ஆங்கிலமொழி முதலாளி என்றால்
ஹிந்தி பேசுபவனுக்கு அம்மொழி கடவுள்.
ஆங்கிலம் பேசினால் காலிலேயே விழுந்துவிடுவான்.

ஹிந்தியாவிலேயே ஹிந்தி கற்பிக்காத ஒரே மாநிலம் தமிழகம்.

முன்பு ஹிந்திபடிக்காவிட்டால் ஹிந்தியாவில் மாநிலம்தாண்டி வேலைகிடைக்காது என்றார்கள்.
இன்று ஹிந்தியன் தமிழகத்துக்கு பிழைக்கவரும் நிலை.
இப்போது ஹிந்தி படிக்காவிட்டால் அவனை வைத்து வேலைவாங்கமுடியாது என்று கூறுகிறார்கள்.

இன்று ஹிந்தியா மார்தட்டிவரும் சந்திராயனை ஏவிய குழுவில் 8ல் மூவர் தமிழர்.
தமிழன் அறிவுவேண்டும் ஆனால் அது இந்தியில் இருக்கவேண்டுமா?

தன்மொழி மீது பற்றில்லாமல் இந்திவழிக் கல்வியில் படிக்கும் ஹிந்தியன்,
வரலாறு தெரியாமல் செத்தமொழியான சமஸ்க்ருத மொழியை இன்னமும் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் ஹிந்தியன்,
மெத்தப் படித்தவன்தான் ஆங்கிலம் பேசமுடியும் என்ற அளவுக்கு ஹிந்தியை பரவவிட்ட ஹிந்தியன்,
தன்மொழி கலை இலக்கியங்களை குழிதோண்டி மூடிவிட்டு ஹிந்திப் படங்களையே கலையாக பார்க்கும் ஹிந்தியன்,
சே குவேரா என்றால் யார் என்று கேட்கும் அறிவாளி ஹிந்தியன்,
மகாபாரத ராமாயணக்கதைகளை வரலாறு என்று நம்பிவரும் ஹிந்தியன்

ஆங்கிலத்தை அண்ணாந்து பார்க்காமல் இருந்தால்தான் வியப்பு.

பிறப்பால் ஆங்கிலேயர்கள் அதாவது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட பூர்வீக இங்கிலாந்து மக்கள் தமிழர்களை விடவும் குறைவு.
அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இன்று ஆட்டிப்படைக்கிறது என்றால் அதற்கு அவர்கள் தன்தாய்மொழி மீது வைத்திருந்த பற்றே காரணம்.

நீ கடல்கடந்து போய் அவன் நாட்டில் அவன் மொழியைப் பேசினால் அவன் உன்னை மதிப்பானா?
அல்லது தன்னைப் பெருமையாக நினைப்பானா?

ஜெர்மனிக்கோ இத்தாலிக்கோ பிரான்சுக்கோ போய் ஆங்கிலத்தில் பேசுங்கள்.
அவன் ஆங்கிலம் தெரியாது என்று கூறுவான்.
கூறுவான் என்பது முக்கியமல்ல.
பெருமையாகக் கூறுவான்.
ஒன்று தெரியாது என்பதை வெட்கப்பட்டுத்தான் கூறவேண்டும்.
ஆனால் வேற்றொரு மொழியைத் தெரியாது என்பதைப் பெருமையுடன் கூறுவேண்டும்.
ஆங்கிலம் தெரியாது என்று கூறும் ஜப்பானியனும் சீனனும் இரஷ்யனும் சாதிக்காததையா ஆங்கிலம் திணிக்கப்பட்ட நம்மைப்போன்றவர்கள் சாதித்துவிட்டார்கள்?

ஹிந்தியாவுக்குள் இருக்கும்வரை ஹிந்தி தமிழை கற்பழித்துக்கொண்டுதான் இருக்கும்.

விளக்குப் பிடிப்பதை விட்டுவிட்டு விடுதலையைப் பற்றி சிந்திப்பீர் தமிழரே.

Thursday, 10 July 2014

பிறமொழியும் வளர்த்த "தமிழர்".

பிறமொழியும் வளர்த்த "தமிழர்". மலையாள மகாகவி 'உள்ளூர் பரமேசுவர ஐயர்'. கன்னட மொழியறிஞர்கள் 'கைலாசம்' மற்றும் 'மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்'. நன்றி: இளைஞர்மலர் 5-7-14 https://m.facebook.com/photo.php?fbid=464087290361596&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739