Showing posts with label கன்னடம். Show all posts
Showing posts with label கன்னடம். Show all posts

Wednesday, 10 July 2019

கர்நாடகத் தமிழர் தோற்ற வரலாறு

பதிவர்: Paari Saalan

கோகாக் அறிக்கையும், மொழிப் படுகொலையும்:
கர்நாடக தமிழர்களின் கறுப்பு ஜூலை!

செய்தி: கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் அமைப்பினர்.

இலங்கை தமிழர்களின் சரித்திரத்தைப் போன்று கர்நாடகத் தமிழர்களின் சரித்திரத்திலும் ஒரு 'ஜூலை மாதம்' ஆறாத ரணங்களாலும், வடுக்களாலும் நிரம்பி இருக்கிறது.

  34 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் 3 தலைமுறைகளை கடந்தும் கர்நாடக தமிழர்களின் வாழ்வில் கறுப்பு தினமாக நிலைத்திருக்கிறது.

நெடிய வரலாறு:-

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா, பத்ராவதி, ஹூப்ளி, கொள்ளேகால் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.

1941-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெங்களூருவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 6 ஆயிரத்து760.

இதில் தமிழர்களின் மக்கள் தொகை 1 லட்சத்து 24 ஆயிரத்து 334.
ஆனால் கன்னடர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 899 மட்டுமே!

1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பெங்களூரு மற்றும் அதனையொட்டி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பல பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
இதனால் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை ஒடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது.

1961-க்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைத்துக்காட்டும் சதிச்செயல்களில் ஈடுபட்டது.

எனவே பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் கணிசமாக வாழ்ந்த தமிழர்கள் மொழி சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டது.

தொடக்கத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெரும்பான்மையான பதவிகளை வகித்த தமிழர்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய நிலையில் இருந்தனர்.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த கன்னடர்களை முன்னேற்றுவதற்கு கர்நாடக அரசு பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது.
கன்னடர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கன்னட மொழியை வளர்க்கவும் ஆராய்வதற்கு எழுத்தாளரும், முன்னாள் துணைவேந்தருமான வி.சி.கோகாக் தலைமையில் 1980-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி குழு ஒன்றை அமைத்தது.

குரல்வளையை நெறி
த்த கோகாக் அறிக்கை:-

கோகாக் குழு கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்று ஆராய்ந்து, 1982-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
அதில்,
* கர்நாடகாவில் கன்னடத்தை ஆட்சி மொழியாக்க வெண்டும் .
* அனைத்து பள்ளிகளிலும் கன்னடத்தை கட்டாய முதல்பாடமாக்க வேண்டும்.
* மூன்றாம் மொழியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை தவிர்த்து அனைவரும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி யை படிக்க வேண்டும்.
* கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
* அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
என வலியுறுத்தியது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட குண்டுராவ் தலைமையிலான கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப் போவதாக அறிவித்தது.

கோகாக் அறிக்கையால் தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது உள்ளிட்ட மொழி சிறுபான்மையினருக்கு தாய்மொழியில் கல்வி உரிமையும், வேலை வாய்ப்பு உரிமையும் பறி போனது.
எனவே கர்நாடகாவில் உள்ள தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், உருது, துளு, குடவா உள்ளிட்ட மொழி அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மொழி சிறுபான்மையினரின் குரல்வளையை நெறிக்கும் கோகாக் அறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும் என வலியுறுத்தின.
இதனால் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் போராட்டக்காரர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன.

பெங்களூரு, கோலார் தங்கவயல் ஆகிய இடங்களில் தமிழர்களும்...
பெல்காம், ஹூப்ளி ஆகிய
இடங்களில் மராட்டியர்களும்...
பெல்லாரி, பீஜாப்பூர் ஆகிய இடங்களில் தெலுங்கர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்க கோரியும், கோகாக்கு அறிக்கையை திரும்பப்பெறக் கோரியும் தமிழ் அமைப்புகள் 1982-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெங்களூருவில் மாபெரும் பேரணியை நடத்தின.
ஆயிரக்கணக்கான தமிழர்களுடன் ஊர்வலமாக சென்ற தமிழ் அமைப்பினர் அன்றைய கர்நாடக ஆளுநர் கோவிந்த் நாராயணையும்,  முதல்வர் குண்டுராவையும் சந்தித்து மனு அளித்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்:-

தமிழ்ப்பற்று கொளுந்து விட்டெரிந்த கோலார் தங்கவயலில் கோகாக் அறிக்கையை கண்டித்து அன்றாடம் போராட்டங்கள் வெடித்தன.

1982-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் உலக தமிழ் கழகம், தன்மான தமிழர் பேரவை, திமுக உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாக கோகாக் அறிக்கையை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கோகாக் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இதனால் போலீஸாருக்கும் தமிழ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதே போல ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.

ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களும், தமிழ் அமைப்பினரும் இந்த போராட்டத்தில் குதித்ததால் கோலார் தங்கவயல் போர்க்களமாக மாறியது.

கன்னட திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழிக் கல்வி உரிமை கோரியும் மாரி குப்பம், சாம்பியன் ரீஃப், ஊரிகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் அமைப்பினர் மாபெரும் பேரணி நடத்தினர்.

கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கோலார் தங்கவயலே முடங்கியது.

தங்கவயல் தமிழர்களின் ஓயாத போராட்டத்தை ஒடுக்கும் வகையில் போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை களைத்தனர்.
சிதறி ஓடிய தமிழ் இளைஞர்களை குறி வைத்து போலீஸார் சட்டத்துக்கு விரோதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் தங்கவயலை சேர்ந்த பரமேஸ்வரன், பால்ராஜ், மோகன், உதயகுமார் ஆகிய 4 தமிழ் இளைஞர்களும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தாய்மொழி உரிமைக்காக போராடிய 500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.

பெங்களூருவில் சிவாஜிநகர், அல்சூர், ஸ்ரீராமபுரம் ஆகிய இடங்களில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதால் வன்முறை வெடித்தது.
போலீஸாரின் சரமாரி தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் நையப்புடைக்கப்பட்டார்கள்.
இந்த தாக்குதலின் போது கூட்டத்தில் கலந்த கன்னட அமைப்பினரும், நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்களும் தமிழர்களை குறி வைத்து வேட்டையாடினர்.

பெங்களூருவில் இருந்த தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள், கட்டிடடங்கள், வீடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் சொல்லொண்னா பாதிப்புகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்.

தாய்மொழி அறியா
தமிழ்ப்பிள்ளைகள் :-

கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்பினரின் திட்டமிட்ட ஒடுக்குமுறையால் தமிழர்கள் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
தாய்மொழி கல்வி உரிமையையும், வேலைவாய்ப்பு உரிமையையும் இழந்து இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டனர்.
தமிழ் மொழி வழி கல்வி நிலையங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தப்படுவதால் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

கோகாக் அறிக்கைக்கு பிறகு கடந்த 34 ஆண்டுகளில் கர்நாடக அரசு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை, போதிய வசதியின்மை உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, 75 சதவீதமான தமிழ் பள்ளிகளை மூடிவிட்டது.

தாய்மொழி கல்வியை கற்கும் வசதி இல்லாததால் லட்சக்கணக்கான தமிழர்கள் கன்னடமும், ஆங்கிலமும் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் மொழி கல்வி மறுக்கப்பட்ட தமிழர்கள் இப்போது தாய்மொழி அறியா பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட மொழிப் படுகொலை :-

குறிப்பாக கோகாக் அறிக்கை வெளியான 1982-ம் ஆண்டுக்கு  பிறகு பிறந்த 90 சதவீதமான தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது.
கர்நாடக தமிழர்களின் மத்தியில் வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழ் சுருங்கிப் போயுள்ளது.
கன்னடம் மற்றும் ஆங்கில வழிக்கல்வியை கற்ற தமிழர்களின் வீடுகளில் தற்போது தமிழில் பேசும் நிலையும் மாறிவிட்டது.
தமிழ் மொழியை அறியாததால் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் இழந்து தற்போது கன்னடர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாகவும் மாறியுள்ளனர்.

பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட சில இடங்களில் ஓரிரு தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மரணிக்கும் நிலையில் உள்ள இந்த பள்ளிகளில் மிக சொற்பமான எண்ணிக்கையிலே மாணவர்கள் பயில்கின்றனர்.
பெரும்பான்மையான தமிழ் மாணவர்கள் ஆங்கில கல்விக்கு மாறிவிட்டதால், தமிழ் வேகமாக அழிந்து வருகிறது.

கிட்டத்தட்ட ஒருகோடி தமிழர்கள் வாழும் கர்நாடகாவில் ஓரிரு லட்சம் பேருக்கும் மட்டுமே தமிழ் எழுதப்படிக்க தெரியும்.
அதில் பெரும்பான்மையானவர்கள் 60 வயதை கடந்தவர்கள்.
90 சதவீதமான இளைய தலைமுறைக்கு தாய்மொழியான தமிழே தெரியாது என்ற அவலநிலையே தொடர்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து பிழைக்க வந்த கூலித் தொழிலாளர்களால் மட்டுமே தமிழ் மொழி ஒரளவுக்கு வாழ்கிறது.

'ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களது மொழியை அழிப்பார்கள்.
அதன்பிறகு அவர்களது வரலாற்றையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிப்பார்கள்.
பின்னர் அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும்' என வரலாற்றியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள்.

கர்நாடகாவில் துப்பாக்கி தோட்டாவாலும், ஆட்சியின் அதிகார பேனா முனையாலும் தமிழ் மொழி மீது புதுவித யுத்தம் தொடங்கப்பட்டது.
கத்தியால் மக்களை கொல்லாமல், கோகாக் அறிக்கையால் தமிழர்களின் மொழி மீது மவுன படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் சொல்கிறார்கள்.

தமிழக அரசு கைக்கொடுக்குமா? :-

இந்திய அரசியலமைப்பு சட்டம் தாய்மொழி கல்வி உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்திருக்கிறது.
அதை கர்நாடக அரசும், தனியார் பள்ளிகளின் தலைமையும் தமிழர்களுக்கு தரமறுக்கின்றன.
கோகாக் அறிக்கையின் தாக்கம், உலகமயமாக்கலின் அசூர பாய்ச்சல் ஆகியவற்றின் காரணமாக மூன்று தலைமுறை தமிழர்கள் தாய்மொழியை கல்வி உரிமையை இழந்துள்ளனர்.

கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர்.
100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.

2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).

இதே நிலை நீடித்தால் ஆப்பிரிக்க தீவுகளிலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழும் மொழியை இழந்த தமிழர்களைப் போல கர்நாடக தமிழர்களும் மாறிப் போய் விடுவார்கள்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவை அனுசரிக்கும் இந்த கறுப்பு ஜூலையில், கர்நாடகாவில் சிதறிக் கிடக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து தாய்மொழி கல்விக்காக செயலாற்ற வேண்டும்.

கருத்து மாறுபாடு, சாதி வேறுபாடு, வர்க்க பேதங்களை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் கைக்கோர்க்க வேண்டும்.

கர்நாடக அரசை மட்டுமே வெறுமனே குறைகூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும்.
தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் தொடங்கி தெருக்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும், வழிப்பாட்டு தளங்களிலும், திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும், ஐ.டி. கம்பெனிகளிலும் தாய்மொழியான தமிழை சொல்லி தர வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் இளைய தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டும்.

கர்நாடகாவில் தமிழ் மீண்டும் தளைப்பதற்கும் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் தாமதமின்றி நிரூற்ற வேண்டும்!
---------
மேலும் அறிய,

http://vaettoli.blogspot.com/2017/05/blog-post_3.html?m=0
கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்

vaettoli.blogspot.com/2017/05/blog-post_64.html
கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்

vaettoli.blogspot.com/search/label/கோலார்?m=0

Sunday, 11 June 2017

மொழிகளின் முதல் நூல்

மொழிகளின் முதல் நூல்

சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.

தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.

கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது.

Monday, 13 October 2014

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலைகிடைக்குமா?

1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26  தமிழர்கள் இருந்தனர்;
கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்படவேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.
கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.
வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்துகொண்டர்.

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.
ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டுசென்றது.
இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.
தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.
அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.
பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.
தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.
ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப்போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டுவருகின்றனர்.
அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.
(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).
அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,
வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்.

( கன்னடன் சுட்டுக் கொன்ற தங்கத் தமிழர்
https://m.facebook.com/photo.php?fbid=412586072178385&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
வீரப்பனார் பிடித்த கன்னடக் குடுமி
https://m.facebook.com/photo.php?fbid=448921765211482&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 ).

Thursday, 10 July 2014

பிறமொழியும் வளர்த்த "தமிழர்".

பிறமொழியும் வளர்த்த "தமிழர்". மலையாள மகாகவி 'உள்ளூர் பரமேசுவர ஐயர்'. கன்னட மொழியறிஞர்கள் 'கைலாசம்' மற்றும் 'மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்'. நன்றி: இளைஞர்மலர் 5-7-14 https://m.facebook.com/photo.php?fbid=464087290361596&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739