Showing posts with label கோலார். Show all posts
Showing posts with label கோலார். Show all posts

Wednesday, 29 January 2020

காத்திருக்கும் தங்கம் - 1

காத்திருக்கும் தங்கம் -1

-------
காலம்: கி.பி. 1790

 "நமது 33 வது ரெஜிமண்ட் திப்பு சுல்தானோடு போரிட நேரும் என்று நினைக்கிறாயா?"

 "ஆம். நிச்சயம். அதோ அங்கே பார்.
இவர்கள்தான் அதற்கு காரணம்"

 "என்ன?! ஆற்று மணலை அள்ளி வாணாலியில் போட்டு சலித்துக் கொண்டிருக்கும் இவர்களா இதற்கு காரணம்?!"

 "ஆம் இவர்களுக்கு அரிப்பறையர் என்று பெயர்.
 இவர்கள் ஆற்று மணலைப் பார்த்தே அதில் தங்கத் துகள்கள் இருக்குமா என்று கணித்து அதை சலித்து எடுக்கும் திறமை உள்ளவர்கள்.
 இவர்களைப் பார்த்துதான் நம் தளபதி இந்த பகுதியில் தங்கம் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இங்கிலாத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
 கட்டாயம் திப்புவை வீழ்த்தி தங்கத்தை தோண்டி எடுக்காமல் விடமாட்டார்கள்"

--------------
காலம்: கி.பி. 1802

 "இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு திப்பு சுல்தானை தோற்கடித்தோம்.
 மகாராஜா நீங்கள் ராஜாவாகவே இருக்க வேண்டுமானால் கோலார் தங்க வயல் எங்களுக்கு வேண்டும்.
 உங்களுக்கு 5% கமிசன் கொடுத்து விடுகிறோம்"

 "சரி சரி 7% கொடுத்துவிடலாம்.
நாங்கள் ஆங்கிலேயர்.
வாக்கு தவறமாட்டோம்.
 உங்கள் மைசூர் ராஜ்யத்தின் மொத்த வருவாயில் இது மூன்றில் ஒரு பங்காக இருக்கும்"

-----------
காலம்: 1860

 "கிடைத்துவிட்டது! ஆகா கிடைத்துவிட்டது"

 "என்ன கேப்டன் பிளம்மர் என்ன கிடைத்துவிட்டது"

 "மைசூர் சுரங்கத்திற்கு மேற்கே 173 அடி ஆழத்தில் தங்க மலையே இருக்கிறது.
 ஏற்கனவே சோழர்கள் காலத்தில் வெட்டி எடுத்த தடத்தை வைத்து கண்டுபிடித்து விட்டேன்"

 "அப்படியா?! அது என்ன தடம்"

 "ஆம். வட ஆற்காடு மாவட்டத்தின் ஜவ்வாது மலை மீது இருந்து பார்த்தேன்.
 கோலாரிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு பாதை மலைகளுக்கு நடுவே தமிழ் பகுதி வரை வருவது தெரிகிறது"

 "எனதருமை பிளம்மர்!
 உன் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
 இனி இந்த தற்காலிகச் சுரங்கம் உலகமே அறியும் இடமாக ஆகப்போகிறது"

--------
காலம்: கி.பி. 1880

 "பூமிக்கடியில இந்த தங்க மலைத் தொடர் (lode) வடக்கு நோக்கி நீள்கிறது.
 வெட்டி எடுத்தால் உலகத்தின் மொத்த தங்க தேவையையே பூர்த்தி செய்யலாம்"

 "நல்லது மிஸ்டர் ஆர்.பி.பூட்!
 நம் நாட்டிலிருந்து வல்லுநர்களை வரவழைத்து முழுவீச்சில் சுரங்கம் தோண்டிவிட வேண்டியதுதான்.
 நீ என்ன சொல்கிறார் ஹெய்டன்?!"

 "நாம் முதலில் மதராஸ் மாகாணத்தில் இருந்து தமிழர்களை வரவழைக்கலாம்.
 அவர்கள்தான் உலோக தொழில்நுட்பத்தில் உலகிற்கே முன்னோடி.
 இப்போது கடும் பஞ்சம் நிலவுவதால் குறைந்த கூலிக்கு அழைத்து வரலாம்.
 இங்கே ஏற்கனவே கால்வாசி தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
 குறிப்பாக சேலத்தில் கட்டிப் பறையர் என்றொரு சாதி உண்டு.
அவர்கள் செய்த தனித்துவமான எஃகு மூலம் செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாளைத்தான் அலெக்சாண்டர் வைத்திருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?!"

---------
 காலம்: கி.பி. 1905

 "இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சார உற்பத்தி செய்த சாதனைக்குப் பிறகு
 இந்த ஆண்டு நாம் 27 டன் தங்கத்தை எடுத்துள்ளோம்.
 இப்போது கோலார் உலகிலேயே பெரிய தங்கச் சுரங்கம் என்ற பெயர்பெற்றுள்ளது.
 இது பின்னாட்களில் மாறலாம்.
 ஆனால் ஓராண்டில் இவ்வளவு டன் தங்கம் வேறு எங்கும் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறவேண்டும்.
 நமது கம்பனியான ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் அதன் பொற்காலத்தில் இருக்கிறது"

 "இனி நம் திட்டங்கள் என்ன?"

 "பத்தாண்டுகள் முன்பு மைசூர் அரசிடம் பேசி சுரங்கங்களுக்கு தனி இரயில் பாதை போட்டு மெட்ராஸ் பெங்களூர் ரயில் பாதையுடன் இணைத்தோம்.
 அதிலிருந்து நமக்கு அமோக வளர்ச்சிதான்!
 இதுவரை இங்கே ஆண்கள் மட்டும் இருந்த காரணாத்தால் கிளப், விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு திடல் என கட்டினோம்.
 ஆனால் தற்போது 100 ஆங்கிலேயக் குடும்பங்கள் குடியேறியுள்ளன.
 எனவே நமது பிள்ளைகளுக்கு ஒரு சிறிய ஆங்கில பள்ளியும்
 வேலைசெய்யும் தொழிலாளர்களுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டவுள்ளோம்"

 "இது எத்தனை ஆண்டுகள் தொடரும்?!"

 "கணிப்புப்படி இன்னும் 50 ஆண்டுகள் வரை இதில் தங்கம் கிடைக்கும்.
 ஆனாலும் விரிவாக்க ஆய்வுகள் நடந்துவருகின்றன."

------

 காலம்: 1920

 "கோலாரின் மக்கட்தொகை ஒரு லட்சத்தை நெருங்கவுள்ளது.
 இருபத்தி நாலாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
 கோலார் சுரங்கம் 1200 அடி ஆழம் வரை சென்றுவிட்டது.
 இதுவே உலகின் முதலாவது ஆழமான சுரங்கம்.
 உலகப் போர் காரணமாக தங்கத்தின் விலை மேன்மேலும் கூட்டிக்கொண்டே போகுமாம்.
 இதெல்லாம் தெரியுமா உனக்கு?!"

 "இதில் என்ன பெருமை முருகேசா?!
 இங்கே 400 ஆங்கிலேயர்கள் 600 ஆங்கிலோ இந்தியன்கள் பதவியில் இருக்கிறார்கள்.
 இதுபோக 23000 பேர் தொழிலாளர்கள்.
 பெரும்பாலும் தமிழர்கள்.
 அதிலும் குறிப்பாக நம் போன்ற பறையர்கள்.
 நமக்கு மிஞ்சியது என்ன?!
கூரைவேய்ந்த லைன் வீடுகளில்தான் வசிக்கிறோம்.
 15 மணிநேரம் வேலை.
நாட்டிலேயே முதன்முதலாக மின்சாரம் இங்கே வந்தது.
 30 ஆண்டுகள் தாண்டியும் நம் வீடுகளில் இன்னமும் மின்சாரம் வரவில்லையே!"

-------
காலம்: 1953

 "கோலாரில் காலம் முடிந்துவிட்டது.
முதன்முதலாக உரிகையம் சுரங்கத்தை மூடிவிட்டனர்.
 இனி படிப்படியாக எல்லாவற்றையும் மூடிவிடுவார்களாம்.
 டெய்லர் கம்பனி வெளியேறவுள்ளது.
 இந்த சுரங்கத்தை நாட்டுடைமை ஆக்கி அரசே எடுத்துக் கொள்ளுமாம்"

 "ஆம். இந்திய அரசு எடுத்துக் கொள்ளுமாம்.
 ஆங்கிலேயர் மைசூர் அரசுக்கு கமிசனாவது கொடுத்தனர்.
 இனி கர்நாடக அரசுக்கு சல்லிக்காசு கொடுக்காது மத்திய அரசு என்று கூறுகிறார்கள்".

 "என்றால் மத்திய அரசும் மாநில அரசும் சுரங்கத்தை நம்பி வாழும் ஒரு லட்சம் பேரை கதியில்லாமல் ஆக்கப் போகிறார்கள் என்று சொல்"

--------

காலம்: 1983

 "கன்னடத்தை கட்டாயமாக்கும் கோகாக் அறிக்கைக்கு கோலார் தமிழர்கள் எதிர்ப்பா?!
 
 "ஓகோ! அவ்வளவு திமிராகி விட்டதா?!"

 "அதற்கு தக்க பாடம் கற்றுக்கொண்டனர்.
 தமிழில் கல்வி வேண்டி நடந்த போராடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரைக் கொலை செய்தாயிற்று"

"ஹா! ஹா! ஹா!"

 "மாரிக்குப்பம் பகுதியில் தமிழர்கள் ரயில் நிலையத்தையும் அஞ்சல் அலுவலகத்தையும் கொளுத்திவிட்டனர்"

 "என்ன?!"

"இனி அவர்கள் அஞ்சலகமே இல்லாமல் அல்லாட வேண்டியதுதான்"

 "தங்கவயலை விரைவில் மூடிவிட்டால் இவர்கள் கொட்டம் அடங்கிவிடும்"

-------------
 காலம்: 1989

 " என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் நடராஜன் ஐயர்?!
கோலாரில் ஒரு கிராம் தங்கம் எடுக்க 668 ரூபாய் ஆகிறதா?!
பம்பாயில் ஒரு கிராம் தங்கமே 350 ரூபாய்தானே?!"

 "ஆம். 1960 இல் உற்பத்தி செலவு கிராமுக்கு 12 ரூபாய்தான்.
 1972 இல் 33 ரூபாய்.
 தற்போது தங்கம் கிடைப்பது சிக்கலாகவும் அப்படியே கிடைத்தாலும் தரம் குறைந்ததாகவும் இருக்கிறது.
 அதாவது நாம் வெட்டிவரும் தங்கமலை ஆழத்தை நோக்கி செல்கிறது"

 "என்றால் இதை மூடிவிடலாமா?!"

 "மூடிவிடலாம்தான். ஆனால் இதை நம்பியிருக்கும் பத்தாயிரம் தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன பதில் சொல்வது?
 நூறு ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவரும் அவர்களை எங்கே போகச் சொல்வது?
 ஆழ்சுரங்கம் வெட்டுதல் மற்றும் குடைந்து வழி அமைத்தல் ஆகியவற்றில் இவர்கள் திறமை வேறு எவருக்கும் வராது"

 "அதெல்லாம் கவலை இல்லை.
அவர்கள் வந்தேறிகள்.
 இதை நடத்தி லாபம் வந்தாலும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
 அதனால்தான் இவர்களுக்கு மாநில மின்துறை கூட சலுகை விலையில் மின்சாரம் வழங்குவது கிடையாது.
 தொழிற்சங்க தலைவரை கூப்பிட்டு இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று எழுதித் தரச்சொல்லி
 ஏதோ பெயருக்கு மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தி சிலபேருக்கு மாற்று வேலை வழங்கிவிட்டு அப்படியே கைகழுவி விடலாம்"

 "ஐயா! என்னால் அப்படி முறைகேடாக செயல்பட முடியாது"

 "நீங்கள் செய்துதான் தீரவேண்டும்"

 "என்னை வற்புறுத்தினால் எனது சுரங்க தொழில்நுட்ப இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வேன்"

 "நீங்கள் இப்படி பலமுறை மிரட்டி காரியத்தை சாதிக்கிறீர்கள்.
 உங்களைப் போன்ற சிலர்தான் எப்போதோ மூடியிருக்க வேண்டிய தங்கவயலை மூடவிடாமல் பெரும் தடையாக இருக்கிறீர்கள்.
 ஓ! நீங்களும் அந்த இனம்தானே!?"

 "ஐயா நான் நியாயத்தைப் பேசுகிறேன்.
சென்ற 4 ஆண்டுகளாக நான் நடத்திய ஆய்வுப்படி இதன் அருகிலேயே இன்னொரு தங்க மலை புதைந்து இருக்கிறது.
 அங்கே சுரங்கம் தோண்டினால் 6000 பேருக்காவது வேலை கொடுக்கலாம்.
 15 ஆண்டுகள் மூடுவது பற்றி யோசிக்க வேண்டாம்"

 "சரி! இது இறுதி வாய்ப்பு! தங்கம் இருந்தால் மட்டும் போதாது குறைந்த செலவில் எடுக்க முடியுமா என்பதுதான் முக்கியம்"

----------
காலம்: 1990
இடம்: அசோகா விடுதி, பெங்களூர்.

 "கனிம வளத்துறை செயலர் பி.கே. லாஹிரி அவர்களே!
 கோலார் சுரங்க தலைவர் ஐ.எம். ஆகா அவர்களே!
 மேலாண்மை இயக்குநர் பி.ஏ.கே. ஷெட்டிகர் அவர்களே!
 மற்றும் அதிகாரிகளே!
 நாம் இங்கு கூடியிருப்பது தங்கவயல் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத்தான்"

 "அது பற்றி மேற்கொண்டு விவாதிக்க என்ன இருக்கிறது மிஸ்டர் ஐயர்?!"

 "நாம் வெட்டியெடுத்து தீர்ந்துபோன சாம்பியன் படிவத் தொடர்க்கு கீழே 3000 அடி ஆழத்தில் 200 கிலோ தங்கம் தரவல்ல மேலும் ஒரு தங்க மலை இருப்பது பற்றி நான் கூறியபோது ஆழம் அதிகம் என்று காரணம் காட்டி  நீங்கள் மறுத்துவிட்டீர்கள்.
அதனால் தற்போது ஆழம் குறைந்த இடத்தில் மேலும் இரண்டு தங்க படிவங்களை நான் கண்டறிந்துள்ளேன்.
 இங்கே Shallow depth mining செய்யலாம்"

 "குறைந்த ஆழம் என்றால் செலவு குறைவு எனவே யோசிக்கலாம்.
கூறுங்கள் பார்ப்போம்"

 "மைசூர் சுரங்கப் பகுதியில் இருந்து நந்திதுர்க்க சுரங்கப் பகுதிவரை குறைந்த ஆழத்தில் தங்க படிவத்தொடரின் கிளைகள் உள்ளன"

 "குறைந்த செலவு என்கிற நமது கொள்கை அதற்கு பொருந்துமா?!"

 "இதற்குப் பொருத்தமாக இருப்பது மைசூர் சுரங்கத்தில் உள்ள பல தங்கப் படிவத் தொடர்களில் ஒன்றான பிரவுன் படிவத்தொடர்.
 இது அங்கு புதைந்துள்ள தங்கமலையின் அடிப்பரப்பு வரை செல்கிறது.
 diamond drilling செய்து ஆராய்ந்தால் இதை உறுதிசெய்யலாம்"

 "சரி இரண்டாவது?"

 "இரண்டாவதுதான் மிக முக்கியமானது.
தற்போது வெட்டியெடுத்த அதே தங்கமலைத் தொடருக்கு இணையாக 400 அடி ஆழத்தில் தங்கம் இருக்கிறது.
 இது 5000 அடி வரை நீள்கிறது.
இங்கே ஒரு டன் தங்க கனிமம் எடுத்தால் அதில் குறைந்தபட்சம் 10 கிராம் முதல் அதிகபட்சம் 35 கிராம் வரை தங்கம் கிடைக்கும்.
 சுருக்கமாகக் கூறினால் 1934 இல் கோலார் இருந்த அதே நிலையை எட்டலாம்"

 "முதல் இடத்திற்கு அருகிலேயே என்றால் இதுபற்றி முதலில் யோசிக்கலாம்.
 எங்கே என்று தெளிவாக சொல்லமுடியுமா?"

 "McTaggart's Inclined shaft இருக்குமிடம் தொடங்கி அதாவது பாரத மண்வாரித் தொழிலகம் அமையப்போகிற இடத்தில் இருந்து கோல்கொண்டா Shaft இருக்கும் இடம்வரை ஏற்கனவே வெட்டியெடுத்த சாம்பியன் தங்கப்படிவ ஓட்டத்திற்கு இணையான போக்கில் இது இருக்கிறது.
 இதை வெட்டியெடுத்தால் 6000 பேருக்கு 15 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும்"

 "வேலைவாய்ப்பு பற்றி பிறகு பேசலாம்.
 இவை இரண்டுதானா?! மேலும் உண்டா?!"

 "குறைந்த ஆழத்தில் என்றால் மூன்றாவது ஒன்று உண்டு.
 ஆனால் அதை முழுமையாக ஆராயவில்லை.
 நந்திதுர்க்க சுரங்கத்தின் தலைப்பகுதி Oriental Lode எனும் படிவத்தொடர்.
 இதன் அடிப்பரப்பு கிளை அதாவது foot- wall தான் அந்த மூன்றாவது இடம்"

 "சரி. மிஸ்டர் லாகிரி!
இவர் கூறுவதை செய்யலாமா?"

 "அது வந்து...
எனக்கு இவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை"

 "என்னது புரியவில்லையா?! நியாயப்படி நீங்கள்தான் இந்த இடத்தில் நின்று இதையெல்லாம் விளக்கவேண்டும்!
 மிஸ்டர் ஐயர் இதை எழுத்துப் பூர்வமாக விரிவாக சமர்ப்பிக்க முடியுமா?"

 "ஏன் அதை ஒரு வல்லுநர் குழு நியமித்து ஆராயப் போகிறீர்களா?"

 "சரியாகச் சொன்னீர்கள்"

"ஆக இங்கிருக்கும் யாருக்குமே நான் சொன்னது புரியவில்லை"

-------
(தொடரும்)









Wednesday, 10 July 2019

கர்நாடகத் தமிழர் தோற்ற வரலாறு

பதிவர்: Paari Saalan

கோகாக் அறிக்கையும், மொழிப் படுகொலையும்:
கர்நாடக தமிழர்களின் கறுப்பு ஜூலை!

செய்தி: கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் அமைப்பினர்.

இலங்கை தமிழர்களின் சரித்திரத்தைப் போன்று கர்நாடகத் தமிழர்களின் சரித்திரத்திலும் ஒரு 'ஜூலை மாதம்' ஆறாத ரணங்களாலும், வடுக்களாலும் நிரம்பி இருக்கிறது.

  34 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் 3 தலைமுறைகளை கடந்தும் கர்நாடக தமிழர்களின் வாழ்வில் கறுப்பு தினமாக நிலைத்திருக்கிறது.

நெடிய வரலாறு:-

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா, பத்ராவதி, ஹூப்ளி, கொள்ளேகால் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.

1941-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெங்களூருவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 6 ஆயிரத்து760.

இதில் தமிழர்களின் மக்கள் தொகை 1 லட்சத்து 24 ஆயிரத்து 334.
ஆனால் கன்னடர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 899 மட்டுமே!

1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பெங்களூரு மற்றும் அதனையொட்டி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பல பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
இதனால் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை ஒடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது.

1961-க்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைத்துக்காட்டும் சதிச்செயல்களில் ஈடுபட்டது.

எனவே பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் கணிசமாக வாழ்ந்த தமிழர்கள் மொழி சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டது.

தொடக்கத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெரும்பான்மையான பதவிகளை வகித்த தமிழர்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய நிலையில் இருந்தனர்.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த கன்னடர்களை முன்னேற்றுவதற்கு கர்நாடக அரசு பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது.
கன்னடர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கன்னட மொழியை வளர்க்கவும் ஆராய்வதற்கு எழுத்தாளரும், முன்னாள் துணைவேந்தருமான வி.சி.கோகாக் தலைமையில் 1980-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி குழு ஒன்றை அமைத்தது.

குரல்வளையை நெறி
த்த கோகாக் அறிக்கை:-

கோகாக் குழு கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்று ஆராய்ந்து, 1982-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
அதில்,
* கர்நாடகாவில் கன்னடத்தை ஆட்சி மொழியாக்க வெண்டும் .
* அனைத்து பள்ளிகளிலும் கன்னடத்தை கட்டாய முதல்பாடமாக்க வேண்டும்.
* மூன்றாம் மொழியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை தவிர்த்து அனைவரும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி யை படிக்க வேண்டும்.
* கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
* அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
என வலியுறுத்தியது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட குண்டுராவ் தலைமையிலான கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப் போவதாக அறிவித்தது.

கோகாக் அறிக்கையால் தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது உள்ளிட்ட மொழி சிறுபான்மையினருக்கு தாய்மொழியில் கல்வி உரிமையும், வேலை வாய்ப்பு உரிமையும் பறி போனது.
எனவே கர்நாடகாவில் உள்ள தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், உருது, துளு, குடவா உள்ளிட்ட மொழி அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மொழி சிறுபான்மையினரின் குரல்வளையை நெறிக்கும் கோகாக் அறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும் என வலியுறுத்தின.
இதனால் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் போராட்டக்காரர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன.

பெங்களூரு, கோலார் தங்கவயல் ஆகிய இடங்களில் தமிழர்களும்...
பெல்காம், ஹூப்ளி ஆகிய
இடங்களில் மராட்டியர்களும்...
பெல்லாரி, பீஜாப்பூர் ஆகிய இடங்களில் தெலுங்கர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்க கோரியும், கோகாக்கு அறிக்கையை திரும்பப்பெறக் கோரியும் தமிழ் அமைப்புகள் 1982-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெங்களூருவில் மாபெரும் பேரணியை நடத்தின.
ஆயிரக்கணக்கான தமிழர்களுடன் ஊர்வலமாக சென்ற தமிழ் அமைப்பினர் அன்றைய கர்நாடக ஆளுநர் கோவிந்த் நாராயணையும்,  முதல்வர் குண்டுராவையும் சந்தித்து மனு அளித்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்:-

தமிழ்ப்பற்று கொளுந்து விட்டெரிந்த கோலார் தங்கவயலில் கோகாக் அறிக்கையை கண்டித்து அன்றாடம் போராட்டங்கள் வெடித்தன.

1982-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் உலக தமிழ் கழகம், தன்மான தமிழர் பேரவை, திமுக உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாக கோகாக் அறிக்கையை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கோகாக் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இதனால் போலீஸாருக்கும் தமிழ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதே போல ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.

ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களும், தமிழ் அமைப்பினரும் இந்த போராட்டத்தில் குதித்ததால் கோலார் தங்கவயல் போர்க்களமாக மாறியது.

கன்னட திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழிக் கல்வி உரிமை கோரியும் மாரி குப்பம், சாம்பியன் ரீஃப், ஊரிகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் அமைப்பினர் மாபெரும் பேரணி நடத்தினர்.

கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கோலார் தங்கவயலே முடங்கியது.

தங்கவயல் தமிழர்களின் ஓயாத போராட்டத்தை ஒடுக்கும் வகையில் போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை களைத்தனர்.
சிதறி ஓடிய தமிழ் இளைஞர்களை குறி வைத்து போலீஸார் சட்டத்துக்கு விரோதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் தங்கவயலை சேர்ந்த பரமேஸ்வரன், பால்ராஜ், மோகன், உதயகுமார் ஆகிய 4 தமிழ் இளைஞர்களும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தாய்மொழி உரிமைக்காக போராடிய 500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.

பெங்களூருவில் சிவாஜிநகர், அல்சூர், ஸ்ரீராமபுரம் ஆகிய இடங்களில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதால் வன்முறை வெடித்தது.
போலீஸாரின் சரமாரி தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் நையப்புடைக்கப்பட்டார்கள்.
இந்த தாக்குதலின் போது கூட்டத்தில் கலந்த கன்னட அமைப்பினரும், நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்களும் தமிழர்களை குறி வைத்து வேட்டையாடினர்.

பெங்களூருவில் இருந்த தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள், கட்டிடடங்கள், வீடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் சொல்லொண்னா பாதிப்புகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்.

தாய்மொழி அறியா
தமிழ்ப்பிள்ளைகள் :-

கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்பினரின் திட்டமிட்ட ஒடுக்குமுறையால் தமிழர்கள் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
தாய்மொழி கல்வி உரிமையையும், வேலைவாய்ப்பு உரிமையையும் இழந்து இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டனர்.
தமிழ் மொழி வழி கல்வி நிலையங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தப்படுவதால் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

கோகாக் அறிக்கைக்கு பிறகு கடந்த 34 ஆண்டுகளில் கர்நாடக அரசு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை, போதிய வசதியின்மை உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, 75 சதவீதமான தமிழ் பள்ளிகளை மூடிவிட்டது.

தாய்மொழி கல்வியை கற்கும் வசதி இல்லாததால் லட்சக்கணக்கான தமிழர்கள் கன்னடமும், ஆங்கிலமும் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் மொழி கல்வி மறுக்கப்பட்ட தமிழர்கள் இப்போது தாய்மொழி அறியா பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட மொழிப் படுகொலை :-

குறிப்பாக கோகாக் அறிக்கை வெளியான 1982-ம் ஆண்டுக்கு  பிறகு பிறந்த 90 சதவீதமான தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது.
கர்நாடக தமிழர்களின் மத்தியில் வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழ் சுருங்கிப் போயுள்ளது.
கன்னடம் மற்றும் ஆங்கில வழிக்கல்வியை கற்ற தமிழர்களின் வீடுகளில் தற்போது தமிழில் பேசும் நிலையும் மாறிவிட்டது.
தமிழ் மொழியை அறியாததால் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் இழந்து தற்போது கன்னடர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாகவும் மாறியுள்ளனர்.

பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட சில இடங்களில் ஓரிரு தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மரணிக்கும் நிலையில் உள்ள இந்த பள்ளிகளில் மிக சொற்பமான எண்ணிக்கையிலே மாணவர்கள் பயில்கின்றனர்.
பெரும்பான்மையான தமிழ் மாணவர்கள் ஆங்கில கல்விக்கு மாறிவிட்டதால், தமிழ் வேகமாக அழிந்து வருகிறது.

கிட்டத்தட்ட ஒருகோடி தமிழர்கள் வாழும் கர்நாடகாவில் ஓரிரு லட்சம் பேருக்கும் மட்டுமே தமிழ் எழுதப்படிக்க தெரியும்.
அதில் பெரும்பான்மையானவர்கள் 60 வயதை கடந்தவர்கள்.
90 சதவீதமான இளைய தலைமுறைக்கு தாய்மொழியான தமிழே தெரியாது என்ற அவலநிலையே தொடர்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து பிழைக்க வந்த கூலித் தொழிலாளர்களால் மட்டுமே தமிழ் மொழி ஒரளவுக்கு வாழ்கிறது.

'ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களது மொழியை அழிப்பார்கள்.
அதன்பிறகு அவர்களது வரலாற்றையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிப்பார்கள்.
பின்னர் அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும்' என வரலாற்றியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள்.

கர்நாடகாவில் துப்பாக்கி தோட்டாவாலும், ஆட்சியின் அதிகார பேனா முனையாலும் தமிழ் மொழி மீது புதுவித யுத்தம் தொடங்கப்பட்டது.
கத்தியால் மக்களை கொல்லாமல், கோகாக் அறிக்கையால் தமிழர்களின் மொழி மீது மவுன படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் சொல்கிறார்கள்.

தமிழக அரசு கைக்கொடுக்குமா? :-

இந்திய அரசியலமைப்பு சட்டம் தாய்மொழி கல்வி உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்திருக்கிறது.
அதை கர்நாடக அரசும், தனியார் பள்ளிகளின் தலைமையும் தமிழர்களுக்கு தரமறுக்கின்றன.
கோகாக் அறிக்கையின் தாக்கம், உலகமயமாக்கலின் அசூர பாய்ச்சல் ஆகியவற்றின் காரணமாக மூன்று தலைமுறை தமிழர்கள் தாய்மொழியை கல்வி உரிமையை இழந்துள்ளனர்.

கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர்.
100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.

2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).

இதே நிலை நீடித்தால் ஆப்பிரிக்க தீவுகளிலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழும் மொழியை இழந்த தமிழர்களைப் போல கர்நாடக தமிழர்களும் மாறிப் போய் விடுவார்கள்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவை அனுசரிக்கும் இந்த கறுப்பு ஜூலையில், கர்நாடகாவில் சிதறிக் கிடக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து தாய்மொழி கல்விக்காக செயலாற்ற வேண்டும்.

கருத்து மாறுபாடு, சாதி வேறுபாடு, வர்க்க பேதங்களை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் கைக்கோர்க்க வேண்டும்.

கர்நாடக அரசை மட்டுமே வெறுமனே குறைகூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும்.
தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் தொடங்கி தெருக்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும், வழிப்பாட்டு தளங்களிலும், திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும், ஐ.டி. கம்பெனிகளிலும் தாய்மொழியான தமிழை சொல்லி தர வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் இளைய தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டும்.

கர்நாடகாவில் தமிழ் மீண்டும் தளைப்பதற்கும் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் தாமதமின்றி நிரூற்ற வேண்டும்!
---------
மேலும் அறிய,

http://vaettoli.blogspot.com/2017/05/blog-post_3.html?m=0
கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்

vaettoli.blogspot.com/2017/05/blog-post_64.html
கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்

vaettoli.blogspot.com/search/label/கோலார்?m=0

Sunday, 24 September 2017

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)

தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார்,பெங்களூரூ,மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer

நன்றி: சிவ் விஸ்வநாதன்.

Sunday, 17 September 2017

பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்)

தவறுக்கு வருந்துகிறேன்.

8 May 2017 அன்று
பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!
எனும் பதிவு இட்டிருந்தேன்.

அதில் Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row. தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.

பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம், கோலார் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது. 

ஆனால் மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.

படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.

கீழே உள்ளதே சரியான வரைபடம்.

பழுப்பு நிறமிட்ட பகுதிகளின் குடியிருப்பு நிலம் தமிழருக்கு சொந்தமாக இருந்தது.
(Residents were tamils)

Monday, 8 May 2017

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே

படத்தில் 1901 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பு விபரம் காட்டப்பட்டுள்ளது.

இதில் மைசூர் நகரம், பெங்களூர் நகரம், பெங்களூர் மாவட்டம்,   கோலார் தங்கவயல் நகரம், கோலார் மாவட்டம், ஆகிய பகுதிகளில் தமிழர் குடியிருப்புகளே (Residence) கன்னடரை விட அதிகம்.

ஆனால் பிறகு குடிவந்த வந்தேறிகளால் மக்கட்தொகையில் தமிழர்கள் பின்தங்கிவிட்டனர்.
ஆனால் நிலம் தமிழர்கள் கையில்தான் இருந்தது.

அட்டவணையில் உள்ள விபரம் (பத்தாயிரத்தால் வகுக்கப்பட்டது)
கீழே,

மைசூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 371 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 97 ×10,000

பெங்களூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 841 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 54 ×10,000

பெங்களூர் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2365 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 1238 ×10,000

கோலார் தங்கவயல் (நகரம்) :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 1252 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 18 ×10,000

கோலார் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2341 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 146 ×10,000

மேற்கண்ட பகுதிகள் வரைபடத்தில் பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

சான்று : Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row.

கீழே ஒட்டுமொத்த மக்கட்தொகை அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கோலார் தங்கவயலில் மட்டுமே தமிழர் அதிகம் உள்ளனர்.

(கன்னடர், தமிழர் தவிர பிற இனங்களுக்கு இந்த பகுதியில் உரிமை இல்லை என்பதால் அவர்களை ஒப்பிடவில்லை)

---------------

17.09.2017

தவறுக்கு வருந்துகிறேன்.

மேற்கண்ட தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.

பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது. 

மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.

படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.

விரிவாக அறிய 

search பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்) 

Wednesday, 3 May 2017

கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்

கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்

மறைக்கப்பட்ட தமிழினக் கொலைகளில் ஒன்று

1982 சூலை மாதம் கர்நாடகாவில் உள்ள தமிழர் தாய்நிலமான கோலாரில் தமிழ்மொழிக் கல்விக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழர், காணாமல் அடிக்கப்பட்ட 15 தமிழர்.

அறிக்கை: கர்நாடகத்தில் மொழிக் கொள்கை, கன்னடர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்த மறைந்த குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு 1982-ம் ஆண்டு அமல்படுத்தியது.

இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது.

இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்க உரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில் இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்தது.
அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்க முயன்றது.
போராட்டம் நடத்திய தமிழர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.
காவல் துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக்கொண்டு உரிமைக்காக தமிழர்கள் தொடர்ந்து போராடினர்.
இதனால் குண்டுராவ் அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அடக்க உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன் ஆகியோர் குண்டுபாய்ந்து இறந்தனர்.
பலர் காயம் அடைந்தனர்.
போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15 பேர்.

நன்றி:-
http://kgftamils-mani.blogspot.in/2008/10/blog-post_9351.html?m=1

http://naamtamilar.org/கட்சி-செய்திகள்/பெரும்-எழுட்சியுடன்-நடை%E0%AE-3

(2 பிப்ரவரி 2014 அன்று முகநூல் பதிவாக இட்டது.)

Tuesday, 2 May 2017

கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்

கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்

கோலார் மாவட்டத்தில் கன்னடர் பெரும்பான்மையாக இருந்தனர்.

ஆனால் அதற்கு அருகே இருக்கும் தங்கச் சுரங்கமான கோலார் தங்க வயல் பகுதி தமிழர் பெரும்பான்மை பகுதியாகவே இருந்தது. இருக்கிறது.


தமிழர் உழைப்பில் தங்கம் அனைத்தும் எடுக்கப்பட்டு கன்னடரும் ஹிந்தியரும் பங்குபோட்டுக்கொண்டனர்.


1982 ல் தமிழ் மொழியுரிமைக்காகப் போராடியதால் இப்பகுதியில் கன்னட அரசின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கைக்கு 4 தமிழர்கள் பலியாயினர்.

படங்களுக்கு நன்றி : Asa Sundar

Saturday, 23 April 2016

கன்னடன் இதுவரை தமிழனுக்கு செய்த கொடுமைகள்

கன்னடன் இதுவரை தமிழனுக்கு செய்த கொடுமைகள்

* தமிழகத்திற்கு சேரவேண்டிய, ஈழம் போல இருமடங்கு பெரிய (42,250 ச.கி.மீ பரப்பளவு) நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளான்.
இது கர்நாடகத்தில் கால்வாசி ஆகும்.
மைசூர், பெங்களூர், மாண்டியா, கோலார், சாம்ராஜ் நகர் போன்றவை அடங்கும்

*காவிரி நீரை தேக்கிவைத்து வீணாக்கி தமிழக விவசாயம் 40% அழிய முக்கிய காரணமானான்

*1982 தமிழை பாடத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்து போராடிய 4 கோலார் தமிழர்களைச் சுட்டுக் கொன்றான்
மேலும் 15 பேரை பிடித்துக் கொண்டுபோய் கொன்று காணாமல் ஆக்கினான்

* 1991 காவிரிப் படுகொலை நடத்தி பல தமிழர்களைக் கொன்று ஒரு லட்சம் பேரை அகதியாக தமிழகத்திற்கு விரட்டினான்

* ஆங்கிலேயன் காலத்திலேயே மைசூர் சமஸ்தானம் மூலமாக பாலாறை சட்டத்திற்குப் புறம்பாக மறித்து பாதி நீரை எடுத்துக்கொண்டு மீதியையே தமிழகத்திற்கு விட்டான்.
இவனை பின்பற்றியே தெலுங்கன் மீதி தண்ணீரையும் மறித்து பாலாற்றின் தண்ணீரே வரவிடாமல் தடுத்தான்.

*தமிழகத்தின் சொத்தான கோலார் தங்கச் சுரங்கம் முழுவதையும் தோண்டி தங்கம் அனைத்தையும் எடுத்துக்கொண்டான்.

* வீரப்பனார் தேடுதல் என்ற பெயரில் 57 தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தான்.
89 பேரைக் கொலை செய்தான்.
270 பேரை ஊனமாக்கினான்.

* 1999 ல் மத்திய அரசு பணிக்கு முறைப்படி தேர்வான 26 தமிழர்களை கர்நாடகத்தில் பணிசெய்ய விடாமல் ஏ.ஜி.ஓ என்ற நாற்பது நாட்கள் போராட்டம் நடத்தி விரட்டியடித்தான்

* திருவள்ளுவர் சிலையைத் திறக்கவிடாமல் செய்து அதன் சுற்றுப்புறத்தை மலம் கழிக்கும் இடம் ஆக்கினான்

* கோயில்களில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை அழித்துவிட்டான்.
கல்வெட்டுத் துறையில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய தமிழ் கல்வெட்டுகளைக் கொடுக்காமல் தொடர்ந்து பராமரிப்பில்லாமல் போட்டு அழிக்கிறான். இதுவரை 500 க்கும் மேற்பட்டவை அழிந்துவிட்டன.

* ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழகத்தை அளிக்க மறுப்பதுடன் ஒகேனக்கல்லே எங்களுடையது என்று பிரச்சனை செய்கிறான்

* 267 தமிழ்ப்பள்ளிகளில் 147 பள்ளிகளை மூடிவிட்டான்

* இன்று பெங்களூர் திருக்குறள் மன்ற நூலகத்தை சூறையாடியுள்ளான்

கன்னடன் மனிதனே இல்லை
சிங்களவனுக்கு சளைத்தவனும் இல்லை.