Showing posts with label இழந்த மண். Show all posts
Showing posts with label இழந்த மண். Show all posts

Sunday, 24 September 2017

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)

தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார்,பெங்களூரூ,மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer

நன்றி: சிவ் விஸ்வநாதன்.

Sunday, 23 July 2017

ஜனநாயகத்தில் இவ்வளவு நிலத்தை இழந்த இனம் வேறு எங்குமில்லை

ஏன் வேண்டாம் இன்பத்திராவிடம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டின் எல்லைகள் எவை?

”வடா அது பனிபடு நெடு வரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்”

என்கிறார் காரிகிழார் எனும் புலவர், புறநானுாற்றில்.

அதாவது தமிழ் மண்ணின் எல்லைகள் என்பன,

வடக்கே தொடர்ந்து பனி உருகும் நீண்ட நெடிய மலை அதாவதுஇமயமலையும்

தெற்கே வளம் மிக்க குமரியும் (குமரி என்பது இன்றைய கன்னியாகுமரி அல்ல.
கடலில் மூழ்கியிருக்கிற, வெகு துாரம் தெற்கிலும் நீண்டிருந்த பழைய குமரிக் கண்டம்)

கிழக்கே கரையைத் தொட்டக் கரைப்பதற்காக தொடர்ந்து போராடும் அலைமிக்க கடல்பரப்பும்,

மேற்கே தொன்மையான வரலாறு கொண்டஅதிகம் அறியப்படாத கடல் பகுதியும்.

இதுதான் காரிகிழார் காட்டும் தமிழ் மண்ணின் எல்லைகள்.

(குணக்கு என்றால் கிழக்கு என்று பொருள்.
குடக்கு என்றால் மேற்கு.
காவிரி நதி நீரைப் பயன்படுத்திய விவசாயத் தமிழர்களின் நிலப்பகுதிகி்கு மேற்கே,
தமிழ் மண்ணுக்குள் ஒரு மலை இருந்தது.
அதில் இருந்து தான் காவிரி உற்பத்தியானது.
எனவே கிழக்கத்தித் தமிழர்கள், அதனை மேற்கு மலை என்ற பொருளில் குடக்கு மலை என்று அழைத்தனர்.
அது தான் குடகு மலை என்று திரிந்தது.
அது இப்போது கர்நாடகாவிடம் உள்ளதால் தான் காவிரி நீரை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் காட்டுகிறது, கர்நாடகா)
--------------------
தொல்காப்பியத்துக்கு, பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட, பனம்பாரனார் பாயிரம் பாடிய காலத்தில் தமிழக எல்லைகள் எது?

”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்”

அதாவது வடக்கில் வேங்கடமலை (திருப்பதி மலை)
தெற்கே குமரி மலை. (அதாவது கடலில் மூழ்காத பழைய குமரிக் கண்டத்தில் இருந்த ஒரு மலை)
மேற்கிலும் கிழக்கிலும் கடல் எலலைகள்.
இது தான் தமிழகம்.
--------------------

”நன்னுால்” பாயிரம் எழுந்த காலத்தில்....

”குணகடல், குமரி, குடகம், வேங்கடம் எனும்நான்கெல்லை”
என்று தமிழக எல்லைகள் குறைந்தது.
அதாவது மேற்கில் காவிரி உற்பத்தியாகும் குடகு மலை வரை.
வடக்கில் திருப்பதி மலைகள் அனைத்தும் தெற்கே குமரிக் கடல்.

குமரிக் கண்டம், குமரி மலை எல்லாம் தண்ணீருக்குள் போய் விட்டது? கிழக்கில் கீழைக்கடல்.
-------------
மகாகவி பாரதி என்ன சொன்னான்?

”நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய் குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு”
என்றான்.
மாலவன் குன்றம் என்பது திருப்பதிதான். கிழக்கே கடல் எல்லை.
இயற்கையைத் தவிர அதை யாராலும் அபகரிக்க முடியாது.
எனவே மாற்றமில்லாதது அது. அதனால் பரவாயில்லை.
மேற்கு எல்லையைப் பற்றி அவன் சொல்லவே இல்லையே.
ஏன்? பெங்களுரும், காவிரி நதியும் தமிழனுக்கு அநியாயமாகப் போகும் என்று சத்தியமாக நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான் பாரதி.
கிழக்கு எல்லைபோல மேற்கு எல்லையும் மாறவே மாறாது என்று நம்பியிருக்கிறான் பாரதி. அதனால் தான் கிழக்கு, மேற்கு எல்லைகள் பற்றி அவன் பேசவே இல்லை.
-----------
ஆனால் இன்று தமிழ்நாட்டின் எல்லைகள் என்னென்ன?

வடக்கே திருத்தணி.
மேற்கில் கூடலுார்,
தெற்கே குமரி முனை
என்று எவ்வளவோ குறுகி விட்டது.

தமிழன் இழந்ததைப் போல தரணியில் எந்த இனமும் சனநாயக ஆட்சியில் இவ்வளவு நில இழப்புக்கு ஆளானதில்லை.

கிழக்கே கடல் எல்லை மட்டும் தான் மாறாமல் உள்ளது.
அதைக் கூட கடல் அரிப்பின் மூலம் அலைகள் குறைந்ததுக் கொண்டே வருகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியை பின்தள்ளி, வேறொரு விதமான மாயத்தனமான-அறிவுக்கு அப்பாற்பட்ட-உண்மைத் தமிழ் உணர்ச்சியை மழுங்கடித்த,
திராவிடம் என்ற மயக்கத்தை கொண்டு வந்த திராவிட இயக்கத் தலைவர்கள்தான் தமிழ் நிலப்பகுதிகள் நம்மை விட்டுப் போவதற்குக் காரணம்.

இந்த விடயத்தில் ஈ.வெ.ரா. அண்ணாத்துரை முதற்கொண்டு அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றவாளிகளே.

ஏன் வேண்டாம் இன்பத்திராவிடம்
- தொடர் (2002-2003)
ஆசிரியர் சு.செந்தில்குமரன்
தேவி வார இதழ்

முகநூல் பதிவர்: வழக்கறிஞர் பா.குப்பன் திருத்தணி தமிழ்

Friday, 19 May 2017

தென் கேரளாவில் இருக்கும் தமிழர் பகுதிகள்

தென் கேரளாவில் இருக்கும் தமிழர் பகுதிகள்

திருவனந்தபுரம்
செங்கோட்டை பாதி
தேவிகுளம்

Census of India 1931 volume 26 Travancore part 1 report page 322.

நன்றி: Gabriel Raja

Tuesday, 18 April 2017

மொழி வரைபடம் (1928)

மொழி வரைபடம் (1928)

----------------------------------------

ஆங்கில ஆட்சியில்கீழ் இந்தியாவில் முதன்முதலாக மொழிவாரி கணக்கெடுப்பு நடத்திய க்ரையெர்ஸன் (Grierson) என்பார் வெளியிட்ட Linguistic Survey of India என்ற நூலில் உள்ள வரைபடம் (அதன் ஒரு பகுதி).

1928வாக்கில் கையால் வரையப்பட்ட இந்த வரைபடத்துடன் தற்போதைய தமிழக மாநிலத்தின் வரைபடத்தைப் பொருத்திப்பார்க்கையில் ஓரளவு நாம் இழந்த பகுதிகளை அறியமுடிகிறது.

( Madras Presidency என்ற தலைப்பில் சென்னை மாகாணம் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இதுவே நிறமில்லாத வடிவில் இடம்பெற்றுள்ளது)

ஆனாலும் இது முழுமையாக சரியென்று சொல்லமுடியாது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கன்னடம் பேசும் பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மாவட்டத்தில் தமிழர்களும் அல்லர் காடர் போன்ற (தமிழ்)பழங்குடி மக்களும் சில பகுதிகளில் மலையாளிகளுமே இருக்கின்றனர்.

அதேபோல மைசூர் தமிழர் பெரும்பான்மை நகரம்

அதுவும் இதில் இல்லை.

அதேபோல ஈழத்தின் கிழக்குபகுதி சிங்களப் பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

கிரையர்சன் வடமொழிகளில் மிக மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

தனது நூலின் முதல் தொகுதியில் தொடக்கத்திலேயே தனது ஆய்வில் தென்னிந்தியா இடம்பெறவில்லை என்பதை வரைபடம் மூலம் குறிப்பிட்டும் உள்ளார்.

அதாவது தென்னிந்தியாவில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கூறலாம்.

ஆந்திரா மற்றும் கேரளா பறித்துக்கொண்ட தமிழ் நிலத்தினை ஓரளவு அறிந்துகொள்ள இந்த வரைபடம் உதவுகிறது.

இவ்வரைபடத்தின் படி

தற்போதைய ஆந்திராவின்

சித்தூர் மாவட்டத்தில் பாதி

தமிழர் பெரும்பான்மை கொண்டது.

தற்போதைய கர்நாடகத்தின் கோலார் கால்பகுதி

மற்றும் பெங்களூர் மாவட்டத்தில் கால்வாசி

ராமநகரா கால்வாசி

சாம்ராஜ்நகர் பாதி

தமிழ் பெரும்பான்மை உடையன.

தற்போதைய கேரளத்தின் பாலக்காடு முழுவதும்

இடுக்கி பாதியும்

திருவனந்தபுரம் முழுவதும்

தமிழ் பெரும்பான்மை உடையன.

(இவ்வரைபடம் ஏற்கனவே 03.03.16 அன்று இதே வலையில் போடப்பட்டிருந்தது.

ஆனால் படம் அழிந்துவிட்டது பதிவு மடடும் இருந்தது அதனால் மீண்டும் பதவிடப்படுகிறது)

ஈழ வரைபடம் (1995)

ஈழ வரைபடம் (1995)

இலங்கைத் தீவில் பாதிக்கும் மேல் வாழ்ந்த தமிழினம் சுருக்கப்பட்ட வரைபடம்.

  நூல்: ஈழத்தமிழர் மரபுவழித் தாயகத்தில் பாதியை [50%] சிங்களவர் அபகரித்த வரலாறு

ஆசிரியர்: மறவன்புலவு க.சச்சிதானந்தன்

இணையம்: padippakam . com

Monday, 20 March 2017

ஈழத்தில் இழந்த மண் -2

ஈழத்தில் இழந்த மண் -2

நான் ஏற்கனவே வெளியிட்ட படத்தில் பலரும் சந்தேகம் தெரிவித்தனர்.

அதே படத்தையும் இன்னொரு படத்தையும் இங்கே தருகிறேன்.

இவ்விரு வரைபடங்களும் R.L.Brohier என்பார் எழுதி 1950 ல் இலங்கை அரச அச்சகம் வெளியிட்ட புத்தகமான Land, Maps and Surveys எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

முழுப்பெயர்: Land, Maps and Surveys : A review of evidence of land surveys as practiced in Ceylon from earliest known periods and the story of the Ceylon survey dept.from 1800 to 1950.

சிங்களவர் தமிழர் மண்ணைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதை இவ்வரைபடங்களின் மூலம் அறியமுடிகிறது.

Friday, 10 March 2017

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் (2/3)

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் -2

தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1000 - 1174
இரண்டாம் படம் காலம் 1174 - 1324

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra

By Cynthia Talbot

Tuesday, 7 March 2017

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் (1/3)

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்

தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

Thursday, 2 March 2017

ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)

ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)

மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்.

இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும்
நெல்லூரில் ஒரு துண்டையும்

தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன.


Saturday, 18 February 2017

தமிழர்நாடு - இறுதிசெய்யப்பட்ட வரைபடம்

தமிழர்நாடு - இறுதிசெய்யப்பட்ட வரைபடம்

பலரும் கேட்டுக்கொண்டதால் சான்றுகள் அடிப்படையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த புத்தளத்தின் ஒரு பகுதியைச் சேர்த்துள்ளேன்.
இது முக்கியமான திருத்தம்.

இதுதான் நாம் கோரிக்கை வைத்து போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலப்பகுதி.

மேலும் விபரங்கள்,

தமிழர்நாடு -வரைபடங்களின் தொகுப்பு வரைபடம் (வேட்டொலி)

vaettoli.blogspot.com/2017/02/blog-post_10.html

Monday, 6 February 2017

ஈழம் - ஆங்கிலேயர் கால வரைபடம்

ஈழம் - ஆங்கிலேயர் கால வரைபடம்

ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

தீவின் பாதி தமிழர் பகுதியே.

Tuesday, 2 February 2016

மண்ணழிப்பின் மூலம் இனவழிப்பு

மண்ணழிப்பின் மூலம் இனவழிப்பு


110 கோடி மக்களின் அரசினுடைய மொத்த வருமானத்தில் 4ல் ஒரு பங்கு வெறும் 100 பணக்காரர்கள் மூலம் வருகிறது.


அதாவது ஹிந்தியாவின் அரசியல் நாற்காலியின் ஒரு கால் இப்பெருமுதலாளிகள்.


இந்த நூறுபேரரில் முக்கியமான பத்துபேர் வைப்பதுதான் இங்கே சட்டம்.


அதில் ஹிந்தியாவின் தமிழர் மீதான வெறுப்பும் சேர்ந்துகொள்ள 

அதற்கு திராவிடத்தின் ஆதரவும் கிடைக்க 

தாங்கமுடியாத அடக்குமுறைகள் தமிழர் மீது நேரடியாக சுமத்தப்படுகின்றன.


ஈழத்தில் நடப்பதாவது இனவழிப்புதான்.

அதாவது ஒரு இனத்தை அழித்து அதன் நிலத்தை இன்னொரு இனம் எடுத்துக்கொள்வது.


தமிழகத்தில் நடப்பது மண்ணழிப்பு.

அதாவது மக்களை மண்ணோடு சேர்த்து அழிப்பது.

நாம் அழிந்த பிறகு தமிழகம் யாரும் குடியேறமுடியாத அளவு சுடுகாடாகிவிடும்.


இது இனவழிப்பு மட்டுமன்றி மாந்த அழிப்பும் ஆகும்.


நாம் வாழும் பூமியின் ஒரு பகுதியை அழிக்கும் மாபெரும் பாதகச்செயலும் ஆகும்.

Wednesday, 6 January 2016

பரந்த தமிழ் மாநிலம்

பரந்த தமிழ் மாநிலம்

1930களில் மொழிவாரி மாநில உரிமைகள் அளிக்கப்பட்டபோது

முற்கால வரலாறு அனைத்தும் மறந்துவிட்டு
ஐனநாயக முறைப்படி நேர்மையாக
அன்றைய சூழலில் மக்களின் பெரும்பான்மை மற்றும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டு
"தமிழ் மாநிலம்"அமைக்கப்பட்டிருந்தால் அது இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்.

இது தவிர குடகு நம்முடன் இணையத் தயாராக இருந்தது.

அந்தமான் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவான பெரிய-அந்தமானில் தமிழர் பெரும்பான்மை என்றவகையில் அத்தீவுக்கூட்டம் முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கும்.

இது நடந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு, மீனவர் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, மலையகத் தமிழர் பிரச்சனை, அகதிப் பிரச்சனை என எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.

நாம் 1900களில் மற்ற இனங்களைப் போல அரசியல் விழிப்புணர்வும் இனவுணர்வும் பெற்றிருந்தால் நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகள் இருந்திருக்காது.

மனம் சோராமல் இழந்ததை மீட்போம்.
__________________
மேலும் அறிய,

தமிழகம் இழந்த பகுதிகள்
vaettoli.blogspot.in/2016/01/blog-post_5.html?m=1

Sunday, 20 December 2015

குருதியில் நனைந்த குமரி -1

குருதியில் நனைந்த குமரி -1

1954: ஆகஸ்ட் 11:

"தம்பி பீர்முகமது ஒங்க அண்ணன்தானே?"

"ஆமாங்க, என்னாச்சு?"

"புதுக்கடை கூட்டத்துல மலையாள போலீஸ் புகுந்து சுட்டதுல ஒங்கண்ணன் நெஞ்சுல குண்டு பாஞ்சுடுச்சு"

"ஐயையோ என்னம்மா சொல்றீங்க?
எங்கண்ணனுக்கு என்னாச்சு?"

"இப்பதா சேதி தெரிஞ்சது, ஒடனே போ"

ஓடோடிப்போய் புதுக்கடை பகுதிக்குப் போய் பார்த்தால் அங்கே பல பேர் குண்டடிப்பட்டு கிடந்தனர்.
பொதுமக்கள் சிதறி ஓடினர்.

முனங்கிக் கொண்டிருந்த பலரை மலையாள போலீஸ் அங்கே ஒரு பாழுங்கிணத்தில் தூக்கிவீசிக் கொண்டிருந்தனர்.

அங்கே ஒரு ஓரத்தில் வெள்ளைச் சட்டை குருதியால் நனைந்து கீழே கிடந்தது பீர்முகமது உடல்.

"அண்ணே...."
கீழே உட்கார்ந்து கதறி அழுதான்.

அருகே ஒருவர் ஓடிவந்தார்.
"தம்பி தம்பி போலீஸ் வர்றதுக்குள்ள தூக்கு.
இல்லனா கொண்டு போய்டுவானுக".
இருவரும் சேர்ந்து சடலத்தைத் தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் ஒழிந்துகொண்டார்கள்.

இரண்டு லாரி நிறைய காயம்பட்டவர்களை அள்ளிக்கொண்டு சென்றனர்.

"என்னண்ணே இதெல்லாம்?
எதுக்கு இப்டி நடந்துக்குறாங்க?
நாம தமிழர்கள் தமிழ்மாநிலத்தோட சேர்க்கணும்னு கூட்டம்தானனே கூடினோம்"

"சாதாரணக் கூட்டமா தம்பி!
குஞ்சனைய்யா வாராருன்னதும் பத்தாயிரம் பேர் கூடிட்டாங்க.
அவரால வரமுடியல.
கோபாலகிருஸ்ணந்தா வந்தாரு.
அவர் பேசிட்ருக்கும்போதே போலீஸ் வண்டி வந்தது.
கோபாலகிருஸ்ணனையும் மதியழகனையும் மேடைல ஏறி கைது பண்ணி வண்டில ஏத்துனாங்க.
ஒடனே மக்கள் கோசம்போட்டுக்கிட்டே போலீஸ் வண்டி சுத்தி நின்னுகிட்டாங்க.
ஒடனே பெரிய பெரிய துப்பாக்கிய எடுத்து சுட ஆரம்பிட்டானுக.
28 ரவுண்ட் சுட்ருப்பானுக முன்வரிசைல நின்ன அஞ்சுபேருக்கு நெஞ்சுல குண்டு பட்டுட்டு.
நான் இன்னொரு பக்கம் நின்னு பாத்துட்ருந்தேன்.
அப்பதா ஒங்கண்ணனுக்கு குண்டு பட்டுச்சு அங்கயிருந்து எல்லாரும் ஓடஆரம்பிச்சாங்க.
விடாம சுட்டதுல பலபேருக்கு காயம்.
ஒங்கண்ணனும் கொஞ்சதூரம் வந்து விழுந்துட்டாரு.
நாதா மறவா அவர தூக்கி வச்சேன்.
இன்னும் மூணுமணிநேரத்துல இருட்டிரும்.
அப்பறம் கெளம்பலாம்.
ஆமா எங்கருந்து வர்றீங்க?"

"தேங்காப்பட்டணம்"

"நல்ல வேள சரியான நேரத்துக்கு வந்தீங்க.
இல்லனா அந்த பாழுங்கெணத்துல தூக்கிபோட்ருப்பானுக".

இருட்டிய பிறகு பிணத்தை தூக்கிச்சென்றனர்.

மறுநாள் காலை தினமலரில் செய்தி வந்தது.

மார்த்தாண்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி
புதுக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலி.
பலர் கவலைக்கிடம்.
ஆயிரக்கணக்கானோர் கைது.

(தொடரும்)

Saturday, 19 December 2015

கையாலாகாதவன்னு நேரடியா சொல்லிட்டு போகவேண்டியதான?!

அட என்னங்க நீங்க 60 வருசம் முன்னால முடிஞ்ச விசயத்த இப்ப கெளறிகிட்டு!?

திருப்பதி நம்மளுதாம்
நெல்லூர் நம்மளுதாம்
பெங்களூர் நமாமளுதாம்
மைசூர் நம்மளுதாம்
திருவனந்தபுரம் நம்மளுதாம்
பாலக்காடு நம்மளுதாம்

பிரிஞ்சுபோகும்போதே தடுத்திருக்கணும்.
இப்ப ஒப்பாரி வச்சு என்ன பலன்?
இருக்குறதயாவது காப்பாத்த பாருங்க.

----------
அடடே வந்துட்டாரு கொடவள்ளலு!
ஒங்க தாத்தா சாகும்போது எழுதிவச்ச நெலம் ஒரு கிரவுண்ட் ஒனக்கு சொந்தம்னு 60 வருசம் கழிச்சு தெரிஞ்சா சும்மா விட்ருப்பியா?
ஒரு சதுர மீட்டர் நெலம் என்ன ரேட்டு விக்கிது?!
நீ என்னனா 70,000 சதுர கிலோ மீட்டர் நெலத்த விடணும்னு சர்வசாதாரணமா சொல்ற?!
இப்ப இருக்குற தமிழ்நாட்டுல பாதிக்கு சமமான அளவுடா அது.

தெருவுற போறவனுக்கு சும்மா பத்து ரூவா குடுப்பியா?

திருப்பதியிலயும்
கோலார் தங்கசுரங்கத்துலயும்
திருவனந்தபுரம் கோவில்லயும் தங்கமா கொட்டுதே
அவ்வளவையும் வாரிகொடுத்துட்டு விளக்கம் வேற கேக்குறியாக்கும்?!!

இல்ல, தெலுங்கு கன்னட மலையாளிகள கண்டாலே நடுங்குது,
போராட நெஞ்சுல தைரியமில்ல,
நா ஒரு கையாலாகாதவன்னு நேரடியா சொல்லிட்டு போகவேண்டியதான?!
அதென்ன பெரிய யோக்கியன் மாதிரி சீன் போடுறது?!

அதென்ன ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக மண்ணப் பத்தி  எவனுமே எந்த இயக்கமுமே பேசவேமாட்டேங்கிறீங்க?

ஓகோ காரணம் பத்தலயோ?

அக்கா தங்கச்சிய கற்பழிக்குற வர பொறுத்திருந்து பொங்கியெழ நீங்க என்ன சினிமா ஹீரோவா?

ஈழத்துல அதுவும் நடந்தாச்சே
இன்னுமா முழிச்சிக்கல?!