Showing posts with label ம.பொ.சிவஞானம். Show all posts
Showing posts with label ம.பொ.சிவஞானம். Show all posts

Thursday, 1 November 2018

தமிழக நிலப்பரப்பு கேட்டதும் பெற்றதும்

தமிழக நிலப்பரப்பு
கேட்டதும் பெற்றதும்

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது நமக்கு நியாயமாக சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை நாம் இழந்துள்ளோம்.

ம.பொ.சி அவர்கள் தமிழ் மாநிலத்திற்காகக் கேட்ட நிலப்பரப்பானது அவர் நடத்திவந்த "தமிழ் முரசு" ஏட்டின் (1950 மே மாதம்) பதிப்பில் வரைபடமாக முகப்பில் இடம்பெற்றிருந்தது.

அதை ஏற்கனவே வெளியிட்டிருந்தேன்.

அதை தற்போதைய தமிழ்நாடு வரைபடத்துடன் ஒப்பிட்டால் நாம் இழந்த பகுதிகள் தெளிவாகும்.

ம.பொ.சி கேட்ட நிலப்பரப்பையும் தற்போதைய தமிழகத்தையும் ஒரு பழைய மதராஸ் மாகாண வரைபடத்தில் குறித்துள்ளேன்.

இழந்த பகுதிகளில் அன்றைய
செங்கல்பட்டு மாவட்ட சத்தியவேடு தாலுகா,
சித்தூர் மாவட்ட தென்பாதி,
கோலார் மாவட்ட தென்பாதி ,
கொள்ளேகால் வட்ட தென்பாதி,
பாலக்காட்டு வட்டத்தின் சித்தூர் தாலுகா,
தேவிகுளம் மற்றும் பீர்மேடு மாவட்டம்,
கொல்லம் மாவட்ட கிழக்குப் பாதி,
திருவனந்தபுரம் மாவட்டம் தென்பாதி
ஆகியன அடங்கும்.

அதாவது ம.பொ.சி எல்லை மாவட்டங்களில் பாதியை விட்டுக்கொடுத்து பாதியைக் கோரியுள்ளார் (தேவிகுளம்- பீர்மேடு தவிர).

தற்போது படத்தில் காட்டப்பட்டுள்ள இழந்த பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடந்து தமிழர் பெரும்பான்மை சற்று குறைந்துவிட்டாலும் இப்போதும் தமிழரே பாதிக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

தற்போது பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சரி,
இப்பகுதிகளை மீட்பது நமது கடமையாகும்.

தமிழக நிலப்பரப்பு கேட்டதும் பெற்றதும்

தமிழக நிலப்பரப்பு
கேட்டதும் பெற்றதும்

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது நமக்கு நியாயமாக சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை நாம் இழந்துள்ளோம்.

ம.பொ.சி அவர்கள் தமிழ் மாநிலத்திற்காகக் கேட்ட நிலப்பரப்பானது அவர் நடத்திவந்த "தமிழ் முரசு" ஏட்டின் (1950 மே மாதம்) பதிப்பில் வரைபடமாக முகப்பில் இடம்பெற்றிருந்தது.

அதை ஏற்கனவே வெளியிட்டிருந்தேன்.

அதை தற்போதைய தமிழ்நாடு வரைபடத்துடன் ஒப்பிட்டால் நாம் இழந்த பகுதிகள் தெளிவாகும்.

ம.பொ.சி கேட்ட நிலப்பரப்பையும் தற்போதைய தமிழகத்தையும் ஒரு பழைய மதராஸ் மாகாண வரைபடத்தில் குறித்துள்ளேன்.

இழந்த பகுதிகளில் அன்றைய
செங்கல்பட்டு மாவட்ட சத்தியவேடு தாலுகா,
சித்தூர் மாவட்ட தென்பாதி,
கோலார் மாவட்ட தென்பாதி ,
கொள்ளேகால் வட்ட தென்பாதி,
பாலக்காட்டு வட்டத்தின் சித்தூர் தாலுகா,
தேவிகுளம் மற்றும் பீர்மேடு மாவட்டம்,
கொல்லம் மாவட்ட கிழக்குப் பாதி,
திருவனந்தபுரம் மாவட்டம் தென்பாதி
ஆகியன அடங்கும்.

அதாவது ம.பொ.சி எல்லை மாவட்டங்களில் பாதியை விட்டுக்கொடுத்து பாதியைக் கோரியுள்ளார் (தேவிகுளம்- பீர்மேடு தவிர).

தற்போது படத்தில் காட்டப்பட்டுள்ள இழந்த பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடந்து தமிழர் பெரும்பான்மை சற்று குறைந்துவிட்டாலும் இப்போதும் தமிழரே பாதிக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

தற்போது பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சரி,
இப்பகுதிகளை மீட்பது நமது கடமையாகும்.

Thursday, 23 August 2018

தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?

தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?

* 1955 இல் முதன்முதலாக ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.
(1953 லேயே மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் பேசியுள்ளார்)

* 1956 இல் தமிழர்களின் எல்லையை அண்டை மூன்று மாநிலங்கள் தாராளமாக ஆக்கிரமித்து மிச்சம் வைத்த மதராஸ் மாகாணம் அதே பெயரல் ஒரு மதராஸ் மாநிலம் ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் எழுதினார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த 'திராவிட நாடு' ஆசிரியரான அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணா 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வியதுதான்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆவலை கவனித்து மக்கள் ஆதரவைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் அண்ணாதுரை இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதில் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயரே நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரை பெயர்மாற்ற விழா அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

தமிழ்நாடு என்ற சொல்லை உருவாக்கி முன்மொழிந்த ம.பொ.சி கூட இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

ஆனால் தமிழ்நாடு பெயர்மாற்றம் என்றாலே அண்ணாதுரை கொண்டுவந்தது என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மெட்ராஸ் மக்களாக' இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

இவர்களின் செயழகு எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* தமிழகத்தின் உயர்நீதி மன்றம் இன்றும் "சென்னை உயர்நீதிமன்றம்" அல்லது "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.

* இன்றுவரை தமிழகத்தின் தலைமை பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது.
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை

Saturday, 28 October 2017

தலைநகரை மீட்டதே நாடார்தான்

தலைநகரை மீட்டதே நாடார்தான்

சென்னையில் நாடார்கள் ஆதிக்கம் பற்றி பேசுபவர்கள்,
"மதராஸ் மனதே" என்று தெலுங்கர் சென்னையை விழுங்க முழு பலத்துடன் களமிறங்கியபோது
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கி தமிழர்களைத் திரட்டி திருத்தணி வரை தமிழ்நாடு ஆக்கிய ம.பொ.சி ஒரு நாடார் என்பதை மறக்கவேண்டாம்.

தலைநகரில் முழு மாநிலத்திற்கும் உரிமை உண்டு.

அத்துடன் சென்னையில் வெளிமாநிலத்தாரின் ஆதிக்கத்திற்கு முன் தெற்கத்தி தமிழர்களின் ஆதிக்கம் ஒன்றுமேயில்லை.

வேற்றினத்தாரை விரட்ட வக்கில்லாமல் சக தமிழனை விரட்டுவது கோழைத்தனம் ஆகும்.

Thursday, 2 March 2017

ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)

ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)

மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்.

இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும்
நெல்லூரில் ஒரு துண்டையும்

தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன.