Showing posts with label அகழ்வாராய்ச்சி. Show all posts
Showing posts with label அகழ்வாராய்ச்சி. Show all posts

Friday, 9 February 2018

கல்வெட்டுகளை அழிப்பதில் கன்னட, வடயிந்திய கூட்டு

ஆயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

-------------------

மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்
வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்: பிப் 04,2018 01:08

சென்னை: மைசூரில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இதுவரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மை படிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசு நியமிக்கவில்லை.

அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப் படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாசாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர், 1967ல், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.

அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
எங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.

மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.

தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு அறிக்கைகள் வெளிவராத நிலையில், இது போன்ற ஆவண அழிப்பில், துறை சார்ந்தோரே ஈடுபடுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்

மேலும் அறிய,
search கர்நாடகா நாசமாக்கும் தமிழ் கல்வெட்டுகள் வேட்டொலி

Wednesday, 4 October 2017

குமரிக்கண்டக் கருத்தியல்

குமரிக்கண்டக் கருத்தியல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குமரி என்பது மலையா? கடலா? கண்டமா? தென்முனையா?

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும்  உரையாசிரியர்கள் குமரியை ஆறு என்றவாறே உரையெழுதியுள்ளனர்.

ஆனால் குமரி ஒரு ஆறு என்று எங்கும் வரவில்லை.

"வடவேங்கடம் தென்குமரி"
(தொல்காப்பியம் பாயிரம்)

"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை"
(புறநானூறு: 67)
போன்ற இடங்களில் குமரி என்று மட்டுமே வந்துள்ளது.

ஆனால்,
சிலப்பதிகாரத்தில் குமரியை கடல் என்றவாறு
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
குறித்திருப்பதைக் காணமுடிகிறது.

ஆனால் அதே சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்தில் குமரி எனும் மலையை கடல் கொண்ட செய்தி வருகிறது.

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று பஃறுளி ஆற்றோடு குமரி மலை கடலில் மூழ்கிய செய்தி வருகிறது.

இளங்கோவடிகள் கடலில் மூழ்கிய மலையை குமரி என்று கூறுவது அவரது வரலாற்று அறிவினால் ஆகும்.
அவரது காலத்தில் குமரி கடலில் மூழ்கி கடலுக்கு பெயராக இருந்திருக்கவேண்டும்.

பஃறுளியாற்றுடன் குமரி மலையும் கடல்கொண்டபிறகு
அந்த இழப்பினை ஈடுசெய்வதற்காக பாண்டிய மன்னன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் உடைமையாக்கிக் கொண்டவரலாற்றையே இளங்கோவடிகள்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.

பஃறுளியாறு நெடியோன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பகுதி என
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூறு மூலம் அறியலாம்.

[இதற்கு அடுத்தும் ஒரு கடற்கோள் ஏற்பட்டு தமிழ்ச் சங்கம் (இடை) இருந்த கபாடபுரம் வரை கடலில் மூழ்கியுள்ளது.
இது இளங்கோவடிகள் காலத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் அவர் அதை ஏனோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனால் "மலி திரையூர்ந்து தன் மண் கடல் வௌவலின்" என்று ஒரு கடற்கோளையும் (அந்த நில இழப்பை ஈடுகட்ட) பாண்டியன் சேர சோழரை வென்று தனதாக்கியதை "புலியோடு வில் நீங்கி" என்றும் முல்லைக் கலியில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்]

  இந்திய துணைக்கண்டம் பெரிய தீவாக கடலில் தனித்து இருந்தது.
பிறகு அத்தீவு ஆசியாவுடன் மோதி இணைந்தது.
அந்த மோதலால் உருவானதே இமயமலை.
அப்படி இணையும் முன்பு (அதோடு குமரிக்கண்டமும் சேர்ந்திருந்தது) நாம் அதில் வாழ்ந்திருந்தோம்.
அதற்கு நாவலன் தீவு என்று பெயரிட்டு அழைத்துவந்தோம்.
(மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடனத்தில் இந்தியாவை ஜம்புத்தீவு என்று குறிப்பிட்டுள்ளனர்)
அப்படிப் பார்த்தால் மூழ்கியுள்ள கண்டம் நாவலந்தீவு என்றுதான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாவலந்தீவின் தென்பாதியில் பெரும்பகுதியை குமரி மலை கொண்டிருக்கவேண்டும்.
மூழ்கிய பிறகும் பல காலம் அந்த மாமலையின் உச்சி வெளியே தெரிந்தபடி இருந்திருக்கவேண்டும்.
அதனால் நிலப்பரப்பின் பெயரை விட மலையின் பெயரே அக்கடல் பகுதிக்கு அமைந்திருக்கவேண்டும்.

மூழ்கிய அந்நிலத்தைப் பற்றி மேலைநாட்டார் விலங்கின ஆராய்ச்சியின் போது கண்டறிந்தனர்.
லெமுர் எனும் உயிரினம் இந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நிலப்பரப்பிலும் கடலை ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்வதை வைத்து முன்பு இம்மூன்றையும் தொட்டவாறு பெரிய கண்டம் இருந்திருக்கவேண்டும் என்று கணித்து அதற்கு லெமூரியா என்று பெயரிட்டனர்.

இதை அறிந்த தமிழறிஞர்கள் மேற்கொண்டு இலக்கியங்களை ஆராய்ந்து லெமுரியா என்பது 49 நாடுகள் இருந்த தமிழர் நிலமே என்று அறிவித்தனர்.

  இது பற்றி 20ம் நூற்றாண்டில் முதன்முதலாக ( அதாவது பல நூற்றாண்டுகளுக்கு பிறகு) 1903ல் எழுதியவர் பரிதிமாற் கலைஞர் (பார்ப்பனத் தமிழர்).
தமது 'தமிழ்மொழியின் வரலாறு ' எனும் நூலில் குமரிநாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு அது 1930களில் குமரிக் கண்டம் என்று பெயர்பெற்றது.
(இப்பெயர் 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுவர்)

இதை பரப்புரை செய்து தமிழர் அனைவருக்கும் கொண்டுசென்று குமரிக்கண்டம் தமிழர் பிறப்பிடம் என்றும் இந்தியாவில் மூத்தகுடி தமிழரே என்றும் 'குமரிக்கண்ட கருத்தியலை' உருவாக்கியவர் ஈழத்தமிழரான கனகசபை ஆவார்.

அதன்பிறகு பாவாணர் மேலும் ஆராய்ந்து குமரிக்கண்ட மாந்தன் இந்தியா மட்டுமல்லாது உலகிலேயே தோன்றிய முதல் மாந்தன் என்று அக்கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

அதற்காக 20 நூற்றாண்டுவரை தமிழர்கள் மூழ்கிய குமரியை மறந்துவிட்டதாகக் கூறமுடியாது.
ஈழத்தின் தென் பகுதி தமிழர் வசம் இல்லை.
ஆனால் அந்த கடல் பார்த்த தென்முனை தமிழகத்திடம் உள்ளது.
அந்த பகுதிக்கு தமிழ்மக்கள் குமரி என்றே பெயரிட்டு அழைத்தனர்.
ஆங்கிலேயர் அம்முனையை cape komarin என்றே குறித்துள்ளனர்.
மூழ்கிய குமரிநிலத்தின் நினைவாக குமரி அம்மன் கோவிலும் கட்டி வழிபட்டு வந்தனர்.
(மூழ்கிய முன்னோர் வழிபாடு தென்புலத்தார் வழிபாடு என்று பல காலம் பின்பற்றப்பட்டு தமிழர்களால் வந்தது)

1956ல் தமிழ் மாநிலம் அமைந்தபோது மலையாளிகள் கையில் இருந்த தென்முனையை பெரும்போராட்டம் நடத்தி  தமிழகத்துடன் சேர்த்த நேசமணி (கிறித்துவ நாடார்) அவர்கள்,
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (வெள்ளாளர்) அவர்களின் கடைசி ஆசைப்படி அம்மாவட்டத்திற்கே 'கன்னியாகுமரி' என்று பெயர் வைத்தார்.

ஆக, குமரி என்ற பெயர்
முதலில் மலைக்கும்
பிறகு கடலுக்கும்
பிறகு மூழ்கிய கண்டத்திற்கும்
பிறகு தென்முனைக்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இமயமலை முதல் குமரிமலை வரை பரந்திருந்த ஒரு கண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர் இன்று ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரைப்போல வாழ்கிறோம்.

'இந்தியா முழுவதும் நமதே' என்பதற்கான சான்றுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் பிறரறியா வண்ணம் ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால்,
மூழ்கிய குமரிக்கண்டம் நமது பழமையான நாகரீக சான்றுகளுடன் பாதுகாப்பாக கடலுக்குள் இருக்கிறது.

நம் வரவை, தனது மக்களின் வரவை எதிர்பார்த்து அது கடலுக்குள் காத்திருக்கிறது.

எனவே இந்தியாவில் உள்ள மூடர்களிடம் எஞ்சியுள்ள சான்றுகளை காட்டி
'தமிழ் மொழியை வெறும் 5000 ஆண்டுகள் பழமையானது என்றாவது ஏற்றுக்கொள்ளைங்கள்" என்று பேரம் பேசுவதில் குறியாக இருக்கும் நாம்,
இனியும் அந்த 'பாறையில் உழும்' முட்டாள்த்தனத்தைச் செய்யாமல்
கையில் இருக்கும் நிலத்தையாவது அரணமைத்து தனிநாடாக்கி
இனத்தை அழிவிலிருந்து காத்து
பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.

அதன்பிறகு கடலில் இறங்கி (இன்று பாகிஸ்தானில் உள்ளதும் இந்திய கண்டத்திலேயே பழமையான நாகரீகமும் ஆன ) சிந்துசமவெளி நாகரீகத்தை விட பழமையான நமது குமரிக்கண்ட நாகரீகத்தை ஆராய்ந்து நமது பழமையை நாட்டுவதில் சிந்தையைச் செலுத்துவோம்.

தனிநாடு அமைத்து அதன்மூலம் அமையும் நமது பொருளாதாரம் மூலம்தான் கடலில் இறங்கி நமது பழமையை வெளிக்கொணரும் ஆற்றல் நமக்கு வரும்.
உலகத்தில் வாழும் எந்த இனத்தானும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.
நாம் தான் செய்யவேண்டும்.
அதன்பிறகுதான் தமிழரே மூத்தகுடி என்று உலகம் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்.

நாம் அதைச் செய்யாததால் பாருங்கள் முழுக்க முழுக்க தமிழருக்கு மட்டுமே உரிமையான அந்த கடலை அதனடியில் இருக்கும் நிலத்தை எவனெவனெல்லாமோ சொந்தம் கொண்டாடுகிறான்.

(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தியாவின் பெயரில்) குமரிக்கடல் இன்று 'இந்தியப் பெருங்கடல்' என்று அழைக்கப்படுகிறது.

நேற்று பிறந்த இந்துத்துவவாதிகள் அதை 'இந்து மகா சமுத்திரம்' என்கின்றனர்.

நாம் தனிநாடு அமைத்ததும் அக்கடலுக்கு குமரிக்கடல் என்றே பெயரிட வேண்டும்.
பிறரை முந்திக்கொண்டு நாம் முதலில் கடலில் இறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தவேண்டும்.

குமரிக்கண்டத்தை ஆராய்ந்தால் நாமே பூர்வகுடி எனும் சான்று கட்டாயம் கிடைக்கும்.
அதன் பழமையை நிறுவிவிட்டால் இந்தியாவையே நாம் கைப்பற்றி ஆண்டாலும் யாரும் கேள்விகேட்க முடியாது.

  பாவாணர் கூறிய படி
'குமரிக்கண்டமே மாந்தன் தோன்றிய இடம்'
'தமிழரே மூத்தகுடி'
'தமிழே மூத்தமொழி'
என்ற உண்மையை உலகம் அறியும்படி சான்றுகளுடன் அறிவிக்கவேண்டும்.

இதுதான் குமரிக்கண்டக் கருத்தியல்.

இதற்கு ஒரே வழி தமிழ்தேசியம்.

Wednesday, 13 September 2017

குமரிக்கண்டம் இருக்க கவலை ஏன்?

13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கேட்பாரற்று கிடக்கிறது.
அழிக்கப்பட்ட கல்வெட்டுகள் திரும்பக் கிடைத்தன.

செய்தி:
கண்மாய்க்குள் சிதறி கிடக்குது 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் : பாண்டியர் காலத்தவை என ஆய்வில் தகவல்
10.09.2017 தினகரன்

எத்தனை சான்றுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
நம்மிடம் ஒரு கருவூலம் இருக்கிறது.
ஒரு கண்டமே இருக்கிறது.

தமிழர்நாடு தமிழரின் கட்டுப்பாட்டில் வந்ததும் மக்கள் நிலை ஓரளவு மேம்பட்ட பிறகு நாம் கடலில் இறங்கி குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும்.
நாம் உலகின் முன்தோன்றிய மூத்தகுடி, நமது நாகரீகமே முதல் நாகரீகம் என்பதை நிறுவவேண்டும்.

அதுவரை தமிழர் பழமைக்கான சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் இனவிடுதலைக்காகப் போராடவேண்டும்.

Thursday, 6 July 2017

மோடி இஸ்ரேலுக்கு அளித்த தமிழ் செப்பேடு


பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேல் பிரதமருக்கு அளித்த 9 -10நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வட்டெழுத்து செப்பேடு, சேர அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் வணிகம் செய்ய வந்த யூதர்களுக்கு அளித்தது.
(மோடி அவரை இந்திய அரசர் என்று மழுப்பினார்)

தகவல்: Karthikeyan Rathinavelu .

Tuesday, 4 July 2017

2800 ஆண்டுகள் பழமையான கொற்கை பானையோடு மறைக்கப்படுவது ஏன்?

தற்போது வரை (2016 AD) கிடைத்திருக்கும் தமிழி எழுத்தில் மிகப்பழைய எழுத்துப்பொறிப்பு கொற்கையில் கிடைத்த 'ஆதன்' என பெயர் பொறித்த பானையோடு ஆகும்.

கரிமநாட்காட்டி படி இதன் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு (கி.மு. 755 ± 95).
இதை நடன காசிநாதன் போன்றோர் தன் நூல்களில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஆனால் இதை அதிகம் வெளிவரவிடாமல் செய்வதற்கும் இதை பரவலான ஏற்பை பெறாமல் இருக்க செய்வதற்கும் மத்திய தொல்லியல் துறையினரால் உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் தான் கீழுள்ளவர்கள்.

இவர்கள் வெளியிடும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கீழே கொடுத்துள்ளேன்.

1. அமர்நாத் ராம்கிருஷ்ணா -
கீழடி தொல்லியல் ஆய்வாளர்.
பாண்டிமுனி கோயிலை பௌத்த கோயில் என்றது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை மண்ணடுக்கும் அதன் கீழ் ஆற்றுப்படுகையும் வருகின்ற மாதிரி இருக்கும் கீழடியை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தவர்.
இதன் மூலம் அசோகருக்கு பின்னர் வந்த எழுத்துப்பொறிப்புகளை மட்டும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

2. சுப்பராயலு -
கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று சொன்னவர். மறைமுகமாக களப்பிரர் கட்டினர் என கதை விட்டவர்.

3. பத்மாவதி அணையப்பன் -
களப்பிரர் காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதாக தொடர்ந்து கதையளப்பவர்.
காஞ்சிபுர ஐயனார் கோயிலை பௌத்த கோயில்னு புழுகித்தள்ளியவர்.

4. ஐராவத மகாதேவா -
அசோகப்பிராமிக்கு பின்னர் தமிழ் எழுத்துக்கள் வந்ததுன்னு தொடர்ந்து கதையளப்பவர்.
ஜைனர்களால் தமிழ் எழுத்துக்கள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதுன்னு கதைவிட்டதும் அல்லாமல் அதை உலகளவில் பிரபலம் அடையச்செய்தவர்.

நாலவதாக சொல்லப்பட்ட மகாதேவாவின் கருத்து எளிதாக அடிபட்டு விட்டது.
அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைவிட பழமையான எழுத்துக்கள் தமிழக்கதில் ஏற்கனவே கிடைத்திருந்தன.

நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கி.மு. எட்டாம் நூற்றாண்டு பானையோட்டை நோக்கி ஆய்வாளர்கள் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழ் எழுத்துக்களை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பழமையோடு தடுத்து நிறுத்த உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்டவர்களே மேலே நான் சொன்னவர்களும் இன்னும் பலரும். 
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஜைனம் பௌத்தம் போன்றவை வடக்கில் உருவாகி அவர்களே தமிழ்நாட்டுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டுவந்தார்கள் என்ற கருத்தை நோக்கியே இதை வளர்த்துச்செல்வார்கள் இவர்கள்.

இவர்களிடம் நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கரிமநாட்காட்டி படி கி.மு. எட்டாம் நூற்றாண்டு அளவில் பழமையான கொற்கை பானையோட்டை பற்றி ஏன் நீங்கள் பேசுவதே இல்லை என கேட்டுப்பாருங்கள்.
இஞ்சி தின்ற குரங்குகள் போல விழிப்பார்கள்.
இல்லை சமாளிப்பு காரணங்கள் எதையாவது சொல்லி கடந்துவிடுவார்கள்.

எதனால் அப்படி?
கி.மு. எட்டாம் நூற்றாண்டுனா மகாவீரா, புத்தா போன்றவர்களை விட பழமையான காலமாக தமிழ் வந்துவிடும்.
அப்புறம் எப்படி ஜைனம் பௌத்தத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆரிய திராவிட தலித்திய நாரதப்பூச்சாண்டி அரசியலை செய்ய இயலும்?
அதனால் தான் கி.மு. எட்டாம் நூற்றாண்டு கொற்கை பானையோடு பற்றி அமர்நாதன்களும் பத்மாவதிகளும் பேசமாட்டார்கள்
- தென்காசி சுப்பிரமணியன் (கூர்ங்கோட்டவர்)
25 ஜூன்

Tuesday, 7 March 2017

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் (1/3)

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்

தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

Monday, 9 January 2017

ஏறுதழுவதல் மற்றும் குதிரை பயன்பாடு கற்காலத் தமிழர் ஓவியம்

கற்காலம் முதலேயே மஞ்சு விரட்டும் பரியேற்றமும் தமிழர்கள் செய்து வந்தது தான். இதற்கான சான்றுகள் தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருந்து வந்துள்ளன.
பீட்டா, ஆரிய, திராவிட, தலித்தியக்கதைகள் என்ன சொல்லும்னா ஏறுதழுவல் ஒரு சாதிக்கூறியதுன்னும் அது அனைத்து தமிழர்களும் விளையாட்டில்லைன்னும் அதனால் அது தமிழர் விளையாட்டில்லைன்னும் சொல்லும்.
ஆரியன் தான் தமிழ்நாட்டுக்கு குதிரையையே கொண்டுவந்தான்னும் அதுக்கு முன்னாடி தமிழருக்கு பரியேற்றமே தெரியாதுன்னும் கண்டபடி கதை விட்டுக்கொ(ல்லு
)ள்ளும்.
குதிரை இந்திய விலங்கே கிடையாதுன்னும் அதை ஆரியர்கள் வட இந்தியாக்கு கி.மு. 1500 அளவில் குடிபுகுந்த போது கொண்டுவந்தனர்னு உச்சபச்ச நகைச்சுவை காமெடிகளை அவிழ்த்துவிடும்.

தமிழ்நாட்டில் பரி வரையபட்டதற்கான சான்றுகள் 5000 ஆண்டுகள் முன்னரயே கிடைக்கின்றனவே என கீழுள்ள ஓவியங்களை வைத்து கேட்டுப்பாருங்கள்.
அது உடனே வேற்றுக்கிகவாசிகள் கொண்டுவந்ததுனு கதைவிட ஆரம்பிச்சுருவாங்க.
ஏற்கனவே கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வேற்றுக்கிரகவாசிகள் கதையை அமெரிக்க வந்தேறிகள் தென்னமெரிக்க மண்ணின் மைந்தர்களின் பழைய சான்றுகளை எல்லாம் வேற்றுக்கிரகவாச
ிகளுடையதுன்னு கதைவிட்டதையும் இந்தியத்தொல்லியல் துறையும் கூட பழங்குடிகளின் வரைபடத்தை வேற்றுக்கிரகவாசிகளா என அறிய நாசாவுக்கு அனுப்பிய அவலத்தையும் பதிவு செய்திருந்தேன்.
அந்த பதிவு இந்த இணைப்பில்
வேற்றுக்கிரகவாசி கதைகளை கட்டுவதன் மூலம் மண்ணின் மைந்தர்களின் சான்றுகளை எல்லாம் வஞ்சகமாக திரிப்பதற்கு மிகப்பெரிய உலக சதிகள் அரங்கேறி வருகின்றன.
இதனால் மண்ணின் மைந்தர்கள் கூட அந்த இடத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கதை கட்டி இன தேசியம் எழவிடாமல் பார்த்துக்கொள்வது உலக வந்தேறிகளின் வழக்கம்.
அதாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு திராவிடர்களாக கி.மு. 1500 அப்போதே வந்தனர் என்பது போன்ற கதைகளும் தென்னமெரிக்க பழங்குடிகளுக்கு அறிவை கற்றுத்தந்ததே தற்போதைய வேற்றுக்கிரகவாசிகளான அம்மண்ணின் முன்னால் பூர்விக மக்கள்னும் அந்த வேற்றுக்கிரகத்துக்கு போன முன்னால் பூர்விக மக்களிடம் தற்கால செவ்விந்தியர் குடியேறி பிச்சை எடுத்து அனைத்து கதைகளையும் கற்றது போலவும் என்பது போன்ற கதைகளும் இந்த இரகம்.

இன்னும் தமிழர்கள் விலங்குகள் மூலம் வழிபாடு, மெய்யியல், போர் கலை போன்றவற்றை எப்டிக்கற்றனர் என்பதுலாம் தொகுத்து எழுதினால் பெரிய நூலே வெளியிடலாம்.
இது ஏறுதழுவல் காலம் என்பதால் மஞ்சுவிரட்டு, குதிரையேற்றம் தொடர்பாக தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருக்கும் இரண்டு வரலாற்றுப்பதிவுகள் பற்றி மட்டும் தற்போது படமாக கீழே தந்திருக்கிறேன்.
- தென்காசி சுப்பிரமணியன்

Tuesday, 21 June 2016

சிந்துசமவெளி முருகன்

Indus vally civilization and
Tamil god murugan
சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட முருகன் உருவம் பதித்த நாணயம்
http://en.m.wikipedia.org/wiki/Murugan

(6 ஏப்ரல் 2013)

Friday, 29 January 2016

தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்

தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

‘மொகஞ்சதாரோ’ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும்,
பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.
அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது.
இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும்.

1949 பிப்ரவரி 13-ம் வெளியான 'ஃபார்வேர்டு பிளாக் கட்சி'யின் இதழான 'கண்ணகி'யில்
*இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ்*
என்ற தலைப்பில்
திரு.முத்துராமலிங்கத்தேவர்
எழுதிய கட்டுரையிலிருந்து.

நன்றி: பெருமாள் தேவன் அவர்களின் வலைப்பூ.

Monday, 5 October 2015

ஒருலட்சம் ஆண்டுகள் பழமை

ஒரு லட்சம் ஆண்டு பழமை

சென்னை அருகே ஒரு நூறாயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பழைய கற்கால மாந்தர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் குடியம் (கூடியம் என்றும் கூறுகிறார்கள்) சிற்றூரிலிருந்து 4.கி.மீ தொலைவில் உள்ள இரண்டு குகைகள் நூறாயிரம் (1,00,000)ஆண்டுகள் பழமையானது என்றால் நம்பமுடிகிறதா?
நுழையமுடியாத அளவு இன்னும் 16குகைகள் உள்ளனவாம்.
இந்த இரண்டு குகைகளுக்கும் செல்ல ஒற்றையடிப் பாதையில் நடந்துதான் செல்லவேண்டும்.
மாணிச்சம்மன் கோவில் என்ற ஒரு சிறிய கோவில் உள்ளது.
அதனால் குடியம் மக்கள் அவ்வப்போது போய்வருகிறார்கள்.

இதை முதன்முதலில் கண்டறிந்தவர் வழக்கம்போல ஒரு பிரிட்டிஷ்காரர் ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote) என்பவர்.
1863ல் கண்டறிந்தாராம்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபுட் தனது வாழ்நாள் முழுதும் சேகரித்த தொல்லியல் தடய பொருட்களின் எண்ணிக்கையானது இந்தியாவில் இருந்து 4135,
இலங்கையில் இருந்து 128 ஆகும்.

இவை அனைத்தையும் 1904 -ல் சென்னை அருங்க்காட்சி ( Chennai Museum) வசம் ஒப்படைத்துள்ளார்.
இவை அனைத்தும் பல ஆண்டுகளாக பூட்டி வைக்க பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் நடபெற்று வந்தாலும், 1965க்குப் பிறகு இப்படி ஒரு குகை இருந்தது என்பதையே தமிழக அரசு மறந்துவிட்டது.
நன்றாக புதர்மண்டிய பிறகு இதை புலிக்குன்றம் 'பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி' வேறு ஆக்கிவிட்டார்கள்.

இந்தநிலையில் இது பற்றி கேள்விப்பட்ட தகவல் தொழில்நுட்பத் (I.T)துறையில் இருக்கும் திரு.ரமேஷ் யந்த்ரா என்பவர் விக்கிபீடியாவில் தேடிப்பார்த்துள்ளார்.
எதுவுமே கிடைக்கவில்லை.
இப்படி ஒரு பெருமை உலகிற்கு தெரியாமல் உள்ளது என்பது அவரால் தாங்கமுடியவில்லை.

தானே இதை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டுவது என்று முடிவுக்கு வந்தார்.
தனது நண்பரான திரு.வசந்தகுமார் என்பவரை சேர்த்துக்கொண்டார்.

இதை சாதிக்க அத்தனை எளிதாக விட்டுவிடுவார்களா அரசு அதிகாரிகள்?
முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
ஒருமுறை இசைவு (அனுமதி)கொடுத்துவரச் சொல்லி எல்லாம் ஆயத்த(தயார்) நிலையில் இருக்கும்போது இசைவு இல்லை என்று திரும்பிப்போகச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி பல அரசு அதிகாரிகளின் அசட்டைப் போக்கையும் மீறி,
தானே பொருள் செலவு செய்து,
நேரத்தை கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்து,
அலைந்து திரிந்து,
பல தமிழார்வலர்களிடம் உதவி கேட்டு,
மூன்றாண்டுகள் படாதபாடு பட்டு தனி ஒருவனாக ஒரு தரமான ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார்.

‘Gudiyam Caves: Stone age rock shelter of South India'
எனும் இவரின் ஆவணப்படம், கடந்த மே மாதம் (பிரான்சில்)நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும் பெற்றுள்ளது.

"வந்தேறிகளின் தேசமாக பல நாடுகள் இருக்கின்றன.
தொடர்ச்சியாக மனித குலம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரதேசங்கள் இந்த பூமியில் மிகக் குறைவு.
அவற்றில் தமிழகமும் ஒன்று.
கற்காலத்திலிருந்து மனிதன் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழும் மண் இது என்பதை அடித்துச் சொல்கிறது குடியம் குகை!’’
- ரமேஷ் யந்திரா.
(குங்குமத்திற்கு அளித்த பேட்டியில்)

https://ta.m.wikipedia.org/wiki/குடியம்_குகை
http://gudiyamcaves.rameshyanthra.com/
www.rameshyanthra.com

நிஜம் நிகழ்ச்சியில்
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=Vsm-yYIYGk8

2014ல் இங்கே மக்களைக் கூட்டிச்சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ்,
மக்கள் வந்து பார்த்து செல்ல இப்பகுதி சுற்றுலாத் தலமாக ஆக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்று கூறினார்.

ஒரு மண்ணாக்கட்டியும் நடக்கவில்லை
www.dinamani.com/tamilnadu/2015/09/25/அறிவித்து-ஓராண்டு-ஆகியும்-ச/article3045921.ece

மறுபடியும் புதர்மண்டிப் போகுமோ?????