Showing posts with label பிராமி. Show all posts
Showing posts with label பிராமி. Show all posts

Tuesday, 4 July 2017

2800 ஆண்டுகள் பழமையான கொற்கை பானையோடு மறைக்கப்படுவது ஏன்?

தற்போது வரை (2016 AD) கிடைத்திருக்கும் தமிழி எழுத்தில் மிகப்பழைய எழுத்துப்பொறிப்பு கொற்கையில் கிடைத்த 'ஆதன்' என பெயர் பொறித்த பானையோடு ஆகும்.

கரிமநாட்காட்டி படி இதன் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு (கி.மு. 755 ± 95).
இதை நடன காசிநாதன் போன்றோர் தன் நூல்களில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஆனால் இதை அதிகம் வெளிவரவிடாமல் செய்வதற்கும் இதை பரவலான ஏற்பை பெறாமல் இருக்க செய்வதற்கும் மத்திய தொல்லியல் துறையினரால் உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் தான் கீழுள்ளவர்கள்.

இவர்கள் வெளியிடும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கீழே கொடுத்துள்ளேன்.

1. அமர்நாத் ராம்கிருஷ்ணா -
கீழடி தொல்லியல் ஆய்வாளர்.
பாண்டிமுனி கோயிலை பௌத்த கோயில் என்றது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை மண்ணடுக்கும் அதன் கீழ் ஆற்றுப்படுகையும் வருகின்ற மாதிரி இருக்கும் கீழடியை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தவர்.
இதன் மூலம் அசோகருக்கு பின்னர் வந்த எழுத்துப்பொறிப்புகளை மட்டும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

2. சுப்பராயலு -
கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று சொன்னவர். மறைமுகமாக களப்பிரர் கட்டினர் என கதை விட்டவர்.

3. பத்மாவதி அணையப்பன் -
களப்பிரர் காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதாக தொடர்ந்து கதையளப்பவர்.
காஞ்சிபுர ஐயனார் கோயிலை பௌத்த கோயில்னு புழுகித்தள்ளியவர்.

4. ஐராவத மகாதேவா -
அசோகப்பிராமிக்கு பின்னர் தமிழ் எழுத்துக்கள் வந்ததுன்னு தொடர்ந்து கதையளப்பவர்.
ஜைனர்களால் தமிழ் எழுத்துக்கள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதுன்னு கதைவிட்டதும் அல்லாமல் அதை உலகளவில் பிரபலம் அடையச்செய்தவர்.

நாலவதாக சொல்லப்பட்ட மகாதேவாவின் கருத்து எளிதாக அடிபட்டு விட்டது.
அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைவிட பழமையான எழுத்துக்கள் தமிழக்கதில் ஏற்கனவே கிடைத்திருந்தன.

நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கி.மு. எட்டாம் நூற்றாண்டு பானையோட்டை நோக்கி ஆய்வாளர்கள் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழ் எழுத்துக்களை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பழமையோடு தடுத்து நிறுத்த உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்டவர்களே மேலே நான் சொன்னவர்களும் இன்னும் பலரும். 
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஜைனம் பௌத்தம் போன்றவை வடக்கில் உருவாகி அவர்களே தமிழ்நாட்டுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டுவந்தார்கள் என்ற கருத்தை நோக்கியே இதை வளர்த்துச்செல்வார்கள் இவர்கள்.

இவர்களிடம் நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கரிமநாட்காட்டி படி கி.மு. எட்டாம் நூற்றாண்டு அளவில் பழமையான கொற்கை பானையோட்டை பற்றி ஏன் நீங்கள் பேசுவதே இல்லை என கேட்டுப்பாருங்கள்.
இஞ்சி தின்ற குரங்குகள் போல விழிப்பார்கள்.
இல்லை சமாளிப்பு காரணங்கள் எதையாவது சொல்லி கடந்துவிடுவார்கள்.

எதனால் அப்படி?
கி.மு. எட்டாம் நூற்றாண்டுனா மகாவீரா, புத்தா போன்றவர்களை விட பழமையான காலமாக தமிழ் வந்துவிடும்.
அப்புறம் எப்படி ஜைனம் பௌத்தத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆரிய திராவிட தலித்திய நாரதப்பூச்சாண்டி அரசியலை செய்ய இயலும்?
அதனால் தான் கி.மு. எட்டாம் நூற்றாண்டு கொற்கை பானையோடு பற்றி அமர்நாதன்களும் பத்மாவதிகளும் பேசமாட்டார்கள்
- தென்காசி சுப்பிரமணியன் (கூர்ங்கோட்டவர்)
25 ஜூன்

Thursday, 30 March 2017

ஓ பழமி

எடக்கல் (பாலக்காடு) கல்வெட்டு தமிழில் "ஓ பழமி" என்றே உள்ளது.
அதை "இ பழம" என்று மலையாளமாக திரிப்பதை எதிர்த்து நடன.காசிநாதன் அளித்த விளக்கம்.

மலையாளத்தில் பழமையான சான்று எதுவும் கிடையாது.

தமிழரின் சேரநாடே இன்றைய கேரளா,
அது முழுக்க முழுக்க தமிழருக்கே சொந்தம்.

Tuesday, 21 February 2017

தமிழ் எழுத்து கூட்டெழுத்தே -2

ஆங்கிலத்தின் சிறப்பு அதன் எளிமையான எழுத்துமுறைதான் (ரோமானிய எழுத்துரு).

தமிழின் எழுத்தானது அதைவிடவும் எளிமையானது.

தமிழை எழுத தற்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் கையெழுத்துக்கான கூட்டெழுத்துக்களே.

நாம்தான் அதைப் பயன்படுத்துவதில்லை.

அவற்றை தனித்தனியாக எழுதாமல் சேர்த்து எழுதலாம்.
மிகவும் எளிது.
சிறிய மாற்றம் செய்தால் போதும்.

(பழைய எழுத்துருவை மறக்காமல் இருக்க ஆங்கிலத்தில் பழைய எழுத்துருவை Capital என்று பயன்படுத்துவது போல நாம் பயன்படுத்தலாம்)

3 மார்ச் 2015 அன்று முகநூலிலிட்டது
https://m.facebook.com/aathi1947/albums/551128658324125/?start_index=12

தமிழ் எழுத்து கூட்டெழுத்தே

ஆங்கிலத்தின் சிறப்பு அதன் எளிமையான எழுத்துமுறைதான் (ரோமானிய எழுத்துரு).

தமிழின் எழுத்தானது அதைவிடவும் எளிமையானது.

தமிழை எழுத தற்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் கையெழுத்துக்கான கூட்டெழுத்துக்களே.

நாம்தான் அதைப் பயன்படுத்துவதில்லை.

அவற்றை தனித்தனியாக எழுதாமல் சேர்த்து எழுதலாம்.
மிகவும் எளிது.
சிறிய மாற்றம் செய்தால் போதும்.

(பழைய எழுத்துருவை மறக்காமல் இருக்க ஆங்கிலத்தில் பழைய எழுத்துருவை Capital என்று பயன்படுத்துவது போல நாம் பயன்படுத்தலாம்)

Friday, 17 June 2016

பிராமி எழுத்துகள் தமிழ் எழுத்துகளா?

பிராமி-யில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழுக்கு எப்படி சொந்தம்?

பிராமி என்பதே தமிழ்ச்சொல் இல்லையே?!

விளக்கம்:
"பிராமி” என்ற பெயரை முதன்முதலில் சூட்டியவர் ப்யூலர் என்ற மேல்நாட்டார்தான்.

தமிழி என்பதே சரி.

மேலும் அறிய..

நடனகாசிநாதனின் பேட்டி
http://thoguppukal.wordpress.com/2011/
03/13/பண்டைத்-தமிழ்-எழுத்தின்/

Saturday, 25 July 2015

ஓமன் நாட்டில் தமிழ்

ஓமன் நாட்டில் கிடைத்துள்ள கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துருகள்
http://tamilnet.com/art.html?catid=7
9&artid=35707

திருவள்ளுவர் காலத்துத் தமிழ் எழுத்து

திருவள்ளுவர் காலத்துத் தமிழ் எழுத்து.
எழுத்துக்கள் மேல் வரும் தொடர்ச்சியான கோடு தவறு என்கின்றனர் பலர்.

தமிழ் எழுத்துகள் பிராமி ஆனது எப்படி?

தமிழ் எழுத்துகள் பிராமி ஆனது எப்படி?

1850-களில் ஜேம்ஸ் ப்ரின்ஸெட் என்பவர்தான் இந்தியாவில் காணப்படும் கல்வெட்டு எழுத்துகளை பிராஹ்மி என்றே குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு முன்பே இப்பெயரானது ப்யூலர் என்ற ஆய்வாளரால் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகாலக் கல்வெட்டுகள் ப்ராஹ்மி வகையினதாக இருந்தாலும், ப்ராகிருத மொழிக்கான ப்ராஹ்மி எழுத்துகளிலிருந்து மாறுபட்டிருந்தது.

1924-ல் கே.வி.சுப்பிரமணிய ஐயர், இதற்குத் தீர்வுகாண தமிழ்-பிராஹ்மி என்று தனியாக பெயரிட்டு வகைப்படுத்தினார்.

கி.மு.300 வாக்கில் எழுதப்பட்டதான 'சமவயங்க சுத்த' என்ற சமண நூலில் 18 வகையான எழுத்துகள் குறிக்கப்பட்டுள்ளன.
பம்பி, தாமிலி போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன.

அதில் 'பம்பி' என்பது பிராகிருத எழுத்தையும்,
'தாமிலி' என்பது தமிழ் எழுத்தையும் குறிக்கிறது என்று கொள்ளலாம்.

இது தமிழர்கள் அக்காலத்தில் பயன்படுத்திய எழுத்துமுறை 'தமிழி' என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமளிக்கிறது.

ஆக அவ்வெழுத்துக்களை தமிழ்பிராமி என்றழைக்காது தமிழி என்றே அழைக்கலாம்.

பெரும்பட்டன் கல்

தாய்லாந்தில்
க்வான் லுட் பட் (khwan lut pat)
என்ற இடத்தில் அருங்காட்சியகத்தில்
கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த
'பெரும்பட்டன் கல்' என்ற படிமம் வைக்கப்பட்டுள்ளது.

2200 ஆண்டுகள் பழமையான தமிழர்-தாய்லாந்து தொடர்பு ஆதாரம்

2200 ஆண்டுகள் பழமையான தமிழர்-தாய்லாந்து தொடர்பு ஆதாரம்

தாய்லாந்தில் முனைவர்.பெல்லினா என்ற பிரெஞ்சு அகழ்வாய்வாளரால் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு தமிழ்-பிராமி எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
மொழி=தமிழ், எழுத்துமுறை= பிராமி (ப்யூலர் என்ற வெள்ளைக்காரன் வைத்த பெயர்),

இது கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இதில் காணப்படும் எழுத்துக்கள் து-ர-ஓ.