Showing posts with label தமிழ் பரவுதல். Show all posts
Showing posts with label தமிழ் பரவுதல். Show all posts

Wednesday, 11 May 2016

தாய்லாந்து (தாய்)மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்

தாய்லாந்து (தாய்)மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்
------------------------------------
தங்கம் -> தொங்கம்
கப்பல் -> கம்பன்
மாலை -> மாலே
கிராம்பு -> கிலாம்பு
கிண்டி -> கெண்டி
அப்பா -> பா
தாத்தா -> தா
அம்மா -> மே, தான்தா
பட்டணம் -> பட்டோம்
ஆசிரியர் -> ஆசான்
பாட்டன் -> பா, புட்டன்
திருப்பாவை -> திரிபவாய்
வீதி -> வீதி
மூக்கு -> சாமுக்
நெற்றி -> நெத்தர்
கை -> கை
கால் -> கா
பால் -> பன்
கங்கை -> கோங்கா
தொலைபேசி -> தொரசாப்
தொலைக்காட்சி -> தொரதாட்
குலம் -> குல்
நங்கை -> நங்
துவரை -> துவா
சிற்பம் -> சில்பா
நாழிகை -> நாளிகா
வானரம் -> வானரா
வேளை -> வேளா
மல்லி -> மல்லி
நெய் -> நெய்யி
கருணை -> கருணா
விநாடி -> விநாடி
பேய்/பிசாசு -> பிச/பிசாத்
கணம் -> கணா
விதி -> விதி
போய் -> பாய்
சந்திரன் -> சாந்
ரோகம் -> ரூகி
தூக்கு -> தூக்
மாங்காய் -> மாங்க்
மேகம் -> மேக்,மீக்
பிரான், -> எம்பிரான் பிரா
யோனி -> யூனி
சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
சங்கு -> சான்க்
தானம் -> தார்ன்
பிரேதம் -> பிரீதி
நகரம் -> நகான்
பார்வை -> பார்வே
ஆதித்தன் -> ஆதித்
உலகம் -> லூகா
மரியாதை -> மார-யார்ட்
தாது -> தாட்
உலோகம் -> லூகா
குரோதம் -> குரோதீ
சாமி -> சாமி
பார்யாள் -> பார்ய
திருவெம்பாவை -> த்ரீயம்பவாய்

நன்றி: தமிழ்த் தொண்டு (முகநூல்)

மலாய் மொழியில் தமிழ்

மலாய் மொழியில் தமிழ்

அகா (aka) = அக்கா
அசல் (asal) = அசல்
அதிகார (adhikaara) =அதிகாரம்
அண்டை (andai) = அண்டை(அருகே)
அதா (adha) = அது
அதவா (adhawa) = அதுவா?
அபா (abaa) = அப்பா
அமா (amaa) =  அம்மா
அல்பா (alpa) = அற்பம்
ஆயா (aayaa) = செவிலித்தாய்
ஆரா (aara) = ஆறு
இஞ்சி (inji) = இஞ்சி
இலை (ilai) = இலை
உண்டில் (undil) = உண்டியல்
அயா (ayaa) = ஐயா (தந்தை)
கஞ்சி (kanji) = கஞ்சி
கட்டில் (kattil) = கட்டில்
கெடக்காய்க் (kedakaik) = கடுக்காய்
கட்டைக் (kattaik) = கட்டை
கபல் (kapal) = கப்பல்
கபுரா (gapura) = கோபுரம்
கமண்டலம் (kamandalam) = கமண்டலம்
கல்தை (kaldhai) = கழுதை
கன்யா (kanyaa) = கன்னி
காவல் (kaawal) = காவல்
குட்டையன் (kuttaiyan) = குட்டையன்
குட்டைச்சி (kuttaichi) = குட்டைச்சி
கெடை (kedai) = கடை
கூடை (koodai) = கூடை
கூலி (kooli) = கூலி
கெடலை (kedalai) = கடலை
கெண்டி (kendi) = கெண்டி
கொட்லம் (kotlam) = கொத்தளம்
குண்டை (kundai) = கொண்டை
கொலம் (kolam) = குளம்
கோட்டா (kottaa) = கோட்டை
சக்கெரா (chakera) = சக்கரம்
சதை (sathai) = சதை
சவுக்கு (savuku) = சவுக்கு
சாணை (saanai) = சாணை
சின்டனா (chendana) = சந்தனம்
சிதி (sidhi) = சித்தி
சும்மா (chummaa) = சும்மா
செண்பகா (chempaka) = செண்பகம்
சிருட் (chirut) = சுருட்டு
செர்ப்பு (cherpu) = செருப்பு
தட்கலா (thatkala) = தற்காலம்
தெண்டா (dendaa) = தண்டம்
சம்மட்டி (tchammatti) = சம்மட்டி
தெந்தா (denta) = தந்தம்
தாம்பூல் (thaambul) = தாம்பூலம்
தயேர் (thaer) = தயிர்
தாலா (thaalaa) = தாளம்
திரை (thirai) = திரை
நகர் (nagar) = நகரம்
நாடி (naadi) = நாடி
நாலி (naali) = நாழி (நேரம்)
நீலம் (neelam) = நீலம்
பட்டானி (pattaani) = பத்தினி
பட்டில் (battil) = வட்டில்
படா (badaa) = வடை
பவளம் (pawalam) = பவளம்
பரயா (paraiaa) = பறையர்
பாடை (baadai) = வாடை
பாயு (bayu) = வாயு
பித்தம் (pittham) = பித்தம்
பெலங்கு (belanggu) = விலங்கு
பீங்கான் (pinggaan) = பீங்கான்
புட்டு (puttu) = புட்டு
பெங்காட்டி (pengaatti) = பெண்டாட்டி
பெடி (peti) = பெட்டி
பெடில் (bedil) = வெடி
பெர்வீரா (perwira) = பெருவீரன்
பெரிய (peria) = பெரிய ஆள்
பெல்பகை (pelbagai) = பலவகை
பொன்னு (ponnu) = பெண்
மட்ஜம் (matjam) = மச்சம்
மகசுல் (mahasul) = மகசூல்
மந்தம் (mandham) = மந்தம்
மாங்கா (mangga) = மாங்காய்
மாமாக் (mamak) = மாமா
மாணிக்கம் (maanikkam) = மாணிக்கம்
மாலை (maalai) = மாலை
மாளிகை (maaligai) = மாளிகை
மீசை (meesai) = மீசை
முட்டு (muttu) = முத்து
மெட்டை (mettai) = மெத்தை
மொடல் (modal) = முதல்
வள்வி (walwi) = வளைவி (வளையல்)
வேப்பலை (wepalai) = வேப்பிலை
வைரம் (wairam) = வைரம்
ஜெந்தெரா (jendera) = எந்திரம்

நன்றி: ஆராய்ச்சிக் கட்டுரைகள் (நூல்)
ஆசிரியர்: ந.சஞ்சீவி

Thursday, 17 March 2016

இந்திய, திராவிட உணர்வு தவறா?

இந்திய, திராவிட உணர்வு தவறா?
------------------------------------------------------
தமிழ் மண்ணில் மூழ்கிய குமரிக்கண்டம் போக இன்று இமயம் வரை பரவியிருக்கும் பூர்வீக தமிழ்நிலம் சிந்து சமவெளி வரை நீள்கிறது.

நில அமைப்பின் படி படத்தில் காட்டிய பகுதி இயற்கையான எல்லைகளைக் கொண்ட நிலப்பரப்பு.

இந்த நிலத்தின் பழமையான குடிகள் என்ற வகையில் இந்த முழு நிலமும் நமக்கு உரிமையானது என்ற எண்ணம் தமிழர்கள் அனைவரின் அடிமனதில் வேரூன்றி உள்ளது.

தமிழ் இலக்கியம் படிக்காத, வரலாறு தெரியாத ஒரு சராசரி தமிழனுக்கும் இந்த எண்ணம் உள்ளது.

'இமயம் வரை நமது மண்' என்ற இந்த அடிப்படை உணர்வுதான் இந்திய பற்றாக வெளிவருகிறது.

இந்த பகுதியை மீட்டு தமிழர் நாடாக அமைக்க காலம் கடந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

திராவிட உணர்வும் அப்படியே!

'முழு இந்தியாதான் கைவிட்டுப் போனது.
பாதியையாவது தக்கவைப்போம்'
என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
திராவிட உணர்வாக தோற்றம் பெற்றது.

வடயிந்தியரை விட தென்னிந்தியர் தமிழருக்கு (தமிழுக்கு) மிக நெருக்கமானவர்கள்.

ஆனால் அதற்கும் கூட காலம் கடந்துவிட்டது.

ஆனால் (இலங்கையுடன் சேர்த்த) தென்னிந்திய நிலப்பரப்பில் சரி பாதியை மீட்க இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

வடயிந்தியரும் தென்னிந்தியரும் தமிழரில் இருந்து தோன்றியோரே!
ஆனால் 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்' என்ற பழமொழிக்கேற்ப
இன்று இந்திய, திராவிட உணர்வுகள் தமிழரை ஏமாற்றமட்டுமே பயன்படுகின்றன.

எனவே தென்னிந்தியாவில் பாதியை ஆயுதப் போராட்டத்தால் மீட்டு
நமது அரசை நிறுவி
நாம் வல்லரசாக உருவெடுக்கவேண்டும்.
அப்படி செய்தால் இமயம் வரை மீண்டும் தமிழ் மயமாகும் வாய்ப்பு உள்ளது.

ஏன் உலகம் முழுவதும் (இன்று ஆங்கில மொழியைப்போல) தமிழ் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கூட உள்ளது.

Friday, 16 October 2015

தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ்

தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்
------------------------------------
1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய்

நன்றி: தமிழ்த்தொண்டு-Tamil Thondu

Saturday, 25 July 2015

ஓமன் நாட்டில் தமிழ்

ஓமன் நாட்டில் கிடைத்துள்ள கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துருகள்
http://tamilnet.com/art.html?catid=7
9&artid=35707

பானை ஒரி

எகிப்தில் செங்கடல் கரையின் ரோமானியக் கோட்டையில் கிடைத்த 'பானை ஒரி' என்று தமிழ்(பிராமி)ல் எழுதப்பட்டுள்ள கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு

Wednesday, 20 August 2014

செக் நாட்டுத் தமிழறிஞர்

செக் நாட்டுத் தமிழறிஞர்

*==*===*==*==*==*==*

கமில் சுவலபில் (நிரம்ப அழகியர்)
எமனோ,பர்ரோ,மார், கமில்
சுவலபில் ,சுசுமு ஓனோ,குரோ,
அலெக்சாண்டர் துபியான்சுகி, உருதின்,
சாங்க்சிலின்,தக்காசி உள்ளிட்டவர்கள்
தமிழ்மொழியை,தமிழ் இலக்கியங்களைப் பிற
மொழியினர்க்கு அறிமுகம்
செய்து வைத்தனர்///

செக்கோசுலேவியா நாட்டில் உள்ள
பிராகா(Prague) என்னும் மாநகரில் 17-11-1927
ஆம் ஆண்டில் பிறந்தவர்///

சமற்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்
(1952).பின்னர் திராவிட மொழியியலில்
இரண்டாவது முனைவர் பட்டத்தையும்
பெற்றவர்(1959).
1952 முதல் 1970 வரை செக்கோசுலேவியாவில்
அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ்
திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப்
பணிபுரிந்தார்///

கிரேக்கம்,இலத்தீன், செருமன், ஆங்கிலம்,
உருசியன், சமற்கிருதம்,தமிழ் முதலிய
மொழிகள் நன்கு தெரியும்.மலையாளம், இந்தி,
பிரஞ்சு,இத்தாலியன்,போலிசு உள்ளிட்ட
மொழிகளையும் அறிவார்///

செக்நாட்டில் தூதுவரகத்தில் பணிபுரிந்த தமிழ்
அன்பர் ஒருவர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய
கமில் அவர்கள் வானொலி வழியாகவும் நூல்கள்
வழியாகவும் தமிழ் படிக்கத் தொடங்கினார்.
தமிழ் பற்றி பிரஞ்சுமொழியில்
பியாரே மெய்லே(Perre Meile) என்பவர் எழுதிய
Introduction an Tamoul என்ற நூல்
வழியாகவும் தமிழ் அறிமுகம் கிடைத்தது.
தென்னிந்தியாவிற்கு பலமுறை களப்பணி ஆய்வுக்காக
வந்துள்ளவர்.
சென்னைக்கு இவர் வருகை தரும்பொழுதுதமிழ
கத்து அறிஞர்கள்
இவருக்கு வரவேற்பு நல்கியும்
பாராட்டு வழங்கியும் பன்முறை ஊக்குவித்துப்
போற்றியுள்ளனர்///

தமிழ்மொழி,இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள்
செய்து வெளியிட்டிருக்கிறார்.
நற்றிணை, புறநானூறு நன்கு அறிந்தவர்.
சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்து வருகிறார்.
கல்கியின் நாவல்களையும்
மொழிபெயர்த்து வருகிறார்.தானே தமிழ்
கற்றவர்.தமிழ் ஒலியே கேட்காத நாட்டிலிருந்துக
கொண்டே தமிழ் கற்றவர்///

செக் மொழியில் குழந்தைகளுக்குத்
தென்னிந்தியா பற்றி ஒரு நூல்
எழுதியுள்ளதையும்,கடந்த நான்காண்டுகளில்
உருசியா, செக்,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்
தமிழ் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார்///

தமிழின் மிகப்பெரும் இலக்கண நூலான
தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும்
அளவிற்கு இவருக்குத் தமிழ்ப்புலமையும்
ஆங்கிலப்புலமையும்
இருந்துள்ளமை நமக்கு வியப்பளிக்கின்றது///

தமிழ் நூல்கள் பலவற்றை ஆங்கிலத்திற்கும்
செக்மொழிக்கும் பெயர்த்துள்ளார்.
கமில் சுவலபில் அவர்கள் தமிழ்
இலக்கியம்,இலக்கணம்.ஆகியவற்றில் கவனம்
செலுத்தியதுடன் மொழியியல் நோக்கிலும்
இம்மொழியையும் இலக்கியங்கள்,இல
க்கணங்கள், நாட்டுப்புறவியல் சார்ந்த
செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்திப்
பார்த்துள்ளார்.
இவர் மொழிபெயர்த்த தொல்காப்பியம் உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய
உரைவளத்தில் எடுத்தாளப்பட்டு
ள்ளது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்////

தமிழ்க்கடவுளான
முருகனிடத்து இவருக்கு மிகுந்த
ஈடுபாடு உண்டு.திருமுருகன் பற்றி இவர்
எழுதியுள்ள ஆங்கில நூலில் முருகபெருமான்
குறித்த அனைத்துச் செய்திகளும்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சிவன், முருகன்,வள்ளியை மணம் முடித்தல்
தொடர்பான புராண,இதிகாச் செய்திகள்
விளக்கப்பட்டுக் களப்பணிகள் வழியாகச்
செய்திகள் சிறப்புடன் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கிய
வரலாற்றை எழுதும் கமில்.சுவலபில் அவர்கள்
Smile of Murugan
என்று பெயரிட்டுள்ளமை இவரின் முருக
ஈடுபாட்டுக்கு மற்றொரு சான்றாகும்.
அதுபோல் நடராசரின் ஆனந்த தாண்டவம்
பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்///

தமிழ் யாப்புப் பற்றி அறிஞர் சிதம்பரநாதன்
செட்டியார் அவர்கள் வழியாக
ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவலபில் தமிழ்
யாப்புப் பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில்
எழுதியுள்ளார்///

தமிழ்-சப்பானிய மொழி உறவு குறித்த கருத்தில்
நல்ல கருத்து கமில் சுவலபில்
அவர்களுக்கு இருந்துள்ளது.
அறிஞர் தமிழண்ணல் சப்பான் தலைநகர்
டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்
கமில்சுவலபில் அவர்களைக் கண்டு பழக
ஒரு கிழமை வாய்ப்புக்
கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார்///

தமிழுக்கு அமைந்த செவ்வியல்
பண்புகளைத் தொடக்கத்தில்
சான்றுகள்வழி விளக்கியவரும் கமில்
சுவலபில் அவர்களே///

தமிழண்ணல் அவர்களிடம் மதுரையில் சங்க
இலக்கியம் கற்ற தக்ககசி அவர்கள்(சப்பான்) கமில்
சுவலபில் அவர்களிடம் சங்க இலக்கியம்
பற்றி முனைவர் பட்ட
ஆய்வு மேற்கொண்டவர்///

இவர்தம் நூல்கள் கட்டுரைகள்
பல்லாயிரம் பக்கங்களில் வெளிவந்து தமிழின்
சிறப்பை உலகிற்கு வெளிக்காட்டுவனவாகும்.
தமிழின் எல்லாத்துறை பற்றியும்
மேலைநாட்டிற்கு அறிமுகம் செய்தவர் கமில்
சுவலபில்///

தமிழ் வழக்குச்சொற்கள் பற்றியும்
எழுதியுள்ளார். அறிஞர் வானமாமலை அவர்கள்
தமிழில் எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல
கட்டுரைகளை ஆங்கிலத்திலும்
செக்மொழியிலும் மொழிபெயர்த்துள்ளதாக
அறியமுடிகிறது.
குறிப்பாக முத்துப்பட்டன்
கதை பற்றி வானமாமலை அவர்கள்
சரசுவதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக்
கண்ட கமில் சுவலபில் அவர்கள்
அக்கதையை உலகிலேயே மிகச்சிறந்த
கதைப்பாடல்களுள்
இது ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்///

பாரதியார் பற்றி 1952 அளவில் மிகச்சிறந்த
ஆய்வுகளை நிகழ்த்தி தரமான
கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிப் பாரதிப்
புகழை உலகிற்கு உணர்த்தியவர்.
'தமிழ்.கல்சர்' என்னும் இதழில்
பாரதி குறித்து பல கட்டுரைகளைக் கமில்
சுவலபில் எழுதியுள்ளார்.பாரதி பாடல்கள்
(bharathi s Poems) என்னும் தலைப்பில் இவர்
எழுதியுள்ள
கட்டுரை பாரதியை நன்கு அறிமுகம்
செய்கிறது///

உ.வே.சா வின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
என் சரித்திரம் என்னும் நூலை கமில் சுவலில்
அவர்கள் The Story of My Life என்னும் பெயரில்
மொழிபெயர்த்துள்ளார்///

500 க்கும் மேற்பட்ட
படைப்புகளை வழங்கியவர்///

கமில் சுவலபில் நூல்கள் சில:
1.Siddha Quest for Immortality Sexual,
Alchemical and Medical Secrets of the Tamil ///

5.Tamil Literature, E.J. Brill,Leiden, 1975,
6.Companion Studies to the History of Tamil
Literature,
7.The Smile of Murugan: On Tamil Literature of
South India,
8.The Poets of the Powers: Magic, Freedom, and
Renewal,
9.Literary Conventions in Akam Poetry
10.Two Tamil Folktales: The Story of King
Matanakama, the Story of Peacock Ravana,
11.Lexicon of Tamil Literature,
12.Nilgiri areal studies,
13.Introducing Tamil literature,
14.Ananda-tandava of Siva-sadanrttamurti: The
development of the concept of Atavallan-Kutta
perumanatikal in the South Indian textual and
iconographic tradition,
15.Introduction to the Historical Grammar of
the Tamil Language,
16.The Irulas of the Blue Mountains, Foreign &
Comparative Studies
17.Tamulica et Dravidica: A Selection of Papers
on Tamil and Dravidian Linguistics,
18.Classical Tamil Prosody An Introduction
19.The Story of My Life (2volumes)
20. History of Tamil Literature
21.Tirumurugan
22.The Poets of Powers
23.Tamil Literature
24.Tolkappiyam - collatikaram
25.Tamil Trations on Subrahmannya Murugan
முழுதும் படிக்க:
http://muelangovan.blogspot.com.es/2008/11/
17-11-1927.html?m=1
( முழுதும் படித்தால் தமிழின்
பெருமைகளையெல்லாம் எந்த
அளவுக்கு திராவிடம் விழுங்கியுள்ளது
என்று புரியும்;
தமிழின் கால்தூசு பேறாத சமஸ்க்ருதம்
தமிழை பின்னுக்குத் தள்ளியுள்ளமையும்
புரியும்).

https://m.facebook.com/photo.php?fbid=478626512241007&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739