Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday, 14 August 2024

இந்தியா உடைவது ஏன் தேவை

இந்தியா உடைவது ஏன் தேவை?!

 குழந்தையிலேயே பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்டு "இந்தியா ஒற்றை நாடு" என்று நம்ப வைக்கப்பட்டு போலி தேசபக்தி ஊட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள் ஒரு நிமிடம் இதைப் படியுங்கள்!
 இன்று நமக்கு இருப்பது இரண்டே வழிதான்!
ஒன்று இந்தியா என்கிற பெயரும் அமைப்பும் வாழ வேண்டும்
அல்லது அந்த அமைப்பில் சிக்கியுள்ள 140 கோடி மக்கள் வாழ வேண்டும்!
 இதில் நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?!
 இந்தியா என்கிற அமைப்பு நீடித்தால் அதன் பலன் சில லட்சம் எண்ணிக்கையுள்ள உயர்தட்டு ஹிந்தியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்! 
 இந்த அமைப்பை உடைத்து அதில் இருக்கும் இனங்களுக்கு நாடுகளை கொடுத்துவிட்டால் அந்த மாபெரும் அதிகாரப் பகிர்வு கோடிக்கணக்கான மக்களுக்கு அனைத்து வகையிலும் பலனளிக்கும்!
 வறுமை ஒழியும்! கல்வி கிடைக்கும்! பொருளாதாரம் மேம்படும்! வாழ்க்கைத் தரம் உயரும்! 
 ஆங்கிலேயர் காலத்தில் கூட இந்திய மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்களில் காந்தி எந்த போராட்டமும் செய்யவில்லை!
 அன்று சமஸ்தானங்களுக்கு கிடைத்த அதிகாரப் பகிர்வு தரப்படும் என்றுதான் எல்லா இனங்களும் போராடியது!
 ஆனால் 1947 இல் அமைந்த இந்திய அரசமைப்பு அப்படியே ஆங்கிலேய சுரண்டல் அமைப்பின் நகலாக இருக்கிறது!
 அன்று தரப்பட்ட சில அதிகாரங்கள் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு விட்டன!
 நம் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியா இது இல்லை!
 அன்று நாம் எதிர்பார்த்து போல நமக்கு நாடு (அதாவது state) கிடைத்தது ஆனால் நாட்டுக்குரிய எந்த அதிகாரமும் இல்லாத நிர்வாகம் தரப்பட்டுள்ளது!
நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்!
 தமிழகத்தின் பார்வையில் பார்த்தால் மேலே ஹிந்திய மேல்தட்டு வர்க்கம் அது அப்பாவி ஹிந்திய மக்களை ஒன்று திரட்டி தென்னகத்தை ஒடுக்க அதை எதிர்க்காத தென்னைத்தார் இழப்பை ஈடுகட்ட தமிழகத்தை ஒடுக்குகின்றனர். தமிழக மக்கள் ஹிந்திய பொதுமக்களை விட மூன்று மடங்கு ஒடுக்குதலுக்கு ஆளாகின்றனர்.
 இது எல்லாமே இந்தியா என்கிற பெயரால் நடக்கிறது!
 இதன் மூலம் பெறப்படும் கொழுத்த லாபம் ஹிந்திய மேல்தட்டு வர்க்கத்தின் கருப்புப் பண சேமிப்பில் குவிகிறது.
 தமிழகத்தின் உள்ளேயும் ஒரு இந்திய சுரண்டல் அமைப்பு உள்ளது.
 இதில் மேல்தட்டு அதிகார வர்க்கம் கீழ்த்தட்டு பெரும்பான்மை மக்களை ஒடுக்கிறது. சாதி பேதமில்லாமல் தமிழக அடித்தட்டு மக்கள் நான்கு மடங்கு ஒடுக்கப் படுகின்றனர். இதற்குக் காரணம் இந்திய அமைப்பு மேல இருப்பதுதான்.
 இதற்கு வர்ணாசிரமம், பார்ப்பனீயம் என்று வெவ்வேறு பெயர் வைத்து திசைதிருப்பு கின்றனர்.
 உண்மையான ஆரியம் இன்றைய இந்திய அரசமைப்புதான்!
 இந்தியா என்கிற அமைப்பை உடைத்து மொழி அடிப்படையில் நாடுகளை அமைத்து அம்மொழி பேசும் இனங்களுக்கு தன்னாட்டை ஆளும் உரிமையையும் கொடுத்துவிட்டால் சில மோதல்கள் எழுந்தாலும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்! 95% இந்திய குடிமக்களுக்கு நன்மையே நடக்கும்!
 இந்தியாவை உடைக்காமல் திருத்திவிடலாம் என்பது கனவிலும் நடக்காது!
 இது ஒரு தானியங்கி அமைப்பு (automatic system) போன்றது!
 மனிதர்கள் மாறினாலும் அமைப்பு மாறாது!
 இந்தியா கையெழுத்து இட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்கள் படி தன் குடிமக்களுக்கு பிரிந்துபோகும் உரிமை தரவேண்டும்!
 ஆனால் அதை மீறி பிரிவினைவாத தடுப்பு சட்டம் போட்டு நமக்கு பிரிவினை பேசும் உரிமையை முதலிலேயே பறித்துவிட்டனர்.
 கைக்கெட்டும் தூரத்தில் ஈழத் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கடைசியில் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது கூட நம்மால் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் நின்றோம்!
 பாராட்ட ஒரு காரணமும் இல்லாமல் இந்த நாட்டைப் போற்றிப் பாடு என்றால் எப்படி முடியும்?! 
 ஆண்டுக்கு ஒருநாள் கூடி கொடியேற்றி கையில் ஒரு இனிப்பை தந்துவிட்டால் தேசப்பற்று ஆகிவிடுமா?!
மீதி 364 நாட்களில் ஏன் இந்த உணர்ச்சி காணப்படுவதில்லை!?
ஏனென்றால் இது உண்மையான உணர்ச்சி இல்லை!
 தமிழின இளைஞர்களே சிந்திப்பீர்!
உங்களுக்கு இந்தியா என்கிற பெயர் வேண்டுமா?! அல்லது இந்திய குடிமக்கள் நலம்பெற வேண்டுமா?!
 இந்தத் துணைக்கண்டத்தில் மூத்த இனமான தமிழினம் இந்தியாவை உடைத்து இந்திய மக்களை காப்பாற்ற முதல் அடி எடுத்துவைக்கட்டும்!
 இன்று இந்தியன் என்று அதிக உணர்ச்சி காட்டுபவனை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள் அவன்தான் இதன் பலனை அனுபவிப்பவன்! 
 அவனைத்தான் நாம் எதிர்க்க வேண்டும்! 
அனைவருக்கும் "மீண்டும் அடிமைப்பட்ட நாள்" ஆறுதல்கள்! 

எழட்டும் தமிழினம்!
உடையட்டும் ஹிந்தியா!
மீளட்டும் துணைக்கண்ட இனங்கள்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு!

Wednesday, 16 August 2017

ஈ.வே.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?

ஈ.வே.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?

சில வந்தேறி திராவிடியா பயல்கள்
அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக்கொடியைக் கொளுத்தினார் என்றும்
இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும்
இரண்டு பொய்களைக் கூறுவார்கள்.

ஈ.வே.ரா ஹிந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.

1965ல் இந்தியெதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும்
அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலைவெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில் 

"திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில்குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.
(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்)"
என்று எழுதியுள்ளார்.
(விடுதலை, 13.02.1965)

இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது.

Thursday, 18 May 2017

ஹிந்துத்வா

ஹிந்துத்வா

ஹந்தியாவும்,
அதன் அடிப்படையான ஹிந்தி மொழியும்
அதன் கொள்கையான ஹிந்துத்வாவும்

ஒரு ஹிந்திய இசுலாமியனின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து உரிமையும் சலுகையையும் வழங்கினாலும் வழங்குமே தவிர

ஒரு தமிழனுக்கு ஒருபோதும் வழங்காது.

அவன் எந்த மதத்து தமிழன் ஆனாலும் சரி.

Thursday, 27 April 2017

இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?

இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?

ஆங்கிலேயன் இந்தி'யாவுக்கு 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை கொடுத்தான்.

வெறும் 6 மாதம் கழித்து இலங்கைக்கு 1948 பிப்ரவரி 4 அன்று விடுதலை கொடுத்தான்.

ஏன் தெரியுமா?

ஆங்கிலேயனின் பிரித்தாளும் தந்திரம் என்பது எளிமையானது போலத் தெரியும்.
ஆனால் உண்மையில் அது கடினமான வேலை.

தொடர்பே இல்லாத பல்வேறு மக்களை போலியான இரு அடையாளங்களுக்குள் அடைக்கவேண்டும்.
பிறகு இல்லாத அடையாளத்துடன் அவர்களை அடித்துக்கொள்ள வைக்கவேண்டும்.

ஆங்கிலேயனின் இந்து-முஸ்லீம் பிரித்தாளுதல் கொள்கை தமிழகத்தைத் தவிர மற்ற இடங்களில் நன்றாக வேலை செய்தது.
  அது காலம் கடந்து ஈழத்தில் கூட வேலை செய்கிறது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் மதப்பிரிவினை ஆங்கிலேயன் எவ்வளவோ முக்கியும் வேலை செய்யவே இல்லை.

அதனால் இங்கே ஆரியர் - திராவிடர் பிரிவினைக் கருத்தியல் வந்தேறிகளைக் கொண்டு விதைக்கப்பட்டது.

வடயிந்தியரை சமாளிக்க தென்னிந்தியரைக் கேடயமாக்கிக்கொள்ள தமிழர்களுக்கும் இது தேவைப்பட்டது.
அதனால் திராவிடத்தை ஆதரித்தனர்.

அதுவேலை செய்தாலும் ஆங்கிலேயர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தமிழர்கள் மீது ஆங்கிலேயருக்கு எப்போதும் அடங்காத எரிச்சல் இருந்தது. இருக்கிறது.

ஏனென்றால் தமிழ்மண்ணைக் கைப்பற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

ஆங்கிலேயப் பேரரசு வீழ்ந்ததற்குக் காரணம் உலகப்போர்,
இதைத் தூண்டியதும் ஒரு தமிழனே!
ஆங்கிலேயரின் எதிரிநாடாக ஜெர்மனிக்குப் போய் அதன் அரசரின் வலதுகரமாகி இங்கிலாந்தோடு போரிடத் தூண்டியவன் செண்பகராமன் என்ற தமிழன்.
இவரே நேதாஜியின் குரு.
இவரே ஜெர்மனியிலிருந்து எம்டன் கப்பலில் சென்னை வந்து ஜார்ஜ் கோட்டையில் குண்டுபோட்டது.

ஜெர்மனி தோல்வியடைந்தாலும் செண்பகராமனை இங்கிலாந்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.

நேதாஜியை உருவாக்கியதும் தமிழரே.
அவரது படையிலும் பெரும்பாலும் தமிழர்.

நேதாஜி மட்டுமல்லாமல்,
காந்தியை (21 ஆண்டுகளில்) மகாத்மாவாக உருவாக்கியதும் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே.
அவரது அகிம்சை வழிமுறையும் தமிழர்களின் கருத்தியலே.

அதாவது வடயிந்தியர்களை தலைவனாக்கி அவனையே கேடயமாக்கி பின்னால் தமிழர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர் மீது அறவழி ஆயுதவழி என்று இருமுனைத் தாக்குதல்.

தமிழர்களின் அரசியல் நகர்வுகளால் எதிர்விளைவுகளும் நடந்தன.
அதனாலும் இழப்புகள் ஏற்பட்டன, ஏற்படுகின்றன.

ஆங்கிலேயருக்கு உண்மையான தோல்வியைத் தந்த தமிழர்களை ஆங்கிலேயர் பண்ணாத கொடுமைகள் இல்லை.
அவர்களின் மிகமோசமான அடக்குமுறையை மிக நீண்டகாலம் தாங்கியவர்கள் தமிழர்கள்.

ஆனாலும் ஈ.வே.ரா, அம்பேத்கர், நேரு, (பிற்கால) காந்தி ஆகியோரைப் போல ஆங்கிலேயருக்கு விசுவாசமான ஒரு அடிமை தமிழினத்தில் அவர்களுக்குக் கடைசிவரை கிடைக்கவேயில்லை.

(இதில் ஆங்கிலேயர் இடத்தில் ஹிந்தியரும்
வடயிந்தியர் இடத்தில் திராவிடரும் இப்போது இருக்கிறார்கள்)

ஆங்கிலேயன் தன் படுதோல்விக்கு பழிவாங்கத்தான்,
இங்கிலாந்தை விடப் பெரியநாடான தமிழர்நாட்டை இரண்டாக உடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான் இலங்கையை தனிநாடு ஆக்கிவிட்டு போனார்கள்.

என்ன செய்வது இடையில் கடல் புகுந்துவிட்டதே?!

இயற்கையை வெல்ல முடியுமா?

முடியும்.

நிலம் பிரிந்து இருந்தால்தானே இரண்டு நாடு ஆகும்.

கடலையே மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்திவிட்டால்?!

முடியாது என்று எதுவுமில்லை.
கடலையும் நிரப்ப முடியும்.

நிரப்பிக் காட்டியிருக்கிறார்கள்.

நெல்லூர் முதல் அம்பாறை வரை,
பாலக்காடு முதல் புத்தளம் வரை,
பெங்களூரில் இருந்து அனுராதபுரம் வரை,
தமிழர்நாடு ஒரே நிலமாக,
உலகின் 77வது பெரிய நாடாக,
எல்லா வளங்களுடன்,
முப்படைகளுடன்,
வல்லரசாக,
ஒரு நல்லரசாக
இப்புவியில் வீற்றிருக்கும்.

Tuesday, 10 May 2016

தனித்தமிழ்க் குடியரசு சட்டம்

தனித்தமிழ்க் குடியரசுசட்டம்

கையெழுத்திட்ட மபொசி, காமராசர், ஜீவா மு.வரதராசனார், மற்றும் பலர்

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=103

தமிழ் நாட்டுக்கு ஒரு தனிக்குடியரசு:
1946 இல் அரசியல் நிர்ணயசபை அமைக்கப்படுகின்ற அந்தக் காலகட்டத்தில் தமிழகவரலாற்றில் முக்கியமான ஒரு செய்தி...

அப்போது ம.பொ.சி என்ன செய்தார் என்றால்,
மொழி வழியாகமாநிலங்கள் பிரிக்கப்படும்போது,
ஒவ்வொன்றும் தனிக்குடியரசாக
விளங்கவேண்டும்.
அப்படி தமிழ்நாட்டிற்கென்று தனிக்குடியரசு அமைக்கப்பட்டு அதற்கென்றுதனி அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட வேண்டும்.

அது தமிழர்களுக்குரிய அரசியல் சட்டத்தை வகுக்கவேண்டும்.

இதேபோல் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கானஅரசியல் சட்டத்தை வகுக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் சட்டம்வகுக்கக்கூடாது என்று ம.பொ.சி அறிக்கை கொடுத்தார்.

அதில் அவருடன் 16 தலைவர்களும்கையெழுத்திட்டிருந்தார்கள்.
முதலாவது கையெழுத்து அன்றைய தமிழ் நாடு காங்கிரஸ்கட்சியின் தலைவராக இருந்த காமராஜர் கையெழுத்து ஆகும்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜீவானந்தம் போன்றமுக்கியமான தலைவர்கள் 16 பேர் கையெழுத்திட்டு அரசியல் சாசனம் என்ற பெயரிலே வெளியிட்டார்கள்.
மதிப்புக்குரியஎன்னுடைய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தான்இந்தச் சாசன அறிக்கையை வரைந்தவர்.

-பழ.நெடுமாறன்

Thursday, 17 March 2016

இந்திய, திராவிட உணர்வு தவறா?

இந்திய, திராவிட உணர்வு தவறா?
------------------------------------------------------
தமிழ் மண்ணில் மூழ்கிய குமரிக்கண்டம் போக இன்று இமயம் வரை பரவியிருக்கும் பூர்வீக தமிழ்நிலம் சிந்து சமவெளி வரை நீள்கிறது.

நில அமைப்பின் படி படத்தில் காட்டிய பகுதி இயற்கையான எல்லைகளைக் கொண்ட நிலப்பரப்பு.

இந்த நிலத்தின் பழமையான குடிகள் என்ற வகையில் இந்த முழு நிலமும் நமக்கு உரிமையானது என்ற எண்ணம் தமிழர்கள் அனைவரின் அடிமனதில் வேரூன்றி உள்ளது.

தமிழ் இலக்கியம் படிக்காத, வரலாறு தெரியாத ஒரு சராசரி தமிழனுக்கும் இந்த எண்ணம் உள்ளது.

'இமயம் வரை நமது மண்' என்ற இந்த அடிப்படை உணர்வுதான் இந்திய பற்றாக வெளிவருகிறது.

இந்த பகுதியை மீட்டு தமிழர் நாடாக அமைக்க காலம் கடந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

திராவிட உணர்வும் அப்படியே!

'முழு இந்தியாதான் கைவிட்டுப் போனது.
பாதியையாவது தக்கவைப்போம்'
என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
திராவிட உணர்வாக தோற்றம் பெற்றது.

வடயிந்தியரை விட தென்னிந்தியர் தமிழருக்கு (தமிழுக்கு) மிக நெருக்கமானவர்கள்.

ஆனால் அதற்கும் கூட காலம் கடந்துவிட்டது.

ஆனால் (இலங்கையுடன் சேர்த்த) தென்னிந்திய நிலப்பரப்பில் சரி பாதியை மீட்க இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

வடயிந்தியரும் தென்னிந்தியரும் தமிழரில் இருந்து தோன்றியோரே!
ஆனால் 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்' என்ற பழமொழிக்கேற்ப
இன்று இந்திய, திராவிட உணர்வுகள் தமிழரை ஏமாற்றமட்டுமே பயன்படுகின்றன.

எனவே தென்னிந்தியாவில் பாதியை ஆயுதப் போராட்டத்தால் மீட்டு
நமது அரசை நிறுவி
நாம் வல்லரசாக உருவெடுக்கவேண்டும்.
அப்படி செய்தால் இமயம் வரை மீண்டும் தமிழ் மயமாகும் வாய்ப்பு உள்ளது.

ஏன் உலகம் முழுவதும் (இன்று ஆங்கில மொழியைப்போல) தமிழ் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கூட உள்ளது.

Wednesday, 2 March 2016

மீள்-தமிழ்மயமாக்கல் (காணொளி)

வடக்கு மீள்-தமிழ்மயமாக்கல்

https://mobile.facebook.com/story.php?story_fbid=666558380114485&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.666558380114485%3Atl_objid.666558380114485%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1459493999%3A551827335184017668

Wednesday, 17 February 2016

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?

மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி
--------------------------------
1930ல் இந்திய சார்பு

" இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக
இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.
இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும்,
ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம்"
('குடிஅரசு', 09.11.1930)
-----------------------
1938 ல் தனித்தமிழ்நாடு

உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்.
மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம்.
மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம்.
இதற்குத்தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?
எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம்.
இனியாவது, ‘தமிழ்நாடு தமிழருக்கே!’
என்று ஆரவாரம் செய்யுங்கள்!
உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்!
உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.
நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்ட தோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால்
நமக்கு இதைவிட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்!
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னா பின்னமாக்குங்கள்!
தமிழ்நாடு தமிழருக்கே! -
(குடிஅரசு 23.10.1938)
----------------
1947 ல் மீண்டும் இந்திய சார்பு

“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும்,
தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.” (ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947)
---------------------------
1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு

“என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும்
என் இன மக்களாகிய தமிழர்களுடையவும்,
என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும்,
சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன்,
சென்று வருகிறேன்.
வணக்கம்! வணக்கம்! வணக்கம்!" (விடுதலை தலையங்கம் 15.12.1957)
-------------------------
1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு

இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே.
இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே.
தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா?
அது ஜனநாயகமா?
(ஆனந்தவிகடன் பேட்டி 11.4.1965)
---------------------------
1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு

“நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும்
பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும்
‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.
பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பொது மக்களே! இளைஞர்களே!
பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்."
(1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்)

Saturday, 12 December 2015

வானொலியில் புளுகும் ஹிந்தியா

வானொலியில் புளுகும் ஹிந்தியா

மக்கள்தொகை பதிவு செய்ய அரசு விளம்பரம் தமிழக வானொலியில் ஆங்கிலத்தில் வருகிறது.

சுழியம் (zero) கண்டுபிடித்தது இந்தியராம்.
கணினி மொழியில் சமஸ்கிருதம் பயன்படுகிறதாம்.

இரண்டுமே பொய்.

சுழியத்தைக் கண்டுபிடித்தோர் பாபிலோனியர்.
ரிக் பிரிக்ஸ் என்பவர் 1985ல் artificial intellenge language உருவாக்க சமஸ்கிருதத்தைப் பரிந்துரைத்தது ஏற்கப்படவில்லை.

எத்தன தடவடா சொல்றது?
நாங்க போலி இனமான இந்தியன் இல்லடா
மரபினமான தமிழன்டா

Tuesday, 8 December 2015

ஹிந்தியாவுக்கு அண்டைநாடாவோம்

ஹிந்தியாவுக்கு அண்டைநாடாவோம்

தமிழகம் ஹிந்தியாவுக்கு கட்டும் வரி  ஆண்டுக்கு
85,000 கோடி.

வெள்ள நிவாரணத்திற்கு தமிழகம் 5,000 கோடி கேட்டது;
ஆனால் ஹிந்தியா தந்த வெள்ள நிவாரண நிதி
வெறும் 1000 கோடி.
இதுவே,
ஹிந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி
14,000கோடி.

ஹிந்திய அரசு பூட்டானுக்கு வழங்கிய உதவி
8,000கோடி.

ஹிந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவி
10,000கோடி.

இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி
50,000 கோடிக்கும் மேல்.

எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் ஹிஅரசு வழங்கியது
6500 கோடி.

இதுக்குதான் நாமளும் அண்டைநாடாகணும்னு சொல்றது

(Bala Chandran அவர்தம் பதிவிலிருந்து)