Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Sunday, 5 April 2020

கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு


கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு
இதுவரை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன?!
யோசித்ததுண்டா?!
இதை நீங்கள் யோசித்தால் ஒன்று தெளிவாகப் புரியும்.
நமது தேவைகளை நிறைவேற்றுவது மாநில அரசாங்கம் மட்டுமே!
மத்திய அரசு எதுவுமே செய்வதில்லை.
அது வரி என்கிற பெயரில் மாநிலங்களைக் கொள்ளையடித்துவிட்டு 'அதைச் செய்' 'இதைச் செய்' என்று கட்டளை போடுவதோடு சரி!
தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என்று வைத்துக்கொள்வோம்.
தோராயமாக (தலைக்கு 3000 ரூபாய் என) ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் 12,000 ரூபாய் மத்திய அரசுக்கு வரி கொடுக்கிறோம்.
இத்தனை பணத்தையும் வாங்கிக்கொண்டு மத்திய அரசு நமக்குத் தருவதென்ன?!
ரயில் போக்குவரத்து, தபால் சேவை, ராணுவ பாதுகாப்பு (?), விமான சேவை (திவாலாகிவிட்டது) , ஒன்றிரண்டு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.
அவ்வளவுதான்! அவ்வளவேதான்!
தமிழகம் கட்டும் வரி ஒரு ரூபாய் என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி 30 பைசா என்ற அளவில் உள்ளது.
வரியை மட்டும் இங்கே கூறியுள்ளேன்.
அதைப்போல இரண்டு மடங்கு நமது வளங்களைச் சுரண்டுகிறது ஹிந்தியா!
எவ்வளவு இக்கட்டான சூழலிலும் நமக்கு மத்திய அரசு உதவுவது கிடையாது!
நாம் கட்டும் வரி 100 ரூபாய் என்றால் பேரிடர் காலங்களில் நாம் 10 ரூபாய் கேட்பதும் மத்திய அரசு 10 பைசா விட்டெறிவதும் வாடிக்கையாகிவிட்டது.
[இதையெல்லாம் புள்ளிவிபரமாக தமிழ்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ளது.]
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் மத்திய அரசு செய்தவற்றைப் பார்ப்போம்.
முன்னெச்சரிக்கை :-
ஜனவரி 31 இல் கொரோனா இந்தியாவிற்கு வந்துவிட்டது.
மோடி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கூடி பேசியது மார்ச் 4 இல்.
இதற்குப் பத்துநாட்கள் கழித்து கொரோனா ஒரு தேசிய அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.
மார்ச் 16 இல் சார்க் கூட்டமைப்பு நாடுகளுடனான சந்திப்பில் கொரோனா பாதிப்பு விவாதிக்கப்படுகிறது.
மார்ச் 19 இல் பொதுமக்கள் 22ம் தேதி ஊரடங்கைக் கடைபிடிக்க மோடி வேண்டுகோள் விடுக்கிறார்.
மார்ச் 22 இலிருந்து தரையில் ஓடும் சைக்கிள் வரை தடுத்து நிறுத்திய மோடி அரசு மார்ச் 25 இல் தான் (முதல் வேலையாக செய்திருக்கவேண்டிய) விமான சேவை ரத்து என்பதை செயல்படுத்துகிறது.
மருந்து துறை :-
இந்திய மருந்து தயாரிப்பு துறை படுத்து பல ஆண்டுகள் ஆகின்றன.
   1990 களில் தன் சொந்தக் கால்களில் நின்ற இந்திய மருந்து தயாரிப்பு கம்பெனிகள்
இப்போது சீனாவை நம்பி இருக்கின்றன.
சென்ற ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதியான மருந்துப் பொருள் மட்டுமே நாட்டின் மொத்த மூலப் பொருள் இறக்குமதியில் 68%  என்கிறது எக்கனாமிக் டைம்ஸ்.
இப்போது சீனாவே படுத்துவிட்டது.
மருந்து எப்படி இருக்கும்?!
மலேரியாவுக்கு பயன்படும் மருந்தை பயன்படுத்தலாம் என்று தெரிந்தவுடன் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்தனர். அது ஒன்றுதான் குறிப்பிடும் அளவான செயல்பாடு.
மருத்துவத் துறை :-
இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவில்தான் மருத்துவ வளர்ச்சி இருக்கிறது.
(இந்தியாவிலேயே தமிழகம்தான் இதில் முதலிடம் 260 பேருக்கு ஒரு டாக்டர்!
இதிலும் நீட் என்ற மண்ணைப் போட்டுவிட்டனர்).
41 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்த இத்தாலியே கொரோனாவிடம் மண்டியிட்டுவிட்டது என்றால் இந்தியா எவ்வளவு தீவிரமாக செயல்படவேண்டும் என்பதை யூகிக்கவும்.
ஆராய்ச்சித் துறை :-
கிருமிகள் ஆராய்ச்சியில் இதுவரை இந்தியா துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
மற்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தனியாக நிதி ஒதுக்கி தீவிரமாக இயங்கிவருகின்றன.
பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் பலர் தமிழர்களாக இருக்கின்றனர்
அதாவது அறிவாளிகள் அத்தனைபேரும் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியாயிற்று.
உயிரியியல் தொடர்பான பரிசோதனைக் கூடங்கள் நாட்டில் மொத்தமே 40 தான் இருக்கின்றன.
அவைகளும் பல பல்கலைக் கழகங்களில் கல்விக்குத்தான் பயன்படுகின்றன.
அவசரகால உற்பத்தி :-
மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு மற்றும் தற்காப்பு உபகரணங்கள் தயாரிப்பு என்றாவது கவனம் செலுத்தவேண்டும்.
இங்கே மருத்துவர், செவிலியர், காவலர் என எவரிடமும் போதுமான மூச்சு கவசமோ, கையுறைகளோ, கிருமிநாசினி நீர்மங்களோ இல்லை.
(இருக்கின்றவையும் மாநில அரசுகள் கொடுத்தவை)
இது தொடர்பாக மார்ச் 18 இல் ஆபரேசன் செய்யப்படும்போது அணியப்படும் மூச்சுக் கவசங்களைத் தயாரிக்கும் அரசு நிறுவனமான HLL மற்றும் நெசவுத்துறை அதிகாரிகள் கூடிப் பேசினர்.
தயாரிப்பை அதிகரிப்பது பற்றியும் 75 லட்சம் மூச்சு கவசங்கள் உருவாக்கத் தேவை இருப்பது பற்றியும் HLL இரண்டு மாதங்களாக வலியுறுத்தி வந்ததை அந்த சந்திப்பிற்கு பிறகும்கூட நிறைவேற்றவில்லை.
இப்போது வரை HLL க்குத் தேவையான துணி சப்ளை செய்யப்படவில்லை.
பல உள்ளூர் நிறுவனங்கள் உற்பத்திக்கு அனுமதி கேட்டும் இதுவரை தரப்படவில்லை.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் "10 லட்சம் N-95 மூச்சுக் கவசங்கள் கேட்டோம். கிடைத்ததோ வெறும் 50,000 தான்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பண உதவி:-
மார்ச் 24 இல் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு 1500 கோடி அளித்ததோடு சரி.
(பட்டேல் சிலை செலவு 3,000 கோடி என்பதை நினைவில் கொள்க)
பிரதமர் நிவாரண வைப்பு 3000 கோடி,
மாநிலங்களுக்கான நிவாரண வைப்பு 20,000 கோடி,
தேசிய பேரிடர் நிவாரண வைப்பு 25,000 கோடி என எல்லாப் பணத்தையும் மத்திய அரசு வைத்திருக்கிறது.
உள்நாட்டிலும் ல நடிகர்களும் தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.
(இந்த திட்டத்திற்கு பெயர் என்ன தெரியுமா?! "PM cares")
இப்படியாக தனியே 6500 கோடி வரை கிடைத்துள்ளது.
ஆனால் இதுவரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை.
கேரள வெள்ளத்தின் போது வெளிநாட்டு வாழ் மலையாளிகளிடம் நன்கொடை வாங்கக்கூடாது என்று கூறிய மத்திய அரசு தற்போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் நன்கொடை பெற்றுவருகிறது.
என்றால் கொரோனா ஒரு தேசியப் பேரிடர்தானே?!
என்றால் மாநிலங்களுக்கு மேற்கண்ட நிதியை சிறிதுசிறிதாக ஒதுக்கலாம்தானே?!
ஆனால் மோடி இந்த நிலையிலும் பெருமை பீத்த கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கூட்டாக செயல்பட அழைப்பு விடுத்து அதற்கான கூட்டு நிதிக்கு 75 கோடியை கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
[படம்: பிரதமர் நிவாரண நிதியில்  வருமானம் மற்றும் செலவு ஒப்பீடு.
இதிலேயே தெரியும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் லட்சணம்]
ஆள் உதவி :-
இத்தனை பெரிய நாட்டில் போலீஸ் பலம் மிகவும் குறைவு.
இதனால் மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறி வருகிறது.
எப்படியும் பாகிஸ்தான் படையெடுக்கப் போவதில்லை ராணுவத்தை அனுப்பாவிட்டாலும் துணைராணுவத்தையாவது அனுப்பியிருக்கலாம்.
மத்திய மருத்துவ நிறுவனங்களில் முக்கிய டாக்டர்கள் கேரளா பாதிக்கப்பட்ட போது அங்கே வந்த உதவியது உண்மைதான்.
ஆனால் அதன் பிறகு எங்குமே மத்திய அரசு சார்பில் வழிநடத்த திறமையான மருத்துவ மேதை ஒருவர் கூட எந்த மாநிலத்திற்கும் அனுப்பப்படவில்லை.
மனவலிமை ஊட்டுதல் :-
அறிவிப்புகளை மோடி அறிவிக்கிறார்.
மக்களிடம் மேல்வலியாமல் எதையாவது செய்யச் சொல்கிறார்.
அவ்வளவுதான்.
இதுவரை நிலை என்ன?
இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளோம்?
பிற நாடுகள் இதற்கு என்ன செய்கின்றன? என அறிவுப் பூர்வமாக எதையும் பேசுவதில்லை.
உணர்வுப் பூர்வமாக பேசுகிறார் அவ்வளவே!
அவர் தன் திருவாயை அசைத்ததைத் தவிர வேறு என்ன செயல்பாட்டைச் செய்தார் என்று கேட்டால் விரல்களை அசைத்து ட்வீட் போட்டதைச் சொல்லலாம்.
மற்றபடி கொரோனா அமைத்துள்ள போர்க்களத்தில் அவர் கால்வைக்கவே இல்லை.
மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி என்றால்
முதலில் லொக்கு லொக்கு என்று இருமிவிட்டு கச்சாமுச்சா என்று பிணாத்தும் ஒரு ரிங்டோனை அனைவருக்கும் வைத்தனர்.
அதனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்.
மோடியும் எப்போதும் கெக்கரா பெக்கரா என்று இந்தியில்தான்  பிணாத்துகிறார்.
மக்களுக்கு புரியும்படி பேசமுடியாவிட்டால் கீழே சப் டைட்டிலாவது போடலாமே?!
அப்படி என்ன திமிர் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மக்களுக்கு ஓடோடி உழைப்பது மாநில அரசும் அதில் பங்குவகிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
மத்திய மந்திரிகளில் மோடி தவிர எவரும் வாயை அசைக்கும் வேலையைக் கூட செய்வது இல்லை.
பொருள் உதவி :-
கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறியும் பரிசோதனை கிட் வாங்கவோ தயாரிக்கவோ எந்த முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை.
கொரோனா பாதிப்பு சோதனை செய்வதில் இந்தியா மிகவும் பின்னே இருக்கிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Mylab எனும் ஒரு நிறுவனம் தயாரித்த பரிசோதனை கிட் மார்ச் 24 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சோதனைக்கு 2000 ரூபாய் செலவாகும் அதுவும் அந்த ஒரே நிறுவனத்தை நம்பியிருக்கும் நிலை.
இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது!
சீனா கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஒரே நாளில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டியது ஆனால் மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை.
மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசின் கட்டிடங்களை பயன்படுத்த அளிக்கலாம்.
மத்திய அரசு நடத்தும் நடத்தும் மருத்துவமனைகளில் ஒன்றை இதற்கு தனியாக அர்ப்பணிக்கலாம்.
இப்படி எதையும் செய்யவில்லை.
மலேரியா மருந்து மற்றும் பரிசோதனை கிட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி வரிகளைத் தளர்த்தி அனைவருக்கும் கிடைக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
திட்டமிடுதல் :-
வீட்டிலேயே இருங்கள் என்று கூறியதைத் தவிர கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லாதபோதே நமக்குப் புரிகிறது இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுகட்ட எந்த திட்டமும் இருக்காது என்று.
தொழில்துறை மீண்டுவர எத்தனை நாள் ஆகும் அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யவேண்டும் என்று தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நாடுகளைப் பார்த்து நமக்கு ஏற்றதுபோல ஒரு திட்டத்தை தயாரிப்பதும் அவசியம்
.
அனேகமாக மோடியின் அடுத்த திட்டம் "மொட்டைமாடியில் நடனம் ஆடுவதாக" இருக்கலாம்.


Wednesday, 22 November 2017

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!
பாதுகாப்பு இருக்கு ஆனா இல்ல!

(மத்திய அரசுக்கு பிடிக்காதோரின் சொத்துகளை பிடுங்க வசதியாக)   சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார் (நேற்றைய பாலிமர் செய்தி).

படம்: தனிநபர் ஆதார் ரகசிய தகவல்கள் 210 அரசு வெப்சைட்டில் வெளியீடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெறப்பட்ட தகவல்.
(ஜியோ சிம் அரசு சார்ந்ததா என்று கேட்கக்கூடாது!)

நீதிமன்றம் ஆதார் திட்டம் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று (காலம் கடந்து) அறிவித்ததை இவர்கள் கால்தூசியளவும் மதிக்கவில்லை என்பதையும் பேசக்கூடாது.

"காங்கிரஸ் கொண்டுவந்துள்ள ஆதார் தீவிரவாதிகள் ஊடுருவ வழிவகுக்கும்.
எல்லை மாநிலமான என் குஜராத் முதலில் பாதிக்கப்படும்" என்று மோடி முதலில் எதிர்த்ததையும் மறந்துவிடவேண்டும்.

ஜெய்ஹிந்தி! என்று கூறிக்கொண்டு அடங்கிக்கிடந்தால்
எல்லையில் பத்துநாளுக்கு ஒருவர் வீதம் ராணுவவீரர்கள் சாகிறார்களே அது குறையும்.

Wednesday, 18 October 2017

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

2005 - 2013 ல் மன்மோகன் பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்த கடன் 36 லட்சம் கோடி.

அதாவது மொத்த கார்ப்பரேட் கடனையும் சேர்த்தால் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வயிற்றிலும் அடித்து தலைக்கு 29,000 ரூ பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு கொடுத்துள்ளான் மன்மோகன்.

இதில் அதிகமாக 72,000 கோடி அதானிக்கும்
1,13,000 கோடி அம்பானி குழுமத்திற்கும் கொடுத்துள்ளான்.
அதாவது அம்பானி - அதானி குடும்பம் வசதியாக உண்டு உறங்கி கொழுக்க ஒவ்வொரு இந்திய குடிமகனிடமும் 1850 ரூ பிடுங்கப்பட்டுள்ளது.

கொடுத்ததோடு சரி திருப்பி கேட்கவேயில்லை.
2013 வரை திரும்ப வந்தது மிக மிக குறைவு, ஒன்றுமே இல்லை எனலாம்.

2013 ல் புது வேலைக்காரன் மோடி வந்தான்.
வந்தவன் முதலாளிகளின் காலில் விழுந்து கும்பிட்டு,
"ஐயா! சாமீ! கொஞ்சமாவது திருப்பி கொடுங்க.
அப்பதான் இன்னும் அதிகமாக கடன் தரமுடியும்" என்று கோரிக்கை வைத்தான்.

"என்னது வாங்கிய பணத்தை திருப்பித் தரணுமா?
போடா வேலைக்கார நாயே!" என்று கூறிவிட்டு விஜய் மல்லையா வெளிநாடு போய்விட்டான்.

அவனது கடன் 9,091 கோடி.
இன்று வரை அவன் சொத்துகளை விற்கமுடியாமல் அல்லாடுகின்றன வங்கிகள்.
(அதிலும் அவனுடைய 103 கோடி மதிப்புள்ள கிங்பிஷர் ஹவுஸ் ஐந்துமுறை ஏலம் விடப்பட்டு சரியான விலைக்கு வாங்க ஆளில்லாமல் ஏலம் தோல்வியில் முடிந்துள்ளது)
எல்லா சொத்துக்களையும் விற்றாலும் 4300 கோடி குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படும்.
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் சட்டைப் பையிலிருந்தும் 32 ரூ மல்லையாவால் எடுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது).

மல்லையாவை விட எட்டு மடங்கு கடன்காரன் அதானி.
மோடியை வேலைக்கு அமர்த்திய முதலாளி இவன்தான்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது இவனது கடன் 96000 கோடி.
இவன் ஒருவனது கடன் மட்டுமே ஒட்டுமொத்த விவசாய கடனுக்கு சமமாகும்.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 716 ரூ)

அனில் அம்பானியின் தற்போதைய கடன் 1,21,000 கோடி
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இவன் 902 ரூ கொடுக்கவேண்டும்)

முகேஷ் அம்பானியின் கடனோ 1,87,000 கோடி
(ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏறத்தாழ 400 ரூ தரவேண்டும்)

அதிகம் பேசப்படாத குழுமம் எஸ்ஸார் குழுமம்.
கடன் அம்பானியை விட கொஞ்சம் குறைவு. அதாவது 1,01,500 கோடி.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 757 ரூ)

இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அரக்கன் டாடா குழுமம்.
பல வெளிநாடுகளிலும் இது கிளைபரப்பி இருப்பதால் இந்தியாவில் இதன் கடனை சரியாகக் கூறமுடியவில்லை.
இரண்டு லட்சம் கோடி வரை இருக்கலாம்.
(தலைக்கு 1400 ரூ வரும்).

இதையெல்லாம் படிக்கும் நீங்கள் என்னதான் முக்கி முக்கி சம்பாதித்தாலும் வாழ்நாளில் ஒரு கோடி சொத்து சேர்க்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் கஷ்டப்பட்டு உழைத்து வரிகட்டி வங்கியில் போடுவோமாம்.
மத்திய அரசு நோகாமல் மொத்தமாக எடுத்து கார்ப்பரேட்காரனுக்கு அள்ளி அள்ளி கொடுக்குமாம்.
அது அங்கு சுற்றி இங்கு சுற்றி நமது தலையிலேயே கடனாக வந்து விழுமாம்.

நம்மை கொள்ளையடித்து வடயிந்தியராவது வாழ்கிறார்களா என்றால் இல்லை.
அத்தனையும் பெருமுதலாளிகளின் கணக்கில் போய் சேருகிறது.
அதை அந்த பெருமுதலாளி தன்வாழ்நாள் முழுவதும் செலவுசெய்ய முடியாது.
ஆக யாருக்குமே நன்மை பயக்காது நமது பணமெல்லாம் வீணாகிறது.

இந்தியாவை விட அதிகம் கடன் உள்ள நாடுகள் 23 இருக்கின்றன.
  அவை அனைத்தும் வளர்ந்த நாடுகள்.
கடனும் வாங்கி வளர்ச்சியும் அடையாமல் அனைத்தையும் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்த்ததால்
இன்று பிறக்கும் ஒரு குழந்தை 53,800 ரூ கடனாளியாக பிறக்கிறது.
இந்த கடனும் கூடிக்கொண்டே போகிறது (குறிப்பாக மோடி வந்தபிறகு).
ஏழாண்டுகளில் இந்த தனிநபர் கடன் ஏறத்தாழ இரு மடங்கு ஆகியுள்ளது.
(இத்தனைக்கும் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சம்தான்)

இந்தியாவின் பொருளாதாரத்தை 3ல்1 பங்கு தாங்கிக்கொண்டு நிற்கும் தமிழகம் உழைத்து கொட்ட,
வடயிந்தியன் அதிலும் குறிப்பாக குஜராத்தியன் பணம் சேர்த்துக்கொண்டே போகிறான்.

நாமோ சேமிப்பையும் வரியையும் வடக்கே அள்ளி இரைத்துவிட்டு தண்ணீருக்கும் பாதுகாப்புக்கும் ஹிந்தியனிடம் மன்றாடி நிற்கிறோம்.

கார்ப்பரேட் பணக்காரர்களிலோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு தமிழனைக் கூட பார்க்கமுடியவில்லை.
(தி.மு.க குடும்பத்தைக் கூட நாம் தெலுங்கன் கணக்கில்தான் சேர்க்கவேண்டும்)

கார்ப்பரேட் திட்டங்கள் முதலில் தமிழ் மண்ணை குறிவைத்தே வருகின்றன.
நாமோ போராடி போராடி சாகிறோம்.

இப்படி ஒரு வறுமையான நாட்டிடம் கொடூரமான ஆட்சியாளர்களிடம் நாம் ஏன் சிக்கித்தவிக்கிறோம்?

கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் இந்த ஹிந்திய அரசிடமிருந்து நாம் பிரிந்து தனிநாடு அமைப்போம்.
இதன்மூலம் நமது மண்ணில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஒழிப்போம்.
தமிழர்நாட்டிலும் முதலாளித்துவம் வளராது தடுப்போம்.

நமது நெற்களஞ்சியம் முற்றாக அழிக்கப்படவுள்ளது.
கதிராமங்கலம் உட்பட பல இடங்களில் வேலை தொடங்கிவிட்டது.

இப்போது விழிக்காவிட்டால் தமிழ்நாடு ஒரு சோமாலியா ஆவதை யாராலும் தடுக்கமுடியாது.

Friday, 21 July 2017

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ..ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.

தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு,

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.
அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.
(இன்றுவரை நடந்தும் வருகிறது)

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன்(CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன்
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

  அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க
அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.
அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.
எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்.

ஆக
தி.மு.க
அ.தி.மு.க
கம்யூனிஸ்ட்
பா.ஜ.க
காங்கிரஸ்

அனைவரும் இதில் கூட்டாளிகள்.

Thursday, 6 July 2017

மோடி இஸ்ரேலுக்கு அளித்த தமிழ் செப்பேடு


பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேல் பிரதமருக்கு அளித்த 9 -10நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வட்டெழுத்து செப்பேடு, சேர அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் வணிகம் செய்ய வந்த யூதர்களுக்கு அளித்தது.
(மோடி அவரை இந்திய அரசர் என்று மழுப்பினார்)

தகவல்: Karthikeyan Rathinavelu .

Sunday, 2 July 2017

ஜி.எஸ்.டி மாநில உரிமைக்கு எதிரானது _ மோடி

2013 பிப்ரவரியில் ஜி.எஸ்.டி -ஆல் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய 9,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்

2013 அக்டோபரில் ஜி.எஸ்.டி மசோதா அமைப்பதை எதிர்த்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி GST வந்தால் 40,000 கோடி ரூபாய் குஜராத்துக்கு இழப்பு ஏற்படும் என்று கூறினார்.

Saturday, 1 July 2017

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,

"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.

உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.

காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"

மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.

நன்றி: Jose Kissinger

Thursday, 4 May 2017

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

வெள்ளைக்காரன் கொண்டுவந்த குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் கைரேகை எடுக்கும் முறையின் நவீன வடிவம்தான் ஆதார்.

அவனாவது ஒரு குறிப்பிட்ட மக்களைக் கண்கானிக்க அதைச் செய்தான்.

ஆனால் மோடி நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அதைச் செய்கிறான்.

இதை அரசு மட்டும் பயன்படுத்தினால் பெரிய பிரச்சனை இல்லை.

இதை மோ(ச)டி அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கிறது.

பணம் படைத்தவனெல்லாம் எல்லாம் அறிந்த கடவுளாக உருவெடுப்பான்.

இதன்மூலம் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையை கண்கானித்து அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, தேவையானது ஆகியவற்றை அறிந்து அந்த சந்தைக்கு ஏற்ப அவர்களால் விற்பனை செய்யமுடியும்.

தேவையில்லாததை விளம்பரம் செய்து விற்கவும் முடியும்.

உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒருவனிடம் உன்னால் மோதமுடியுமா?!

Tuesday, 11 April 2017

டெல்லியில் நடப்பது போராட்டமா?

டெல்லியில் நடப்பது போராட்டமா?

தமிழர்கள் வீரம் செறிந்தவர்கள்.
அதை முதலில் புரிந்துகொண்டு போராடுங்கள்.

அரை அம்மணமாக நின்றுகொண்டு ஹிந்திக்காரனிடம் வெறும் நட்ட ஈடு கேட்பது போராட்டமா?

சொல்லப்போனால் தமிழரின் மானம் கப்பல் ஏறிக்கொண்டிருக்கிறது

இதற்கு தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க வாய்ப்பு குறைவு

(உண்மய புரிஞ்சிக்காம சோறுபோட்ட விவசாயினு பொங்குவானுகளே)

30 மார்ச், 10:33 AM
------------------------
அவுத்து காட்டுனதோட ஏன்டா நிறுத்திட்ட அய்யாக்கண்ணு?!

அப்டியே குனிஞ்சு நாலு இந்திக்காரன ஏறவிட்டு பாரேன்

எதுனா பிச்ச போடுவானுக!

த்தூ மானங்கெட்ட நாய்ங்களா >.<

(49 நிமிடங்கள் முன்)

Saturday, 11 March 2017

தேர்தல் என்றாலே மோ(ச)டி

1008 முறை சொல்லிவிட்டேன்.

இங்கே தேர்தல் என்பதே மோசடி.

மக்களை திட்டவேண்டாம் போராளிகளமக்களை திட்டவேண்டாம் போராளிகளே!

15 ஆண்டுகளாக உயிரைப் பணயம்வைத்து போராடிய ஐரோம் ஷர்மிலா 100 ஓட்டு கூட வாங்கவில்லையாம்.

எந்த மக்களும் அவ்வளவு நன்றிகெட்டுபோகவாய்ப்பில்லை.

உ.பி இல் பாஜக மாபெரும் வெற்றியாம்.

பா.ஜ.க வுக்கு உ.பி இல் வாய்ப்பு மிக மிக குறைவாக இருந்தது.
காரணம் ஏழைமக்கள் அதிகம் வாழும் அந்த மாநிலம் ரூபாய் நோட்டு தடையால் பட்டபாடு.
அவனவன் மோடி மீது கொலைவெறியில் இருந்தான்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போல வாக்குச்சீட்டு முறை வரவேண்டும்.

ஆனாலும் பெரிய மாற்றம் வராது.

இதையேதான் தமிழக தேர்தலின் போதும் சான்றுகளுடன் கூறியிருந்தேன்.

நடந்தது ஒரு மோசடித் தேர்தல் vaettoli.blogspot.com/2016/05/blog-post_21.html?m=1

Wednesday, 22 February 2017

ஜக்கி ஒழிக்க ஒரே வழி

இங்கே ஒரு ராபின் ஹுட் பிறக்கவேண்டும்...

மீண்டும் ஒரு வீரப்பனார்...

ஜக்கி வாசுதேவ் பிறர்மகளை மொட்டையடித்து போதை கொடுத்து அடிமையாக்கி

சீராட்டி பாராட்டி வளர்த்த அவனது நவநாகரீக மகளைக் கடத்தி

அவன் பணத்தையெல்லாம் பிடுங்கவேண்டும்

அந்த ஜக்கி வாசுதேவ் காடழித்து கட்டிய ஆசிரமத்தில் நுழைந்து

அவனை ஜட்டியோடு அடித்து
கர்நாடகாவிற்கே திருப்பி விரட்டவேண்டும்.

அவன் ஆசிரமத்தை குண்டு வைத்து தகர்த்து

அவன் தன் முகத்தையே நகலெடுத்து கட்டிய சிவன் சிலையை உடைத்து தூள்தூளாக்கி

அந்த வந்தேறிப்பயல் தனக்காக திருப்பிக்கொண்ட காட்டு ஓடையை பழைய பாதையில் மீண்டும் திருப்பவேண்டும்.

பரிசாக தீவிரவாதப் பட்டமும் தேசதுரோக வழக்கும் அதன் முடிவாக தூக்கோ துப்பாக்கித் தோட்டாவோ கிடைக்கலாம்

ஆனால் பழங்குடிகளும் மண்ணின் மைந்தர் குடும்பங்களும்  யானைகளும் அதன் குட்டிகளும் அவனை என்றும் வாழ்த்தும்

Monday, 26 December 2016

எல்லையில் நம் ராணுவ வீரர்கள்....

எல்லையில் நம் ராணுவ வீரர்கள்....

ஆமாப்பா 10 நாளைக்கு ஒரு ஹிந்திய அரசின் இராணுவ வீரன் கொல்லப்படுகிறான்.

நீங்களும் அதேமாதிரி சாவுங்க.

2011 ல் 30 பேர்
2012 ல் 17 பேர்
2013 ல் 60 பேர்
2014 ல் 51 பேர்
2015 ல் 41 பேர்
2016 செப்டம்பர் வரை 64 பேர்

என சராசரியாக 10 நாட்களுக்கு ஒரு இராணுவ வீரனை பாகிஸ்தான் கொல்கிறது.

அதுக்கே ஒண்ணும் கிழிக்காத ஹிந்தியா

வங்கி வாசலில் சாவும் மக்களை திரும்பியா பாக்கும்?

இவனுகளால முடிஞ்சது கிரிக்கெட்ல வீரத்த காட்றது மட்டும்தான்.

(>.<)

Monday, 14 November 2016

என்னாங்கடா மோடி சாதனை?!

என்னாங்கடா மோடி சாதனை?!

நானெல்லாம் பணமே இல்லாத நாடா தமிழர்நாடு இருக்கணும்னு கனவு கண்டவன்.

அத்தியாவசியக் கொலைகள்
vaettoli.blogspot.co.id/2015/11/blog-post_86.html?m=1

பணமில்லாத நாடு
vaettoli.blogspot.co.id/2015/10/blog-post_27.html?m=1

மோடி மண்டையன் உண்மையிலேயே கறுப்பு பணத்த ஒழிக்கணும்னு நெனச்சா ஒரே நாள்ல முடியும்.

1 - Sonia Gandhi (568000)​
2 - A Raja(7800)​
3 - Rahul Gandhi (158000)​
4 - Sharad Pawar (82000)
5 - P. Chidambaram (15040)​
6 - Digvijay Singh (28900)
7 - Ahmed Patel (9000)
8 - Jay Lalita (15000)​
9 - Harish Rawat (75000)
10 - Kapil Sibbal (28000)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்த பத்துபேர புடிச்சு உண்மை கண்டறியும் சோதனை நடத்தி இவங்க சுவிஸ் வங்கில பணம் வச்சிருக்குறது உண்மையானு கண்டுபிடிக்கணும்.

இருக்குனா அந்த பணத்த அவங்களால மட்டும்தான் எடுக்கமுடியும்.

அதனால "ஐயா ராசா அந்த பணத்த எடுத்து நாட்டுக்கு குடுத்துருமா" னு கெஞ்சணும்.

அதுக்கு மாட்டேன்னு சொன்னா அவங்களுக்கு உள்நாட்டுல இருக்குற சொத்துகளையாவது கையகப்படுத்தணும்.
இதுல எதாவது ஒருத்தர் பணத்த நாட்டுக்கு கொடுத்தா கூட பெரிய மாற்றம் ஏற்படும்.

இதுக்கு முன்னால RBI கவன்னரா இருந்த தமிழன் ரகுராம் ராஜன் பணமுதலைகளுக்கு எதிரா உருப்படியான நடவடிக்கை எத்தனை எடுத்தான்?
அவன கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டு இப்ப என்னடா படம் ஓட்டுறீங்க?

அத விட்டுட்டு 500, 1000 பணத்தாள ஒழிக்கிறானாம்.

எந்த பணக்காரன் பணத்தாளா கறுப்பு வைச்சிருக்கான்.

பணமா வைச்சிருந்தா மறைக்கிறது பெரும்பாடு.
வைரமாவோ, தங்கமாவோ மாத்தி வச்சிக்குவானுக.
கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வச்சிருப்பான்.
அது வேணா வெளிய வரும்.

அதயும் சொந்தக்காரன் தெரிஞ்சவனுக்கு ஒரு ஒரு லட்சமா கடன் மாதிரி கொடுத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு மாத்திதர சொல்லிருவான்.
அவனுகளும் கொஞ்சம் கமிசன் எடுத்துகிட்டு மாத்தி கொடுத்துருவான்.

ஆக பாதிக்கப்படப் போறது சராசரி மக்கள்தான்.

கள்ளப் பணத்தாள் அதிகம் புழங்குது.
அத தடுக்க துப்பில்லாம வேற வழியில்லாம இந்த நடவடிக்கை.

கறுப்பு பணத்துக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னுதா புரியல.

Thursday, 6 October 2016

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)

தன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார் அப்துல்கலாம்.

பின்னே! வரும்போதெல்லாம் தன் தெருக்காரர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதையும் அவர்களது மனைவி பிள்ளைகள் வந்து ஒப்பாரி வைப்பதையும் எத்தனை நாள்தான் கேட்டுக்கொண்டு இருப்பது?!

போதாக்குறைக்கு இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட அப்பாவிகளின் கருணைமனுக்களை ஏற்கவில்லை என்ற பழி வேறு!

தமிழனை ஏறெடுத்துப் பார்த்தாலே அது இந்தியாவுக்கு துரோகம் செய்வதுபோல் ஆகிவிடாதா?

நூறு கோடி ஹிந்தியனுக்காக எட்டு கோடி தமிழன் செத்தால்தான் என்ன?

அதனால் அளவுக்கு மிஞ்சிய தேசப்பற்று தலைக்கேறி அப்துல் கலாம் மரைக்காயர் என்ற தமிழர் தன் சொந்த வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார்

படுக்கும்போது தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் இருக்கும் தெற்கு திசையில் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.
பாரதமாதாவின் மடியில் வடக்குநோக்கி தலைவைத்து படுத்துக்கொண்டார்.

பணத்தாசையை விட மோசமான புகழாசை அவர் மனதில் வேரூன்றியிருந்தது.

ஹிந்திய அரசு பிச்சை போட்ட சுமாரான வீடு அது.
'கதவு எண் 10'.
'இராஜாஜி மார்க்' சாலை.
ஹிந்தியனோடு ஹிந்தியனாக டெல்லியிலேயே தங்கிவிட்டார்.

உருப்படியாக எதையும் கண்டுபிடிக்காவிட்டாலும் நூறுகோடி முட்டாள்களில் அவர்தான் சிறந்த அறிவாளி என்று பெயரெடுக்க அவர் செய்யாத தியாகங்கள் இல்லை.

செத்தாலும் ஊர் பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்திருந்த அப்துல்கலாம் மரைக்காயர் ஒருநாள் செத்தும்போனார்.

சாகும்போது தனது பெயர் எட்டுகோடி தமிழர் வரலாற்றில் இல்லாது போனாலும்
நூறுகோடி இந்தியர் வரலாற்றில் என்றும் இருக்கும் என்ற மனநிறைவோடு அவர் ஜூலை 27 2015ல் செத்துப்போனார்.

அவரது கனவு நிறைவேறியதா?

இல்லை. இல்லாத இந்தியாவில் அவர் இல்லாமலேயே போய்விட்டார்.

அவர் இறந்த மூன்று மாதங்களுக்குள் அவர் இருந்த வீடு காலிசெய்யப்பட்டு பொருட்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டன.

"மதராஸி மதர்ச்சோத்,
இவனுக்கு இவ்வளவு நாள் தெண்டம் அழுததே பெரியது.
தூக்கிக் கடாசுங்கள் இந்த வீணையையும் நடராசர் சிலையையும்.
இதென்ன புத்தர் சிலை?!
ஓ ஸ்ரீலங்கா போய் புத்தமத சாமியார் காலில் விழுந்தபோது பொறுக்கிவந்ததா?!
பரதேசிப்பயல், மொத்தமே 4,5 மாற்றுத்துணிகள்தான்.
அதனால் அதிகம் வேலையில்லை.
பொருட்களை இராமேஸ்வரத்தில் இவன் வீட்டில் இறக்குங்கள்.
இவனுக்குப் பிள்ளைகுட்டியெல்லாம் கிடையாதே?!
வாங்க நாதியில்லை என்றால் வாசலில் போட்டுவிட்டு வாருங்கள்"

மறுநாள் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அந்த வீட்டிற்கு குடி வந்தார்.

மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் சொல்லி அறிக்கைவிடும் டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அன்று எதுவும் வெறும்வாயை மென்று கொண்டு இருந்தார்.
இந்த செய்தியை அவருக்குச் சொல்லிவிட்டு அவர் வாயில் அவல் போட்டுவிட்டு போனார் ஒரு ஆம்ஆத்மி தொண்டர்.

"அப்துல் கலாம் வீட்டை நினைவிடமாக்குங்கள்.
அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்.
எவ்வளவு அடி தாங்கியிருக்கிறார்.
நான் தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கிளை ஆரம்பித்துள்ளேன்.
வேறு என்ன செய்வது
மற்ற எந்த மாநிலத்தானுமே என்னை மதிக்கவில்லையே?!"

"ப்ரோக்கர்.. ச்சீ.. பிரதமர் என்றைக்கு உள்நாட்டில் இருந்திருக்கிறார்?!
ஆஸ்திரேலியாவிடம் அதானிக்கு கடன்வாங்கி தந்துவிட்டு
ஆப்பிரிக்காவில் அம்பானிக்கு இடம் வாங்கித்தர போயிருக்கிறார்.
அதனால் அவர் வந்ததும் கேட்டுசொல்கிறேன்.
அவரிடம் என்ன கேட்பது?
மதராசி அதிலும் முஸ்லீம்.
அவனுக்கென்ன மண்ணாங்கட்டி நினைவு இல்லம்?
அதெல்லாம் முடியாது"
ஆர்.எஸ்.எஸ் அலுவலம்... ச்சீ.. பிரதமர் அலுவலகம் பதிலளித்தது.

டெல்லி முதலமைச்சர் என்னையே மதிக்கவில்லையே?!
சரி வழக்கம்தானே என்று கேஜரிவாலும் கேசரி கிண்டி சாப்பிட போய்விட்டார்.

கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே.முகமது முத்துமீரான் மரைக்காயர்,
தன் தம்பிக்கு ஒரு நினைவிடம் அமைக்குமாறும்.
உடைமைகளை அனுப்பிவைக்கவா என்று கேட்டும் கேஜரிவாலுக்குக் கடிதம் எழுதினார்.

  அப்துல்கலாம் கண்டுபிடித்ததை அருங்காட்சியில் வைக்காவிட்டால் ஹிந்தியாவில் அறிவாளிகளே இல்லை என்பது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்.

ஆகவே துண்டுதுக்கடா கண்டுபிடிப்பானாலும் அதையாவது காட்சிக்கு வைப்போம்.
இவ்வளவாவது கண்டுபிடித்தார்களே என்று வெளிநாட்டுக்காரன் கொஞ்சமாகவே காறி துப்புவான்.

"யோவ் கபில் மிஸ்ரா, நீதானே டெல்லி சுற்றுலா அமைச்சர்?!
நீ தமில்நாட் போய் அப்துல் ஸலாம் பொருட்களை எடுத்துவிட்டு வா"

"என்ன அது தமில்நாட்? கேள்விப்பட்டே இல்லையே?!"

  "அட பாவி தமில்னா தெரியாதா?
பிரபாகரன் ஊர்"

"ஓகோ ஸ்ரீலங்காவா? அப்துல் ஹஸன் ஸ்ரீலங்காக்காரனா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே?!"

"ஓ மூஞ்சி! மதராஸ் போய் கடலோரமாக கன்னியாகுமரி வரை போனால் சிறிலங்காவுக்கு ஒட்டி கடலுக்கு இந்த பக்கம்"

"கேக்கவே தல சுத்துதே! எங்கிட்ட பாஸ்போட் கூட இல்ல.
அவன் பொருள இங்க வச்சா எவன் வந்து பாப்பான்?"

" அட ராமா?!
டெல்லியில் எட்டு லட்சம் மதராசிகள் சேரிகளில் கூலிகளாக மாரடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நாள்தோறும் பல மதராசிகள் தாஜ்மகால் பார்க்க உத்திரபிரதேசம் வரை வருகிறார்கள்.
இங்கே அப்துல்கலாம் நினைவிடம் வைத்தால் கொஞ்சமாவது சில்லறை தேறும்.
நீ ராமேஸ்வரம் போ மதராஸிகள் பேசும் கரடுமுரடான மொழி புரியவில்லை என்றால் நம் பழைய ஆள் சுப.உதயகுமார் இருக்கிறார்.
அவரிடம் தொலைபேசிக்கொள்"

கபில் மிஸ்ரா சாவகாசமாக ஆறுமாதம் கழித்து ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் போய் அப்துல்கலாம் பொருட்களை எடுத்துவந்தார்.

சில நாட்கள் பயணமாக இந்தியா வந்த இந்திய பிரதமர் மோடி அலுவலகத்தில் நுழையும்போதே உதவியாளர் கூறினார்.

"இந்த கேஜரிவால் தொந்தரவு தாங்கவில்லை.
அகமது கலாமுக்கு நினைவிடம் அமைக்கப்போகிறானாம்"

இருக்கையில் அமர்ந்த மோடி "யாரு அது அகமது கலாம்?!" என்றார் பழக்கத்தொற்றில் சீட் பெல்ட்டைத் தேடியபடி.

"முன்னாள் ஜனாதிபதி. கறுப்பன். மதராஸி. துலுக்கன். துடைப்பம் மாதிரி முடி வைத்திருப்பானே?!"

"அவன்தான் செத்துட்டானே!"

"ஆமா ஆனா ஒரு வருசம்கூட  ஆகலயே.
மக்கள் கொஞ்சூண்டு நினைவு வச்சிருக்காங்க.
அதனால் இப்பவே நினைவிடம் அமைத்து பெயர் வாங்க பார்க்கிறான்"

"அவன்ட்ட சல்லிபைசா நிதி கெடைக்காதுனு சொல்லிரு.
மாட்டு கறி திங்கறவனுக்கு எதுக்கு நினைவிடம்?
ஏற்கனவே எல்லாரும் அவன மறந்துட்டாங்க.
அவன் செத்து ஒரு முதல் வருசம் நினைவஞ்சலி ஹிந்திக்காரன் எவனாவது நினைவு வச்சு கொண்டாடிட்டா எ பேர மாத்திக்கிறேன்.
இது கடவுள் டாடா மேல சத்தியம்.
ஆமா நா ஒடனே கெளம்பி ப்ளைட்ட புடிக்கணும் என் நாய்க்கு கே.எப்.சி சிக்கன் வாங்கி போட்டுடு"

கேஜ்ரிவால் வெறும்வாயை மென்றுகொண்டு இருந்தார்.
நிதி கிடைக்காது என்ற அவல் கிடைத்தது.

"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க.
டெல்லி சுற்றுலா நிதியில் இருந்து எடுத்து நானே பார்த்துக்கிறேன்"

"ஐயா, நீங்க வாரி வழங்கிய இலவச சலுகையால் கஜானா காலி.
டெல்லி சுற்றுலா நட்டத்தில் ஓடுகிறது"

"அதெல்லாம் தெரியாது. டெல்லி போக்குவரத்து வளர்ச்சிக் கழகம், டெல்லி கலை மற்றும் கலாசாரத் துறை இவற்றிலிருந்தும் சுரண்டி எடுத்தாவது நிதி சேருங்கள்.
ஒரு சாதாரண வீடு, ரெண்டு ஆட்கள், இது போதாதா?
அப்துல்லாகான் என்ன எடிசனா ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்பு வைக்கறதுக்கு?
ஒரு அறையே போதும்.
இப்போவே இதை அறிக்கை வெளிவிடுறேன்"

டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதலுடன் அறிக்கை மே மாதம் வெளிவந்தது.

என்றால் ஐந்து மாதம் ஆகிறதே?!
நினைவிடம் அமைந்திருக்குமே?!
என்று நம்பிக்கையோடு கேட்டால் நீங்கள்தான் அடுத்த அப்துல் கலாம்.