Showing posts with label டாடா. Show all posts
Showing posts with label டாடா. Show all posts

Wednesday, 18 October 2017

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

2005 - 2013 ல் மன்மோகன் பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்த கடன் 36 லட்சம் கோடி.

அதாவது மொத்த கார்ப்பரேட் கடனையும் சேர்த்தால் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வயிற்றிலும் அடித்து தலைக்கு 29,000 ரூ பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு கொடுத்துள்ளான் மன்மோகன்.

இதில் அதிகமாக 72,000 கோடி அதானிக்கும்
1,13,000 கோடி அம்பானி குழுமத்திற்கும் கொடுத்துள்ளான்.
அதாவது அம்பானி - அதானி குடும்பம் வசதியாக உண்டு உறங்கி கொழுக்க ஒவ்வொரு இந்திய குடிமகனிடமும் 1850 ரூ பிடுங்கப்பட்டுள்ளது.

கொடுத்ததோடு சரி திருப்பி கேட்கவேயில்லை.
2013 வரை திரும்ப வந்தது மிக மிக குறைவு, ஒன்றுமே இல்லை எனலாம்.

2013 ல் புது வேலைக்காரன் மோடி வந்தான்.
வந்தவன் முதலாளிகளின் காலில் விழுந்து கும்பிட்டு,
"ஐயா! சாமீ! கொஞ்சமாவது திருப்பி கொடுங்க.
அப்பதான் இன்னும் அதிகமாக கடன் தரமுடியும்" என்று கோரிக்கை வைத்தான்.

"என்னது வாங்கிய பணத்தை திருப்பித் தரணுமா?
போடா வேலைக்கார நாயே!" என்று கூறிவிட்டு விஜய் மல்லையா வெளிநாடு போய்விட்டான்.

அவனது கடன் 9,091 கோடி.
இன்று வரை அவன் சொத்துகளை விற்கமுடியாமல் அல்லாடுகின்றன வங்கிகள்.
(அதிலும் அவனுடைய 103 கோடி மதிப்புள்ள கிங்பிஷர் ஹவுஸ் ஐந்துமுறை ஏலம் விடப்பட்டு சரியான விலைக்கு வாங்க ஆளில்லாமல் ஏலம் தோல்வியில் முடிந்துள்ளது)
எல்லா சொத்துக்களையும் விற்றாலும் 4300 கோடி குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படும்.
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் சட்டைப் பையிலிருந்தும் 32 ரூ மல்லையாவால் எடுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது).

மல்லையாவை விட எட்டு மடங்கு கடன்காரன் அதானி.
மோடியை வேலைக்கு அமர்த்திய முதலாளி இவன்தான்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது இவனது கடன் 96000 கோடி.
இவன் ஒருவனது கடன் மட்டுமே ஒட்டுமொத்த விவசாய கடனுக்கு சமமாகும்.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 716 ரூ)

அனில் அம்பானியின் தற்போதைய கடன் 1,21,000 கோடி
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இவன் 902 ரூ கொடுக்கவேண்டும்)

முகேஷ் அம்பானியின் கடனோ 1,87,000 கோடி
(ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏறத்தாழ 400 ரூ தரவேண்டும்)

அதிகம் பேசப்படாத குழுமம் எஸ்ஸார் குழுமம்.
கடன் அம்பானியை விட கொஞ்சம் குறைவு. அதாவது 1,01,500 கோடி.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 757 ரூ)

இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அரக்கன் டாடா குழுமம்.
பல வெளிநாடுகளிலும் இது கிளைபரப்பி இருப்பதால் இந்தியாவில் இதன் கடனை சரியாகக் கூறமுடியவில்லை.
இரண்டு லட்சம் கோடி வரை இருக்கலாம்.
(தலைக்கு 1400 ரூ வரும்).

இதையெல்லாம் படிக்கும் நீங்கள் என்னதான் முக்கி முக்கி சம்பாதித்தாலும் வாழ்நாளில் ஒரு கோடி சொத்து சேர்க்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் கஷ்டப்பட்டு உழைத்து வரிகட்டி வங்கியில் போடுவோமாம்.
மத்திய அரசு நோகாமல் மொத்தமாக எடுத்து கார்ப்பரேட்காரனுக்கு அள்ளி அள்ளி கொடுக்குமாம்.
அது அங்கு சுற்றி இங்கு சுற்றி நமது தலையிலேயே கடனாக வந்து விழுமாம்.

நம்மை கொள்ளையடித்து வடயிந்தியராவது வாழ்கிறார்களா என்றால் இல்லை.
அத்தனையும் பெருமுதலாளிகளின் கணக்கில் போய் சேருகிறது.
அதை அந்த பெருமுதலாளி தன்வாழ்நாள் முழுவதும் செலவுசெய்ய முடியாது.
ஆக யாருக்குமே நன்மை பயக்காது நமது பணமெல்லாம் வீணாகிறது.

இந்தியாவை விட அதிகம் கடன் உள்ள நாடுகள் 23 இருக்கின்றன.
  அவை அனைத்தும் வளர்ந்த நாடுகள்.
கடனும் வாங்கி வளர்ச்சியும் அடையாமல் அனைத்தையும் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்த்ததால்
இன்று பிறக்கும் ஒரு குழந்தை 53,800 ரூ கடனாளியாக பிறக்கிறது.
இந்த கடனும் கூடிக்கொண்டே போகிறது (குறிப்பாக மோடி வந்தபிறகு).
ஏழாண்டுகளில் இந்த தனிநபர் கடன் ஏறத்தாழ இரு மடங்கு ஆகியுள்ளது.
(இத்தனைக்கும் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சம்தான்)

இந்தியாவின் பொருளாதாரத்தை 3ல்1 பங்கு தாங்கிக்கொண்டு நிற்கும் தமிழகம் உழைத்து கொட்ட,
வடயிந்தியன் அதிலும் குறிப்பாக குஜராத்தியன் பணம் சேர்த்துக்கொண்டே போகிறான்.

நாமோ சேமிப்பையும் வரியையும் வடக்கே அள்ளி இரைத்துவிட்டு தண்ணீருக்கும் பாதுகாப்புக்கும் ஹிந்தியனிடம் மன்றாடி நிற்கிறோம்.

கார்ப்பரேட் பணக்காரர்களிலோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு தமிழனைக் கூட பார்க்கமுடியவில்லை.
(தி.மு.க குடும்பத்தைக் கூட நாம் தெலுங்கன் கணக்கில்தான் சேர்க்கவேண்டும்)

கார்ப்பரேட் திட்டங்கள் முதலில் தமிழ் மண்ணை குறிவைத்தே வருகின்றன.
நாமோ போராடி போராடி சாகிறோம்.

இப்படி ஒரு வறுமையான நாட்டிடம் கொடூரமான ஆட்சியாளர்களிடம் நாம் ஏன் சிக்கித்தவிக்கிறோம்?

கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் இந்த ஹிந்திய அரசிடமிருந்து நாம் பிரிந்து தனிநாடு அமைப்போம்.
இதன்மூலம் நமது மண்ணில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஒழிப்போம்.
தமிழர்நாட்டிலும் முதலாளித்துவம் வளராது தடுப்போம்.

நமது நெற்களஞ்சியம் முற்றாக அழிக்கப்படவுள்ளது.
கதிராமங்கலம் உட்பட பல இடங்களில் வேலை தொடங்கிவிட்டது.

இப்போது விழிக்காவிட்டால் தமிழ்நாடு ஒரு சோமாலியா ஆவதை யாராலும் தடுக்கமுடியாது.

Thursday, 2 June 2016

குஜராத்திகள்

குஜராத்திகள்.

2008 2009 ல் ஹிந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வெள்ளை இன வெறியர்களால் வரிசையாகத் தாக்கப்பட்டபோது

இதே மோ(ச)டி தான் கூறினான்.

முறையான ஆவணங்கள் (பாஸ்போர், விசா, குடியுரிமை) எதுவுமில்லாவிட்டாலும் பரவாயில்லை குஜராத்திகள் எப்படியாவது குஜராத்துக்குள் வந்துவிடுங்கள்.
நான் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன் என்று அறிக்கைவிட்டான்..

என்றால் இந்திய இறையாண்மைக்கு என்ன மரியாதை? என்று எவனும் கேட்கவில்லை.

இன்று வெளிநாட்டுவாழ் இந்தியர்களில் (N.R.I)  முதலிடம் குஜராத்தியரே.
பிரிட்டிஷ் இளவரசி டயானாவே குஜராத்திய கலப்புடையவர் என்றெல்லாம் கண்டறிந்தார்கள்.

முகமது அலி ஜின்னா, மோகன்தாஸ் காந்தி, மொரார்ஜி தேசாய், சர்தார் வல்லபாய் படேல் போன்ற குஜராத்திகள் அன்று அரசியலில் முழுமையாகக் கைக்குள் வைத்திருந்தனர்.
நேரு மட்டும் ஆப்கானிய வம்சாவழி காஷ்மீரி பண்டித் ஒரு ஒப்புக்கு சப்பானியாக இருந்தார்.
அவரது மகளான இந்திரா நேருவை குஜராத்தியரான ஃபெரோஸ் மணமுடிக்க நேரு தடையாயிருந்தபோது அவரை தன் மகனாகத் தத்தெடுத்து ஃபெரோஸ் காந்தி ஆக்கினார்  மோகன்தாஸ்காந்தி.

இப்படித்தான் இந்திராநேரு இந்திராகாந்தி ஆனார்.

பார்சி(ஈரான்) வம்சாவழி (வந்தேறி)குஜராத்தியரான ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர் இன்று இந்தியாவின் தொழிற்சாலைத் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

இவர்தான் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் இரும்பு உருக்காலையை நிறுவி பெரிதாக வளர்ந்த டாடா குழுமத்தை நிறுவியர்.
குஜராத்திய ஆதரவுடன் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்தனர் டாடா என்கிற வந்தேறி குஜராத்திகள்.
ஜார்கண்ட் மக்கள் வரைமுறையில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு இன்று இந்தப் பணமுதலைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட் ஆக ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
டாடா நானோ வங்காளிகளால் எதிர்க்கப்பட்டபோது ஓடோடி சென்று அதை குஜராத்திற்கே கொண்டு வந்தான் மோடி.
(டாடா வின் வலதுகரம் ஒரு தமிழர்தான்).

இன்று அசிம் ப்ரேம்ஜி , அம்பானி சகோதரர்கள், டாடா என உலகப்பணக்காரர்கள் குஜராத்திகளே.
இதற்குக் காரணம் குஜராத்தியரின் அரசியல் ஆளுமை.
தமிழரான காமராசர் மூலமே காங்கிரசை பிடித்து அதன்மூலம் ஹிந்தியாவையே கட்டுக்குள் கொண்டுவந்தனர் காந்தி குடும்பத்தாரும் அதன் பின் நின்ற குஜராத்தியரும்.
அதன்பிறகு கிங்மேக்கர் என்ற பட்டத்தை மட்டும் கொடுத்து காமராசரை சக்கையாகத் துப்பிவிட்டனர்.

டி.எம்.சௌந்தர் ராஜன் தமிழர் கிடையாது.
அவரது தாய்மோழி சௌராஷ்ட்ரா.
இந்த சௌராஷ்ட்ரா இன்று குஜராத்திகளால் விழுங்கப்பட்டுவிட்டது.

இப்போது யாராவது சௌராஷ்ட்ரா மக்களை பார்க்கவேண்டும் என்றால் தமிழகம்தான் வரவேண்டும்.
(தமிழனுக்கு இனவெறி கிடையாது அல்லவா?!)

மதம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி சிந்தி பேசும் மக்களையும் பாதி பாகிஸ்தானும் பாதி குஜராத்தும் விழுங்கிவிட்டன.

சிந்தி மற்றும் சௌராஷ்ட்ராப் பகுதியை நீக்கிவிட்டுப் பார்த்தால் இன்றைய குஜராத் மாநிலத்தில் 30%தான் அசல் குஜராத்தி மண்.

தமிழர்களுடனான ஹிந்தியாவின் போரில் குஜராத்தியர்களும் மறுக்கமுடியாத பங்களிப்பு செய்துள்ளனர்.

சிந்து சமவெளி நாகரீகத்தை உரிமை கோருவது,
குமரிக் கண்டத்திற்கு கிடைக்கவேண்டிய கடலாராய்ச்சி நிதியைத் தடுத்து பகவான் கிருஷ்ணனின் துவார்கா நகரத்தைத் தேடுகிறோம் என்று கேம்பே (gulf of khambat) கடற்பகுதியில் அந்த நிதியைக் கொட்டி வீணாக்கியது என்று குஜராத்தியர்கள் ஹிந்திய பேரினத்தின் பங்காளிகள் என்று நிறுவிவருகிறார்கள்.

பிழைப்பு தேடி பம்பாய் சென்ற தமிழர்கள் அங்கே நிறைந்த பிறகு குஜராத்திற்குள்ளும் நுழைந்தனர்.
சூரத், பரோடா, ஜாம் நகர், அகமதாபாத் போன்ற நகரங்களில் தமிழர்கள் கணிசமான அளவு வாழ்கிறார்கள்.

குஐராத்தியர்கள் தமது மாநிலத்திற்கு அடுத்தபடியாக வாழ்வது அண்டை மாநிலமான மகாராஷ்ட்ரா அதற்கடுத்தபடியாக வாழ்வது தமிழகம்.

ஆனால் தமிழன் அங்கே வாழ்வது தொழிலாளியாக.
குஜராத்தி இங்கே வாழ்வது முதலாளியாக.

குஜராத்திகள் தென்காசி அருகே மரம் அறுக்கும் சா-மில்கள் கூட சொந்தமாகக்கொண்ட முதலாளிகளாக உள்ளனர்.
தமிழன் எங்கும் தொழிலாளிதான்.

சௌகார்பேட்டையில் நவராத்ரி இரவுகளில் பாரம்பரிய உடையணிந்து தான்டியா கோலாட்டம் ஆடும் குஜராத்திகளை பார்த்தால் தெரியும்.

(சென்னையில் சௌகார்பேட்டையில் இந்தியில் பெயர்பலகை, தெருப்பெயர்கள் வைக்குமளவுக்கு குஜராத்திகளும் மார்வாடிகளும் முழுதாக ஆக்கிரமித்திருப்பது கண்கூடு)

அதைப் பார்த்துவிட்டு மும்பை  (சேரிப்பகுதியான) தாராவியைப் பார்த்தால் வயிறு எரிகிறது.

மோடி இலங்கைக்குப் போறானாம்
தமிழர்கள் அதைப்பற்றிப் பேசத் தேவை ஒன்றும் இல்லை.

( 16 மார்ச் 2015, 10:23 AM )