ஆதார் - நவீன குற்றப்பரம்பரை
வெள்ளைக்காரன் கொண்டுவந்த குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் கைரேகை எடுக்கும் முறையின் நவீன வடிவம்தான் ஆதார்.
அவனாவது ஒரு குறிப்பிட்ட மக்களைக் கண்கானிக்க அதைச் செய்தான்.
ஆனால் மோடி நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அதைச் செய்கிறான்.
இதை அரசு மட்டும் பயன்படுத்தினால் பெரிய பிரச்சனை இல்லை.
இதை மோ(ச)டி அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கிறது.
பணம் படைத்தவனெல்லாம் எல்லாம் அறிந்த கடவுளாக உருவெடுப்பான்.
இதன்மூலம் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையை கண்கானித்து அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, தேவையானது ஆகியவற்றை அறிந்து அந்த சந்தைக்கு ஏற்ப அவர்களால் விற்பனை செய்யமுடியும்.
தேவையில்லாததை விளம்பரம் செய்து விற்கவும் முடியும்.
உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒருவனிடம் உன்னால் மோதமுடியுமா?!
Thursday, 4 May 2017
ஆதார் - நவீன குற்றப்பரம்பரை
Saturday, 11 March 2017
ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு
ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு
சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் கழிந்துவிடும் தொடைநடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்
தமிழகமே அழியப்போகிறது
இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.
அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலைபோட்டு
அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும்
அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.
இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் தீவிரவாதிகளையும் அழிப்பது.
இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்
இதற்காகத்தான் மீனவன் கொலை
இதற்காகத்தான் கெயில் திட்டம்
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது
இதற்காகத்தான் பூமிக்கடியில் வெடிவெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு
இதற்காகத்தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு
இதற்காகத்தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்)
இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது
(இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது)
இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம்.
அதாவது முற்றிலும் அழியவுள்ளது.
ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனர்.
பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய்விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
திட்டம் நன்றாக வேலைசெய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்துவிட்டன.
அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).
இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர் (Bangladesh, India, Myanmar, Srilanka, Thailand economical colaberation).
பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்துகொண்டது.
இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு.
திட்டத்தைப் போட்டுக்கொடுத்ததே அவர்கள்தானே.
பின்னே! ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?!
இதனால் மக்களுக்கென்ன லாபம்?
உண்டே கடுகளவு லாபம்.
விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான்.
அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.
பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான்.
அதற்கான தொழிற்சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.
கடலையும் விற்றுவிடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.
கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள்.
அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.
அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான்.
அதில் கூலிவேலை கிடைக்கலாம்
அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (sagar mala).
அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.
இது கற்பனை இல்லை நிஜம்.
இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
தகவல்களுக்கு நன்றி: Tamil reswarch institute (TRI)
இதை எப்படி தடுத்து நிறுத்தலாம்.
வேறுவழியே இல்லை.
போராட்டம் நடத்திக்கொண்டே நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட வேண்டும்.
அதோடு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்கவேண்டும்.
சிறுசிறு தாக்குதல்கள் நடத்தவேண்டும்.
என்றைக்கு அரசியல் போராட்டம் தோற்கிறதோ அப்போது ஆய்த வழியில் விடுதலைக்காகப் போராடவேண்டும்.
ஏனென்றால் இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.
இல்லையென்றால் தமிழ்நாடு இன்னொரு சோமாலியா ஆகும்.
அவர்களைப்போல பசி பட்டினி வந்தபிறகு ஆயுதம் தூக்கி எந்த பலனும் இல்லை.
தமிழர்நாடு விடுதலையே ஒரே தீர்வு!
இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே!
Thursday, 29 December 2016
சல்லிக்கட்டு எதிர்ப்பு பார்ப்பன சதியா?
சல்லிக்கட்டு எதிர்ப்பு பிராமண சதியா?
ஒரு பார்ப்பனர் சல்லிக்கட்டை எதிர்த்துவிட்டாராம் உடனே 'ஆரிய சதி' 'பிராமண வெறி' என்று திசைமாறி போய்விட்டது முகநூல் தமிழ்ச் சமூகம்.
ஐ யம் தமிழ், ஐ யம் அகென்ஸ்ட் ஜல்லிக்கட்டு என படம் போட்டோரில் எல்லா சாதியினரும் இருந்தனர்.
அதில் ஒரு பார்ப்பனரை பிடித்து என்னமோ அவர்தான் இதற்கு மூல காரணம் என்பது போல போடுகிறார்கள்.
1998 லேயே "ஜல்லிக்கட்டு ஒழிப்பு குழு" அமைத்து விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 'ஜல்லிக்கட்டை தடை செய்' என்று முதலில் நம் பாரம்பரிய விளையாட்டை எதிர்த்தோர் தலித் அமைப்பினர்.
திருமாவளவனே 'ஜல்லிக்கட்டு தலித்துகளுக்கு எதிரானது, சாதியத் தன்மை கொண்டது' என்று 2002ல் தலையங்கம் எழுதியுள்ளார்.
2004 வாக்கில் அமராவதி மற்றும் புதூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தலித் அமைப்பினர் பிரச்சனை செய்தனர்.
ஜல்லிக்கட்டு என்றில்லை.
கபடி, மாட்டுவண்டி பந்தயம், சேவல் சண்டை, கிடாய் மோதல், பாரி வேட்டை என எல்லாவற்றையும் தடை செய்ய கோரினர்.
கிரிக்கெட் கூட நடக்கக்கூடாது என்று பிரச்சனை செய்த இடங்கள் உண்டு.
உண்மை என்னவென்றால் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விளையாட்டு பிரபலம்.
அதில் நடக்கும் குழுமோதல் சில சமயம் வன்முறையில் போய் முடியும்.
பாதிக்கப்பட்டவன் தலித் என்றால் உடனே அது சாதி பிரச்சனை ஆக்கப்பட்டு சாதிய-தலித்திய-திராவிட அரசியலுக்கு அங்கே விதை தூவப்படும்.
(முதல் விதை1983 பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டபோது விதைக்கப்பட்டது.
பாரதிய தலித் பேந்தர் அமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்றவை எதிர்ப்பு பேரணி நடத்தின)
சல்லிக்கட்டு எந்த ஒரு தனி சாதிக்கும் மதத்திற்கும் மட்டுமே உரியது கிடையாது.
அனைத்து சாதியினரும் மதத்தினரும் விளையாடலாம்.
மாட்டை பறையடித்து வாடிவாசலுக்கு அழைத்துவரும் பறையருக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்து தட்சணை கொடுக்கும் வழக்கம் உள்ள தமிழகத்தில் தலித்திய அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரம் எடுபடவேயில்லை.
இப்போது தமிழரின் வீரத்தைப் பார்த்து வயிறெரியும் வேற்றினத்தாரும்
பாரம்பரிய வாழ்க்கை முறையை ஒழிக்கவே முழுநேரமும் இயங்கும் பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகளும் நமக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.
குறிப்பாக இந்தியா முழுவதும் ஒழிந்துவிட்ட
தமிழகத்தில் மட்டுமே எஞ்சியுள்ள நாட்டுமாடுகளை ஒழிப்பதில் இவை கைகோர்த்துள்ளன.
காட்டுவிலங்கை வைத்து விழா நடத்தி பலமுறை அது வெறி பாகனைத் துவைக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கும் கேரளா பக்கம் எவனும் போகமாட்டான்.
ஆனால் வீட்டு விலங்கான மாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஏறுதழுவுதல் இவர்கள் கண்களை உறுத்துகிறது.
வெளிநாட்டு மாட்டினை விற்று அதன்மூலம் சர்க்கரை நோய் வரவைக்கும் இன்சுலின் மருந்து நிறுவனங்கள்,
பசுவின் சாணத்தை ஒழித்து வேதியியல் உரங்களை கொண்டுவர நினைக்கு அமெரிக்க நிறுவனங்கள்,
பசுவை ஊசிமூலம் சினையாக்கும் மருந்தை உற்பத்தி செய்கிற நெதர்லாந்து நிறுவனங்கள்
என பெரிய பெரிய முதலாளித்துவ எதிரிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் என்னவென்றால் எல்லா பிரச்சனைகளுக்கும் இங்கே இருக்கும் பார்ப்பனரைப் பிடித்து பிராண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
Thursday, 21 July 2016
பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்
பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்
வந்தேறிகள் எப்போதும் மண்ணுக்காகப் போராடுவதில்லை.
அதிசயத்திலும் அதிசயமாக ஒரு மார்வாடி இயற்கைக்காகப் போராடியுள்ளார்.
அதெல்லாம் சரி.
இன்று பியூஷ் கியூஷ் என்று கத்துபவர்களும்
கட்டுரை எழுதுபவர்களும்
கண்ணீர் விடுபவர்களும்,
சரியாக இரண்டு மாதங்கள் முன்பு பியூஷை விட வீரியமான போராளி, தோழர்.முகிலன்,
போடி பேருந்துநிலையத்தில் வைத்து மக்கள் மத்தியில் ஏவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு,
கைது செய்யப்பட்டு,
சிறையிலும் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் சீர்குலைந்து கவலைக்கிடமாகிக் கிடந்தபோது
எங்கடா போனீங்க?
தமிழ்நாட்டில் ஒரு பியூஸ் மட்டும் இல்லை.
பல நூறு பியூஸ்களும்
பியூஸுக்கு அப்பனுக்கு அப்பனும் இருக்கிறார்கள்.
என்று மறையும் இந்த வேற்றின மோகம்????!!!!!