Saturday 1 July 2017

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,

"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.

உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.

காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"

மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.

நன்றி: Jose Kissinger

No comments:

Post a Comment