Sunday, 30 July 2017

மூன்றாண்டுகளுக்கு முன்பே போட்ட பதிவு (திடீர் சாதி எழுச்சி)

மூன்றாண்டுகளுக்கு முன்பே போட்ட பதிவு (திடீர் சாதி எழுச்சி)

⇊  ⇓  ↡  ↧  ↯ ⇩ ↴

//தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்//

// இனம் என்பது என்ன?

1)பொதுவான மொழி மற்றும் தகவல்தொடர்புமுறைகள்

2)பொதுவான தோற்றம் மற்றும் மரபணு

3)பொதுவான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்

4)இயற்கை எல்லைகளால் வரையறுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவரும் தாய்நிலம்//

// இனத்தின் இரண்டு பண்புகள் மேலும் இறுக்கமடைவதன் மூலம் சாதி என்பது இனம் என்பதைவிட நன்கு வேரூன்றிவிடுகிறது

1)மொழி என்று தனியாக எதுவும் இல்லை

2)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான தோற்றம் மற்றும் மரபணு

3)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்

4) வரையறுக்கப்பட்ட நிலம் என்று தனியாக இல்லை//

// இந்த குழப்பநிலையை 1920களில் ஆங்கில ஆட்சியுடன் நான் ஒப்பிடுகிறேன்;
பொதுவான எதிரி இருக்கும்வரைதான் வேற்றுமைகள் தலைதூக்காது//

// ஆங்கிலேயர் உலகப்போர்களில் பொருளாதார சரிவு கண்டபின் 1920களில் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வருவது தெரிந்துவிட்டது;
அப்போதுதான் 'நம்மில் யார் பெரியவர்' என்ற கேள்வி ஏற்பட்டு இனவழிஎழுச்சி ஏற்படுகிறது//

// அப்போது மூத்த இனம் என்று தமிழை ஆங்கிலேயர்கள் (பிரிவினைக்காக) நிறுவிவிட்டதால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும், சிங்களவரும், சமசுக்கிருதத்தைப் போற்றும் வடவர்களும் தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்கின்றனர்//

//இன்று 'திராவிடம்' என்ற பொதுஎதிரி ஒழியும்காலம் வந்துவிட்டதை அறிந்த தமிழர்கள் தற்போது சாதிவழி கிளரத் தொடங்கியுள்ளனர்;
ஆங்கிலஅரசு வீழ உலகப்போர் காரணமாக இருந்ததுபோல்,
திராவிடம் வீழ ஈழப்போர் காரணமாக அமைந்தது//

//தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்;
ஆனாலும், திராவிடம் அளவு கேடாக அமையாது;
காரணம் தமிழருக்கு சாதிவெறி குறைவு என்பதோடு,
சாதிவழி ஆதிக்கம் தலைதூக்காமல் ஈழமக்களும் ஈழ ஆதரவாளர்களும் வழிநடத்துவார்கள்;
தவிர இங்கே குறிப்பிட்ட சாதியார் தனிப்பெரும்பான்மை கிடையாது;
எனவே தமிழர்களை அரசியல்வழியில் ஆள 'தமிழ் நாட்டாண்மை பற்றி பேசிக்கொண்டே' சாதியை தூக்கிப்பிடிப்பார்கள்;
எங்கேயெல்லாம் 'ஒரு இனமக்கள் தம் இனத்தவராலேயே ஆளப்படுகின்றனரோ'
அங்கேயெல்லாம் 'அவ்வினத்தின் பெரும்பான்மைச் சாதியாரே' ஆட்சியில் இருப்பார்கள்//

// நமக்குத் தேவை இனவிடுதலை அது அரசியல்மூலம் கிடைக்காது;
அரசியலில் நெழிந்து சுழிந்து போகவேண்டும்;
சாதி, மதம் என பிரிவினைகளும் தலைதூக்கும்;
வாய்ச்சொல் வீரர்களுக்கும் முதுகில் குத்தத்தெரிந்தவர்களும் அரசியல் மூலம் வேண்டியதை சாதித்துக்கொள்கிறார்கள்வாய்ச்சொல் வீரர்களுக்கும் முதுகில் குத்தத்தெரிந்தவர்களும் அரசியல் மூலம் வேண்டியதை சாதித்துக்கொள்கிறார்கள்;
தமிழருக்கும் அரசியலுக்கும் ஒத்தேவராது//

// இரண்டில் எந்தவழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை தமிழ் இளைஞர்கள் முடிவுசெய்யுங்கள்;
கையில் ஆயுதத்தைத் தூக்கினால் புரட்சிகரத் தமிழ்க்குடியரசு,
வெறுங்கையைத் தூக்கினால் சுருங்கிப்போன தமிழீழம்//

No comments:

Post a Comment