Showing posts with label சமக்கிருதம். Show all posts
Showing posts with label சமக்கிருதம். Show all posts

Thursday, 9 June 2016

பார்ப்பனர்தான் சாதியைப் படைத்தனர்?!

பார்ப்பனர்தான் சாதியைப் படைத்தனர் என்பது,

அகராதியை (டிக்ஸ்னரி) எழுதியவன்தான் மொழியைப் படைத்தான் என்று கூறுவதைப் போன்றது.

பார்ப்பனரின் நிறம் அவர்கள் வேற்றினம் என்பதால் ஏற்பட்டதல்ல.

வெயிலில் வேலை செய்யும் மக்களின் நிறம் கருப்பாகவும்
வெயிலில் அலையாமல் கோவிலுக்குள் கருவறைப் புழுக்கத்தில் வேலை செய்யும் பார்ப்பனருக்கும் நிற வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

உடல் வியர்வை வெளிவர வேலை செய்யும் மக்கள்
உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் மக்களால் அருவருப்பின் காரணமாக ஒதுக்கப்பட்டு தொட விருப்பமின்றி தீண்டாமை கொடுமைக்கும் ஆளாகினர்.

பார்ப்பனர் தொழிலில் வேற்றின ஆட்சியில் சமஸ்கிருதம் மிகவும் பிற்பாடுதான் புகுத்தப்பட்டது.

தாய்லாந்து வரை சைவமும் வைணவமும் பரவியபோது தமிழில்தான் பூசைகள் நடந்தன.
இன்றும் அவர்கள் தமிழில் ஓதுகிறார்கள்.

தமிழர் அரசு வீழ்ந்த பிறகு ஒரு கன்னட மன்னன் அரசவையில் பிராமணர்களால் மனுதர்மம் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டது.

இது சாதி வேறுபாடுகள் தொடங்கி பல காலம் பிறகுதான்.

தமிழ்ப் பார்ப்பனர் படைத்தது ஆகமம் தான்.
மனுஸ்மிருதி பிராமணர் படைத்தது.

ஆகமத்தில் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.
தகுதியுடைய யாரும் பூசை செய்யும் பார்ப்பனர் ஆகலாம்.

சாதியை உருவாக்கியதாகவும்
சமஸ்கிருதத்தைப் புகுத்தியதாகவும்
தமிழ்ப் பார்ப்பனர் மீது அநியாயப் பழி போடவேண்டாம்.

தமிழ்ப் பார்ப்பனருக்கும் ஆரியருக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
அதனால் அதற்கு சான்றும் கிடையாது.

Tuesday, 10 May 2016

திராவிடலு பகுதி-3

திராவிடலு
பகுதி-3
**************
திராவிடம்  நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டுவந்தது என்பதைப் பார்க்குமுன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது.

திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'.

இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.

சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை  அறியுங்கள்.

திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.

இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்' ,'கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர்.
இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

திராவிடர்களின் பிரச்சாரப்படி  ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது
இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக்கொண்டு
சாதியை உருவாக்கி
மனுதர்மத்தை உருவாக்கி
கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி
ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர் .

ஆனால் உண்மை அதுவல்ல.
ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இதுவே உண்மை.

பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே.
இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலிசெய்தாலும் சரி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும்  தமிழரே என்பதைக் கூற  என்ன அச்சம்?

ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.

பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும்
இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு
மற்றவர்கள் விலகிக்கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.

சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.

பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.

காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.
திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.

இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.

திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?

திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?

தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது?

. . . .தொடரும்

Saturday, 12 December 2015

வானொலியில் புளுகும் ஹிந்தியா

வானொலியில் புளுகும் ஹிந்தியா

மக்கள்தொகை பதிவு செய்ய அரசு விளம்பரம் தமிழக வானொலியில் ஆங்கிலத்தில் வருகிறது.

சுழியம் (zero) கண்டுபிடித்தது இந்தியராம்.
கணினி மொழியில் சமஸ்கிருதம் பயன்படுகிறதாம்.

இரண்டுமே பொய்.

சுழியத்தைக் கண்டுபிடித்தோர் பாபிலோனியர்.
ரிக் பிரிக்ஸ் என்பவர் 1985ல் artificial intellenge language உருவாக்க சமஸ்கிருதத்தைப் பரிந்துரைத்தது ஏற்கப்படவில்லை.

எத்தன தடவடா சொல்றது?
நாங்க போலி இனமான இந்தியன் இல்லடா
மரபினமான தமிழன்டா