பார்ப்பனர்தான் சாதியைப் படைத்தனர் என்பது,
அகராதியை (டிக்ஸ்னரி) எழுதியவன்தான் மொழியைப் படைத்தான் என்று கூறுவதைப் போன்றது.
பார்ப்பனரின் நிறம் அவர்கள் வேற்றினம் என்பதால் ஏற்பட்டதல்ல.
வெயிலில் வேலை செய்யும் மக்களின் நிறம் கருப்பாகவும்
வெயிலில் அலையாமல் கோவிலுக்குள் கருவறைப் புழுக்கத்தில் வேலை செய்யும் பார்ப்பனருக்கும் நிற வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
உடல் வியர்வை வெளிவர வேலை செய்யும் மக்கள்
உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் மக்களால் அருவருப்பின் காரணமாக ஒதுக்கப்பட்டு தொட விருப்பமின்றி தீண்டாமை கொடுமைக்கும் ஆளாகினர்.
பார்ப்பனர் தொழிலில் வேற்றின ஆட்சியில் சமஸ்கிருதம் மிகவும் பிற்பாடுதான் புகுத்தப்பட்டது.
தாய்லாந்து வரை சைவமும் வைணவமும் பரவியபோது தமிழில்தான் பூசைகள் நடந்தன.
இன்றும் அவர்கள் தமிழில் ஓதுகிறார்கள்.
தமிழர் அரசு வீழ்ந்த பிறகு ஒரு கன்னட மன்னன் அரசவையில் பிராமணர்களால் மனுதர்மம் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டது.
இது சாதி வேறுபாடுகள் தொடங்கி பல காலம் பிறகுதான்.
தமிழ்ப் பார்ப்பனர் படைத்தது ஆகமம் தான்.
மனுஸ்மிருதி பிராமணர் படைத்தது.
ஆகமத்தில் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.
தகுதியுடைய யாரும் பூசை செய்யும் பார்ப்பனர் ஆகலாம்.
சாதியை உருவாக்கியதாகவும்
சமஸ்கிருதத்தைப் புகுத்தியதாகவும்
தமிழ்ப் பார்ப்பனர் மீது அநியாயப் பழி போடவேண்டாம்.
தமிழ்ப் பார்ப்பனருக்கும் ஆரியருக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
அதனால் அதற்கு சான்றும் கிடையாது.
No comments:
Post a Comment