மீட்கப்பட்டத் தமிழ்மண்
***********
1956க்குப் பிறகு தமிழரின் எழுச்சியால் குருதி சிந்தி, உயிர் ஈந்து மீட்கப்பட்ட பகுதிகள் மேலே காட்டப்பட்டுள்ளன.
பகுதிகளில் வடக்கிலுள்ள பகுதி தமிழினத் தலைவரான சிலம்புச்செல்வர்.ம.பொ.சிவஞானம் அவர்களால் மீட்கப்பட்டது.
திருப்பதிவரை மீட்கப் பெரும்பாடு பட்ட மபொசி, தமிழகத்தின் திராவிட செல்வாக்கையும் எதிர்த்து திருத்தணியை மட்டுமே மீட்க முடிந்தது.
ஆந்திரர்களின் பெரும் முயற்சிகளை எதிர்த்து மதராசப் பட்டிணத்தை (சென்னப்ப நாய்க்கர் என்ற தெலுங்கர் நினைவாக திராவிட வந்தேறிகள் 'சென்னை ' என்று மாற்றிவிட்டனர்) பறிபோகாமல் காத்தவர்.
கீழே தெற்கில் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை பகுதிகளை மீட்டவர் தமிழினத் தலைவரான மார்சல்.நேசமணி ஆவார்.
தேவிகுளம்,பீர்மேடு என இடுக்கி மாவட்டத்தையே (முல்லைப் பெரியாறு அமைந்த பகுதி) மீட்க மலையாளிகளை எதிர்த்து கடும் போராட்டங்களை நடத்தியவர்.
வந்தேறி திராவிடர்கள் காலை வாரியதால் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டையை வட்டத்தையும் மட்டுமே மீட்க முடிந்தது.
இவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாவண்ணம் நாம் இந்த வந்தேறிகளால் காயடிக்கப்பட்டுள்ளோம்.
ஈழத்து மண்ணை மீட்ட தேசியத்தலைவர் திரு.பிரபாகரனைக் கூட கூடிய சீக்கிரம் மறந்துவிடுவோம்.
முக்குக்கு முக்கு கண்ட கண்ட வந்தேறிகளுக்கெல்லாம் சிலை வைத்திருக்கும் நாம், இவ்விரு தலைவர்களுக்கு ஒன்றிரண்டு இடங்களில்தான் சிலை வைத்துள்ளோம்.
(22 ஜூலை 2013)
No comments:
Post a Comment