முன்னாள் இனவெறியன் மோடி
வங்கதேச வங்காள அகதிகளை விரட்ட முயன்ற மோடியை மேற்குவங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி எதிர்த்துபேசி அடக்கியதை பலரும் பகிர்கிறார்கள்.
இதே மோடி 2001,2002 களில் ஆஸ்திரேலியாவில் ஹிந்தியர்களான குஜராத்தியர்களை அந்நாட்டு இனவெறியர்கள் தாக்கியபோது பொங்கி எழுந்து,
"குஜராத்தியர்களிடம் இந்திய கடவுச்சீட்டோ (பாஸ்போட்) நுழைவு ஆவணமோ (விசா) இல்லையென்றாலும் பரவாயில்லை.
நேரடியாக குஜராத்திற்கு எப்படியாவது வந்துவிடுங்கள்.
குஜராத்தி பேசிக்காட்டினால் போதும்.
வேறு எந்த சான்று ஆவணங்களும்
தேவையில்லை.
மத்திய அரசை நான் பார்த்துக்கொள்கிறேன்"
என்று கூறிய ஆள்தான்.
நினைவிருக்கிறதா?
நளதமயந்தி (2003) படத்தில் கூட காட்டியிருப்பார்கள்.
மற்ற இனத்தவனெல்லாம் தன் இனத்தானை பிரதமராக்கி வைத்துள்ளான்.
குறைந்தது முதலமைச்சராவது ஆக்கிவைத்துள்ளான்.
அசல் குஜராத்திகள் 5 கோடி கூடத்தேறாத இனம் குஜராத்திய இனம்.
அதன் தலைவன் இன்று 110 கோடி பேரை ஆள்கிறான்.
சும்மாவா?
தன் இனமான மராத்தியர்களின் மீதான குஜராத்திகளின் ஆதிக்கத்தை அம்பேத்கரே மனம்நொந்து கட்டுரை எழுதியுள்ளார்.
நாம் 8 கோடி இருக்கிறோம்.
முதலமைச்சரென்ன?
தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தும் ஒரு ச.ம.உ (எம்.எல்.ஏ) கூட இல்லை.
உலகத்திலேயே பந்தபாசமுள்ள சொந்த அண்ணன்-தம்பியை "பாசவெறியன்" என்று திட்டிவிட்டு சொந்தவீட்டை பக்கத்துவீட்டுக்காரனுக்கு கொடுக்கும் ஒரே ஆள் தமிழன் மட்டும்தான்.
சக தமிழனை இனவெறியன் என்று திட்டும் அல்லக்கை அரசியல்வாதிகளும்,
தமிழ் தலைவர்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு குறைகளை பெரிதாக்கி
குறைகளே உருவான வந்தேறிகளை ஆள வழிவகுக்கும்
மேதாவித் தமிழர்களும் இனியேனும் திருந்துங்கள்.
பின் குறிப்பு:
குஜராத்தியர்கள் அண்டை மாநிலமான மஹாராஷ்ட்ராவுக்கு அடுத்ததாக அதிகம் வசிக்கும் இரண்டாவது வெளிமாநிலம் தமிழகம் !!!!
கூடியவிரைவில் இங்கே குட்டி குஜராத்துகள் காணக்கிடைக்கும்.
படத்திற்கு நன்றி: கோட்டோவியர் பாலா
No comments:
Post a Comment