Thursday 9 June 2016

வீரப்பன் என்ற அரக்கனைக் கொல்லவேண்டும் - ரஜினிகாந்த் ஆவேசம்

வீரப்பன் என்ற அரக்கனைக் கொல்லவேண்டும்
- ரஜினிகாந்த் ஆவேசம்

11-08-2002

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனீத் ராஜ்குமார் நடித்துள்ள "அப்பு" படத்தின் 100வது நாள் விழாபெங்களூரில் நடந்தது.
அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியபோது,
வீரப்பன் குறித்து கன்னட மொழியிலேயே படு ஆவேசமாக பேசினார்.

விழாவில் ரஜினி பேசியதாவது:

"வீரப்பன் மனிதனே அல்ல.
அவன் ஒரு அரக்கன்.
அந்த அரக்கனை சம்ஹாரம் செய்யும் நேரம் வந்துவிட்டது.
அவன் எங்கிருந்தாலும் அவனைத் தேடிப் பிடித்து அழித்துக் கொல்ல வேண்டும்.

வீரப்பனைப் போன்றவர்களை விட்டு வைப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
எவ்வளவு சீக்கிரம் அவனைக்கொல்கிறோமோ அது நல்லது.

நடிகர் ராஜ்குமார் ஒரு மிகப் பெரிய மனிதர்.
அவரை காட்டுக்குள் வைத்திருந்த ஒவ்வொரு நளும் எனக்குத்தூக்கம் இல்லை.
அவரது வனவாசம் முடிந்துவிட்டது.
இதுவரை கர்நாடக மக்களுக்கு மட்டுமே பரிச்சயமான ராஜ்குமார் இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சிகளில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் மேற்கொண்ட முயற்சிகளை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அவர்களுக்கு எனது ஹேட்ஸ் ஆப்"
என்றார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த ஆவேசப் பேச்சு அரங்கில் கூடியிருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

இதுவரை வீரப்பன் குறித்து ரஜினி வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இப்போது தான் முதல்முறையாக,  அதுவும் மிகவும் ஆவேசமாக, ராஜ்குமார் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.

ரஜினியின் இந்த ஆவேசப் பேச்சை ராஜ்குமார் உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டனர்.

ரஜினி பேசியபோதெல்லாம் கூட்டத்தில் கைத்தட்டல் பலமாக இருந்தது.

கர்நாடக தமிழர்களிடையே பீதி:
அதேசமயம், ரஜினியின் வீரப்பன் குறித்த பேச்சு கர்நாடக தமிழர்களிடையே ஒருவித பீதியையும்ஏற்படுத்தியுள்ளது.
காரணம், கன்னடர்களைப் பொறுத்தவரை வீரப்பன் என்று அவர்கள் தனித்துப் பார்ப்பதில்லை,
அவன் ஒரு தமிழன் என்ற ரீதியில் தான் அவர்கள் பார்க்கிறார்கள்.

இப்போது ரஜினியே வீரப்பனை அழிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறி விட்டதால்,
அதன் மூலம், ராஜ்குமார்கடத்தலுக்குப் பிறகு தமிழர்களைக் குறிவைத்துக் காத்திருக்கும் கன்னடவெறியர்களுக்கு தீனிபோட்டது போலாகிவிட்டதாக கர்நாடகத் தமிழர்கள் அஞ்சுகிறார்கள்....

tamil.oneindia.com/ news/2002/08/12/ rajini.html

ஏனிந்த ஆவேசம் அறிவோமா???

ராஜ்குமாரை கடத்தி வீரப்பனார் வைத்த கோரிக்கைகள்

1. காவிரிப் பிரச்சினையை அனைத்துலக நீதிமன்றம் விசாரித்து முடிவு கூறவேண்டும்.

2.தமிழக சிறைகளில் உள்ள தமிழர் நாட்டு விடுதலைப் படை, தமிழர்நாடு மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்துபேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3.வாச்சாத்தி,சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.

4. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும்.
அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.

5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை விடுவிக்க வேண்டும்.
அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழர்களின் மீதான பொறாமையையும் வெறுப்பையும் பணமாக அறுவடைசெய்ய ராம்கோபால் வர்மா இந்தியில் எடுத்த "வீரப்பன்" படம் ரஜினிகாந்தைக் கடத்த வீரப்பன் திட்டமிட்டதாகக் காட்டுகிறது.

அதிலே வீரப்பனார் இராவணனையும் பிரபாகரனாரையும் புகழ்கிறார்.

ஹிந்தியர்களே!
உங்கள் வெறுப்புதான் எங்கள் பலம்.

No comments:

Post a Comment