படித்ததும் குருதி கொதிக்கிறதா?
'நீதான் தமிழன்'
சுமார் நூறு வருடங்களாக பதிப்பிக்கப்படாமல்கர்நாடகாவில் சிக்கியுள்ள தமிழ்கல்வெட்டுகளுக்கு இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை.
கல்வெட்டு தலைமை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாறியதன் விளைவாகஐம்பது சதவிகிதத்திற்கும் மேலானகல்வெட்டுகள் பதிப்பிக்கப்படாமலே அழிந்து போய்விட்டதாகப் புகார்கிளம்பி உள்ளது.
இது குறித்து 'காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு?' என்ற தலைப்பில் கடந்த 18.06.06 தேதியிட்டஜுவி இதழில் வெளியான கட்டுரையின்ஃபாலோ அப் செய்தி...
நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில்செதுக்கி வைப்பது வழக்கமாகக்கொண்டிருந்தனர்.
கோயில், குளக்கரை,மலைகள், குகைகள் போன்ற இடங்களில்எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டுகள்,
இந்தியதொல்லியல் ஆய்வகத்தின் (ArchaeologicalSurvey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு 'படி எடுத்தல்' முறையில் காகிதத்தில்நகல் எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில்அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாகவெளியிடுகிறது ASI.
இந்தியவரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும்இந்த பழங்காலகல்வெட்டுகளை ஆய்வுசெய்யவும்,
நம்நாடு முழுவதிலும் உள்ளவரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும்,
1860ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கண்ணிங்ஹாம்எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்படும்கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்காக ASI மைசூர் அலுவலகத்தில் தனியாககல்வெட்டு தலைமையகம்ஒன்று இயங்குகிறது.
இதில், பெரும்பாலானகல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் என்பதால்,
மாற்றான் தாய் மனப்பான்மையோடு மைசூர்அலுவலகம் நடந்துகொள்வதாகப் புகார்கிளம்பியது.
ஜூ.வி கட்டுரையில்இதை தெரிவித்திருந்த உ.பி.யின் அலிகர்முஸ்லிம் பல்கலைகழகத்தின் உதவிப்பேராசிரயர் எஸ்.சாந்தினி பீ,
'தமிழகத்திற்கு காவிரி நீரைத்தான் கொண்டு வரமுடியவில்லை, கல்வெட்டுகளையாவது கொண்டுவரலாமே?' என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில், மைசூரில் சிக்கியுள்ள தமிழ்கல்வெட்டுகளின் தற்போதைய நிலை அறியஇந்திய கல்வெட்டியலாளர்கள் (Epigraphists)மற்றும் ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளமுயன்றோம்.
இவர்களின் முக்கிய அமைப்பானஇந்திய கல்வெட்டியல் பேரவையின் (Epigraphical Society of India-ESI) 38ஆவது மாநாடு சமீபத்தில் அலகாபாத்பல்கலைகழகத்தில் நடந்தது.
அங்கு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கஆஜராகி இருந்தவர்களை நாம் நேரில்சந்தித்து பேசினோம்.
''ஜூவியில் செய்தி வெளியானவுடன்அப்போதைய தமிழக முதல்வர்கருணாநிதி இதற்கான சில முயற்சிகள் செய்தார்.
அதன்படி, சென்னையில்துவக்கப்பட்டு கர்நாடகாவிற்கு கொண்டுப்போகப்பட்ட கல்வெட்டியல்தலைமையகத்தை மீண்டும்தமிழகத்திற்கு கொண்டு வருவது அல்லது சென்னை பெயரளவில் இருக்கும்கிளை அலுவலகத்தை ஆய்வுக்காக உயர்நிலைபடுத்துவது என்று முடிவெடுத்து அதற்கானமுயற்சிகளில் தமிழக அரசு இறங்கியது.
இதற்காக அப்போது காங்கிரஸ்தலைவி சோனியா மற்றும் இந்த துறையின்மத்திய அமைச்சராக இருந்தஅம்பிகா சோனிக்கும் மைசூரிலுள்ள கல்வெட்டியல்துறையை தமிழகத்திற்கு மாற்றும்படியும்,
தமிழ் கல்வெட்டுக்கு என தனியாக ஒரு மத்தியகல்வெட்டு அலுவலகத்தை சென்னையில்துவங்கும்படியும் தமிழக அரசு கடிதம்எழுதியது.
ஆனால், இவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கடிதங்களை மைசூர் அலுவலகத்தின்அதிகாரிகள் சாக்கு, போக்கு சொல்லித் தட்டிக்கழித்து விட்டார்கள்.
அதேசமயம், மைசூர் அலுவலகத்தில்ஏற்கெனவே படிகளாக எடுக்கப்பட்டுள்ளகல்வெட்டுகளை படித்து தொகுக்கஉதவும்படி தமிழ்நாடு தொல்லியல்ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept ofArchaeology -TNSDA) உத்தரவிட்டு சிலலட்சங்களை ஒதுக்கியது தமிழக அரசு.
அப்போது TNSDA யின் கமிஷனராக இருந்தஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரின் சொந்த முயற்சியினால் ஒரு வருடத்திற்கான கல்வெட்டுக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு வருடத்தில் தொகுக்கப்பட்டதைவெளியிட ASI, ஐந்து வருடம்எடுத்து கொண்டது.
இதுவும் முடியாமல்அடுத்தகட்டமாக,
ஏற்கனவே படி எடுக்கப்பட்டசுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டல்(Digitalistion) ஒளிப்பதிவு செய்து பாதுகாக்கும்தமிழக அரசின்திட்டத்திற்கு வேறு வழியின்றி மைசூர்அலுவலகம் சம்மதித்தது.
இதற்காகதஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் மைசூர்கல்வெட்டியல் தலைமையகம்புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
இதற்காகஒதுக்கப்பட்ட ஒருவருட காலத்தில், கிழிந்தபோனபடிகளை ஒட்டுவதிலேயே எட்டு மாதமானது.
இதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில்ரூபாய் 22 லட்சங்களை தமிழ் பல்கலைகழகம்திருப்பி அளிக்க வேண்டியதாயிற்று.'
எனநம்மிடம் வருந்திய தமிழரான டாக்டர்.எஸ்.சாந்தினி பீ மேலும், ஒரு அதிர்ச்சியான தகவல்அளித்தார்.
கல்வெட்டுக்களை படிக்க முறையானகல்வெட்டியலாளர்களின் பற்றாக்குறை பலவருடங்களாக இருந்தது.
இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர்அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்தகுறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது.
பணியில் இருந்த சில கல்வெட்டியலாளர்களுக்கும் பதவி உயர்வு காலத்தே கிடைக்கவில்லை.
தற்போது தமிழ்கல்வெட்டியலாளர்கள் மைசூரில் இருவர்மட்டுமே உள்ளனர்.
இதில் ஒருவர் விரைவில்ஓய்வு பெறப் போகிறார்.
இந்ததலைமையகத்திற்கு இயக்குநர் பதவியும் பலவருடங்களாக காலியாகவே உள்ளது.
இதுவன்றி,இரண்டு துணை இயக்குநர் மற்றும் பலஉதவி கல்வெட்டியலாளர்கள் பணியும்நிரப்பப்படாமலே உள்ளது.
சென்னையின் கிளை அலுவலகத்தில் உள்ளமூன்று தமிழ் கல்வெட்டியலாளர்கள் பதவியும் காலியாகவே உள்ளது.
தெலுங்குக்கு ஒருவரும் கன்னடத்திற்கு ஒருவர் மட்டுமே தமிழககிளை யில் உள்ளனர்.
சரி! இவர்கள் தான்உள்நோக்கத்துடன் செயல்படுவதாக புகார்கூறப்பட்டாலும் TNSDAவிலும் இதேநிலை.
இங்கும் சுமார் பத்திற்கும் மேற்பட்டகல்வெட்டியலாளர்களுக்கான பதவிகள் பலவருடங்களாக காலியாக உள்ளது.
இத்தனைக்கும்ASI மற்றும் TNSDA சார்பில் ஒரு வருடபி.ஜி டிப்ளமா பயிற்சி பெற்று ஒவ்வொரு வருடமும் கல்வெட்டியல் மாணவர்கள் தயாராகிறார்கள்.
இவர்களுக்கு உரிய காலத்தில்கல்வெட்டியலாளர் பணி கிடைக்காமையால்வேறு பல பணிகளுக்கு சென்று விடுவதால்தற்போது தமிழ் கல்வெட்டுக்கள் படிக்கவும்அனுபவசாலிகள் கிடைக்காமல் போகும்நிலை ஏற்பட்டுள்ளது.' என்றார்.
இதே பிரச்சனை குறித்து நம்மிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளர் நெல்லை நெடுமாறன்,
'மார்ச், 2008 ல் மைசூர் அலுவலகம் புதியகட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது அங்கு படி எடுக்கபட்டு வைத்திருந்தபல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய்விட்டன.
இவை மீண்டும் படி எடுக்க வேண்டும்எனில் அதன் ஒரிஜினல் கல்வெட்டுகளை கோயில், குளம் எனதேடுவது முடியாத காரியம்.
இந்தஅஜாக்கிரதைக்கு முக்கியக் காரணம்,தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களிடம் உள்ளஇனவெறியே.
இதே பிரச்னை தற்போது கேரளாவிலும் உருவாகி வருகிறது.
இம்மாநிலத்தில்கிடைக்கும் கல்வெட்டுக்களில்பெரும்பாலாவை தமிழ் கல்வெட்டுக்களே.
எனவே, அதை கேரளா அரசின் தொல்லியல்துறை பதிப்பிக்காமலும், அதை மத்திய அரசிடம்ஒப்படைக்காமலும் இருக்கிறது.
இதற்காக நான்எனது சொந்த செலவில்சென்று வந்து போராடியும் பயன் எதுவும்இல்லை.
இவைகளை தமிழக அரசு கேரளத்திடம்கேட்டு வாங்கி உடனடியாக பதிப்பித்தால்தென்னிந்திய வரலாறு குறித்த பல அரியஉண்மைகள் வெளியாகும்.'
எனத் தெரிவித்தார்.
அலகாபாத் வந்திருந்த மைசூரின் ASIஅதிகாரிகளிடம் இந்த பிரச்னை குறித்து நாம்பேசியபோது அதிகாரப்பூர்வமாக பேச மறுத்தஅவர்கள்,
''இது ஒரு பெரும் குறைதான்என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
ஆனால், இந்தக்குறையை பெரிதுபடுத்தக்கூடாது.
நாம் இட்டபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை தஞ்சை தமிழ்பல்கலைகழகம் முறையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இதனால்தான், டிஜிட்டல்பணியை ASI தற்போது தனியாரிடம்கொடுத்துள்ளது.
கல்வெட்டுகள்பதிப்பிக்கப்படாமல் தாமதமாவதற்கு ஆள்பற்றாக்குறையே காரணம்.
நீங்கள்நினைப்பது போல் கல்வெட்டுகளை தொகுத்து பதிப்பது சாதாரணவிஷயமல்ல.
இதற்கு அணுகுமுறை மிகவும் முக்கியம்.
இந்ததுறையில் பழுத்த அனுபவம், சிறந்த அறிவுடன்பல்வேறு கோணங்களுடன் ஆராயும்நுண்ணறிவு அவசியம்.
(துவக்கத்தில்இதை ஆங்கிலேயர்கள் செய்தது எப்படி?)
இடையில்ஒரு பத்துவருடங்களுக்கு கல்வெட்டியலாளர்கள் பதவிக்கு யாரும் எடுக்கப்படவில்லை என்பதால், திறமையும் அனுபவமும்கொண்டவர்கள் தற்போது பணியில் இல்லை.
இதனால்,ஓய்வு பெற்றவர்களை வைத்தே தொகுக்கும்பணி ஆமைவேகத்தில் தொடர்கிறது.
இதற்கு முழு பொறுப்பு டெல்லியிலுள்ளஎங்கள் தலைமை அலுவலகம்தானே தவிரநாங்கள் இல்லை.
தற்போது அதன்தலைமை அதிகாரியான டைரக்டர் ஜெனரல்பதவியே நிரப்பப்படாமல் ஆக்டிங்காக ஒருவர்அமர்த்தப்பட்டுள்ளார்.''
என்று தங்கள்பங்கிற்கு புலம்பினர்.
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழே.
மற்றவை சமஸ்கிருதம், பெர்ஷியன் (பாரசீகமொழி), அரபி, கன்னடம் மற்றும் மலையாளம்.
இதில், தமிழ் தவிர மற்றஅனைத்து மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும்பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
அதிகபட்சம் அடுத்த பத்து ஆண்டுகளில்அவை முடிந்து விடும்.
கடைசியில் தமிழ்கல்வெட்டுகள் தங்கி அவை, அடையாளம்தெரியாமல் அழிக்கப்பட்டு விடும்!
நன்றி: தமிழரின் வரலாறு(முகநூல்)
No comments:
Post a Comment