Friday, 17 June 2016

உள்ளங்கையளவு ஈழம் போதுமா ?!

உள்ளங்கையளவு ஈழம் போதுமா(?!)
?????????????????????????????

முதலில் ஈழம் ஈழம் என்று கூச்சல்போடுவதை நிறுத்துங்கள்!!!
போதும்!
போதும்!
பிரிந்து பிரிந்து போராடி பட்டதெல்லாம் போதும்!

சின்னஞ்சிறிய ஈழம் போதுமா?

ஈழம் கிடைத்ததும் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்ந்துவிடுமா?

வாழ வக்கற்று நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு என்ன தீர்வு?

ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகத்தில் முடங்கி இருக்கும்  தமிழனுக்கு என்ன தீர்வு?

அந்தமான்-நிகோபர் தீவுகளில் முனங்கிக் கொண்டிருக்கும் தமிழனுக்கு என்ன தீர்வு?

தமிழகம் எங்களுக்கு உதவவில்லை என்று கூறுவோரை கன்னத்தில் அறைந்து கூறுவேன்,
வேற்றினத்தவரின்  இரும்புப்பிடியில் சிக்கியுள்ள தமிழகம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத் தமிழர் ஈழத்திற்காகக் குரல்கொடுத்தே வந்துள்ளனர்.

புலிகளுக்கு எண்பதுகளில் தமிழகம் அளித்த ஆதரவு யாராலும் மறுக்கமுடியாதது.

எத்தனைபேர் தீக்குளித்துள்ளனர்.
எத்தனைபேர் சிறை சென்றுள்ளனர்
போர்வலையத்துக்கு அரிசிக்குள் காசுவைத்து எத்தனைபேர் அனுப்பினர் 
என்று புள்ளிவிபரமிட இந்தப் பதிவை எழுதவில்லை.

1956ல் தமிழக மண்மீட்புப் போர்,
1960களில் மொழிப்போர்,
தொடர்ச்சியான மீனவர் கொலை,
தமிழக வம்சாவழி மலையகத் தமிழர் ஆறு லட்சம் பேர் வெளியேற்றம்,
முல்லைப் பெரியாறு கலவரம்,
காவிரிக்கலவரம் மேலும் எவ்வளவோ
தமிழகத் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஈழத்தின் குரல் போதுமானதாக இருந்தது இல்லை.

தமிழகத்திலும் ஈழ ஏதிலி(அகதி)களுக்கான ஆதரவு,
ஈழ அறவழிப் போராட்டங்களுக்கான ஆதரவுக்குரல்,
இனப்படுகொலைகள் நடந்தபோது போராட்டங்கள் எதுவும் போதுமானதாக இல்லை.

இந்த நிலையில் நாம் மலேசியத் தமிழருக்கும், பர்மியத் தமிழருக்கும், அந்தமான்-நிகோபர் தமிழருக்கும்
குரல்கொடுத்த அழகை இங்கே கூறவும் வேண்டுமா?!

ஈழத்தின் ஒரு பகுதியாவது எமது
காவியநாயகனாம்
காவல் அரணாம்
கண்கண்ட தெய்வமாம்
ஒப்பாரும் மிக்காரும் எவருமிலா
தேசியத்தலைவர்
உயர்திரு.பிரபாகரன் அவர்களால்
19ஆண்டு காலம் ஆளப்பட்டது.

தமிழகமும் சில வருடங்கள்(மட்டுமே) தமிழரால் ஆளப்பட்டது.
நேதாசி சுபாசு சந்திரபோசு அவர்களால் தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக மண்ணான அந்தமான்-நிகோபர் கைப்பற்றப்பட்டபோது ஒரு தமிழரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறிது காலம் தமிழரால் ஆளப்பட்டது.

ஆனால் இன்று??????????

ஒட்டுமொத்தத் தமிழரும் முற்றுமுழுதாக அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டோம்.

நமது 'துப்பு' என்ன என்பதை நடுமண்டையில் நறுக்கென்று குட்டி உணர்த்திவிட்டார்கள்.

அதனால்தான் கூறுகிறேன்.
ஈழம் ஈழம் என்று கத்தாதீர்கள்.

நமது தமிழ்க்குடியரசில் எண்பதுகளில் வடமேற்குப் பகுதியில் வீரப்பனாரும் (தற்போதைய கன்னட தமிழக எல்லை)
நடுத்தமிழகத்தில் தமிழரசனாரும்(பெரம்பலூர்)
தெற்கில்(ஈழம்) புலிகளும்
செறிந்த வீரம் தமிழருடையது என்று நிறுவும் வகையில் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.

அன்றே ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்த அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் ஒருவன் வாலாட்டியிருக்க முடியுமா?!

இம்மூவரில் ஒவ்வொருவராக அழித்தொழிக்கப்பட்டனர்.

பாருங்கள் .
மேலேயுள்ள படத்தைப் பாருங்கள்.
பரந்துவிரிந்த நம் தாய் மண்ணைப் பாருங்கள்.

அதில் சின்னஞ்சிறிய ஈழம்தானா உங்கள் இலக்கு??
வெட்கமாக இல்லையா?
இதை மீட்கத்தான் இவ்வளவு முக்குகிறோமா?

இன்னும் எத்தனை காலம் பிறர் முகம் சுளிக்கும் ஈனப்பிறவியாக இருப்பீர்கள்?
எத்தனை நாள் அடுத்தவனிடம் கையேந்தும் கால்மிதியடியாக இருப்பீர்கள்?

எழுநூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்து முதுகுத்தோல் உரிய அடிவாங்கியது போதாதா?!!!!

""இன்னும் எத்தனை நாள், எத்தனை நாள்தான் நம் தமிழன்னையை வேற்றினத்தவனுக்குக் கூட்டிக்கொடுத்து 'வேசிமகன்' என்று பட்டம் வாங்குவீர்கள்???""

நம் தமிழ்த்தாய்நிலம் தன்னை மீட்கும்படி கதறுவது உங்கள் அவிந்துபோன காதில் விழவே விழாதா????

தமிழகத் தமிழரே!
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகத் தமிழரே!
அந்தமான் தமிழரே!
முக்கியமாக ஈழத்தமிழரே!

தமிழீழம் தமிழீழம் என்ற கோசத்தைத் தலைமுழுகுங்கள்.
இனி நாம் 'தமிழ்க்குடியரசு'  அமைக்கப் போராடுவோம் .

தமிழனுக்குப் பெருமை சேர்த்த எந்தத் தமிழனுக்கும் நல்ல 'சாவு' கூடக் கிடைத்ததில்லை.

இனியும் இழிநிலை மக்களாக இருக்கவேண்டாம்.

தமிழரை சாதியாக, மதமாக, நாடாக இன்னும் எந்த வகையிலும் பிரிக்கவிடக்கூடாது.

நம் பிரச்சனைகளை இன்னொரு தமிழனிடம் 'மட்டும்' சொல்லுங்கள்.

தமிழரனைவரும் இணைந்தால் எதிர்த்து நிற்க எந்தக் கொம்பனும் இன்னும் பிறக்கவில்லை.
*******************
(23 ஜூன் 2013)

No comments:

Post a Comment