Showing posts with label ஈழம் போதாது. Show all posts
Showing posts with label ஈழம் போதாது. Show all posts

Thursday, 6 December 2018

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை

1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,

"இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.
இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.
தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்"

இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.

இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர்  நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.
கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி)ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.

ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.

அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,

"வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.
மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்"

இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது.
இதுவே சரியான வரையறையாகும்.
குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.

மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.

நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.
(தேடுக: தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் வேட்டொலி)

புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.
அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.

தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.

புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.
புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.
கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.

ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.
(தேடுக: புலிகள் கட்டுப்பாட்டு பகுதி வரைபடம் 2006 fbtamildata)

எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்.

Friday, 26 October 2018

தனியீழம் சாத்தியமில்லை

தனியீழம் சாத்தியமில்லை

"ஈழம் தமிழர்நாட்டின் ஒரு பகுதி.
தமிழ்நாடும் இந்தியாவால் சுரண்டப்படுகிறது.
எனவே நாம் சேர்ந்து தனிநாட்டுக்காகப் போராடுவோம்"

என்று எனக்குத் தெரிந்து ஒரு ஈழத்தமிழன் கூட சொல்லவில்லை.

தனியீழம் சாத்தியமேயில்லை!

தனித் தமிழர்நாடுதான் சாத்தியம்!

ஒரு நாடு அமைய அதன் இனம் முழுவதும் ஒன்று திரள வேண்டும்.

ஈழப் போராட்டம் தோல்வியில் முடிய காரணம் இதுதான்.

அது தோல்வியா என்று கேட்போருக்கு பதில்தான் ராஜபக்ச தற்போது பிரதமர் ஆன நிகழ்வு.

நான் பலமுறை கூறிவிட்டேன்.

புலிகளே தமிழகம் வாருங்கள்!

களம் எங்களிடம் இருக்கிறது!

அனுபவம் உங்களிடம் இருக்கிறது!

நாம் தமிழகத்திலும் ஈழத்திலும் ஒரே நேரத்தில் ஆயுதம் தாங்கி போராடுவோம்!

தமிழர்நாட்டை விடுதலை செய்வோம்!

Friday, 17 June 2016

உள்ளங்கையளவு ஈழம் போதுமா ?!

உள்ளங்கையளவு ஈழம் போதுமா(?!)
?????????????????????????????

முதலில் ஈழம் ஈழம் என்று கூச்சல்போடுவதை நிறுத்துங்கள்!!!
போதும்!
போதும்!
பிரிந்து பிரிந்து போராடி பட்டதெல்லாம் போதும்!

சின்னஞ்சிறிய ஈழம் போதுமா?

ஈழம் கிடைத்ததும் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்ந்துவிடுமா?

வாழ வக்கற்று நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு என்ன தீர்வு?

ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகத்தில் முடங்கி இருக்கும்  தமிழனுக்கு என்ன தீர்வு?

அந்தமான்-நிகோபர் தீவுகளில் முனங்கிக் கொண்டிருக்கும் தமிழனுக்கு என்ன தீர்வு?

தமிழகம் எங்களுக்கு உதவவில்லை என்று கூறுவோரை கன்னத்தில் அறைந்து கூறுவேன்,
வேற்றினத்தவரின்  இரும்புப்பிடியில் சிக்கியுள்ள தமிழகம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத் தமிழர் ஈழத்திற்காகக் குரல்கொடுத்தே வந்துள்ளனர்.

புலிகளுக்கு எண்பதுகளில் தமிழகம் அளித்த ஆதரவு யாராலும் மறுக்கமுடியாதது.

எத்தனைபேர் தீக்குளித்துள்ளனர்.
எத்தனைபேர் சிறை சென்றுள்ளனர்
போர்வலையத்துக்கு அரிசிக்குள் காசுவைத்து எத்தனைபேர் அனுப்பினர் 
என்று புள்ளிவிபரமிட இந்தப் பதிவை எழுதவில்லை.

1956ல் தமிழக மண்மீட்புப் போர்,
1960களில் மொழிப்போர்,
தொடர்ச்சியான மீனவர் கொலை,
தமிழக வம்சாவழி மலையகத் தமிழர் ஆறு லட்சம் பேர் வெளியேற்றம்,
முல்லைப் பெரியாறு கலவரம்,
காவிரிக்கலவரம் மேலும் எவ்வளவோ
தமிழகத் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஈழத்தின் குரல் போதுமானதாக இருந்தது இல்லை.

தமிழகத்திலும் ஈழ ஏதிலி(அகதி)களுக்கான ஆதரவு,
ஈழ அறவழிப் போராட்டங்களுக்கான ஆதரவுக்குரல்,
இனப்படுகொலைகள் நடந்தபோது போராட்டங்கள் எதுவும் போதுமானதாக இல்லை.

இந்த நிலையில் நாம் மலேசியத் தமிழருக்கும், பர்மியத் தமிழருக்கும், அந்தமான்-நிகோபர் தமிழருக்கும்
குரல்கொடுத்த அழகை இங்கே கூறவும் வேண்டுமா?!

ஈழத்தின் ஒரு பகுதியாவது எமது
காவியநாயகனாம்
காவல் அரணாம்
கண்கண்ட தெய்வமாம்
ஒப்பாரும் மிக்காரும் எவருமிலா
தேசியத்தலைவர்
உயர்திரு.பிரபாகரன் அவர்களால்
19ஆண்டு காலம் ஆளப்பட்டது.

தமிழகமும் சில வருடங்கள்(மட்டுமே) தமிழரால் ஆளப்பட்டது.
நேதாசி சுபாசு சந்திரபோசு அவர்களால் தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக மண்ணான அந்தமான்-நிகோபர் கைப்பற்றப்பட்டபோது ஒரு தமிழரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறிது காலம் தமிழரால் ஆளப்பட்டது.

ஆனால் இன்று??????????

ஒட்டுமொத்தத் தமிழரும் முற்றுமுழுதாக அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டோம்.

நமது 'துப்பு' என்ன என்பதை நடுமண்டையில் நறுக்கென்று குட்டி உணர்த்திவிட்டார்கள்.

அதனால்தான் கூறுகிறேன்.
ஈழம் ஈழம் என்று கத்தாதீர்கள்.

நமது தமிழ்க்குடியரசில் எண்பதுகளில் வடமேற்குப் பகுதியில் வீரப்பனாரும் (தற்போதைய கன்னட தமிழக எல்லை)
நடுத்தமிழகத்தில் தமிழரசனாரும்(பெரம்பலூர்)
தெற்கில்(ஈழம்) புலிகளும்
செறிந்த வீரம் தமிழருடையது என்று நிறுவும் வகையில் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.

அன்றே ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்த அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் ஒருவன் வாலாட்டியிருக்க முடியுமா?!

இம்மூவரில் ஒவ்வொருவராக அழித்தொழிக்கப்பட்டனர்.

பாருங்கள் .
மேலேயுள்ள படத்தைப் பாருங்கள்.
பரந்துவிரிந்த நம் தாய் மண்ணைப் பாருங்கள்.

அதில் சின்னஞ்சிறிய ஈழம்தானா உங்கள் இலக்கு??
வெட்கமாக இல்லையா?
இதை மீட்கத்தான் இவ்வளவு முக்குகிறோமா?

இன்னும் எத்தனை காலம் பிறர் முகம் சுளிக்கும் ஈனப்பிறவியாக இருப்பீர்கள்?
எத்தனை நாள் அடுத்தவனிடம் கையேந்தும் கால்மிதியடியாக இருப்பீர்கள்?

எழுநூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்து முதுகுத்தோல் உரிய அடிவாங்கியது போதாதா?!!!!

""இன்னும் எத்தனை நாள், எத்தனை நாள்தான் நம் தமிழன்னையை வேற்றினத்தவனுக்குக் கூட்டிக்கொடுத்து 'வேசிமகன்' என்று பட்டம் வாங்குவீர்கள்???""

நம் தமிழ்த்தாய்நிலம் தன்னை மீட்கும்படி கதறுவது உங்கள் அவிந்துபோன காதில் விழவே விழாதா????

தமிழகத் தமிழரே!
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகத் தமிழரே!
அந்தமான் தமிழரே!
முக்கியமாக ஈழத்தமிழரே!

தமிழீழம் தமிழீழம் என்ற கோசத்தைத் தலைமுழுகுங்கள்.
இனி நாம் 'தமிழ்க்குடியரசு'  அமைக்கப் போராடுவோம் .

தமிழனுக்குப் பெருமை சேர்த்த எந்தத் தமிழனுக்கும் நல்ல 'சாவு' கூடக் கிடைத்ததில்லை.

இனியும் இழிநிலை மக்களாக இருக்கவேண்டாம்.

தமிழரை சாதியாக, மதமாக, நாடாக இன்னும் எந்த வகையிலும் பிரிக்கவிடக்கூடாது.

நம் பிரச்சனைகளை இன்னொரு தமிழனிடம் 'மட்டும்' சொல்லுங்கள்.

தமிழரனைவரும் இணைந்தால் எதிர்த்து நிற்க எந்தக் கொம்பனும் இன்னும் பிறக்கவில்லை.
*******************
(23 ஜூன் 2013)

Friday, 10 June 2016

ஈழமும் தனித்தமிழ்நாடும் மோதிக்கொள்ளலாமா?!

ஈழமும் தனித்தமிழ்நாடும் மோதிக்கொள்ளலாமா?!
?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?

தமிழ்தேசியம் Vs நாம் தமிழர்
என்பது
தமிழர்நாடு Vs ஈழம்
என்பதன் மறுவடிவமே

முதலில் நாம் தமிழர் கட்சி பேசுவது தமிழ்தேசியமா?
இல்லை.
அது ஈழதேசியம்தான் பேசுகிறது.

மீதி ஏழரைக் கோடி தமிழர்களின் விடுதலையைப் பற்றிய கவலையோ
தனித்தமிழ்நாடு பற்றிய அக்கறையோ
தமிழகமும் ஈழமும் ஒரே நாடு என்ற எண்ணமோ
அவர்களுக்குக் கிடையாது.

அவர்கள் ஈழத்து மனநிலையில்தான் இங்கே திரிந்துகொண்டிருக்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை தமிழரைத் தமிழன் ஆள்வது என்பது முதல் அமைச்சர் ஆவதுதான்.
(அதாவது முதல் படியை அவர்கள் இறுதி படியாக நினைக்கிறார்கள்)

ஈழத்தில் வந்தேறி அடையாள மறைப்பு கூட்டம் இல்லாததால் புலிகளுக்கு சாதி ஒழிப்பு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.
அங்கே யார் தமிழன் என்ற குழப்பம் இல்லை.

தமிழகத்தின் நிலை வேறு.
தமிழகத்தில் தெற்கே தேனி வரை கன்னடக் குடியேற்றமும்
தூத்துக்குடி வரை தெலுங்கு குடியேற்றமும் உள்ளது.

அதாவது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்பேசும் அடையாளம் தெரியாத வந்தேறிகள் நிறைந்துள்ளனர்.

தமிழருக்கென்ற ஒரு நாடு அமைந்து,
தமிழ் சாதிகள் யாரெல்லாமோ அவர்களின் ஆவணங்களில் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு  அதற்குப் பதில் தமிழர் என்று போடவேண்டும்.

அத்தோடு ஒழிந்தது சாதி.

அதுவரை தமிழரை அடையாளம் காண சாதி அடையாளம் தேவை.

நமக்கான அரசு அமைந்த பிறகு நமக்கான ஒரு மதத்தை நிறுவி அதற்கு மாறிக்கொள்ளவேண்டும்.
அதில் தமிழர் மட்டுமே இணைய வேண்டும்.

சாதி= தமிழ்
இனம்= தமிழ்
மொழி= தமிழ்
மதம்= தமிழியம்
நாடு= தமிழர்நாடு

என்ற நிலை வரவேண்டும்.

தமிழர்நாடு பற்றி பேசாமல் வெறும் ஈழத்தைப் பற்றி பேசும் நா.த.கட்சிக்கு முழு தமிழருக்குமான சீர்திருத்ததை முன்வைக்க என்ன தகுதி உள்ளது?

தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழமக்கள் கூட உங்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள் வேறு போக்கிடம் இல்லை என்று நினைக்கவேண்டாம்.

இப்போதே சாதியை ஒழித்துவிட்டு வா என்று கூறினால்
எதை வைத்து தமிழரை அடையாளம் காண்பீர்கள்?
இதற்கு பொருத்தமான பதில் சொல்லுங்கள் பதிவையே நீக்கிவிடுகிறேன்.

தமிழ் பேசினாலே தமிழர்.
தமிழ் உணர்வு இருந்தாலே தமிழர்.
என்றெல்லாம் வரையறுத்தால் கருணாநிதி கூட தமிழர்தான்.

ஆகவே நாம் தமிழர் அண்ணன்களே தம்பிகளே!

நீங்கள் தமிழ்நாட்டு மாநிலமும் ஈழத்து நாடும் தமிழருக்குக் கிடைக்க போராடுங்கள் தவறில்லை.
அதற்காக தனித்தமிழ்நாடு போராளிகளைப் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

ஏதேது? நாளை நீங்கள் முதலைச்சராக ஆளும்போது தனித்தமிழ்நாட்டு விடுதலைக்காக ஆயுதம் தூக்கும் இளைஞர்களை அழித்தொழிப்பீர்கள் போலிருக்கிறதே?!

அதே போல தனித் தமிழ்நாடு போராளிகளே!
தமிழர் நாடு போராளிகளே!
நாம் தமிழர் கட்சி வெளிப்படையாகப் பிரிவினை பேச முடியாது.
பேசினால் தேர்தலில் போட்டியிட முடியாது.
அவர்கள் ஆட்சியைப் பிடிப்பது நமக்கு முதல் வெற்றி.
நமக்கான ஆயுதக் குழு தோன்றும் வரை நாம் தமிழரை பந்தாடவேண்டாம்.
புலிகள் ஏன் த.தே.கூ கட்சியை ஆரம்பித்தார்கள்?
அதுபோல நாம் தமிழர் நமக்கான அரசியல் கட்சி அவ்வளவுதான்.

நாம் சீமான் அண்ணனை நம்புகிறோம்.
ஆனால் சீமான் அண்ணனை மட்டுமே நம்பியிருக்கவில்லை.

ஆனால் சாதி ஒழிப்பு நடக்கத்தான் வேண்டும்.
தமிழினமே ஒரே சாதியாவது மட்டுமன்றி அதற்கும் மேல் ஒரே குடும்பமாகும் நிலை வரவேண்டும்.

ஆனால் முதல்படி ஏறுமுன்னே நான்காம் படியில் கால்வைப்பது சரியில்லை.

ஆக நெல்லூர் முதல் கதிர்காமம் வரை
கண்ணூர் முதல் கொழும்புவரை
பெங்களூர் முதல் கண்டி வரை
பரந்து விரிந்த தமிழர்நாடு (ஒரே நாடாக) தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை
சாதி அடையாளம் தேவை.

இதுதான் தீர்ப்பு.

பஞ்சாயத்து முடிந்தது.

கிளம்பி வேறு வேலையிருந்தால் பாருங்கள்.

இதற்கு மேலும் முகநூலில் அண்ணன் தம்பிகளுடன் மோதிக்கொண்டு நாசத்திற்கு வழிவகுக்கவேண்டாம்.

இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

Wednesday, 15 July 2015

ஈழத்துப் பூதன்

ஈழத்துப் பூதன்

&&&&&&&&&&&

ஈழத்துப் பூதன்தேவனார் என்ற சங்கப் புலவர் ஈழநாட்டைச் சேர்ந்தவர்.
அகத்துறைப் பாடல்கள் பல பாடியுள்ளார் அவர்.
இவரின் பாடல்கள் சங்க இலக்கியத்தியத்திலும் உள.

அகநானூற்றில் மூன்றும் (88,231,307)
குறுந்தொகையில் மூன்றும் (189,343,360)
நற்றிணையில் ஒன்றும் (366)
ஆக ஏழு பாடல்கள் உள.

ஈழநாட்டு எல்லைகள் நூல்(1977) பக்:7.
------------------------
http://ta.m.wikipedia.org/wiki/ஈழத்துப்_பூதன்தேவனார்

ஈழம்-தமிழகம் தொடர்பு
https://m.facebook.com/photo.php?fbid=368438776593115&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Thursday, 10 July 2014

இந்தியா+ஈழம்-தமிழகம்= முள்ளிவாய்க்கால்


மிழகம்+ஈழம்-இந்தியா= இனவிடுதலை
.
.
இந்தியாவுக்காக தமிழகத்தை கைவிட்டீர்கள்
.
இப்போது விடை தெரிந்துவிட்டதா ஈழமக்களே?!

1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர்.
பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர்
அல்லது வெளிப்படையாக
தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.
தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசனனின் தலைவர் என கருதப்பட்ட புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில்
எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்”
என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில்
எழுதிய வரிகள் வருமாறு,

சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும்
முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல்
தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில்
அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள்.இராகவன்
என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப்
போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார்.
ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன்
என்று கூறினேன்.
அடுத்து உங்கள்
கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார்.
எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன்.
வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள்
விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா?
என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம்
நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும்
நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய
ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்.
நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம்.
அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின்
விடுதலையாகி சிறையில்
இருந்து சென்றுவிட்டார்கள்.
என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது
பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில்
சந்தித்து நலம் விசாரித்தார்.

இது பற்றி பழ.நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள்
அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும்
மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர்.
பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம்
பேசும்போது நான் பார்த்த
தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள்
தொண்டர் அவர் என வாயாரப்
புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது”
என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தோழர் தமிழரசன் புலிகள் தலைவர்
பிரபாகரன் உட்பட அனைத்து இயக்க தலைவர்களையும்
சந்தித்து உதவி பெற முயன்றார். ஆனால் எந்த இயக்க தலைவர்களும் உதவி செய்ய மட்டுமல்ல
அவரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்கள். புலிகள் இயக்கம் இறுதிக் காலங்களில் 303 ரைபிள்,
ரிப்பிட்டர் போன்ற அந்த கால
ஆயுதங்களை பாவிக்காமல் புதைத்ததாக அறிகிறோம்.
ஆகக்குறைந்தது அந்த மண்ணில் புதைத்த
ஆயுதங்களையாவது தோழர் தமிழரசனிடம்
கொடுத்திருக்கலாம். அவர்கள் தாங்களும்
கொடுக்கவில்லை. எங்களையும் கொடுக்கவிவில்லை.
ஒரு வேளை தமிழரசன் விரும்பிவாறு ஆயுதங்கள்
கொடுத்து உதவி செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது!
-தோழர் பாலன்
(தனி ஈழம் என்ற கருத்தை ஆதரிக்காத இலங்கைக்கு உள்ளேயே தமிழர் உரிமையை வலியுறுத்தும் 'பேரவை' அமைப்பினர்)

http://tholarbalan.blogspot.in/2013/10/blog-post_6472.html?m=1
http://tholarbalan.blogspot.in/2013/10/blog-post_4288.html?m=0