Showing posts with label தமிழ் அடையாளம். Show all posts
Showing posts with label தமிழ் அடையாளம். Show all posts

Friday, 13 October 2017

நீ எப்படி தமிழன்?

"யாருங்க தமிழன்?"
அப்பிடினு கேள்வி கேட்ட மறுநொடி
கேட்டவன் செவுள பேத்துட்டோம்னா மறுபடி அந்த கேள்வி வராது.

நாம் பொறுமையாக விளக்கம் கொடுக்கும் வரை இந்த கேள்வி மறுபடி மறுபடி கேட்கப்படும்.

"நீ எப்படி தமிழன்?" என்ற கேள்வியும்
'உன் தகப்பனுக்கு நீ எப்படி மகன்?' என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

Friday, 2 June 2017

யார் மனிதன்? யார் தமிழன்?

யார் மனிதன்?

குரங்கும் மனிதன் போல் உள்ளதே?
ஆண் வேறு பெண் வேறாக உள்ளதே?
திருநங்கைகள் மனிதர்களா?
சிம்பன்சிகள் மனிதன் போல நடந்துகொள்கின்றனவே?
சில மனிதர்கள் கறுப்பாகவும் சிலர் வெள்ளையாகவும் உள்ளனரே?
உணவு வெவ்வேறாக உள்ளதே?
நியாண்டர்தால் மனிதர்களும் பாதி குரங்காக இருந்தனரே?
மனிதனைக் கடவுள் படைத்ததாக புனித நூல்கள் கூறுகின்றனவே?
ஆக மனிதன் என்றொரு பேரினம் இல்லை.

:D

இதுபோலத்தான் 'யார் தமிழன்' என்ற கேள்வியும்.

90% தமிழர்களின் இன அடையாளம் தெளிவாக உள்ளது.
மீதி 10% பேரை அவர்களுடன் குழப்பி தமிழன் என்கிற அடையாளத்தையே கேள்விக்குள்ளாகும் அதிமேதாவி வந்தேறிகள் முக்காத முக்கு முக்கி இறுதியில் தோல்வியே அடைவார்கள்.

காரணம் எந்த தமிழனுக்கும் 'தான் ஒரு தமிழன்தானா' என்ற சந்தேகம் வருவதில்லை.

"யார் தமிழன்?" என்ற கேள்விக்கு பதில்,
'யார் தமிழன்? என்று எவன் கேட்கிறானோ அவன் தமிழனில்லை'

'தான் தமிழனா என்று ஐயமில்லாதவன் தமிழன்'.

வந்தேறிகளின் அர்த்தமற்ற கேள்விகளை புறந்தள்ளுங்கள்.

மேலும் அறிய,
search யாரெல்லாம் தமிழர்? வேட்டொலி

Monday, 15 August 2016

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி -பெருஞ்சித்திரனார்

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி
-பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று .
மற்றொன்று சீன இனம்.

உலகில் இன்று வாழும் தமிழ்மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும் .

சீனநாட்டில் “சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும்

பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில் “தாமோர்” மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும்,

எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும் .

தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்றுத் தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது.

கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர்.

மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.

மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர்.

தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான் .

மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன.

உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.

உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது.
அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது.

சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர் .

உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது.
அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.

தென்மொழி, பெருஞ்சித்திரனார்.

Friday, 10 June 2016

ஈழமும் தனித்தமிழ்நாடும் மோதிக்கொள்ளலாமா?!

ஈழமும் தனித்தமிழ்நாடும் மோதிக்கொள்ளலாமா?!
?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?

தமிழ்தேசியம் Vs நாம் தமிழர்
என்பது
தமிழர்நாடு Vs ஈழம்
என்பதன் மறுவடிவமே

முதலில் நாம் தமிழர் கட்சி பேசுவது தமிழ்தேசியமா?
இல்லை.
அது ஈழதேசியம்தான் பேசுகிறது.

மீதி ஏழரைக் கோடி தமிழர்களின் விடுதலையைப் பற்றிய கவலையோ
தனித்தமிழ்நாடு பற்றிய அக்கறையோ
தமிழகமும் ஈழமும் ஒரே நாடு என்ற எண்ணமோ
அவர்களுக்குக் கிடையாது.

அவர்கள் ஈழத்து மனநிலையில்தான் இங்கே திரிந்துகொண்டிருக்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை தமிழரைத் தமிழன் ஆள்வது என்பது முதல் அமைச்சர் ஆவதுதான்.
(அதாவது முதல் படியை அவர்கள் இறுதி படியாக நினைக்கிறார்கள்)

ஈழத்தில் வந்தேறி அடையாள மறைப்பு கூட்டம் இல்லாததால் புலிகளுக்கு சாதி ஒழிப்பு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.
அங்கே யார் தமிழன் என்ற குழப்பம் இல்லை.

தமிழகத்தின் நிலை வேறு.
தமிழகத்தில் தெற்கே தேனி வரை கன்னடக் குடியேற்றமும்
தூத்துக்குடி வரை தெலுங்கு குடியேற்றமும் உள்ளது.

அதாவது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்பேசும் அடையாளம் தெரியாத வந்தேறிகள் நிறைந்துள்ளனர்.

தமிழருக்கென்ற ஒரு நாடு அமைந்து,
தமிழ் சாதிகள் யாரெல்லாமோ அவர்களின் ஆவணங்களில் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு  அதற்குப் பதில் தமிழர் என்று போடவேண்டும்.

அத்தோடு ஒழிந்தது சாதி.

அதுவரை தமிழரை அடையாளம் காண சாதி அடையாளம் தேவை.

நமக்கான அரசு அமைந்த பிறகு நமக்கான ஒரு மதத்தை நிறுவி அதற்கு மாறிக்கொள்ளவேண்டும்.
அதில் தமிழர் மட்டுமே இணைய வேண்டும்.

சாதி= தமிழ்
இனம்= தமிழ்
மொழி= தமிழ்
மதம்= தமிழியம்
நாடு= தமிழர்நாடு

என்ற நிலை வரவேண்டும்.

தமிழர்நாடு பற்றி பேசாமல் வெறும் ஈழத்தைப் பற்றி பேசும் நா.த.கட்சிக்கு முழு தமிழருக்குமான சீர்திருத்ததை முன்வைக்க என்ன தகுதி உள்ளது?

தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழமக்கள் கூட உங்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள் வேறு போக்கிடம் இல்லை என்று நினைக்கவேண்டாம்.

இப்போதே சாதியை ஒழித்துவிட்டு வா என்று கூறினால்
எதை வைத்து தமிழரை அடையாளம் காண்பீர்கள்?
இதற்கு பொருத்தமான பதில் சொல்லுங்கள் பதிவையே நீக்கிவிடுகிறேன்.

தமிழ் பேசினாலே தமிழர்.
தமிழ் உணர்வு இருந்தாலே தமிழர்.
என்றெல்லாம் வரையறுத்தால் கருணாநிதி கூட தமிழர்தான்.

ஆகவே நாம் தமிழர் அண்ணன்களே தம்பிகளே!

நீங்கள் தமிழ்நாட்டு மாநிலமும் ஈழத்து நாடும் தமிழருக்குக் கிடைக்க போராடுங்கள் தவறில்லை.
அதற்காக தனித்தமிழ்நாடு போராளிகளைப் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

ஏதேது? நாளை நீங்கள் முதலைச்சராக ஆளும்போது தனித்தமிழ்நாட்டு விடுதலைக்காக ஆயுதம் தூக்கும் இளைஞர்களை அழித்தொழிப்பீர்கள் போலிருக்கிறதே?!

அதே போல தனித் தமிழ்நாடு போராளிகளே!
தமிழர் நாடு போராளிகளே!
நாம் தமிழர் கட்சி வெளிப்படையாகப் பிரிவினை பேச முடியாது.
பேசினால் தேர்தலில் போட்டியிட முடியாது.
அவர்கள் ஆட்சியைப் பிடிப்பது நமக்கு முதல் வெற்றி.
நமக்கான ஆயுதக் குழு தோன்றும் வரை நாம் தமிழரை பந்தாடவேண்டாம்.
புலிகள் ஏன் த.தே.கூ கட்சியை ஆரம்பித்தார்கள்?
அதுபோல நாம் தமிழர் நமக்கான அரசியல் கட்சி அவ்வளவுதான்.

நாம் சீமான் அண்ணனை நம்புகிறோம்.
ஆனால் சீமான் அண்ணனை மட்டுமே நம்பியிருக்கவில்லை.

ஆனால் சாதி ஒழிப்பு நடக்கத்தான் வேண்டும்.
தமிழினமே ஒரே சாதியாவது மட்டுமன்றி அதற்கும் மேல் ஒரே குடும்பமாகும் நிலை வரவேண்டும்.

ஆனால் முதல்படி ஏறுமுன்னே நான்காம் படியில் கால்வைப்பது சரியில்லை.

ஆக நெல்லூர் முதல் கதிர்காமம் வரை
கண்ணூர் முதல் கொழும்புவரை
பெங்களூர் முதல் கண்டி வரை
பரந்து விரிந்த தமிழர்நாடு (ஒரே நாடாக) தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை
சாதி அடையாளம் தேவை.

இதுதான் தீர்ப்பு.

பஞ்சாயத்து முடிந்தது.

கிளம்பி வேறு வேலையிருந்தால் பாருங்கள்.

இதற்கு மேலும் முகநூலில் அண்ணன் தம்பிகளுடன் மோதிக்கொண்டு நாசத்திற்கு வழிவகுக்கவேண்டாம்.

இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

Tuesday, 30 September 2014

அடையாளம்-தொடர்

தோட்டாவோ..... துப்பாக்கியோ...அத நான்
பாத்துகிறேன்....அழகாக முடித்தார்...பெயருக்கேற்ற
சாயலில். ஒரு பெரிய சிரிப்புடன்
தாமரைக்கண்ணன் தொடர்ந்தார்... என்னடா
குட்டிப்பையா.. நீ ஈக்கிமதிரி இருக்க ஒங்க
அப்பாதுப்பாக்கி.. தோட்டான்னு பேசுறாரு.
கத்தி செய்யாததை புத்தி செய்யும்.
அதற்காககத்தி எடுத்த நம் முன்னவர்களை
நான் பலிக்கவில்லை. அந்த நாட்டுக்கு,
அந்தநேரத்தில் அது சரியாக இருந்தது.. நாம்
புத்தியில் ஆரம்பிப்போம்... காலமும், களமும்
முடியு செய்யட்டும் எதை
பயன்படுத்தவேண்டும் என்பதை. அன்று
வெற்றிமாறனுக்கு முதல் பாடம்
கற்றுத்தரப்பட்டது "பிரபாகரனின் வாழ்க்கை
வரலாறு". அவன் அங்கேயே ஒரு மாணவர்
விடுதியில் தங்கினான் என்பதைவிடஅன்று
முதல் தாரைக்கண்ணன் வீட்டிலேயே
பெரும்பாலும் கழித்தான்.
(முகம்தெரியாத ஒரு தமிழ்குடியரசுப்
போராளி எழுதிவரும் விடுதலைத் தொடர்)
http://tamiladaiyalam.blogspot.in/2011/02/
1.html?m=0
மொபைல் பதிவேற்றங்கள் · 11 பிப்ரவரி ·
https://m.facebook.com/photo.php?fbid=415343721902620&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739