Showing posts with label பிறப்பு. Show all posts
Showing posts with label பிறப்பு. Show all posts

Friday, 13 October 2017

நீ எப்படி தமிழன்?

"யாருங்க தமிழன்?"
அப்பிடினு கேள்வி கேட்ட மறுநொடி
கேட்டவன் செவுள பேத்துட்டோம்னா மறுபடி அந்த கேள்வி வராது.

நாம் பொறுமையாக விளக்கம் கொடுக்கும் வரை இந்த கேள்வி மறுபடி மறுபடி கேட்கப்படும்.

"நீ எப்படி தமிழன்?" என்ற கேள்வியும்
'உன் தகப்பனுக்கு நீ எப்படி மகன்?' என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

Wednesday, 6 January 2016

பார்ப்பானின் பிறப்பொழுக்கம்

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் *பார்ப்பான்*
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
(குறள் 134)

பார்ப்பனன் தான் கற்றதை மறந்துவிட்டால் திரும்ப ஓதி நினைவுவைத்துக் கொள்ளமுடியும்.
ஆனால் அவனது பிறப்பின் சிறப்பு குன்றிவிடும்
என்று சிலர் தவறாக பொருள் கொள்கின்றனர்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற ஐயன் வள்ளுவன்
பார்ப்பனரின் பிறப்பை தனியாகக் குறிப்பிடுவாரோ?!

இதை விளங்க இதற்கு முந்தைய குறளை இப்போது பார்ப்போம்

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
(குறள் 133)

அதாவது ஒழுக்கத்துடன் இருப்பதே வாழ்க்கை (குடிமை)
ஒழுக்கமில்லாமை(இழுக்கம்) நமது பிறப்பை இழிந்த பிறப்பு ஆகிவிடும்.

இங்கே பிறப்பு என்பது மாந்தனாய் பிறந்ததைக் குறிக்கிறது.

அதாவது ஒழுக்கமாக இருக்காவிட்டால் மாந்தராய்(மனிதராய்)ப் பிறந்ததற்கு பொருளே(அர்த்தமே) இல்லை.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்;
பிறப்பு- ஒழுக்கம்குன்றக் கெடும்

முதலில் கண்ட குறளை இவ்வாறு படித்தால் பொருள் விளங்கும்.

பார்ப்பனன் வேதத்தை(மறைகளை) மறப்பது இழிவன்று.
அவன் ஒழுக்கம் தவறுதலே இழிவு.