Tuesday, 10 May 2016

திராவிடலு பகுதி-3

திராவிடலு
பகுதி-3
**************
திராவிடம்  நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டுவந்தது என்பதைப் பார்க்குமுன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது.

திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'.

இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.

சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை  அறியுங்கள்.

திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.

இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்' ,'கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர்.
இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

திராவிடர்களின் பிரச்சாரப்படி  ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது
இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக்கொண்டு
சாதியை உருவாக்கி
மனுதர்மத்தை உருவாக்கி
கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி
ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர் .

ஆனால் உண்மை அதுவல்ல.
ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இதுவே உண்மை.

பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே.
இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலிசெய்தாலும் சரி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும்  தமிழரே என்பதைக் கூற  என்ன அச்சம்?

ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.

பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும்
இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு
மற்றவர்கள் விலகிக்கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.

சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.

பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.

காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.
திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.

இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.

திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?

திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?

தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது?

. . . .தொடரும்

No comments:

Post a Comment