Saturday 7 May 2016

யாரெல்லாம் தமிழர்?

யாரெல்லாம் தமிழர்?

இன்று நிறைய அறிவாளிகள் கேட்கும் கேள்வி
"யார் தமிழர்" என்பது?

பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் குடியேறிய வேற்றின மக்கள் இன்று வீட்டுக்குள்ளும் தமிழ் பேச ஆரம்பித்துவிட்டனரே
அவர்கள் தமிழரா?

பல நூற்றாண்டுகளுக்கு முன் வேற்றினத்தவர் மத்தியில் உலகம் முழுவதும் குடியேறிய தமிழரில் சிலர் இன்று தமிழும் வேறுமொழியும் கலந்த மொழியில் பேசுகின்றனரே
அவர்கள் தமிழரா?

உலகின் மொழியாராய்ச்சியாளரில் கிட்டத்தட்ட அனைவரும் தமிழைக் கற்றுள்ளனர்,
அவர்களில் சிலர் தமிழரைவிட சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்கின்றனரே
அவர்கள் தமிழரா?

வெளிநாடுகளில் குடியேறி வேற்றினப் பெண்ணை மணந்து அங்கேயே தங்கிவிட்டவரின் பிள்ளைகள் தமிழரா?

எத்தனையோ வேற்றின அரசர்கள் தமிழரை ஆண்டனர்,
அப்போது வலுக்கட்டாய இனக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம்தானே?

தமிழர் வேற்றினத்தவரைத் திருமணம் செய்வதை தனித்தமிழியம்(தமிழ்த் தேசியம்) மறுக்குமானால் இது இனவெறி என்று ஆகாதா?

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்,
தமிழ் பேசுபவரெல்லாம் தமிழரல்லர்.

தமிழர் ,
அவர் பார்ப்பனரோ,
இசுலாமியரோ,
கிறித்தவரோ,
ஆதித்தமிழரோ,
மலைவாசியோ,
வெளிநாட்டில் வாழ்பவரோ,
தமிழ் தெரியாதவரோ,
வேற்றினத்தில் மணமுடித்தவரோ,
தொழிலாளியோ ,
முதலாளியோ,
வேறுநாட்டில் தாம் தமிழ்வழிப் பரம்பரை என்று தெரியாதவரோ,
'தமிழன் தமிழனே'.

இனம் என்பது பிறப்புவழி வருவது.
அதை நினைத்தாலும் மாற்றவியலாது.

முதலில் யார் தமிழர் என்று வரையறுப்போம்.
இப்போது எடுத்துக்காட்டாக,
நான் ஒரு மராட்டிப் பெண்ணை திருமணம் செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எங்கள் குழந்தைக்கு தமிழ்ப்பண்பாட்டைக் கொண்டுசேர்க்க எந்த அளவு உரிமை எனக்குள்ளதோ
அதே அளவு மராத்திய பண்பாட்டைக் கொண்டு சேர்க்க என் மனைவிக்கு உரிமை உள்ளது.
எனவே, எனது குழந்தை இரு பண்பாடும் கொண்டதாக  வளரும்.

எங்கள் வாரிசு முழுத் தமிழராகவோ அல்லது முழு மராத்தியாகவோ ஏற்கப்படமாட்டார்.

இப்போது எனது வாரிசு ஒரு தமிழருடன் திருமணம் புரிந்தால் எங்கள் பேரப்பிள்ளை தமிழராக ஏற்கப்படும்.
இதே எங்கள் பிள்ளை மராத்தியரை திருமணம் செய்ய எங்கள் பேரப்பிள்ளை மராத்தியாக ஏற்கப்படும்.

பாட்டி தாத்தா இருவரில் ஒருவர் வேற்றினத்தவர் என்பதால் தலைமுறையே வேற்றினமென்று ஆகாது.
குருதிவழிக் கலப்பு என்று எதுவும் கிடையாது.

தனித்தமிழ்க்கொள்கை அதாவது தமிழ்த்தேசியம் வேற்றினத்தவருடன் திருமணம் செய்துகொள்வதை எதிர்க்கவும் இல்லை.

(25 ஜூன் 2013 அன்று இட்ட முகநூல் பதிவு)

No comments:

Post a Comment