Saturday, 21 May 2016

நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)

காலம் கடந்துவிடவில்லை.
நாம் தேர்தலை வெல்லலாம்.

நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)

போன நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வென்ற அன்புமணி
இந்த முறை எப்படி தோற்றார்?

சீமானின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்தது ஒரு லட்சம் பேராவது தவறாமல் கூடுவார்கள்
அவருக்கு 15000 வாக்குகள் கூட கிடைக்காமல் டெபாசிட் போனது எப்படி?

வாக்கு எண்ண ஆரம்பித்து வெறும் 30 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னணியில் இருந்தபோது மோடி ஜெயலலிதா வெற்றிக்கு வாழ்த்துகள் சொன்னது எதை வைத்து?

எல்லாவற்றுக்கும் மேல் தஞ்சாவூர் அருகே பாபநாசம் தொகுதியில் பறக்கும்படையிடம் பிடிபட்ட 500 போலி வாக்குபதிவு இயந்திரங்கள் பற்றி மே 14 அன்று செய்தித்தாள்களில் வந்தது.
அதன்பிறகு மற்ற இயந்திரங்களை சரிபார்க்க எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்?

எல்லாவற்றிற்கும் பதில் இந்த வீடியோவில்
( https:// m.youtube. com/watch?v=apkSkb6Ak3I

India's Electronic Voting Machines ( EVM ) are vulnerable to fraud _யூட்யூப்)
உள்ளது.
இந்த வாக்குபதிவு இயந்திரத்தில் ஏமாற்ற மூன்று வழிகள்உள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற அறிவியலில் முன்னேறிய வல்லரசு நாடுகள் அனைத்துமே வாக்குசீட்டு மூலமே தேர்தல் நடத்துகின்றன.

தனக்கென ஒரு சிறிய போர் விமானத்தைக்கூட வடிவமைக்க அறிவில்லாத
உலகில் தரமான 100 கல்லூரிகளில் ஒன்று கூட தன்னிடம் இல்லாத
தனக்கென சொந்த கண்டுபிடிப்பு என உருப்படியாக எதுவும் இல்லாத
கொள்ளைக்கார அரசியல்வாதிகள் நிறைந்த இந்தியா
தானே சொந்தமாகத் தயாரித்ததுதான் இந்த வாக்குபதிவு இயந்திரம்.

இதன் மூலம் பதியப்படும் ஒருவருக்கு பதியப்படும் வாக்கு
மற்றொருவருக்கு போகுமாறு செய்யமுடியும் என்று இதுவரை இரண்டுபேர் நிரூபித்தும் உள்ளனர்.

தமிழகத்தில் நடந்தது ஒரு மோசடி தேர்தல்.

ஆகவே, நாம் தமிழர் மற்றும் பா.ம.க இணைந்து மீதி இருக்கும் இரண்டு தொகுதிகளில் வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்த பெரிய போராட்டத்தை நடத்தவேண்டுஆகவே, நாம் தமிழர் மற்றும் பா.ம.க இணைந்து மீதி இருக்கும் இரண்டு தொகுதிகளில் வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்த பெரிய போராட்டத்தை நடத்தவேண்டும்.

அதில் அ.தி.மு.க, தி.மு.க குறைந்த வாக்கு பெற்றால் தேர்தலை மீண்டும் நேர்மையாக நடத்த வலியுறுத்தவேண்டும்.

காணொளிக்கு நன்றி :
அண்ணன் ஏனாதி பூங்கதிர்வேல்.

1 comment:

  1. இது ஒரு வகையில் தமிழர்க்கு வெற்றி தான். இந்த தேர்தல் மோசடி நடக்க ஐநூற்றி எழுபது கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நாம் உறுதியாக ஒவ்வொரு தேர்தலிலும் நின்றால் இவர்கள் செலவு செய்ய திண்டாடுவார்கள். மேலும் மேலும் கொள்ளை அடிப்பார்கள். இறுதி வெற்றி தமிழர்க்கு சாதகமாகவே இருக்கும்!

    ReplyDelete