முன்னேறிய நாடுகளில் வாக்குச்சீட்டுதான்
உலகில் முன்னேறிய நாடுகள் என்றால் அவை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்றவை
மேற்கண்ட நாடுகள் 1995 க்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டுமுறை தேர்தல் வந்தபோது மின்னணு வாக்குப் பதிவினை முயற்சித்து பார்த்து பெரும்பாலும் 2010க்குள் கைவிட்டுவிட்டன.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கனடா எப்போதும் வாக்குச்சீட்டே பயன்படுத்துகிறது
பின்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி தவறு நடந்ததாக கண்டுபிடித்து) மின்னணு வாக்குப்பதிவை 2008ல் தடை செய்து வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்தியது.
ஜெர்மனி (ஒருமுறை பயன்படுத்திப் பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவை தடை செய்தது.
அயர்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவு நம்பிக்கைக்குரிய வகையில் இல்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து அவற்றை அழித்து விட உத்தரவிட்டது
நெதர்லாந்து (ஒரு முறை முயற்சித்து பார்த்து) 2007 ல் பாதுகாப்பற்றது என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்தது
நார்வே 2013ல் (இருமுறை முயன்ற பிறகு) மின்னணு வாக்குப்பதிவு செய்துபார்த்து கைவிட்டது
இங்கிலாந்து தேர்தல் ஆணையம் 2008 ல் மின்னணு வாக்குப்பதிவை கைவிட்டது
இத்தாலி வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது.
சீட்டின் வண்ணம் தேர்தலின் வகையைப் பொறுத்து இருக்கும்.
ஸ்காட்லாந்து வாக்குச்சீட்டை பதிவெடுத்து மின்னணு தரவாக மாற்றும் இயந்திரத்தை பயன்படுத்துகிறது.
(இதிலும் தவறு நடத்ததாக கண்டுபிடித்துள்ளது)
பெல்ஜியம் மின்னணு வாக்கு அட்டையை பயன்படுத்துகிறது.
(நேரடியாக இயந்திரத்தில் வாக்கினை பதிவு செய்வதில்லை)
அமெரிக்காவில் பாதி மாகாணங்கள் வாக்குச்சீட்டையும் பாதி மாகாணங்கள் மின்னணு முறையையும் பயன்படுத்துகின்றன.
ஜப்பான் வாக்குச்சீட்டில் வேட்பாளர் அல்லது கட்சியின் பெயரை எழுதி போடும் முறையை பின்பற்றுகிறது
(தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கலாம்)
ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று.
வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகின்றனர்.
ரஷ்யா வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது.
சீட்டை மடிக்காமல் போடவேண்டும்.
ஆக வளர்ந்த நாடுகளே பயன்படுத்தி பார்த்து தோல்வியடைந்தது என பத்தாண்டுகள் முன்பே கைவிட்ட ஒரு தொழில்நுட்பத்தைத்தான் ஹிந்தியா பிடித்துக்கொண்டு தொங்குகிறது
இதைச் சொன்னால் நம்மை கோமாளி, பிற்போக்குவாதி, கற்கால மனிதன் என்கின்றனர் நவீன முட்டாள்கள்.
படம்: சில வாரங்களுக்கு முன் நடந்த அமெரிக்க தேர்தலில் வாக்குச்சீட்டுடன் அதிபர் ஒபாமா மற்றும் வாக்கிச்சீட்டு மூலம் வாக்களிக்கும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன்
Sunday, 12 March 2017
முன்னேறிய நாடுகளில் வாக்குச்சீட்டுதான்
Saturday, 21 May 2016
நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)
காலம் கடந்துவிடவில்லை.
நாம் தேர்தலை வெல்லலாம்.
நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)
போன நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வென்ற அன்புமணி
இந்த முறை எப்படி தோற்றார்?
சீமானின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்தது ஒரு லட்சம் பேராவது தவறாமல் கூடுவார்கள்
அவருக்கு 15000 வாக்குகள் கூட கிடைக்காமல் டெபாசிட் போனது எப்படி?
வாக்கு எண்ண ஆரம்பித்து வெறும் 30 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னணியில் இருந்தபோது மோடி ஜெயலலிதா வெற்றிக்கு வாழ்த்துகள் சொன்னது எதை வைத்து?
எல்லாவற்றுக்கும் மேல் தஞ்சாவூர் அருகே பாபநாசம் தொகுதியில் பறக்கும்படையிடம் பிடிபட்ட 500 போலி வாக்குபதிவு இயந்திரங்கள் பற்றி மே 14 அன்று செய்தித்தாள்களில் வந்தது.
அதன்பிறகு மற்ற இயந்திரங்களை சரிபார்க்க எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்?
எல்லாவற்றிற்கும் பதில் இந்த வீடியோவில்
( https:// m.youtube. com/watch?v=apkSkb6Ak3I
India's Electronic Voting Machines ( EVM ) are vulnerable to fraud _யூட்யூப்)
உள்ளது.
இந்த வாக்குபதிவு இயந்திரத்தில் ஏமாற்ற மூன்று வழிகள்உள்ளன.
அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற அறிவியலில் முன்னேறிய வல்லரசு நாடுகள் அனைத்துமே வாக்குசீட்டு மூலமே தேர்தல் நடத்துகின்றன.
தனக்கென ஒரு சிறிய போர் விமானத்தைக்கூட வடிவமைக்க அறிவில்லாத
உலகில் தரமான 100 கல்லூரிகளில் ஒன்று கூட தன்னிடம் இல்லாத
தனக்கென சொந்த கண்டுபிடிப்பு என உருப்படியாக எதுவும் இல்லாத
கொள்ளைக்கார அரசியல்வாதிகள் நிறைந்த இந்தியா
தானே சொந்தமாகத் தயாரித்ததுதான் இந்த வாக்குபதிவு இயந்திரம்.
இதன் மூலம் பதியப்படும் ஒருவருக்கு பதியப்படும் வாக்கு
மற்றொருவருக்கு போகுமாறு செய்யமுடியும் என்று இதுவரை இரண்டுபேர் நிரூபித்தும் உள்ளனர்.
தமிழகத்தில் நடந்தது ஒரு மோசடி தேர்தல்.
ஆகவே, நாம் தமிழர் மற்றும் பா.ம.க இணைந்து மீதி இருக்கும் இரண்டு தொகுதிகளில் வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்த பெரிய போராட்டத்தை நடத்தவேண்டுஆகவே, நாம் தமிழர் மற்றும் பா.ம.க இணைந்து மீதி இருக்கும் இரண்டு தொகுதிகளில் வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்த பெரிய போராட்டத்தை நடத்தவேண்டும்.
அதில் அ.தி.மு.க, தி.மு.க குறைந்த வாக்கு பெற்றால் தேர்தலை மீண்டும் நேர்மையாக நடத்த வலியுறுத்தவேண்டும்.
காணொளிக்கு நன்றி :
அண்ணன் ஏனாதி பூங்கதிர்வேல்.