Tuesday 10 May 2016

திராவிடலு பகுதி-4

திராவிடலு
பகுதி-4
*************

பிராமணர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்.
இப்போது அவர்களின் ஆதிக்கம் பற்றியும் திராவிடத்தின் பிறப்பு பற்றியும் தெரிந்துகொள்வோம்.

பிராமணர்கள் அந்தக்கால மன்னர்களால் மதிப்பிற்குரிய இடத்தில் அமர்த்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டு மக்களாக இருந்தனர்.
இவர்கள் செய்த தொழிலும் அப்படியானது.
ஆன்மீக ரீதியான தொழிலைச் செய்தவர்களாதலால் மக்களும் இவர்களை உயர்ந்த குலத்தவராகவே எண்ணிவந்தனர்.

தொழில்வழிச் சமூக அமைப்பு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளது.

உலகம் முழுவதும் மதவழிபாட்டைச் சேர்ந்த தொழில் செய்வோரும் மதம் வளர்ப்போரும் முதல்நிலையிலும்
நிலவுடைமையாளர், படைவீரர்கள் இரண்டாம் நிலையிலும்
விவசாயிகள், கைத்தொழில் செய்வோர் மூன்றாம் நிலையிலும்
உடலுழைப்பு மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் நான்காம் நிலையிலும் இருப்பர்.

உலகின் எந்த மூலையிலும் இந்த வேற்றுமைகள் இருந்தே வந்துள்ளது.

பிராமணர்களின் வீழ்ச்சியானது மொகலாயர்கள் தமிழகம் வரை தமது ஆளுகையை பரப்பிய பிறகு ஆரம்பமானது
(தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் பல்லவர் ஆட்சியின்போது தொடங்கியது)
மன்னர்களின் ஆதரவு இல்லாது போக மக்களை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு வந்தனர்.
(அதிலும் சில பிராமணர்கள் முகலாயர்களுடன் சேர்ந்து கொண்டனர் என்பதும் உண்மை).
அப்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் தமிழரல்லாத நாய்க்கர்
(நாயக்கர் என்பதே தவறு,
நாயகர் என்ற தமிழ்ச்சாதியுடன் திரிக்கவே நாய்க்கரை நாயக்கர் ஆக்கினர்).

அவர்கள் ஏற்கனவே தமிழ்ப்பிராமணரை (பார்ப்பனரை) புறக்கணித்து சமசுக்கிருதத்தை வளர்க்கும் பிறமொழிப் பிராமணரை ஆதரித்தனர்.
இதனால் தமிழ்ப் பார்ப்பனரும் சமசுக்கிருதத்தை ஏற்க வேண்டியதாயிற்று.

நாய்க்க மன்னர்கள் ஆண்ட காலமே சமசுக்கிருதத்தின் வசந்தகாலமாகும்.
அக்காலத்தில் சமசுக்கிருதத்தில் பெருங்காப்பியங்கள் தோன்றியதையும்,
தமிழ் சிற்றிலக்கியங்கள் மூலம் உயிர்பிழைத்து வந்ததையும் 
இன்றுவரை தமிழ் மீண்டெழவில்லை என்பதையும் நினைவில் கொள்க.
18 ம் நூற்றாண்டுவரை முகலாயராலும் வேற்றின மன்னர்களாலும் தமிழ்ப் பார்ப்பனர் ஆதரிக்கப்படவில்லை.
வேற்றினப் பிராமணர் இதற்கு விதிவிலக்கு.
18ம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கில ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவ பிராமணர்கள் நிலை கவலைக்கிடமானது.
(ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்ற பழமொழி நினைவு வருகிறதா?!)
ஆங்கில ஆதிக்கம் வலுக்க வலுக்க இந்தியர் அத்தனைபேருமே பாதிக்கப்படையத் தொடங்கினர் 19ம் நூற்றாண்டு வந்ததும் ஒரு திருப்பம்.
1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம் இந்தியரின் கிளர்ச்சியால் கொண்டுவரப்பட்டது
(நாம் எட்டாம் வகுப்பில் படித்ததுதான் நினைவு வருகிறதுதானே?) .
அதற்கு முன்புவரை அனைத்து அரசாங்க பதவிகளும் ஆங்கிலேயருக்கே உரித்ததாயிருந்தது.

ஆம்; இந்திய விடுதலை எழுச்சி என்பதன் ஆரம்பமே ஆங்கிலேயருடன் போட்டியிட்டு அரசுப்பதவிகளை பெறுவதிலேயே தொடங்கியது.

'சர்.ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்' எனும் வெள்ளையரால் தொடங்கப்பட்ட 'இந்தியக் காங்கிரஸ்' என்பது அந்தக்காலத்தில் 'மெக்காலே' பாடத்திட்டம் எனும் கட்டாய ஆங்கிலவழி மூலம் (ஆங்கிலச் சேவகத்திற்கென்றே) உருவாக்கப்பட்ட கல்வியைக் கற்றோருக்கு வேலைவாங்கித்தர பாடுபட்டதேயாகும்.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்த பிராமணர்கள் குலத்தொழிலாக ஓதுதல், மனனம் செய்தல் போன்றவற்றைச் செய்து வந்தவர்களாதலால்  அவர்கள் கல்விகற்று அரசாங்க வேலைகளில் சேர ஆரம்பித்தனர் .

பின் 1919 'மாண்டேகு செம்சுபோர்டு' சீர்திருத்தம் நடைமுறைக்கு வர முன்பைவிட அதிகமான அளவில் இந்தியருக்கு வேலைவாய்ப்பு அதிகமானது.
பின்னர் ஆங்கிலேயரின் பிடி இறுக இறுக உள்நாட்டு வெளிநாட்டு வணிகம் என அனைத்திலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் வலுக்க இந்திய வணிகத்தில் இருந்த ஆதிக்க வர்க்கத்தினர் பிழைப்பிலும் மண்விழுந்திருந்தது.
அவர்களும் ஆங்கிலக்கல்வி கற்று பதவிகள் பெறும் முன் அத்தனை பதவிகளிலும் பிராமணர்கள் நிறைந்துவிட்டனர்.

பிராமணர்கள் மீண்டும் ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்தனர்.

அதாவது நாம் நினைப்பதுபோல நிதிக்கு, நீதிக்கு, வேளாண்மைக்கு, கல்விக்கு என அனைத்திற்கும் தனித்தனி துறைகள் அமைக்கும் 'செக்கரட்ரியேட்' முறையின் வருங்காலத்தை முன்பே கணித்து பிராமணர்கள் அதில் புகுந்துவிடவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டத்தை முதலில் எதிர்கொண்ட சமூகம் என்ற வகையில் தானாக அவர்கள் சென்றடைந்தனர்.

இப்பாது பதவிகளைப் பெறுவதில் ஆங்கில-இந்தியப் போட்டியைவிட பிராமணர்-பிராமணரல்லாதோர் போட்டி கடுமையாக ஏற்பட்டது.

இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் மூளையைக் கசக்கினர்.
திராவிடம் பிறந்தது.

. . . தொடரும்

No comments:

Post a Comment